💥அவசியம் வாசிக்கவும்👇
😡இப்னு தைமிய்யாவும் அவரின் வழிகேட்டால் அவர் சிறையில் அடைக்கப்பட்டதும்
முஸ்லிம்களின் கொள்கை குழப்பத்திற்கும் , பல முஸ்லிம்கள் வழிகேடர்களானதற்கும் பெரும் காரணியாக இருந்தவன் இப்னு தைமிய்யாவாகும்.
அன்றைய இஸ்லாமிய சமூகம் இப்னு தைமிய்யாவின் அனைத்து விதமான வழிகேடான கருத்துக்கும் தக்க பதிலடி வழங்கி இப்னு தைமிய்யாவின் நவீன சிந்தனைகளை ஆதாரத்துடன் முடக்கினர்.
தொடர்ந்தும் இப்னு தைமிய்யாவின் நச்சுக்கருத்துகள் வெளிவர இப்னு தைமிய்யா சிறைக்கைதியாக்கப்பட்டார்.
இப்னு தைமிய்யா சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டுகளும், காரணங்களும்
1) ஹிஜ்ரி 693 இல் திமஷ்கில் முதலாவதாக இப்னு தைமிய்யா சிறையிலிடப்பட்டு சிறிது காலத்தின் பின் விடுவிக்கப்படார்.
2) இரண்டாவதாக கெய்ரோவில் உள்ள புர்ஜ் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு ஜுப் எனும் சிறைக்கு மாற்றப்பட்டார். இதில் ஹிஜ்ரி 705 றமழான் பிறை 9 தொடக்கம் ஹிஜ்ரி 707 ரபீஉல் அவ்வல் பிறை 23 வரை சுமார் ஒன்றரை வருடகாலமாகும்.
இச்சிறை தண்டனைக்கான காரணம் , அல்லாஹ்வை படைப்பினங்களோடு உவமை செய்யும் சடவாதக் கொள்கை பேசியமையும், அல்லாஹ் அர்ஷில் தரிபட்டுள்ளான் என்ற குப்ரான கருத்தை வெளியிட்டமையும், அல்லாஹ் அடிவானத்துக்கு இறங்கிவருகிறான் என்ற நச்சுக்கருத்துக்களை போதித்தமையுமாகும்.
பார்க்க: இப்னு கதீரின் அல் பிதாயா வன்னிஹாயா ( ஹிஜ்ரி 705 இல் நடைபெற்றவைகள் என்ற தலைப்பில்)
3) மூன்றாவது தடவையாக மீண்டும் எகிப்திலேதான் இப்னு தைமிய்யா சிறையிலிடப்பட்டான். ஹிஜ்ரி 707, 10 மாதம் பிறை 3 தொடக்கம் அதே மாதம் பிறை 18 வரை சுமார் 2 வார காலம் இச்சிறைக்காலம் காணப்பட்டது.
இச்சிறை தண்டனைக்கான காரணம் " இஸ்திகாஸா" பற்றிய குர்ஆன் சுன்னாவுக்கு முற்றிலும் முரண்படும் கருத்தை கொண்ட நூலை வெளியிட்டமையாகும்.
4) நான்காவதாக மீண்டும் எகிப்திலேதான் சிறைப்பிடிக்கப்பட்டார்.
இச்சிறைக்காலம் ஹிஜ்ரி 707 இன் ஷவ்வால் மாத இறுதுயிலிருந்து 708 இன் தொடக்கம் வரை சுமார் இரண்டு மாதங்களை விட சற்று அதிகமாக இருந்தது.
5) ஐந்தாவதாக அலெக்ஸான்ரியாவில் இப்னு தைமிய்யா சிறையில் அடைக்கப்பட்டான். சுமார் 7 மாதங்களாக ஹிஜ்ரி 709/03/01 தொடக்கம் 709/10/08 வரை சிறையிலிருந்தார்.
6) ஆறாவதாக திமஷ்கில் ஹிஜ்ரி 712/ 07/02 தொடக்கம் 721/01/10 வரை சுமார் 6 மாதம் சிறையில் வைக்கப்பட்டார்.
சிறைக்கான காரணம் தலாக்கை கொண்டு சத்தியம் செய்தல் என்ற மஸ்அலாவில் பிழையான பத்வா வழங்கியமை.
7) ஏழாவது தடவையாக ஹிஜ்ரி 726 , எட்டாம் மாதம் பிறை 6 திங்கட்கிழமை தொடக்கம் ஹிஜ்ரி 728 , பதினொராம் மாதம் பிறை 20 திங்கள் இரவு வரை சிறையில் வைக்கப்பட்ட இப்னு தைமிய்யா, அன்று சிறையின் உள்ளேயே மரணித்து அன்றைய தினம் மையித்தாகவே சிறையை விட்டும் வெளிக்கொணரப்பட்டான். கடைசி தடவையான இச்சிறைதண்டனை சுமார் 2 வருடமும் மூன்றரை மாதமுமாகும்.
இச்சிறை தண்டனைக்கான காரணம் நபி முஹம்மத் عليه السلام அவர்களின் புனித கப்றை தரிசிக்க பயணம் மேற்கொள்வதை நிராகரித்தமையும், அப்பயணம் பாவமானதும், அப்பயணத்தின் போது தொழுகையை சுருக்க முடியாது அது ஹறாம் என முட்டாள்தனமான பத்வா வழங்கியமை யாகும்.
மொத்தமாக இப்னு தைமிய்யா தனது வழிகேடான கருத்துகளின் காரணமாக 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஏன் இப்னு தைமிய்யா இவ்வாறான குப்ரிய்யத்களை கொண்டவனாக இருந்தும் கொல்லப்படவில்லை? ? என்ற சந்தேகம் எழலாம்.
அதற்கான காரணம் என்னவெனில் ஒவ்வொரு முறையும் வழிகேடான கருத்துகளை வெளியிட்டு சிறையிலடைக்கப்படும் இப்னு தைமிய்யா, சிறைக்குள்ளே தன் வழிகேடான கருத்திலிருந்து வாபஸ் பெறுவதாக கலீபாவுக்கு முன்னிலையில் ஷஹாதஹ் கலிமா கூறி புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார். அதை ஏற்றுக் கொண்டு கலீபாவும் அவரை விடுதலை செய்வார்.
வெளியில் வரும் இப்னு தைமிய்யா மீண்டும் குப்ரிய்யத்தான கருத்தை வெளியிடுவார். மீண்டும் சிறைபிடிக்கப்படுவார். இவ்வாறே நிலைமை காணப்பட்டது.
நபி பெருமானாரின் عليه السلام சங்கையான முடிகளை, ஆடைகளை கொண்டு பறகத் பெறுவதை ஹறாமாக்கும் இப்னு தைமிய்யாவின் வழித்தோன்றல்கள் இப்னு தைமிய்யாவின் உடலை கழுகிய தண்ணீரைக் கொண்டு பறக்கத் தேடியதாக நம்பத்தகுந்த ஆதாரப்பதிவுகளும் உள்ளன.
வழிகேடன் இப்னு தைமிய்யாவின் வழிகேடுகளை இன்றும் சிலர் நம்பிக்கை கொண்டுவருகின்றனர். அவர்களே வஹ்ஹாபிகள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இப்னு தைமிய்யாவின் வழிகேடுகளை ஆதாரங்களை வைத்து தகர்த்த இஸ்லாமிய பேரறிஞர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!