السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 30 March 2024

பாங்கு, இகாமத் சொல்லும் முன் ஸலவாத்து ஓதலாமா?.


 பாங்கு, இகாமத் சொல்லும் முன் ஸலவாத்து ஓதலாமா?.


- அ. நௌஷாத் அலீ பாகவீ.


ஷாஃபியீ மத்ஹபின் சட்டமேதைகள் சிலர்… "அவ்வாறு பாங்கு, இகாமத்துக்கு முன்னால் ஸலவாத்து சொல்வது ஸுன்னத்" என்று சொல்கின்றனர். 


அரபுலக அறிஞர்களால் கூட ஆதரிக்கப்பட்ட வளைகுடா நாடுகளிலும் கூட அச்சடிக்கப்படுகிற நூலான ஃபத்ஹுல் முஈன் மற்றும் இஆனத்துத் தாலிபீன் நூல்களில் உள்ள வாசகமாவது: 

"وتسنّ الصلاة على النبي صلى الله عليه وسلم قبلهما : أي الأذان والإقامة"

"பாங்கு, இகாமத்துக்கு முன்னால் ஸலவாத்து சொல்வது ஸுன்னத் ஆகும்".


முக்கிய நபிமொழி நூல்களில் ஒன்றான தப்ரானியில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிற நபிமொழியொன்று இப்படி வருகிறது:


[عن أبي هريرة رضي الله عنه] كان بلالٌ إذا أرادَ أنْ يُقِيمَ الصلاةَ قال السلامُ عليْكَ أيُّها النبيُّ ورحمَةُ اللهِ وبَرَكاتُهُ الصلاةُ رَحِمَكَ اللهُ

"பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இகாமத் சொல்ல நாடினால் 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அஸ்ஸலாத்து ரஹிமகல்லாஹ்' என்று (ஸலாத்தும் ஸலாமும்) சொல்வார்கள்"

الهيثمي (ت ٨٠٧)، مجمع الزوائد ٢‏/٧٨ • أخرجه الطبراني في «المعجم الأوسط» (٨٩١٠)


ஆனாலும் வழக்கம் போல் அல்பானீ போன்ற சவூதிய அறிஞர்கள் இந்நபிமொழியை ளஈஃப் முத்திரை குத்தி பலவீனப்படுத்துகிறார்கள். ளஈஃப் முத்திரையோடு ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து இச்செயலை பித்அத் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். 


இந்த ஹதீஸ் ஒருவேளை ஸஹீஹானதாக இருந்தாலும், பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படி சொன்னதற்குக் காரணம், பள்ளியை ஒட்டியே இருந்த நபியவர்களின் அறைக்குச் சென்று இகாமத் சொல்ல அனுமதி பெறுவதற்காக இருக்கலாமென்றும் அல்லது நபியவர்களுக்கு இகாமத் கேட்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் கூட இருக்கலாமல்லவா? என அசடு வழியும் சப்பைக் காரணங்களை சொல்கிறார்கள்.


இக்கேள்விக்கு ஷாஃபியீ மத்ஹபின் மிக முக்கிய இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜருல் ஹைத்தமீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது 'அல்ஃபfத்தாவல் ஃபிfக்ஹிய்யத்துல் குப்ரா' எனும் நூலில் ஃபத்வா தந்துள்ளார்கள்: 


"இகாமத்துக்கு முன்னர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது ஸுன்னத் என்று சொல்பவர்களை நான் பார்க்கவில்லை. 


பாங்கைப் போலவே இகாமத்துக்குப் பின்னரும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது ஸுன்னத் என்று தான் நம் இமாம்கள் சொல்கிறார்கள். அதற்குப் பிறகு 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தி...' என்ற பாங்கு துஆவை ஓதலாம். 


ஆனால், பாங்கு இகாமத்துக்கு முன்னர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதை இடையூறு செய்யும்படியாக எந்த நபிமொழியிலும் நான் பார்க்கவில்லை. நம் இமாம்கள் பேச்சுகளிலும் அப்படி இடையூறு இருந்து நான் பார்த்ததில்லை. 


இது போன்ற நேரங்களில், பாங்குக்கும், இகாமத்துக்கும் முன்னர் அவ்விரண்டும் ஸுன்னத் இல்லை தான். அவ்விரண்டும் ஸுன்னத் என்ற நம்பிக்கையில் ஒருவர் இதைச் செய்யும் போது அது தடுக்கப்படும். காரணம், ஆதாரமே இல்லாத ஒன்றை ஷரீஅத்தாக ஆக்கிய குற்றம் ஏற்படும். ஆதாரமில்லாத ஒன்றை ஷரீஅத்தாக்குவன் தண்டிக்கப்படுவான். அச்செயல் தடை செய்யப்படும்" 


سئل ابن حجر الهيتمي في "الفتاوى الفقهية الكبرى" :


" هل نص أحد على استحباب الصلاة والسلام على النبي صلى الله عليه وسلم أول الإقامة ؟


فأجاب :

لم أر من قال بندب الصلاة والسلام أول الإقامة ، وإنما الذي ذكره أئمتنا أنهما سنتان عقب الإقامة كالأذان ، ثم بعدهما : اللهم رب هذه الدعوة التامة ...( ثم ذكر الآثار السابقة عن الحسن البصري وغيره ) " انتهى 


وقال أيضا في (1/131) :

" لم نر في شيء منها – يعني الأحاديث - التعرض للصلاة عليه – صلى الله عليه وسلم - قبل الأذان ، ولا إلى محمد رسول الله بعده ، ولم نر أيضا في كلام أئمتنا تعرضا لذلك أيضا ، فحينئذ كل واحد من هذين ليس بسنة في محله المذكور فيه ، فمن أتى بواحد منهما في ذلك معتقدا سنيته في ذلك المحل المخصوص نُهي عنه ومنع منه ؛ لأنه تشريع بغير دليل ، ومن شرَّع بلا دليل يزجر عن ذلك ويُنهى عنه " انتهى


ஆக மொத்தம், நம் இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜருல் ஹைத்தமீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்துப் பிரகாரம் "இது ஸுன்னத்தும் இல்லை. பித்அத்தும் இல்லை. காரணம் நபிமொழிகளில் அதற்குத் தடை இல்லை" என்று கூறியிருக்க,


நம் மதரஸாக்களில் மிகுந்த மதிப்பு கொடுத்து ஓதித்தரப்படும் கிதாபுகளில் ஒன்றான ஃபத்ஹுல் முஈன் உடைய ஆசிரியரும், கேரள சட்ட வல்லுநருமான பொன்னானி ஜைனுத்தீன் மக்தூம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "இது ஸுன்னத்" என்று கூறியிருக்க,


வஹ்ஹாபிகளின் இமாமான அல்பானி போன்றோரின் 'பித்அத்' முத்திரையை டேஷாக கூட மதிக்கமாட்டோம். 


நம் இமாம்கள் காட்டித் தந்த வழியில் ஒரு ஊரில் பாங்குக்கு முன்னர் ஸலவாத்து ஓதும் பழக்கம் இருக்குமேயானால் அதைத் தடை செய்ய எந்த அல்பானி வகையறாக்களுக்கும் உரிமையில்லை. 


குறிப்பு: சில ஊர்களில் இதை கடுமையாக வஹ்ஹாபிகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாக்குவதாக வந்ததையடுத்து இச்சிறு கட்டுரை இந்நேரத்தில் பதிவிடப்படுகிறது.

Thursday, 21 March 2024

வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 470


 #வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 470

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

#ஷஹர் #சிந்தனை -10

------------------------------------------


அல்லாஹ் விரும்பும் ஸலாம்!


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ، أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنْ رَبِّهَا وَمِنِّي وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ، وَلاَ نَصَبَ


(ஒரு முறை) நபி(ﷺ) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு.. அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.


அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

 நூல் : புகாரி-3820


வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் ஸலாம்!


وفي الصحيحين:- عن عائشة رضي الله عنها قالت: (قال لي رسول الله صلى الله عليه وسلم:- هذا جبريل يقرأ عليك السلام – أي: يسلم عليك – قالت: قلت: وعليه السلام ورحمة الله وبركاته، وقالت: ترى ما لا نراه) أي: أنك ترى الذي لا أراه


وهو جبريل عليه السلام.


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ﷺ) அவர்கள் (ஒரு நாள்) என்னிடம்,“(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்மத் துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நபி (ஸல்) அவர்களின்


துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு நாள் என்னிடம்)“ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன். நான்


பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கிறார்கள். ( நூல்: முஸ்லிம் )


நபி (ﷺ) அவர்கள் முந்தி ஸலாம் சொல்லும் பழக்கம் உடையவர்களாக


جاء رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلى دار أبي الهيثم فتَقَدَّمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أبا بكر وعمر فَاسْتَأْذَنَ عَلَيْهِمْ، وَأُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْمَعُ السَّلَامَ تُرِيدُ أَنْ يَزِيدَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ السَّلَامِ فَلَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْصَرِفَ، خَرَجَتْ أُمُّ أَبِي الْهَيْثَمِ تَسْعَى فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ: قَدْ سَمِعْتُ تَسْلِيمَكَ وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَزِيدَنَا مِنْ سَلَامِكَ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيْنَ أَبُو الْهَيْثَمِ؟» قَالَتْ: قَرِيبٌ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ، ادْخُلُوا، السَّاعَةَ يَأْتِي، فَبَسَطَتْ لَهُمْ بِسَاطًا تَحْتَ شَجَرَةٍ حَتَّى جَاءَ أَبُو الْهَيْثَمِ مَعَ حِمَارِهِ وَعَلَيْهِ قِرْبَتَانِ مِنْ مَاءٍ فَفَرِحَ بِهِمْ أَبُو الْهَيْثَمِ وَقَرَّبَ تَحِيَّتَهُمْ. وَصَعِدَ أَبُو الْهَيْثَمِ عَلَى نَخْلَةٍ فَصَرَمَ أَعْذَاقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حَسْبُكَ يَا أَبَا الْهَيْثَمِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَمِنْ رُطَبِهِ، وَتَلَذُّوا بِهِ، ثُمَّ أَتَاهُمْ بِمَاءٍ فَشَرِبُوا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ إِلَى شَاةٍ لِيَذْبَحَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَاللَّبُونَ» ، ثُمَّ قَامَ أَبُو الْهَيْثَمِ فَعَجَنَ لَهُمْ وَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رُءُوسَهُمْ فَنَامُوا فَاسْتَيْقَظُوا وَقَدْ أَدْرَكَ طَعَامُهُمْ، فَوَضَعَهُ بَيْنَ أَيْدِيهِمْ فَأَكَلُوا وَشَبِعُوا وَحَمِدُوا اللَّهَ، وَأَتَاهُمْ أَبُو الْهَيْثَمِ بِبَقِيَّةِ الْأَعْذَاقِ فَأَصَابُوا مِنْهُ… ولما سلم رسول الله صلى الله عليه وسلم منصرفاً قَالَتْ لَهُ أُمُّ أَبِي الْهَيْثَمِ: لَوْ دَعَوْتَ لَنَا فَقَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ» .


அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாக அறிவிக்கின்றார்கள்:“ஒரு நாள் நண்பகல் நேரத்தில் நபி {ﷺ} அவர்கள் மஸ்ஜிதுன் நபவீயில் அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அங்கே அபூபக்ர் (ரலி) அவர்களும் 

வருகை தந்திருக்கின்றார்கள். 


அப்போது, நபி {ﷺ} அவர்கள்“அபூபக்ரே! என்ன இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கின்றீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களை இந்த நேரத்தில் இங்கே வரவைத்தது எதுவோ அதுவே என்னையும் 

வரவைத்தது” என்று பதில் கூறினார்கள்.


சிறிது நேரத்தில் உமர் (ரலி) அவர்களும் அங்கே வருகை தர, நபி {ﷺ} அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வினவியது போன்று வினவ, உமர் (ரலி) அவர்கள் 

“அல்லாஹ்வின் தூதரே! கடுமையான பசி ஆதலால் இங்கு வந்தேன்” என்று கூறினார்கள்.


கொஞ்ச நேரம் அண்ணலார் {ﷺ} அவர்கள் அபூபக்ர், உமர் (ரலி –அன்ஹுமா) ஆகியோரோடு உரையாடி விட்டு “தோழர்களே! வாருங்கள்! மூவரும் சேர்ந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று வருவோம்!” என்று கூறினார்கள்.


நபி {ﷺ} அவர்கள் நடுவே வர, அபூபக்ர் (ரலி) அவர்கள் வலது புறத்திலும், உமர் (ரலி) அவர்கள் இடது புறத்திலும் ஒரு சேர நடந்து வந்து அபுல் ஹைஸம் (ரலி) அவர்களின் வீட்டின் முன் வந்து நின்றார்கள்.


மாநபி {ﷺ} அவர்கள், அபூபக்ர் மற்றும் உமர் (ரலி - அன்ஹுமா) இருவரையும் முந்திக்கொண்டு ஸலாம் கூறினார்கள். வீட்டிலிருந்து பதிலேதும் வரவில்லை . 


இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஸலாம் கூற உள்ளிருந்து பதிலேதும் வராததால் நபி{ﷺ} அவர்களும், தோழர்களும் திரும்பி வருவதற்கு ஆயத்தமான போது,“வஅலைக்குமுஸ்ஸலாம்… யாரஸூலுல்லாஹ்….” வீட்டின் உள்ளிருந்து உம்மு ஹைஸம் அவர்கள் குரல் கொடுத்தார்கள்.உம்மு ஹைஸம் அவர்களே! ஏன் மூன்று ஸலாம் வரை மௌனம் காத்தீர்கள்! உடனடியாக பதில் கூறியிருக்க வேண்டாமா? என நபி {ﷺ} அவர்கள் கேட்டார்கள்.


அதற்கு, அல்லாஹ்வின் தூதரே! ஸலாம் கூறியது தாங்கள் அல்லவா? 

தங்களின் ஸலாம் எத்தனை மகத்துவம்நிறைந்தது?!” ஆதலால் தான் சிறிது 

தாமதித்து பதில் கூறினேன் என்றார்கள்.


நபி {ﷺ} அவர்கள் புன்னகையை மறுமொழியாய் தந்து விட்டு, அபுல் ஹைஸம் எங்கே? என்று வின வினார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! இதோ அருகில் இருக்கிற கிணற்றுக்கு தண்ணீர் கொண்டு வர சென்றிருக்கின்றார். அதோ அந்த மரத்தடியில் சற்று இளைப்பாருங்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்” உம்மு ஸஹைஸம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வருகின்றார்கள். அங்கே மரத்தின் நிழலில் மாநபி {ﷺ} அவர்களையும், அபூபக்ர், உமர் (ரலி) இருவரையும் பார்த்து பூரிப்படைந்தவராக முக மலர்ச்சியோடு வர வேற்றார்கள்.


உடனடியாக, அருகில் இருந்த பேரீத்த மரங்களில் ஏறி காய்ந்த, ஈரமான இளவட்டமான அனைத்து ரக பழங்களையும் பறித்துக் கொண்டு வந்து அண்ணலாரின் முன் வந்து வைத்து விட்டு “அல்லாஹ்வின் தூதரே! தங்களது வருகை எனக்கு கண் குளிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது” என்றுகூறி சாப்பிடுமாறு கூறினார்கள்.


மூவரும் திருப்தியாக சாப்பிட்டனர். அருகே வந்த அபுல் ஹைஸம் (ரலி) 

அவர்கள் பேரீத்தங்கனியை கொண்டு வரட்டுமா? என்று கேட்டார்கள்.


அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் “போதும், கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கூறினார்கள்.நல்ல குளிர்ந்த தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார் அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள். மூவரும் தண்ணீரை அருந்தினார்கள். பின்பு நபி {ﷺ} 

அவர்கள் “இந்த தண்ணீரும் இறைவனின் அருட்கொடை தான்” இது குறித்தும் நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள்.


அப்போது, அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! 

சற்று ஓய்வெடுங்கள்! இன்னும் சிறிது நேரத்தில் உணவு தயாரித்து கொண்டு வருகின்றேன்! சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்!” என்று கூறினார்கள்.


மூவரும் மரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உறங்கினார்கள். 

சற்று நேரத்திற்கெல்லாம் உம்மு ஹைஸம், அபுல் ஹைஸம் இருவரும் உணவை தயாரித்து ஆட்டிறைச்சியும், கோதுமை ரொட்டியும் தயார் செய்து நபி {ﷺ} அவர்களின் முன் கொண்டுவைத்து விட்டு மூவரையும் எழுப்பினார்கள்.


கண்விழித்து எழுந்த மூவரும் கை, கால்முகம் கழுவி விட்டு வயிறார உண்டார்கள்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும், அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அப்போது, உம்மு ஹைஸம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! 

எங்களுக்காக துஆ செய்யுங்கள்!” என்று கூறினார்கள்.


அதற்கு, நபி {ﷺ} அவர்கள் “நீங்கள் பூமியில் நடமாடுகின்றவர்களில் 

நல்லோர்களுக்கு உணவளித்திருக்கின்றீர்கள்! பல நாள் சாப்பிடாமல் பட்டினியாய் இருந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து இருக்கின்றீர்கள்! ஆகையால், இறைவன் தன் 

வானவர்களைக் கொண்டு உங்களுக்கு துஆ செய்ய வைத்திருக்கின்றான்! இதோ! 

வானவர்கள் உங்களுக்காக துஆ செய்து கொண்டிருக்கின்றார்கள்”என்று நபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.


பிள்ளைகளை பெற்றோர் காணும்போதும் எழுந்து நின்று ஸலாம் கூறி வரவேற்கவும் வேண்டும். இதுசுன்னத்தான ஒரு நற்பண்பாகும்.


 كانت إذا دخلت عليه

قام إليها فأخذ بيدها فقبلها وأجلسها في مجلسه، وكان إذا دخل عليها قامت إليه

فأخذت بيده فقبلته وأجلسته في مجلسها                                                                       


ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடம் ஃபாத்திமா ரலிஅவர்கள் வந்தால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எழுந்து அவர்களின் கரத்தைப் பற்றி,அவர்களுக்கு அன்பு முத்தம் கொடுத்து தன் சபையில் அவர்களை அமர்த்திவைப்பார்கள். ஃபாத்திமாரலி அன்ஹா அவர்களிடம் நபிகள் நாயகம்வந்தால் (தந்தையின்) திருக்கரத்தைப் பற்றி தந்தைக்கு அன்பு முத்தம் சொரிந்து தன் சபையில் (மகள்) ஃபாத்திமா (ரலி)அமரச்செய்வார்கள்.. ( நூல்: அபூதாவூத், திர்மிதி, நஸாயீ 


வீட்டில் நுழைந்ததும் முதலில் ஸலாம் சொல்வோம்!


عَنْ أَبِي أُمَامَةَؓ أَنَّ رَسُولَ اللهِ #ﷺ قَالَ: ثَلاَثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَي اللهِ، إِنْ عَاشَ رُزِقَ وَكُفِيَ، وَإِنْ مَاتَ أَدْخَلَهُ اللهُ الْجَنَّةَ: مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ إِلَي الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ، وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَي اللهِ.

رواه ابن حبان، (والحديث صحيح): ٢ /٢٥٢


மூன்று நபர்கள் அல்லாஹ்வுடைய பொறுப்பில் உள்ளனர், அவர்கள் உயிர் வாழ்ந்தால் அவர்களுக்கு இரணம் அளிக்கப்படும், அவர்களுடைய வேலைகளில் உதவி செய்யப்படும், அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹுதஆலா அவர்களைச் சுவனத்தில் நுழையவைப்பான். அவர்களில் முதலாமவர், தமது வீட்டில் நுழைந்ததும் ஸலாம் சொல்பவர் இரண்டாமவர், பள்ளிக்குச் செல்பவர் மூன்றாமவர், அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்பட்டவர்” என்று ரஸூலுல்லாஹி (#ﷺ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 ( நூல்: இப்னு ஹிப்பான்

Tuesday, 19 March 2024

ஸஹீஹான ஹதீஸ்

 

உண்மையில் ஸஹீஹ் என்று கூறப்படும் ஹதீஸ்தான் பின்பற்றப்படுகிறதா? 


இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் பலவீனமான செய்திகளே உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்.


அறிவிப்பு : 1


மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.


1395و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ رواه مالك في الموطأ


நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).2. அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நூல் : முஅத்தா (1395)


இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் அவர்கள் நபிகளார் கூறியதாக நேரடியாக அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார். அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த செய்தியாகும். இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாக உள்ளது.


அறிவிப்பு : 2


இதே செய்தி இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இந்தத் தொடர் கூறுகின்றது.


جامع بيان العلم وفضله – مؤسسة الريان – (2 / 55(724- حدثنا سعيد بن عثمان، قال: حدثنا أحمد بن دحيم، قال: حدثنا محمد بن إبراهيم الدؤلي، قال: حدثنا علي بن زيد الفرائضي، قال: حدثنا الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن أبيه، عن جده، قال: قال رسول الله, صلى الله عليه وسلم: “تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه, صلى الله عليه وسلم”.


அறிவிப்பவர் : அவ்ப் பின் மாலிக் (ரலி) நூல் : ஜாமிஉ பயானில் இல்மி வபள்லிஹி (பாகம் 2 : பக்கம் : 55)


இதில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாவர். இரண்டாவது அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஃப் என்பவரை இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கவில்லை. இப்னு ஹிப்பான் எந்தக் குறையும் சொல்லப்படாத யாரெனத் தெரியாதவரை நம்பக்கமானவர் பட்டியலில் இணைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். சிலர் இவரை பொய்யர் என்றும் கூறியுள்ளார்கள்.


இது போன்ற ஏராளமான அறிவிப்புகள் இருந்தாலும், அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.

உண்மைச் சம்பவம்

 

அருமையான ஒரு சம்பவம் படியுங்கள்.


அரபு நாட்டில் ஷேக் ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை.


ஒரு ரமளான் ஈத் பெருநாளன்று, தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..


விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித குர்ஆன் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..


நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...


உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் புனித குர்ஆன். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...


முதலாமவர் தயங்கியவாறே ஷேக்கிடம் சொன்னார்... முதலாளி, புனித குர்ஆனை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...


அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...


இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...


கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...

அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...


அவன் பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்...... என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், 

...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...


தினசரி, அதிகாலை தொழுகைக்கு பிறகும், மாலையில் அந்தி சாயும் நேரத்து தொழுகைக்கு பிறகும் என் அம்மா குர்ஆன் ஓதி அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...


 என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு..... நான் இந்த புனித குர்ஆனையே தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்....


சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,


 புனித குர்ஆன் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.. அதை திறந்து பார்க்கிறான்...

......ஆச்சர்யம்


குர்ஆன் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.... ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்... யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....


அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...


செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...


மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...


வாலிபன் தாய் சொன்னதை நம்பினான்... ஆம், அவள் சொல்லி கொடுத்தார்..... இறைவனையே நம்பு.. அவனிடமே உன் தேவைகளை கேள்.. அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் வழங்குவான்..... அசைக்க முடியாத "இறை நம்பிக்கை என்ற செல்வம்" மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா....


பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Saturday, 2 March 2024

ஆற்றங்கரை மஸ்ஜித் ஏறாவூர்

 

ஏர் ஊரின் சொல்ல மறந்த கதை


ஆற்றங்கரைப்பள்ளி ௨௫வான

௨ரசல்.


எமது ஊரின் ஆதி மஸ்ஜித்கள் இரண்டு


எனது ஊரின் முதல் மஸ்ஜித் ஓட்டுப் பள்ளி வாயிலாகும். இரண்டாவது ஆற்றங்கரைப் பள்ளிவாயில் கட்டப்பட்டது.


அந்தக் காலத்தில் ஓட்டுப்பள்ளியில் இரண்டு ஆதிக்கமுள்ள போட்டிக் குழுக்கள் இயங்கிவந்தன. இவ்விரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஜமாஅத் தொழுகையின் போது முன்வரிசையில் நின்று தொழுவதுதான் வழக்கம். ஒரு நாள் ஒரு வக்து தொழுகையின் போது போட்டிக் குழு ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவருக்கு முன் வரிசையில் நின்று தொழும் வாய்ப்புக் கிட்டவில்லை.அன்று முந்தி வந்தோரால் முன்வரிசை நிரம்பியிருந்தது.கொஞ்சம் பிந்தி வந்து ஜமாஅத்தில் இணைந்து கொண்ட அந்த மாற்றுக்குழு முக்கியஸ்தர் முன் வரிசையில் நின்ற போட்டிக் குழு முக்கியஸ்தருக்குச் சரியாகப் பின்னால் இரண்டாம் வரிசையில் ஒரு நோக்கத்தோடு போய் நின்று தொழத் தொடங்கினார். 


அல்லாஹு அக்பர் தக்பீர் கட்டியாயிற்று,

அல்லாஹு அக்பர் நிலையில் இருந்து ருக்கூவுக்குச் சென்றனர். சமியல்லாஹு லிமன் ஹமிதா மீண்டும் நிலைநிற்றல், அல்லா ஆஆ..ஹு அக்பர் சுஜூதுக்குச் சென்றனர்.அல்லாஹு அக்பர் முதல் இருப்புக்கு நிமிர்ந்த போது பின்னால் நின்ற பிரமுகர் முன்னால் நின்ற பிரமுகரின் பிஷ்டத்தில் வேண்டுமென்றே தனது தலையால் முட்டினார். இந்த முட்டல் நான்கு ரக்கஅத்துகளுக்கும் எட்டு முறை தவறாமல் நடந்தது. தனக்கு முன் வரிசையில் இடம் கிடைக்கவில்லை என்பது அந்தப் பிரமுகரை இவ்வளவு பெரிய வக்கிரத்துக்குள் தள்ளியது. தொழும் போது யாரென்று திரும்பிப் பார்க்க முடியாது என்பதால் யார் தனது பின்புறம் தலையால் முட்டுவது என்பதைப் பார்க்க முடியாத திண்ணாட்டத்தோடு தொழுது கொண்டிருந்த பிரமுகர் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ் என்று தொழுகை முடிகிற சலாத்தை இமாம் வலம் இடமாகத் திரும்பி இரண்டு முறை மொழிந்ததும், சடாரென்று பின்னால் திரும்பிப் பார்த்த முன் வரிசைப் பிரமுகர் தனது குண்டியில் தாக்கிய பிரமுகரை அடையாளம் கண்டு கொண்டார் .அவர் தஸ்பீஹ் செய்யவோ, திக்ரில் ஈடுபடவோ துஆ ஓதவோ இராமல் ஒரு கறுவுதல் பார்வையோடும், தீர்க்கமான ஒரு முடிவோடும் வெளியில் செல்ல எழுந்தார்.


இந்தச் சம்பவத்தின் பின்னர் இவரும் இவரது நண்பர்களும் ஒட்டுப் பள்ளிக்குத் தொழுவதற்காகச் செல்லவில்லை.


முட்டப்பட்ட குழுவால் ஓட்டுப்பள்ளிக்கு அண்மையிலேயே ஆற்றங்கரை ஓரத்தில் வயல் வெளியில் ௨௫வானது.


தொட௫ம்  

சொல்ல மறந்த கதை

Link

Friday, 1 March 2024

இப்னு தைமிய்யாஹ்


 💥அவசியம் வாசிக்கவும்👇


😡இப்னு தைமிய்யாவும் அவரின் வழிகேட்டால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதும்


முஸ்லிம்களின் கொள்கை குழப்பத்திற்கும் , பல முஸ்லிம்கள் வழிகேடர்களானதற்கும் பெரும் காரணியாக இருந்தவன் இப்னு தைமிய்யாவாகும்.  


அன்றைய இஸ்லாமிய சமூகம் இப்னு தைமிய்யாவின் அனைத்து விதமான வழிகேடான கருத்துக்கும் தக்க பதிலடி வழங்கி இப்னு தைமிய்யாவின் நவீன சிந்தனைகளை ஆதாரத்துடன் முடக்கினர்.  


தொடர்ந்தும் இப்னு தைமிய்யாவின் நச்சுக்கருத்துகள் வெளிவர இப்னு தைமிய்யா சிறைக்கைதியாக்கப்பட்டார். 


இப்னு தைமிய்யா சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டுகளும், காரணங்களும்


1) ஹிஜ்ரி 693 இல் திமஷ்கில் முதலாவதாக இப்னு தைமிய்யா சிறையிலிடப்பட்டு  சிறிது காலத்தின் பின் விடுவிக்கப்படார்.


2) இரண்டாவதாக கெய்ரோவில் உள்ள  புர்ஜ் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு ஜுப் எனும் சிறைக்கு மாற்றப்பட்டார். இதில் ஹிஜ்ரி 705 றமழான் பிறை 9 தொடக்கம் ஹிஜ்ரி 707 ரபீஉல் அவ்வல் பிறை 23 வரை சுமார்  ஒன்றரை வருடகாலமாகும்.


இச்சிறை  தண்டனைக்கான காரணம் , அல்லாஹ்வை படைப்பினங்களோடு உவமை செய்யும் சடவாதக் கொள்கை பேசியமையும், அல்லாஹ் அர்ஷில் தரிபட்டுள்ளான் என்ற குப்ரான கருத்தை வெளியிட்டமையும், அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்கிவருகிறான் என்ற நச்சுக்கருத்துக்களை போதித்தமையுமாகும்.


பார்க்க:  இப்னு கதீரின் அல் பிதாயா வன்னிஹாயா ( ஹிஜ்ரி 705 இல் நடைபெற்றவைகள் என்ற தலைப்பில்) 


3) மூன்றாவது தடவையாக மீண்டும் எகிப்திலேதான் இப்னு தைமிய்யா சிறையிலிடப்பட்டான். ஹிஜ்ரி 707, 10 மாதம் பிறை 3 தொடக்கம் அதே மாதம் பிறை 18 வரை சுமார் 2 வார காலம் இச்சிறைக்காலம் காணப்பட்டது. 


இச்சிறை தண்டனைக்கான காரணம் " இஸ்திகாஸா" பற்றிய குர்ஆன் சுன்னாவுக்கு முற்றிலும் முரண்படும் கருத்தை கொண்ட நூலை வெளியிட்டமையாகும். 


4) நான்காவதாக மீண்டும் எகிப்திலேதான் சிறைப்பிடிக்கப்பட்டார்.


 இச்சிறைக்காலம் ஹிஜ்ரி 707 இன் ஷவ்வால் மாத இறுதுயிலிருந்து 708 இன் தொடக்கம் வரை சுமார் இரண்டு மாதங்களை விட சற்று அதிகமாக இருந்தது.  


5) ஐந்தாவதாக அலெக்ஸான்ரியாவில் இப்னு தைமிய்யா சிறையில் அடைக்கப்பட்டான். சுமார் 7 மாதங்களாக ஹிஜ்ரி 709/03/01 தொடக்கம் 709/10/08 வரை சிறையிலிருந்தார். 


6) ஆறாவதாக திமஷ்கில் ஹிஜ்ரி 712/ 07/02 தொடக்கம் 721/01/10 வரை சுமார் 6 மாதம் சிறையில் வைக்கப்பட்டார். 


சிறைக்கான காரணம் தலாக்கை கொண்டு சத்தியம் செய்தல் என்ற மஸ்அலாவில் பிழையான பத்வா வழங்கியமை.


7) ஏழாவது தடவையாக ஹிஜ்ரி 726 , எட்டாம் மாதம் பிறை 6 திங்கட்கிழமை தொடக்கம்  ஹிஜ்ரி 728 ,  பதினொராம் மாதம் பிறை 20 திங்கள் இரவு வரை சிறையில் வைக்கப்பட்ட இப்னு தைமிய்யா,  அன்று சிறையின் உள்ளேயே மரணித்து அன்றைய தினம் மையித்தாகவே சிறையை விட்டும் வெளிக்கொணரப்பட்டான். கடைசி தடவையான இச்சிறைதண்டனை சுமார் 2 வருடமும் மூன்றரை மாதமுமாகும். 


இச்சிறை தண்டனைக்கான காரணம்  நபி முஹம்மத் عليه السلام அவர்களின் புனித கப்றை தரிசிக்க பயணம் மேற்கொள்வதை நிராகரித்தமையும், அப்பயணம் பாவமானதும்,  அப்பயணத்தின் போது தொழுகையை சுருக்க முடியாது அது ஹறாம் என முட்டாள்தனமான பத்வா வழங்கியமை யாகும்.  


மொத்தமாக இப்னு தைமிய்யா தனது வழிகேடான கருத்துகளின் காரணமாக 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 


ஏன் இப்னு தைமிய்யா இவ்வாறான குப்ரிய்யத்களை கொண்டவனாக இருந்தும் கொல்லப்படவில்லை? ? என்ற சந்தேகம் எழலாம்.   


அதற்கான காரணம் என்னவெனில் ஒவ்வொரு முறையும் வழிகேடான கருத்துகளை வெளியிட்டு சிறையிலடைக்கப்படும் இப்னு தைமிய்யா, சிறைக்குள்ளே தன் வழிகேடான கருத்திலிருந்து வாபஸ் பெறுவதாக கலீபாவுக்கு முன்னிலையில் ஷஹாதஹ் கலிமா கூறி புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார். அதை ஏற்றுக் கொண்டு கலீபாவும் அவரை விடுதலை செய்வார். 


வெளியில் வரும் இப்னு தைமிய்யா மீண்டும் குப்ரிய்யத்தான கருத்தை வெளியிடுவார். மீண்டும் சிறைபிடிக்கப்படுவார். இவ்வாறே நிலைமை காணப்பட்டது. 


நபி பெருமானாரின் عليه السلام சங்கையான முடிகளை, ஆடைகளை கொண்டு பறகத் பெறுவதை ஹறாமாக்கும் இப்னு தைமிய்யாவின் வழித்தோன்றல்கள் இப்னு தைமிய்யாவின் உடலை கழுகிய தண்ணீரைக் கொண்டு பறக்கத் தேடியதாக நம்பத்தகுந்த ஆதாரப்பதிவுகளும் உள்ளன.  


வழிகேடன் இப்னு தைமிய்யாவின் வழிகேடுகளை இன்றும் சிலர் நம்பிக்கை கொண்டுவருகின்றனர். அவர்களே வஹ்ஹாபிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர். 


இப்னு தைமிய்யாவின் வழிகேடுகளை ஆதாரங்களை வைத்து தகர்த்த இஸ்லாமிய பேரறிஞர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!