கல்வி என்பதை ஆங்கிலத்தில் Education என அழைப்பர். இது இலத்தீன் மொழியில் இருந்து உருவான சொல். இதன் கருத்து உள்ளிருப்பதை வெளியே எடுத்தல் என்பதாகும். கல்வியானத விளங்கிச் கொள்ளும் செயல் முறை அறிவை மட்டுமன்றி நித்தமும் நிகழக் கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப சமநிலை ஆளுமை கொண்ட பிரஜைகளை உருவாக்கும் ஒரு செயற்பாடாகும்.
மனிதன் தன் வாழ்க்கையில் மற்றோரை மதிக்கவும் சமுகத்திற்கும் நாட்டிற்கும் தொண்டுகள் பல செய்யவும் நல்லதையும் தீயதையும் பகுத்தறிந்து ஒழுக்கத்துடன் வாழ்வதற்கும் சமூகத்தில் உயர்ாந்தவனாக மதிக்கப்படுவதற்கும் அவன் கற்ற கல்வியே கருவாக அமைகின்றது. இவ்வளவு சிறப்பும் மகிமையும் பொருந்திய கல்விச் செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர்-
எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு
எனும் முதுமொழியின் மூலம் கல்வியின் முக்கியத்துவம் எவ்வளவு உயர்வானது என தெட்டத் தெளிவாக விளக்கினார்.
கல்வி அற்ற மனிதன் அரசன் ஆனாலும் சரி. உயர் குலத்தில் பிறந்தவன் ஆனாலும் சரி அழகான தோற்றத்தை உடையவனாயினும் சரி அவன் மேலானவன் அல்ல. தாழ் குலத்தில் பிறந்து கல்வியைப் பெற்றவனுக்கு நிகராக யாராலும் இருக்க முடியாது. இதற்கு திருவள்ளுவர்-
எக் குடிப் பிறப்பினும் யாவரேயாயினும் அக் குடி கற்றோரை மேல் வருமென்பர்
கல்வியின் பயன் எண்ணிலடங்கா. ஆட்சியாளரின் கோட்டையை மக்கள் நினைத்தால் உடைத்து விடலாம். ஆனால் கல்வி எனும் கோட்டையை சுமந்தவரை எவராலும் இழந்துவிட முடியாது. எனவே தான் கற்றோரைக் கண்ணுடையார் என்றும் கல்லாதோரை முகத்திரண்டு புண்ணுடையார் என்றும் கூறியுள்ள முது மொழியிலிருந்து விளங்குவது யாதெனில் மற்ற செல்வங்களில் பொன். பொருள், மண், மனை என்பவைகளை விட கல்விச் செல்வம் சிறந்தது உயர்ந்தது மேலானது. கல்வி இல்லாத மனிதன் தலை இல்லாத முண்டத்துக்குச் சமன் என வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விச் செல்வம் அற்ற எத்தனையோ மனிதர்கள் இன்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என நடமாடுவதை காண முடிகிறது.