السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 5 August 2025

கல்வி

 

கல்வி

கல்வி என்பதை ஆங்கிலத்தில் Education என அழைப்பர். இது இலத்தீன் மொழியில் இருந்து உருவான சொல். இதன் கருத்து உள்ளிருப்பதை வெளியே எடுத்தல் என்பதாகும். கல்வியானத விளங்கிச் கொள்ளும் செயல் முறை அறிவை மட்டுமன்றி நித்தமும் நிகழக் கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப சமநிலை ஆளுமை கொண்ட பிரஜைகளை உருவாக்கும் ஒரு செயற்பாடாகும். 


மனிதன் தன் வாழ்க்கையில் மற்றோரை மதிக்கவும் சமுகத்திற்கும் நாட்டிற்கும் தொண்டுகள் பல செய்யவும் நல்லதையும் தீயதையும் பகுத்தறிந்து ஒழுக்கத்துடன் வாழ்வதற்கும் சமூகத்தில் உயர்ாந்தவனாக மதிக்கப்படுவதற்கும் அவன் கற்ற கல்வியே கருவாக அமைகின்றது. இவ்வளவு சிறப்பும் மகிமையும் பொருந்திய கல்விச் செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர்- 


எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு


 எனும் முதுமொழியின் மூலம் கல்வியின் முக்கியத்துவம் எவ்வளவு உயர்வானது என தெட்டத் தெளிவாக விளக்கினார். 


கல்வி அற்ற மனிதன் அரசன் ஆனாலும் சரி. உயர் குலத்தில் பிறந்தவன் ஆனாலும் சரி அழகான தோற்றத்தை உடையவனாயினும் சரி அவன் மேலானவன் அல்ல. தாழ் குலத்தில் பிறந்து கல்வியைப் பெற்றவனுக்கு நிகராக யாராலும் இருக்க முடியாது. இதற்கு திருவள்ளுவர்- 


எக் குடிப் பிறப்பினும் யாவரேயாயினும் அக் குடி கற்றோரை மேல் வருமென்பர்


 கல்வியின் பயன் எண்ணிலடங்கா. ஆட்சியாளரின் கோட்டையை மக்கள் நினைத்தால் உடைத்து விடலாம். ஆனால் கல்வி எனும் கோட்டையை சுமந்தவரை எவராலும் இழந்துவிட முடியாது. எனவே தான் கற்றோரைக் கண்ணுடையார் என்றும் கல்லாதோரை முகத்திரண்டு புண்ணுடையார் என்றும் கூறியுள்ள முது மொழியிலிருந்து விளங்குவது யாதெனில் மற்ற செல்வங்களில் பொன். பொருள், மண், மனை என்பவைகளை விட கல்விச் செல்வம் சிறந்தது உயர்ந்தது மேலானது. கல்வி இல்லாத மனிதன் தலை இல்லாத முண்டத்துக்குச் சமன் என வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விச் செல்வம் அற்ற எத்தனையோ மனிதர்கள் இன்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என நடமாடுவதை காண முடிகிறது.


https://www.facebook.com/share/1CAmEAinFj/

Monday, 4 August 2025

ஸூபி" என்ற பெயர் வரக் காரணம் என்ன?

 

ஸூபி" என்ற பெயர் வரக் காரணம் என்ன?
"ஸூபி" என்ற பெயர் வரக் காரணம் என்ன?

---------------------------------------------------------------

இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் அல் தூஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸூபிஸம் தொடர்பாக பத்தாம் நூற்றாண்டில் எழுதிய மிகப் பிரபலமான கிரந்தமாகிய كتاب اللمع في التصوف எனும் கிரந்தம் தஸவ்வுப் எனும் கலையினை மிக நுட்பமாக விளக்கும் ஒன்றாக அறியப்படுகிறது.


ஸூபிஸ கோட்பாடுகளை ஆழமாக அலசும் படைப்புக்கள் பல விற்பன்னர்களால் இச்சமூகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவைகள் மிகுந்த சொற்செறிவும் பொருட்செறிவும் கொண்டவைகளாக காணப்படுகின்றன. முறையாக ஓதிப் பயின்ற ஆலிம்களால் கூட முழுமையாக விளங்கிப் பொருள் சொல்ல முடியாத வகையிலும் அல்லது எக்குத்தப்பாக விளங்கி தவறான வியாக்கியானங்கள் கொடுக்கப்படக் காரணமாக அமையும் வகையிலும் அதன் பொருட் செறிவு காணப்படுகிறது.


ஆனால் இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இக்கிரந்தமானது ஸூபிஸம் எனும் கலை இஸ்லாத்தில் உண்டு என்ற அடிப்படையினை பற்றி பேசுகிறது. அவர்கள் ஹதீஸ் மற்றும் பிக்ஹ் துறைகளிலும் விற்பன்னராக இருந்ததன் காரணமாக அவற்றோடு ஒப்பிட்டு ஸூபிஸம் எனும் கலையினை ஆய்ந்து விளக்குகிறார்கள். மற்றைய கலைகளுக்கு தஸவ்வுப் எவ்வாறு பக்க துணையாக இருக்கிறது என்பதையும் ஸூபிஸத்துக்கு மற்றைய கலைகள் எவ்வாறு துணை செய்கின்றன என்பதையும் தர்க்க ரீதியாக விளக்குகிறார்கள். அத்தோடு தஸவ்வுப் எனும் கலையினை மறுப்போருக்கு எதிராக ஆணித்தரமான ஆதாரங்களையும் வாதங்களையும் முன்வைக்கிறார்கள்.


ஸூபிகள் என ஏன் ஒரு சாரார் அழைக்கப்படுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன என தலைப்பிட்டு ஒரு பாடத்தை கொண்டு வருகிறார்கள். 


இமாம் அவர்கள் அதில் கூறுகிறார்கள் :


"ஹதீஸ் துறையில் பாண்டித்தியம் பெற்றதன் காரணமாக ஹதீஸ் கலை அறிஞர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். பிக்ஹ் துறை அறிஞர்கள் சட்டத்துறை நிபுணத்துவத்தின் காரணமாக அறியப்படுகிறார்கள். ஏன் நீங்கள் ஸூபிகளை ஒரு குறித்த விஷேடத்துவமான துறையின் பால் அடையாளப்படுத்துவதில்லை" என ஒருவர் கேட்டால்,


அதற்கான பதிலாகிறது:


"ஸூபிகள் ஒரு குறித்த துறைக்குள்ளோ ஆன்மீக நிலைக்குள்ளோ சுருக்கப்படக் 

கூடியவர்கள் அல்ல. ஏனெனில் ஸூபிகள் அனைத்து கலைகளுக்கும் மேன்மைமிக்க நிலைகளுக்கும் உன்னத நெறிகளுக்கும் அடிப்படையானவர்கள். 

இவர்கள் இயல்பாகவும் தனது முயற்சியினாலும் இக்குணாதிசியங்களைக் கொண்டிருப்பர். அவர்கள் சதாவும் அல்லாஹ்வுடனேயே இருப்பர். அல்லாஹ்வை நெருங்கும் முயற்சியில் ஆன்மீக படித்தரங்களில் முன்னேறிக் கொன்டிருப்பார்கள். எனவே இவர்களை ஒரு துறைக்குள் மட்டுப்படுத்த முடியாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறந்து விளங்கும் ஒரு துறையினை மையப்படுத்தி அவர்களை நான் அடையாளப்படுத்தினால் காலம் செல்லச் செல்ல பல துறைகளுக்கு அவர்களது அடையாளத்தை மாற்றும் நிலை ஏற்படும். காரணம் அவர்கள் தனது ஆன்மீக நிலையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். எனவே அவர்களது உள்ளக அறிவு மற்றும் ஆன்மீக நிலையினைக் கொண்டு நான் அவர்களை அடையாளப்படுத்த முடியாது. அதனால் தான் அவர்களது புறத்தோற்றத்தைக் கொண்டு (ஆடை) அடையாளப்படுத்தப்படுகிறது. الصوف என்பது கம்பளியிலான அவர்கள் அணியும் ஆடைக்கு வழங்கப்படும் பெயராகும். இதுவே நபிமார்களின் ஆடையாகவும் இறைநேசர்கள் அடையாளமாகவும் இருக்கிறது.இந்த ஆடை குறித்து ஏராளமான ஹதீஸ்களில் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. 


எனவே ஸூபிய்யாக்களை அவர்களின் வெளித்தோற்றமான ஆடையினைக் கொன்டு அடையாளப்படுத்துவதன் மூலம் அவர்களை ஒரு துறைக்குள் சுருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படாது. علوم - மார்க்க ஞானம், أعمال- வணக்க வழிபாடுகள், أخلاق - நற்பண்புகள், أحوال شريفة محمودة - ஆன்மீக நிலை என்ற அனைத்து அம்சங்களும் உள்ளடங்கும் வகையில் அடையாளப்படுத்த இது சிறந்த முறையாகும். 


அல்லாஹ் அல் குர் ஆனில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அன்னவர்களின் சிறந்த உம்மத்தினர்கள் பற்றி கூறுவதை பார்க்கவில்லையா? 


"நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" (61:14)


அவர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்தவர்களாக இருந்தார்கள். அல்லாஹ் அது போல அவர்களை ஆக்கினான். 


அல்லாஹ் அவர்களை அவர்களது அறிவு, செயல், அந்தஸ்த்தைக் கொண்டு அடையாளப்படுத்தவில்லை. 


எனவே எனது பார்வையில் ஸூபிகள் அவர்களது வெளித்தோற்றத்தைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வே அறிந்தவன். 


அவர்கள் குறித்த எந்த துறைக்குள்ளும் வரையறுக்கப்படக் கூடியவர்கள் அல்ல."

உள்ரங்க ஞானம் - علم الباطن" என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்

உள்ரங்க ஞானம் - علم الباطن" என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்

 "உள்ரங்க ஞானம் - علم الباطن" என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்டா?

-----------------------------------------------------------------------


இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் அல் தூஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதற்கான விடையினை தருகிறார்கள் :


"மார்க்கத்தின் வெளிப்படையான கருத்தில் மட்டும் தங்கியிருப்போர் உள்ரங்க அறிவை மறுக்கின்றனர். குர் ஆன் ஸுன்னாவில் உள்ள வெளிப்படையான ஷரீ அத் சட்டங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

உள்ரங்க ஞானமோ அல்லது ஆன்மீக படிநிலைகள் பற்றிய அறிவோ அர்த்தமற்றது என அவர்கள் வாதிடுகின்றனர். அவ்வாறு கூறுவோருக்கு நீங்கள் பதிலளியுங்கள்:


ஷரீஆ என்பது ஒன்றுதான். ஆனால் அது உள்ரங்கம், வெளிரங்கம் என்ற இரு கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வெளிரங்க அமல்களுக்கான சட்டங்களையும் உளார்ந்த நிலைகளுக்கான சட்டங்களையும் கொண்டதே ஷரீ ஆ ஆகும். 


அறிவில் உள்ரங்கம், வெளிரங்கம் என்ற வேறுபாடில்லை. அறிவானது உள்ளத்தில் இருக்கும் வரை அது உள்ரங்கமானது. அது பேச்சாக வெளிப்பட்டுவிட்டால் அது வெளிரங்கமாகிவிடுகிறது. 


ம்ற்லும் சொல்வதானால் அறிவானது உள்ரங்கம் வெளிரங்கம் என்ற இரு பரினாமங்களைக் கொண்டுள்ளது என கூறலாம். ஷரீஆவானது உள்ரங்கம் வெளிரங்கம் என்ற இரண்டையும் கட்டுப்படுத்துகிறது.


வெளிரங்க செயற்பாடுகள் என்பது சுத்தம், தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், ஜிஹாத் போன்ற வணக்க வழிபாடுகளையும் சட்டங்களையும் குறிக்கும். உள்ரங்கம் என்பது ஈமான், இக்லாஸ், இறை காதல், நன்றியுணர்வு, பணிவு, பொறுமை, அல்லாஹ்விடம் தன்னை ஒப்படைத்தல், சிந்தனை, நம்பிக்கை, பொறுமை, இறைநெருக்கம், பக்தி, இறையச்சம் போன்ற உள்ளம் சம்பந்தமான நிலைகளைக் குறிக்கும். 


எந்தவொரு செயலானாலும் அது உள்ரங்கமாக இருந்தாலும் வெளிரங்கமாக இருந்தாலும் அறிவு, சட்டம், விளக்கம், ஆன்மீக விழிப்புணர்வு, புரிதல், யதார்த்தம்,அங்கீகாரம் என்பவற்றோடு தொடர்புபட்டுள்ளது. 


நாம் உள்ரங்க அறிவு என குறிப்பிடும்போது அது உள்ளம் சம்பந்தப்பட்ட காரியங்களுடன் தொடர்பான அறிவாக கருதப்பட வேண்டும். வெளிரங்க அறிவு பற்றிப் பேசும்போது வெளிப்படையான எமது செயற்பாடுகள் குறித்ததானது என பொருள் கொள்ள வேண்டும். 


வெளிப்படையான செயற்பாடுகளை அல்லாஹ் உடலுக்கும் உள்ரங்க செயற்பாடுகளை அல்லாஹ் உள்ளத்துக்கும் கட்டளையிடுகிறான்.


நமது வெளிரங்க அமல்கள் உள்ரங்க அமல்களை ஈடு செய்யாது. அது போலவே உள்ரங்க அமல்கள் வெளிரங்க அமல்களை ஈடு செய்யாது. (இரண்டு கூறுகளும் அவசியம்)


அல் குர் ஆன் மற்றும் ஹதீதில் இருந்து ஆன்மீக ஞானிகளால் பெறப்பட்ட அறிவு என்பது உள்ரங்கமான அறிவாகும். அல்லாஹ் நாடினால் அவை குறித்து விளக்குவோம்."


Zakkaraiyyah Fb

Sunday, 3 August 2025

அடக்கஸ்தலங்கள் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும் !

 

அடக்கஸ்தலங்கள் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும் !
அல்லாஹ்வின் நேசர்களின் அடக்கஸ்தலங்கள் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும் !


இமாம் ஷாபிஈ رضي الله عنه மற்றும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه ஆகியோரது கொள்கை : 


قال الإمام الشافعي رحمة الله عليه : قبر موسى الكاظم ترياق مجرب الإجابة الدعاء، وقال حجة الإسلام محمد الغزالي: كل من يستمد به في حياته يستمد به بعد وفاته، وقال أحد من المشايخ العظام : رأيت أربعة من المشايخ يتصرفون في قبورهم كتصرفهم في حياتهم أو أكثر، الشيخ معروف الكرخي، والشيخ عبد القادر الجيلي ، وذكر رجلين غيرهما

!


இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் ,


" நாயகத் திருப்பேரர் இமாம் மூஸல் காழிம் رضي الله عنه ( இமாம் ஜாபர் ஸாதிக் رضي الله عنه அவர்களது அருமை மகனார்) அவர்களது சங்கைமிகும் கப்ரு துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இடமாகும். இது அனுபவத்தில் பரிசோதிக்கப்பட்ட மருந்தாகும் " 


ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , 

" எவரொருவர் தமது வாழ்நாளில் ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது உதவி தேடினாரோ,அவரது வபாத்திற்குப் பின்னரும் அவரிடம் உதவி தேடுவது கூடும் ." 


[ நூல் ஆதாரம் 📕 ஷரஹு மிஷ்காத் அல் மஸாபீஹ் ,பாகம் 4,பக்கம் 215 ]


ஸூபிய்யாக்கள்" எனும் சொற்பதம்

 

ஸூபிய்யாக்கள்" எனும் சொற்பதம்

"ஸூபிய்யாக்கள்" எனும் சொற்பதம் இஸ்லாத்தில் பிற்காலத்தில் நுழைவிக்கப்பட்டதா? 

___________________________________________________________________


இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் அல் தூஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸூபிய்யாக்கள் எனும் சொல்லாடல் பிற்காலத்தில் இஸ்லாத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டது என்ற வாதத்தை பின்வருமாறு அடியோடு மறுக்கிறார்கள் : 


"ஸஹாபாப் பெருமக்களில் எவரும் ஸூபிகளாக அடையாளப்படுத்தப்படவில்லையே என சிலர் கூறுகின்றனர்.


அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்லுங்கள்!


ஸஹாபாக்கள் நபிகளாருடன் கொண்ட தோழமையினால் சிறப்புப் பெற்றவர்கள். அதனை விட வேறு எந்த அடையாளமும் தகுதியும் மிகைத்ததாக முடியாது. நபிகளாரின் தனிச்சிறப்பின் மூலமும் நேரடி வழிகாட்டல்களின் மூலம் ஸஹாபாக்கள் இந்த அந்தஸ்த்தைப் பெற்றார்கள். நீங்கள் அறியவில்லையா? அவர்கள் அனைவரும் இமாம்களாகவும், உலகப்பற்றற்ரவர்களாகவும், வணக்கசாலிகளாகவும், முதவக்கிலீன்களாகவும், பக்கீர்களாகவும், பொறுமைசாலிகளாகவும் உளத்தூய்மயுடையவர்களாகவுமே இருந்தார்கள். நபிகளாருடன் கொண்ட தோழமையின் காரணமாகவே இவை அனைத்தையும் அவர்கள் பெற்றுகொண்டார்கள். 


எல்லா படித்தரங்களையும் விட ஸுஹ்பத் எனும் நாயகத்தோழமையே உன்னதமானது. எனவே இவ்வாறான உன்னத நிலையில் உள்ளவர்களை அதனை விடக் குறைந்த தராதரத்தோடு அடையாளப்படுத்துவது சாத்தியமன்று. 


ஸூபி எனும் பதமானது பிற்காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டது என கூறுகின்றனர்.இது முற்றிலும் தவறாகும். ஏனெனில் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் காலத்திலேயே ஸூபிகள் பற்றி அறியப்பட்டிருக்கிறது. 


ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நபித்தோழர்கள் சிலரை சந்தித்திருக்கிறார்கள்.மேலும் அவர்கள் கூறுகிறார்கள் "நான் தவாபின் போது ஒரு ஸூபியினைக் கண்டேன்.நான் அவருக்கு சிலவற்றை அன்பளிப்புச் செய்தேன். ஆனால் அவர்கள் அதனை மறுத்துவிட்டு என்னிடம் 4 தீனார்கள் இருக்கிறது, அதுவே எனக்குப் போதும் என்றார்கள்.


ஸுப்யானுத் தவ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :


"ஸூபியான அபூ ஹாஸிம் ரஹிமஹுல்லாஹ் இல்லாவிட்டால் வணக்க வழிபாடுகளில் மறைந்துள்ள முகஸ்துதியில் இருந்து நான் விடுபட்டிருக்கமாட்டேன்."


முஹம்மத் இப்னு இஷாக் இப்னு யஸாரினாலும் மற்றவர்களினாலும் தொகுக்கப்பட்ட "அக்பர் மக்கா" எனும் கிரந்தத்தில் பின்வரும் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


'இஸ்லாம் வருவதற்கு முன்னர் மக்கா ஓரு பாலைவன பூமியாக காணப்பட்டது. அச்சமயத்தில் கஃபாவை தவாப் செய்வதற்கு யாரும் வருவதில்லை. ஆனால் ஒரு கம்பளி ஆடையணிந்த ஒருவர் (ஸூபி) தொலை தூரத்தில் இருந்து தவாபுக்காக வருகை தந்துவிட்டுச் செல்லக் கூடியவராக இருந்தார்'


எனவே இஸ்லாத்துக்கு முன்னரும் நல்லோர்களை அடையாளம் காட்ட "ஸூபி" எனும் வார்த்தை புழக்கத்தில் இருந்துள்ளது என்பது இத்தகவலின் மூலம் நிரூபணமாகிறது. அல்லாஹ்வே நன்கறிந்தவன்"

அபூ ஸாலிஹ் தைக்கா.

 

புன்னக்குடா விதியிலுள்ள

அபூ ஸாலிஹ் தைக்கா.

உருவான வரலாறு.


1990 முந்திய காலங்களில் இந்திய உலமா பெருந்தகைகள் இலங்கை வருவதும். சில நாட்கள் தங்கியிருந்து பல பாகங்களுக்கும் செல்வது வழக்கமாக யிருந்தது.


அந்த வருகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரக்க அதிகமாக சூபி ஷேஹ் மார்கள்

வருவது.

நமதூரக்கிடைத்த சிறப்பு.

அலஹம்துலில்லாஹ்.


விடயத்தக்க வருவோம்....


அபூஸாலிஹ் தைக்கா காணியானது.

பனமரத்தார் என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நபருடைய பூர்வீகக்காணியாக இருந்தது.


அந்தக் காணி வெற்றுக்காணியாக யிருந்தால் ஒலைக்கொட்டில் கட்டப்பட்டு குர்ஆன் மத்ரஸா இடம் பெற்றது. யாவரும் அறிந்ததே.


பனமரத்தாரது பரம்பரை தற்போது முன்றாவது தலை முறையும் ஊரிலுள்ளது.

பனமரத்தாரக்க பணத்தேவை வந்த போது இந்தக் காணியை அடகு வைத்துள்ளார் சிறிய தொகைக்க இருவருடமாகியும் மீளா முடியாது போனதால் காணி ஏல விற்பனைக்க வந்தது.


கடந்த காலங்களில் ஏலத்தக்க விற்பனை செய்வதை அறிவிக்க பரை அடித்த விளம்பரப் படுத்துவர்.


இவ்வாறு விற்பனைக்க வந்த காணியை யாரும் வாங்கக் கூடாது.

என்று பனமரத்தார் ஆவேசமாக பேசித் திரிந்தார்.


ஏலத் திகதி அன்று கிராம நீதி மன்ற வீதியில் வசித்த வந்த நபரை அழைத்தார் சரிபிய்யா இக் காணியை வாங்கிப் போடு. என்ற அறிவுரைக்க அமைய இந்தக்காணியை 

அந்த தம்பி போடியார் வாங்கினார்.

இதனை அறிந்த பனமரத்தார் (வன்டில் மாடு வைத்திருந்தார்.)

பதுளை வீதியாக வந்த தம்பி ஹாஜியரது ஹவஸக்கி மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்தக்காணியை வாங்கிய உன்னை வண்டில் மாட்டால் குத்திக் குரல்வலை எடுப்பேன் என்று வாக்கு வாதமாகி களைந்த கதையுமுண்டு.

பனமரத்தாரக்க காணி யை இழந்ததை விட கௌரவம் பார்ப்பது நமது மூததையர்களின் மரபாக இருந்தது.


ஏலத்தில் விற்பனை யானதை தரக்குறைவாக நினைத்து வந்த கோபமே அது.


இவ்வாறு வாங்கப்பட்ட காணியில் மத்ரஸா இடையூறாது நடை பெற்றது. இந்தக்காலப்பகுதியில் தற்போதைய

நகர சபை பட்டினசபையாக இருந்தது.


இதில் தம்பி ஹாஜியார் காணிப் பெயர் மாற்றம் செய்தார்.

அந்த ஒரிஜினல் பிரதியுமுண்டு அவரிடம்.


இந்தக்காணியில் காலப்போக்கில் மத்ரஸா பிள்ளைகள் அஸர் தொழுவது வழக்கமாகி அந்த சமயத்தில் அயலிலுள்ளவர்களும் கலந்து பள்ளியாக மாறுவதை கண்ட தம்பி ஹாஜியார்.

எனது அனுமதி பெறாமல் செய்வது தவறு என்று கோபமாக சண்டை ஒன்றும் நடந்தது.


இப்பள்ளிவாயல் அருகிலே LTTE காரியாலம் ஒன்று.

இதில் ஓட்டுப்பள்ளி காணின்ட உம்மா மகன் சரிபுத்தீன் பொறுப்பதிகாரியாக இருந்தார்..


இவரை சரிவு என்று அழைத்தனர். இவரது நண்பர்கள் பதுர் ஒரு கூறுப் இருந்தது.


தம்பி ஹாஜியாரிடம் விசாரித்த சரிவு தவறு என்று. கூறி கலைந்து விட்டனர்.


ஒரிறு நாட்கள் பிறகு சிறிய பள்ளியாக இயங்கிய இந்தப் பள்ளிக்க நடு இரவில் கிரினட் எரியப்பட்ட ஒரு பகுதி சேதமாக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் வந்து போன அபூஸாலிஹ் தங்கள் வாப்பா கொழும்பிலிருந்து அழைப்பு விடுத்தார்.


ஏறாவூர் தம்பி ஹாஜியாரை.


அவரைச் சந்திக்கப்போன தம்பி ஹாஜியாரக்க 

ஒரு விடயத்தை சொல்லி பிரச்சனை யை சுமூகமாக தீர்த்து வைத்தார்.


அவர் சொன்ன விடயம் நாளை மறுமையில் உனக்க அல்லாஹ் வின் ஒரு மாளிகை வேண்டுமா.

அந்த நிலம் வேண்டுமா.


இவ்வாறே நமது முன்னோர்களை ஷேஹனாக்கள்

தங்கள் மார்கள்

குடும்ப பிரச்சனை யாகட்டும்.

சகல பிரச்சனை களையும் பள்ளியிலயே சமரசமாக்கினர்.


யாரும் பொலிஸ் நிலையத்தக்கோ

கோட்வாசல்களில்

நமது முஸ்லீம் போவது மிகவும் அரிது.


அதனாலே முஸ்லீம்களக்க 

அதிக மதிப்பு இருந்தது.


இன்றைய நிலமை

தலைகீழ்.


பின்னர் அபூஸாலிஹ் தைக்காவாக இயங்கியது.

இவரது மகன் ஜேர்மனியிலுள்ளார்.


அனைவரும் கபுராலியாகப் போனார்கள்

அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக


தொடரும்


M Nadheem Fb