السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 2 March 2024

ஆற்றங்கரை மஸ்ஜித் ஏறாவூர்

 

ஏர் ஊரின் சொல்ல மறந்த கதை


ஆற்றங்கரைப்பள்ளி ௨௫வான

௨ரசல்.


எமது ஊரின் ஆதி மஸ்ஜித்கள் இரண்டு


எனது ஊரின் முதல் மஸ்ஜித் ஓட்டுப் பள்ளி வாயிலாகும். இரண்டாவது ஆற்றங்கரைப் பள்ளிவாயில் கட்டப்பட்டது.


அந்தக் காலத்தில் ஓட்டுப்பள்ளியில் இரண்டு ஆதிக்கமுள்ள போட்டிக் குழுக்கள் இயங்கிவந்தன. இவ்விரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஜமாஅத் தொழுகையின் போது முன்வரிசையில் நின்று தொழுவதுதான் வழக்கம். ஒரு நாள் ஒரு வக்து தொழுகையின் போது போட்டிக் குழு ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவருக்கு முன் வரிசையில் நின்று தொழும் வாய்ப்புக் கிட்டவில்லை.அன்று முந்தி வந்தோரால் முன்வரிசை நிரம்பியிருந்தது.கொஞ்சம் பிந்தி வந்து ஜமாஅத்தில் இணைந்து கொண்ட அந்த மாற்றுக்குழு முக்கியஸ்தர் முன் வரிசையில் நின்ற போட்டிக் குழு முக்கியஸ்தருக்குச் சரியாகப் பின்னால் இரண்டாம் வரிசையில் ஒரு நோக்கத்தோடு போய் நின்று தொழத் தொடங்கினார். 


அல்லாஹு அக்பர் தக்பீர் கட்டியாயிற்று,

அல்லாஹு அக்பர் நிலையில் இருந்து ருக்கூவுக்குச் சென்றனர். சமியல்லாஹு லிமன் ஹமிதா மீண்டும் நிலைநிற்றல், அல்லா ஆஆ..ஹு அக்பர் சுஜூதுக்குச் சென்றனர்.அல்லாஹு அக்பர் முதல் இருப்புக்கு நிமிர்ந்த போது பின்னால் நின்ற பிரமுகர் முன்னால் நின்ற பிரமுகரின் பிஷ்டத்தில் வேண்டுமென்றே தனது தலையால் முட்டினார். இந்த முட்டல் நான்கு ரக்கஅத்துகளுக்கும் எட்டு முறை தவறாமல் நடந்தது. தனக்கு முன் வரிசையில் இடம் கிடைக்கவில்லை என்பது அந்தப் பிரமுகரை இவ்வளவு பெரிய வக்கிரத்துக்குள் தள்ளியது. தொழும் போது யாரென்று திரும்பிப் பார்க்க முடியாது என்பதால் யார் தனது பின்புறம் தலையால் முட்டுவது என்பதைப் பார்க்க முடியாத திண்ணாட்டத்தோடு தொழுது கொண்டிருந்த பிரமுகர் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ் என்று தொழுகை முடிகிற சலாத்தை இமாம் வலம் இடமாகத் திரும்பி இரண்டு முறை மொழிந்ததும், சடாரென்று பின்னால் திரும்பிப் பார்த்த முன் வரிசைப் பிரமுகர் தனது குண்டியில் தாக்கிய பிரமுகரை அடையாளம் கண்டு கொண்டார் .அவர் தஸ்பீஹ் செய்யவோ, திக்ரில் ஈடுபடவோ துஆ ஓதவோ இராமல் ஒரு கறுவுதல் பார்வையோடும், தீர்க்கமான ஒரு முடிவோடும் வெளியில் செல்ல எழுந்தார்.


இந்தச் சம்பவத்தின் பின்னர் இவரும் இவரது நண்பர்களும் ஒட்டுப் பள்ளிக்குத் தொழுவதற்காகச் செல்லவில்லை.


முட்டப்பட்ட குழுவால் ஓட்டுப்பள்ளிக்கு அண்மையிலேயே ஆற்றங்கரை ஓரத்தில் வயல் வெளியில் ௨௫வானது.


தொட௫ம்  

சொல்ல மறந்த கதை

Link