السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 4 August 2025

உள்ரங்க ஞானம் - علم الباطن" என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்

உள்ரங்க ஞானம் - علم الباطن" என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்

 "உள்ரங்க ஞானம் - علم الباطن" என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்டா?

-----------------------------------------------------------------------


இமாம் அபூ நாஸர் அல் ஸர்ராஜ் அல் தூஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதற்கான விடையினை தருகிறார்கள் :


"மார்க்கத்தின் வெளிப்படையான கருத்தில் மட்டும் தங்கியிருப்போர் உள்ரங்க அறிவை மறுக்கின்றனர். குர் ஆன் ஸுன்னாவில் உள்ள வெளிப்படையான ஷரீ அத் சட்டங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

உள்ரங்க ஞானமோ அல்லது ஆன்மீக படிநிலைகள் பற்றிய அறிவோ அர்த்தமற்றது என அவர்கள் வாதிடுகின்றனர். அவ்வாறு கூறுவோருக்கு நீங்கள் பதிலளியுங்கள்:


ஷரீஆ என்பது ஒன்றுதான். ஆனால் அது உள்ரங்கம், வெளிரங்கம் என்ற இரு கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வெளிரங்க அமல்களுக்கான சட்டங்களையும் உளார்ந்த நிலைகளுக்கான சட்டங்களையும் கொண்டதே ஷரீ ஆ ஆகும். 


அறிவில் உள்ரங்கம், வெளிரங்கம் என்ற வேறுபாடில்லை. அறிவானது உள்ளத்தில் இருக்கும் வரை அது உள்ரங்கமானது. அது பேச்சாக வெளிப்பட்டுவிட்டால் அது வெளிரங்கமாகிவிடுகிறது. 


ம்ற்லும் சொல்வதானால் அறிவானது உள்ரங்கம் வெளிரங்கம் என்ற இரு பரினாமங்களைக் கொண்டுள்ளது என கூறலாம். ஷரீஆவானது உள்ரங்கம் வெளிரங்கம் என்ற இரண்டையும் கட்டுப்படுத்துகிறது.


வெளிரங்க செயற்பாடுகள் என்பது சுத்தம், தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், ஜிஹாத் போன்ற வணக்க வழிபாடுகளையும் சட்டங்களையும் குறிக்கும். உள்ரங்கம் என்பது ஈமான், இக்லாஸ், இறை காதல், நன்றியுணர்வு, பணிவு, பொறுமை, அல்லாஹ்விடம் தன்னை ஒப்படைத்தல், சிந்தனை, நம்பிக்கை, பொறுமை, இறைநெருக்கம், பக்தி, இறையச்சம் போன்ற உள்ளம் சம்பந்தமான நிலைகளைக் குறிக்கும். 


எந்தவொரு செயலானாலும் அது உள்ரங்கமாக இருந்தாலும் வெளிரங்கமாக இருந்தாலும் அறிவு, சட்டம், விளக்கம், ஆன்மீக விழிப்புணர்வு, புரிதல், யதார்த்தம்,அங்கீகாரம் என்பவற்றோடு தொடர்புபட்டுள்ளது. 


நாம் உள்ரங்க அறிவு என குறிப்பிடும்போது அது உள்ளம் சம்பந்தப்பட்ட காரியங்களுடன் தொடர்பான அறிவாக கருதப்பட வேண்டும். வெளிரங்க அறிவு பற்றிப் பேசும்போது வெளிப்படையான எமது செயற்பாடுகள் குறித்ததானது என பொருள் கொள்ள வேண்டும். 


வெளிப்படையான செயற்பாடுகளை அல்லாஹ் உடலுக்கும் உள்ரங்க செயற்பாடுகளை அல்லாஹ் உள்ளத்துக்கும் கட்டளையிடுகிறான்.


நமது வெளிரங்க அமல்கள் உள்ரங்க அமல்களை ஈடு செய்யாது. அது போலவே உள்ரங்க அமல்கள் வெளிரங்க அமல்களை ஈடு செய்யாது. (இரண்டு கூறுகளும் அவசியம்)


அல் குர் ஆன் மற்றும் ஹதீதில் இருந்து ஆன்மீக ஞானிகளால் பெறப்பட்ட அறிவு என்பது உள்ரங்கமான அறிவாகும். அல்லாஹ் நாடினால் அவை குறித்து விளக்குவோம்."


Zakkaraiyyah Fb