அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் (9/11) முதல் பலஸ்தீனம் வரை!.....
பகுதி - 01
*********
9/11 அன்று அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்தபோது - இச்சம்பவத்தைத் தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் - கோபுரக்கள் இடிந்து விழத்தொடங்கிய போது - அதனைக் கண்டு நடனமாடத் தொடங்கிய ஒரு குழுவைக் அவதானித்தார். அவர்கள் இந்நிகழ்வால மகிழ்ச்சியடைந்திருந்ததோடு கோபுரங்கள் எரிவதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டுமிருந்ததை கண்டார்.
அந்த அமெரிக்கப் பெண் இது தொடர்பில் தொலைபேசியில் அழைத்துத் தகவலையும் சொன்னார். அதன் பிரகாரம் அக்குழு உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் 5 பேரும் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட்டுடன் தொடர்புடைய இஸ்ரேலியர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் எந்த சலசலப்புமில்லாமல் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம், மொசாட், சிஐஏவுடன் இணைந்து - இக்கோபுரங்கள் தாக்கப்படுவதற்கு பின்னணியாக இருந்தத்தை - அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், விஷேட குழு அமைக்கப்பட்டு செய்யப்பட்ட விசாரணைகளில் - இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாமல் மூடிமறைக்கப்பட்டிருந்தது.
ஈரான் மற்றும், அரபு நாடுகளின் இராணுவ வளர்ச்சியின் காரணமாக - இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக - மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் மிகவும் அவசியமெனப்ப்பட்டது. இந்த அரபு / முஸ்லிம் நாடுகளில் எண்ணெய் இருப்பதனால் - அவை வேகமாக முன்னேறி இராணுவ ரீதியாக வளர ஆரம்பித்தன. இது மொசாட்டிற்குச் #சிவப்பு #எச்சரிக்கையை ஏற்படுத்தியது.
மறுபுறம், மத்திய கிழக்கிற்கு இராணுவரீதியாக வந்து - எண்ணெயைக் கைப்பற்றி - அப்பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கு - அமெரிக்காவிற்கு #வியட்நாமில் #ஏற்பட்ட #தோல்விக்குப் #பிறகு - வெளிநாட்டில் மற்றொரு இராணுவப் பிரச்சாரத்தை நியாயப்படுத்த ஒரு பெரிய சாக்குப்போக்கு தேவைப்பட்டது.
எனவே, இரட்டைக்.கோபுரத்தைத் தகர்ப்பதன் மூலம் - #அமெரிக்க #மண்ணில் #பயங்கரவாதத் #தாக்குதல் என்ற போர்வையில் - மத்திய கிழக்கில் யாரோ ஒருவர் மீது குற்றம் சாட்டி - இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டது. அதன் பிரகாரம், ஒசாமா பின்லேடன் மீது வைல்ட் கார்டு விழுந்தது.
ஒசாமா பின்லேடன் அமெரிக்காவினால் வளர்க்கப்பட்டவரே. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுடனான போரில் அவருக்கு நிதியுதவி மற்றும் ஆயுதம் வழங்கியது அமெரிக்காவே. ஆனால், அறியப்பட்டபடி சிஐஏ எப்போதும் அதன் குழந்தைகளை இறுதியில் சாப்பிட்டு விழுங்கிவிடும் (கடாபி, சதாம் உசேன்). எனவே இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு - அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை வந்தடைந்தது.
மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தி - அதன் எண்ணெய் வளங்களை ஏப்பமிடவும் - ஈரான் உட்பட அரபு / முஸ்லிம் நாடுகளின் இராணுவ பலத்தை அழிப்பதற்கும் -ஆப்கானில் மாத்திரம் அமெரிக்காவின் இராணுவப் பிரசன்னம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால், ஈரானின் மறுபுறத்தில் நுழைவதற்கு அமெரிக்காவிற்கு மற்றொரு சாக்குபோக்குத் தேவைப்பட்டது.
எனவே, மொசாட் மற்றும் சிஐஏ ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது, #ஈராக்கில் #பேரழிவு #ஏற்படுத்தும் #இரசாயன #ஆயுதங்கள் அதுதான் அந்த சாக்குப்போக்கு. இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. அதன் பிரகாரம், அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்து - நாட்டின் மொத்த தங்க இருப்புகளையும் சூறையாடியதோடு எண்ணெய் வயல்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டன.
இத்திட்டம் நிறைவேறியதால், இஸ்ரேலுக்கு உடனடியாக இருந்த பெரும் அச்சுறுத்தல் மறைந்ததாலும் - இஸ்ரேலும் மொசாட்டுக்கும் சிரியாவின் இராணுவ பலமும் - அதனை அண்டியதாகவுள்ள ஈரானின் சிரியாவுடனான இராணுவ பொருளாதார ஒத்துழைப்பும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்தது. அதனால், சிரியாவின் மீது மொஸட்டின் அடுத்த குறியிருந்தது.
ஆனால், அமெரிக்காவிற்குள்ளே வெளிநாடுகளில் நேரடி அமெரிக்க இராணுவ தலையீடுகள் தொடர்பில் காணப்பட்ட எதிர்ப்பு வலுவாக இருந்தமையால் - அதன் பிரகாரம் மொசாட்டும் சிஐஏயும் சேர்ந்து புதிய திட்டத்தை வகுத்தன். இம்முறை அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் - #கூலிப்படையை (ஐ.எஸ்.ஐ.எஸ்) உருவாக்கி அதற்கு நிதியுதவி அளித்து - பயிற்சி அளித்து - ஆயுதம் வழங்கி - சிரியாவில் உள்நாட்டுப் போரை ஆரம்பிக்க வைத்தது.
தொடரும்.....