السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 19 November 2023

காலி கச்சுவத்தை பள்ளிவாயல்



 காலி கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் !


காலியில் அமைந்துள்ள கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக இன்று ஞாயிற்றுக்கிழமை (19/11/2023) பிரகடணப்படுத்தப்பட்டது. தொழில் மற்றும்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது மேற்படி பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் செய்யப்பட்டது.  


இலங்கையில் காணப்படும் பழமைவாய்ந்த பள்ளிவாசல்களில் கச்சுவத்தை பள்ளிவாசலும் ஒன்றாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வபாத்தின் பின்னர் அவர்களது ஸஹாபாக்கள் இஸ்லாத்தின் தூதை உலகின் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்றார்கள். அவ்வாறு இலங்கைக்கு  இஸ்லாத்தின் தூதை எடுத்துவந்த தூதுக்குழுவுக்கு தலைவராக இருந்தவர்களே கச்சுவத்தை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அப்துல் ரஹ்மான் வலீயுல்லாஹ் ஆவார். இவர்கள் இலங்கையில் காலடிவைக்க முன்னரே வபாத்தானதாகவும், அவர்களுடன் வந்த தூதுக்குழு அவர்களை தற்போது கச்சுவத்தை பள்ளிவாசலில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. 


ஹிஜ்ரி 22இல் (கி.பி. 642) இங்கு வருகைதந்த செய்யிதினா அபூபக்கர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, அப்போது யெமனை ஆட்சிசெய்த மன்னரின் (கவர்ணர்) மகனான சத்ருத்தீன் அவர்களும், அவருடைய தோழர்களும் இங்கு ஏற்கனவே காணப்பட்ட மக்பராவின் அருகில் ஹிஜ்ரி 27இல் (கி.பி. 647) இந்த பள்ளிவாசலை கட்டினார்கள். அப்போது குப்பா மற்றும் மினாரா இன்றி பள்ளிவாசல் கட்டப்பட்டது.


கச்சுவத்த என்ற பெயர் ஹஜ்ஜிவத்தை என்ற பெயரின் நீட்சியாகும். அதாவது ஹஜ்ஜி தோட்டம் என்பது இதன் தமிழ் அர்த்தமாகும். இஸ்லாத்தின் அறிமுகத்தின் பின்னர் தூர கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து புனித மக்கா நகருக்கு ஹஜ் செய்வதற்காக சென்ற ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜிவத்தையில் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தாகவும் 

வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.


சீனாவின் மிங் வம்ச அரச குடும்பத்தின் (Ming dynasty) ஆலோசகர் அட்மிரல் செங் ஹே (Zheng He)அவர்கள் சீனாவில் இருந்து ஹஜ்ஜாஜிகளை கப்பல் மூலம் கி.பி 1400ம் ஆண்டு காலப் பகுதியில் (போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) ஹஜ்ஜிக்காக அழைத்துச் சென்ற போது காலி ஹஜ்ஜிவைத்தைக்கு வருகை தந்ததாகவும் சுதேச சிங்கள மக்களும் இலங்கை முஸ்லிம்களும் அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் சீனாவின் வரலாற்றுக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், காலியின் கிரிப்ஸ் பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழி கல்வெட்டில்  செங் ஹே (Zheng He) தொடர்பாகவும், ஒரு பள்ளிவாசல் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.


மலேசிய, இந்தோனேசிய, சீன  ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜூவத்தை பள்ளிவாசலில் இருந்தே இஃராம் கட்டியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அல்குர்ஆனுக்கு முதலில் தமிழில் தப்ஸீர் எழுதிய இமாமுஸ் ஸைலான் செய்ஹ் முஸ்தபா பின் பாவா ஆதம் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் ஹஜ்ஜிவத்தை  பள்ளிவாசலில் இருந்தே  ஹஜ் பயணத்தை ஆரம்பித்தார்கள்.


தகவல் உதவி மற்றும் படம் : Vinuka Manitha Vidanapathirana , Fazhan Nawas , Manusha Nanayakkaara , Farhan Nizamdeen 


தொகுப்பு: இப்ஹாம் நவாஸ்

Nawas Fb

Saturday, 18 November 2023

அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) முதல் பலஸ்தீனம் வரை!.....


 அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) முதல் பலஸ்தீனம் வரை!.....

பகுதி - 01

*********

9/11 அன்று அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்தபோது - இச்சம்பவத்தைத் தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் - கோபுரக்கள் இடிந்து விழத்தொடங்கிய போது - அதனைக் கண்டு நடனமாடத் தொடங்கிய ஒரு குழுவைக் அவதானித்தார். அவர்கள் இந்நிகழ்வால மகிழ்ச்சியடைந்திருந்ததோடு கோபுரங்கள் எரிவதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டுமிருந்ததை கண்டார்.


அந்த அமெரிக்கப் பெண் இது தொடர்பில் தொலைபேசியில் அழைத்துத் தகவலையும் சொன்னார். அதன் பிரகாரம் அக்குழு உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் 5 பேரும் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட்டுடன் தொடர்புடைய இஸ்ரேலியர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் எந்த சலசலப்புமில்லாமல் விடுவிக்கப்பட்டனர்.


இந்தச் சம்பவம், மொசாட், சிஐஏவுடன் இணைந்து - இக்கோபுரங்கள் தாக்கப்படுவதற்கு பின்னணியாக இருந்தத்தை - அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், விஷேட குழு அமைக்கப்பட்டு செய்யப்பட்ட விசாரணைகளில் - இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாமல் மூடிமறைக்கப்பட்டிருந்தது.


ஈரான் மற்றும், அரபு நாடுகளின் இராணுவ வளர்ச்சியின் காரணமாக - இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக - மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் மிகவும் அவசியமெனப்ப்பட்டது. இந்த அரபு / முஸ்லிம் நாடுகளில் எண்ணெய் இருப்பதனால் - அவை வேகமாக முன்னேறி இராணுவ ரீதியாக வளர ஆரம்பித்தன. இது மொசாட்டிற்குச் #சிவப்பு #எச்சரிக்கையை ஏற்படுத்தியது. 


மறுபுறம், மத்திய கிழக்கிற்கு இராணுவரீதியாக வந்து - எண்ணெயைக் கைப்பற்றி - அப்பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கு - அமெரிக்காவிற்கு #வியட்நாமில் #ஏற்பட்ட #தோல்விக்குப் #பிறகு - வெளிநாட்டில் மற்றொரு இராணுவப் பிரச்சாரத்தை நியாயப்படுத்த ஒரு பெரிய சாக்குப்போக்கு தேவைப்பட்டது. 


எனவே, இரட்டைக்.கோபுரத்தைத் தகர்ப்பதன் மூலம் - #அமெரிக்க #மண்ணில் #பயங்கரவாதத் #தாக்குதல் என்ற போர்வையில் -  மத்திய கிழக்கில் யாரோ ஒருவர் மீது குற்றம் சாட்டி - இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டது. அதன் பிரகாரம், ஒசாமா பின்லேடன் மீது வைல்ட் கார்டு விழுந்தது. 


ஒசாமா  பின்லேடன் அமெரிக்காவினால் வளர்க்கப்பட்டவரே. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுடனான போரில் அவருக்கு நிதியுதவி மற்றும் ஆயுதம் வழங்கியது அமெரிக்காவே. ஆனால், அறியப்பட்டபடி சிஐஏ எப்போதும் அதன் குழந்தைகளை இறுதியில் சாப்பிட்டு விழுங்கிவிடும் (கடாபி, சதாம் உசேன்). எனவே இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு - அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை வந்தடைந்தது. 


மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தி - அதன் எண்ணெய் வளங்களை ஏப்பமிடவும் - ஈரான் உட்பட அரபு / முஸ்லிம் நாடுகளின் இராணுவ பலத்தை அழிப்பதற்கும் -ஆப்கானில் மாத்திரம் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால்,  ஈரானின் மறுபுறத்தில் நுழைவதற்கு அமெரிக்காவிற்கு மற்றொரு சாக்குபோக்குத் தேவைப்பட்டது. 


எனவே, மொசாட் மற்றும் சிஐஏ ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது, #ஈராக்கில் #பேரழிவு #ஏற்படுத்தும் #இரசாயன #ஆயுதங்கள் அதுதான் அந்த சாக்குப்போக்கு. இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. அதன் பிரகாரம், அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்து - நாட்டின் மொத்த தங்க இருப்புகளையும் சூறையாடியதோடு எண்ணெய் வயல்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.


இத்திட்டம் நிறைவேறியதால், இஸ்ரேலுக்கு உடனடியாக இருந்த பெரும் அச்சுறுத்தல் மறைந்ததாலும் - இஸ்ரேலும் மொசாட்டுக்கும் சிரியாவின் இராணுவ பலமும் - அதனை அண்டியதாகவுள்ள ஈரானின் சிரியாவுடனான இராணுவ பொருளாதார ஒத்துழைப்பும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்தது. அதனால், சிரியாவின் மீது மொஸட்டின் அடுத்த குறியிருந்தது. 


ஆனால், அமெரிக்காவிற்குள்ளே வெளிநாடுகளில் நேரடி அமெரிக்க இராணுவ தலையீடுகள் தொடர்பில் காணப்பட்ட எதிர்ப்பு வலுவாக இருந்தமையால் - அதன் பிரகாரம் மொசாட்டும் சிஐஏயும் சேர்ந்து புதிய திட்டத்தை வகுத்தன். இம்முறை அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் - #கூலிப்படையை (ஐ.எஸ்.ஐ.எஸ்) உருவாக்கி அதற்கு நிதியுதவி அளித்து - பயிற்சி அளித்து - ஆயுதம் வழங்கி - சிரியாவில் உள்நாட்டுப் போரை ஆரம்பிக்க வைத்தது. 


தொடரும்.....


AL Thavam Fb

Wednesday, 15 November 2023

சேர் முகம்மது மாக்கான் மாக்கார்


 சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களும் பேராதனைப் பல்கலைக்கழக பள்ளிவாசலும்  


சேர் முஹம்மத் மகான் மாகார் இலங்கையின் புகழ்பெற்ற மாணிக்கக்கல் வர்த்தகர். கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்தார். பின்னர் குடும்ப வர்த்தகமான மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இவரது மாணிக்கக் கல் வர்த்தகம் பிரித்தானிய அரசகுடும்பத்திலும், உஸ்மானிய கிலாபத்திலும் பிரபலம்பெற்றிருந்தது. 1909ம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் 7ம் எட்வர் அவர்களால் பிரித்தானியாவுக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 


அவரது சேவைகளை அறிந்த உஸ்மானிய கிலாபத்தின் சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களை கொழும்பு நகரின் துருக்கிக்கான 'கொன்ஸல் ஜெனரலாக' “Consul General”    நியமித்தார். கொன்ஸல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு 28 வயது. இந்த பதவிக்கு கிழக்கு உலகில் இருந்து நியமிக்கப்ட்ட முதலாவது நபர் முஹம்மத் மகான் மாகார் ஆவார். 1903ம் ஆண்டு முதல் 1915ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். துருக்கியையும் - மதீனா நகரையும் இணைக்கும் ஹிஜாஸ் ரெயில்வே Hijaz Railway திட்டத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நிதி திரட்டி ஸ்தான்பூல் நகருக்கு அனுப்பிவைத்தார். 1907ம் ஆண்டில் துருக்கி வெளிவிகார அமைச்சரிடம் இந்தநிதி  கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு 12 புதிய சோனகத் தெருவில் இடம்பெற்றது. 


சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்கள் அவரது தாயாரும் முஸ்லிம் பெண்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அவரது தாயார் ஆமீனா உம்மா மாகான் மாகான் அவர்களே காலி பஹ்ஸதுல் இப்றாஹீமிய்யா அரபுக்கல்லூரியை ஸ்தாபித்தார்கள். இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வியை மேம்படுத்த நீதியரசர்  அக்பர் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தார். கொழும்பு 12 பாதிமா மகளிர் கல்லூரியையும் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் செலவுலேயே நிர்மாணிக்கப்பட்டது. மனிங் அரசியல் திருத்தத்தின் கீழ் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு 1924ம் ஆண்டில் தெரிவுசெய்யப்ட்டார். 


இலங்கை முஸ்லிம்கள் தனி இனம் அல்ல என்று பிரித்தானியாவின் Royal Society of Londonஇல் வாதாடிய  Sir பொன்னம்பலம் ராமநாதனின் வாதங்களை முறியடிக்க சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் மூலம் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு பொன் ராமநாதனின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை நியாயமற்றவை என்று நிறுவினார். 


போராதனை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் சொந்தப் பணத்தில் இருந்து நிர்மாணிக்கப்பட்டதாகும். போராதனை பல்கலைக்கழகத்தில் கற்ற முஸ்லிம் பெண் மாணவியருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து புலமைப்பரிசில்களை வழங்கினார். முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் பிரித்தானியாவின் மன்னரும் எலிசெபத் மகாராணியாரின் தந்தையுமான மன்னர் 6ம் ஜோர்ஜ் அவர்கள் ' Sir'     பட்டம்  knighthood வழங்கி  கௌரவித்தார் சேர் முஹம்மத் மகான் மாகார் அவர்களின் மூத்தத மகன் அஜ்வாத் மாகான் மகார் அவர்கள் இலங்கையின் முதலாவது மருத்துவத்துறை பேராசிரியர் ஆவார். 


முஹம்மத் மகான் மாகார் அவருக்கு துருக்கி அரசாங்கம் எபந்தி என்ற பட்டத்தையும் வழங்கிகௌரவித்தது. அவர் பயன்படுத்திய இராஜதந்திர உடை கொழும்பு 08 கிங்ஸி வீதியில் அமைந்துள்ள துருக்கி தூதரகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0767WipX6MVbv6YWuProzvTaam2pU4mWs22kkhCohMWBr8pKoGf2vzB8bwKb96viJl&id=100064695969099&mibextid=Nif5oz

Tuesday, 14 November 2023

அப்துல் கபூர் ஹாஜி இலங்கை


 அல் ஹாஜ் 

என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள்


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார். இலங்கையின் அன்றைய ஆளுனர் Sir வில்லியம் ஹென்றி மன்னிங் அவர்கள் you have done a valuable work என்று பாராட்டினார். 


என் டீ எச் அப்துல் கபூர் இலங்கை வரலாற்றில் கல்வித்துறைக்கு மகத்தான சேவையை நிறைவேற்றியவராவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவை சொந்த செலவில் நிர்மாணித்தார். மேலதிகமாக பதினாறு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். ஸாஹிரா கல்லூரியின் விடுதியை Hostel நிர்மாணிக்க அன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார். ஸாஹிராக் கல்லூரிக்கு ஸதகதுல் ஜாரியாவாக தனது 14ஏக்கர் ரப்பர் தோட்டத்தை (Rubber estate) வக்ப் செய்தார். அவரது நினைவாகவே ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபம் அமைககப்பட்டுள்ளது.


ரத்மலானையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (கண் மற்றும் செவிப்புலன் அற்ற) பாடசாலையை தனது காணியில் சொந்தச் செலவில் நிர்மாணிதார். 


நாட்டில் புகழ்பூத்த ஆலிம்களை உருவாக்கிய மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியை நிர்மாணித்து தீன் பணி செய்தார். அல்குர்ஆனை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துல ஸமது ஸாஹிப் அவர்களின் தந்தை கண்ணியத்திற்குரிய அப்துல் ஹமீத் பாகவி ஹஸ்ரத் உட்பட பல அறிஞர்களை வரவழைத்து கபூரியாவை நெறிப்படுந்தினார்கள். கபூரியாவுக்கு என 40 ஏக்கர் விசாலமான ரப்பர் காணியை (Rubber estate) வக்ப் செய்தார்கள். 1971ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் இந்தக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு தற்சமயம் பத்து ஏக்கர் காணி மாத்திரமே கபூரியாவுக்குச் சொந்தமாகக் காணப்படுகிறது. 


1905ம் ஆண்டில் தொப்பி அணி அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று உத்தரவை எதிர்த்து 1905ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி்  ஜனாப் அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்க போராடும் நோக்கில் "துருக்கித் தொப்பி போராட்டக் குழு" என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்கள். இதில் என் டி எச் அப்துல் கபூர் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்து போராடினார் . இறுதியில் நீதிமன்றத்தில் தொப்பியுடன் வாதட முடியும் என்று அனுமதி கிடைத்தது. 


என் டி எச் அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ்வுக்காக செய்தது என்று திருப்தியடைந்துகொள்வார்கள். 


என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள் பற்றி இலங்கையின் முன்னாள் பிரதமர் 

S W R D பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.


Though he is perhaps best remembered for the contribution to the cause of Muslim education and religion, his generosity was not limited to the Muslim community alone. I regard him as one of the outstanding Ceylonese gentlemen of his age and appreciate this opportunity of paying this tribute to him".

Sunday, 12 November 2023

அபூதர் ரலியல்லாஹ்

 

ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு. 


உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்திருந்தார். 


“மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். பிறகு எதற்கு அழுகிறாய்?” என்றார் அபூதர். 


“தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்கள்; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லை; உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் துணியில்லை. நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?” 


அதைக் கேட்டு அபூதர் புன்னகைத்தார். “உறுதிகொள். நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் ‘உங்களுள் ஒருவர் பாலையில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்’ என்று கூறியதை நான் செவியுற்றேன். அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர. இதோ இங்கு நான் அரவமற்ற பாலையில். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. சென்று பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்” 


(முஸ்னது அஹ்மத் 21373). 


நபியவர்களின் முன்னறிவிப்பை எவ்விதச் சந்தேகமும் இன்றி வெகு நிச்சயமாக நம்பும் மனம் அமைந்திருந்தது சரி. ஆனால் அந்த மரணத் தறுவாயிலும் அத்தகைய கடின சூழலிலும் தமக்கு அதைப் பொருத்தி உவகை கொள்வதற்கு எத்தகைய ஈமானிய உறுதி இருந்திருக்க வேண்டும்? 


“எத்தனையோ பாதைகள் கிடக்கின்றன. எதில் என்று நான் சென்று காத்திருப்பேன்?” 


அதெல்லாம் தெரியாது. “போ! போய்ப் பார்” என்று மட்டும் வற்புறுத்தினார் அபூதர். 


சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தார் உம்முதர். அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பது, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவது என்று அவருக்குக் கடினமான சோதனை. 


தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் கட்டளைகள் இட்டார். “நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் ‘இவர் அபூதர்’ என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.” 


அபூதர்ரின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்திவிட்டு யாரேனும் வருகிறார்களா என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று எகிப்திய கழுகுகளைப்போல் தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது. 


அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிந்து தங்களது பயணக் குழுவின் கவனத்தைக் கவர முயல்வதைக் கவனித்தார்கள். யாருக்கோ அவசர உதவி தேவை என்பது புரிந்து அங்கு விரைந்தது குழு. ஒட்டகச் சவுக்கு அவர்களது கழுத்தில் தொங்க விரைந்து நெருங்கியவர்கள் 


“அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க, 


“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வருவீர்கள். அவரை நல்லடக்கம் செய்ய உதவி புரிவீர்கள் என்று கூறினார். தயவுசெய்து உதவுங்கள்” என்றார் அபூதர்ரின் மனைவி. 


“யார் அவர்?” 


“அபூதர்.” 


“அல்லாஹ்வின் தூதரின் தோழரா?” 


“ஆம்.” 


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். விஷயத்தைக் கேட்டதும் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”. 


வனாந்தரத்தில் தனிமையில் கிடந்த அபூதர் முஸ்லிம்களின் குழுவினால் சிறப்பாக நல்லடக்கம் செய்யப்பட்டார். எல்லாம் முடிந்து கிளம்பிச் செல்ல இருந்த குழுவை அபூதர்ரின் மகள் தடுத்தார். “என் தந்தை தங்களுக்கு ஸலாம் பகர்ந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு புரிந்த தங்களுக்கு ஓர் ஆட்டை அறுத்துச் சமைத்துத் தரச் சொல்லி எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். உணவு உண்டு செல்லுங்கள்.” அந்தக் குழுவுக்கு உணவு பரிமாறியது அபூதர்ரின் குடும்பம். 


வத்தான் பள்ளத்தாக்கிலிருந்து தனியாய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, தனியாளாய் இறந்து போனார் அபூதர் அல்கிஃபாரி, 


ரலியல்லாஹு அன்ஹு.

இஸ்லாமிய உச்சி மாநாடு


 இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையத்தின் உச்சி மாநாடு அரசியல் முக்கியத்துவமற்ற ஒரு கூடிக் கலைதல் மட்டுமா? 


காஸா இனப்படுகொலை மற்றும் இனச்சம்ஹாரம் குறித்து ஆராய்ந்து உடனடித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஒன்றுகூடிய இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையமும் அறபு லீக்கும் எந்த உருப்படியான தீர்மானமும் இல்லாமலேயே கலைந்து சென்றுள்ளமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. காரணம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியல் ராஜதந்திர நோக்கம் கொண்ட நாடுகள் கூடி ஒரேவகைப்பட்ட தீர்மானத்தை அவை எடுக்க வாய்ப்பில்லை.


காஸா எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் படுகொலை 12 000 ஐ நெருங்குகின்றது. 35 நாட்களின் பின்னரே இந்நாடுகள் கூடியமை அவற்றின் இயலாமையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது. ஒரு சம்பிரதாயத்துக்கும் சடங்குக்குமே அவை ஒன்றுகூடின. ஸவூதி அறேபியாவே இப்போது அறபு லீக் ற்குத்தலைமை வகிக்கின்றது. அதை பயங்கரமான பொறியில் மாட்டி ஆட்டிப்படைக்கும் வொஷிங்டனும் வொஷிங்கடனின் உற்ற தோழன் இஸ்ரேலும் றியாதை வைத்தே காய் நகர்த்தி வரும் நிலையில் அறபு நாடுகளின் கூட்டமைப்போ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்போ உச்சிமாநாட்டில் எதையும் சாதிக்கபபோவதில்லை.


ஒரு மாதத்திற்கு முன்னரே இது நடந்திருக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் அதனை நடாத்தாமல் ரியாத் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. உண்மையில் இன்று தேவையானது உடனடி நடவடிக்கை. போரை அவசரமாக நிறுத்த வேண்டும். காஸாவுக்கான மனிதாபிமான கொரிடோரை விசாலப் படுத்த வேண்டும். நீண்ட காலத் தீர்வான 1967 எல்லையுடன் கூடிய சுதந்திர ஃபலஸ்தீன் பற்றிய பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட வேண்டும். இதை விடுத்து வெறும் கண்டன வார்த்தைகளோடு அனைத்தையும் சுருக்கிக் கொண்டார்கள் அவர்கள்.


இஸ்ரேலை வாழவைக்கும் சவூதி.  ஐக்கிய அரபு அமீரகம் ஜோர்தான் மற்றும் எகிப்து  என்பனவும் இங்கே உள்ளன.அவை எப்படி இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் எடுக்கும்? இஸ்ரேலுக்கு எதிராக சவூதி பெற்றோலியத்தை ஓர் ஆயுதமாகக் பயன்படுத்த மாட்டாது என்று மிகக்காட்டமாக தெரிவித்துள்ளார் முஹம்மத் பின் ஸல்மான். ஈரானிய ஜனாதிபதி இந்தப்பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் ஊடாகவே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தொடர்ச்சியாக வினியோகிக்கப்படுவதால் அமெரிக்க தளங்களை அறபு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் துப்புவதா விழுங்குவதா என்ற திரிசங்கு நிலையிலுள்ள அராபிய மன்னர்கள் ஒருபோதும் இஸ்ரேலை எதிர்த்து எந்தத்தீர்மானதையும் எடுக்கப்போவதில்லை என்பதை இந்த உச்சிமாநாட்டில் உறுதி செய்துள்ளனர்.


முஸ்லிம் உம்மாவின் எதிர்பார்ப்பையும் அபிலாஷையையும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு தமது இருப்பை மட்டும் இலக்காகக் கொண்டு காய்நகர்த்தும் அரேபிய ஆட்சியாளர்கள் குறிப்பாக மேலே குறிப்பிட்ட நான்கு நாடுகளும் இஸ்ரேலைப்பகைப்பது தமது எஜமானரான அமெரிக்காவைப் பதைப்பதாகும் என்பதைத் தெளிவாக விளங்கி வைத்துள்ளன. ஆதலால் இவர்கள் கூடாமலேயே இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் இவர்கள் இஸ்ரேலில் கொண்டுள்ள தனிப்பட்ட செல்வாக்கைப்பயன்படுத்தியேனும் காஸா மக்கள் மீதான இனப்படுகொலையை ஆவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்.


எண்ணெய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துகின்றோம் என்று ஓர் அச்சுறுத்தலையேனும் விடுத்திருக்கலாம். அல்லது தமது எஜமானர்கள் அறியாவண்ணமேனும் பலஸ்தீனர்களுக்கு உதவியிருக்கலாம். எதுவுமே செய்யாமல் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பச்சை பச்சையாக ஆதரிக்கும் இந்த அதிகார வர்க்கத்தின் மனோபாவம் மிகவும் குரூரமானது. குமட்டலைத்தரக்கூடியது. கோபத்தைக் கொப்பளிக்க வைக்கக்கூடியது. நேர்மையான முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானத்தின் நூறில் ஒன்று கூட இவர்களுக்கு இல்லை என்பது மிகுந்த அவமானகரமான து. இழிவானது. 


இன்று தென்னாபிரிக்கா மிக தைரியமாகவும் வெளிப்படையாகவும் நெடன்யாஹூ என்ற போர்க்குற்றவாளியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உடனடியாக கைது வேண்டும் என்று கோரியுள்ளது.இப்படிக்கோருவதற்கு கூட ஒரு முஸ்லிம் நாட்டுத்தலைவருக்கு தில் இல்லை என்றால் இவர்கள் யார்? இவர்கள் இவ்வளவு கோழைகளாய் ஏன் இருக்கிறார்கள்? இவர்கள் யாருக்கு அஞ்சுகிறார்கள்? இவர்களை அமைதிப்படுத்தியுள்ள காரணி எது என்ற பல கேள்விகளை இது எழுப்புகின்றது. அர்தூகான் கூட அமைதியாக இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது.பல லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ளது.


ஆனால் அருகிலுள்ள அறபு நாடுகள் இஸ்ரேலை இன்னும் விசுவாசமிக்க நண்பனாகவும் காதலனாகவுமே நடாத்துவதை என்னவென்று நாம் வர்ணிப்பது?. இந்தப்போர் எமது நட்பை பாதித்துவிடாது என்று இன்றைய தினம் ஐக்கிய அறபு அமீரகம் அறிவித்துள்ளது.அப்படியானால் எதற்கு உச்சி மாநாடு? காஸா மட்டும்தான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லை முழு அறபுலகமும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை இப்போதுதான் புரிந்து கொள்கிறேன் என்ற பலஸ்தீனரின் வார்த்தை எத்துணை உண்மை என்பதை மீளவும் ஒருமுறை அறபு களைக்கூத்தாடிகளின் காட்டுதர்பார் நிரூபித்துள்ளது.


வரலாறு கோழைகளையும் துரோகிகளையும் வாழவைத்த வரலாறில்லை. இந்தப்பாடத்தை நிச்சயம் ஒருநாள் இன்றுள்ள மீசை வைத்த அரேபிய பெட்டை மன்னர்களும் இராணுவ சர்வதிகாரிகளும் அறிந்தே ஆகுவார்கள்


Zain Rouff