السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 31 October 2014

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

‘ஸம் ஸம்’ தண்ணீரின் பிறிதொரு அற்புதம்தான் தாகத்தையும் பசியையும் போக்கக்கூடிய திருப்திகரமான இயலுமையாகும். நபி (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கூறினார். “இஸ்லாத்துக்கு முன்னர் இந்தத் தண்ணீர் சப்பாஹ் அளிப்பது திருப்திகரமானது” என அழைக்கப்பட்டது என்று.


அது அவருடைய குடும்பத்தைப் போஷித்து வளர்க்க உள்Zடாகவும் உதவியாகவும் அமைந்திருந்தது. இஸ்லாத்துக்குப் பின்னர் இந்தப் பலம் பொருந்திய நீர் தாகத்தைத் தணியச் செய்து வயிற்றை நிரம்பச் செய்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “பூமியிலுள்ள மிகச் சிறந்த தண்ணீர் ஸம் ஸம் நீராகும். அது ஒருவகையான உணவாகவும் நோய் நிவாரணியாகவும் அமைந்துள்ளது என்று.

முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிற்கேற்ப, அபூதர் அலி கிப்பாரீ (தோழர் சஹாபீ) குறிப்பிட்டதாவது, தான் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவுக்கு வந்தபோது ஒரு மாதம் பூராவும் ஸம் ஸம் நீர் அருந்தி தாகம் தீர்த்தது மாத்திரமன்றி, அந்த ஸம் ஸம் நீரால் தான் வாழ்ந்ததாகவும் அறிவித்துள்ளார்கள். மிக அண்மைக் காலமாகிய கடைசி ஒரு சில தசாப்தங்களில் விஞ்ஞானிகள் ஸம் ஸம் தண்ணீரின் சில மாதிரிகளை ஒன்று சேர்த்து அதில் அதிகமான கல்சியம் உள்ளதென்றும் அது சிறப்புத் தன்மையுள்ள ஆரோக்கியமான தண்ணீர் என்றும் கண்டுபிடித்தனர். இரண்டு அற்புதங்கள் உண்டு.

ஸம் ஸம் நீர் உடனடியாக மீள் நிரப்பப்படுவதும் அல்லாஹ் நிகரில்லாத ஸம் ஸம் கிணற்றுக்கு மேலதிகமாகக் கொண்டு வந்து ஊற்றாததும் அன்றி உலகமே அதில் மூழ்காததுமாகும். ஸம் ஸம் என்பதன் மொழிபெயர்ப்பு (ஹாஜரா (அலை) அவர்களால்) நில்! நில்! என்பதே அதன் பொருளாகும்.
பாணந்துறை
http://thinakaran.lk/2014/09/26/?fn=r1409262
செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு
Add caption

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice Bucaille ன் உறுதியான கருத்தும்.

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice

1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.

பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.

உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.

அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே

என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லைஎன்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.

அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வுஎனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான்
அல்ஹம்து லில்லாஹ்...


(Abus Izza Evr)

Thursday, 30 October 2014

உலகின் நறுமணமிக்க மலர்கள்


உலகின் நறுமணமிக்க மலர்கள்

இல்லாதிருந்த இப்பிரபஞ்சங்களையும் பஞ்சபூதங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ் அவற்றையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் படைக்க ஆற்றல்கொண்டவனாக இருக்கிறான். அத்தகு சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ் மாதங்கள் தொடர்பில் பின்வருமாறு கூறுகின்றான். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி அம்மாதங்களில் நீங்கள் தங்களுக்கு தீங்கிழைத்து விடாதீர்கள். அல்குர்ஆன் 9:36

நபி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில், வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும் என்றுரைத்திருக்கிறார்கள் புகாரி.

ஆங்கில மற்றும் அரபு மாதங்கள் பன்னிரெண்டாக இருக்கிறது. சூரிய ஓட்டத்தைக் கணித்து ஆங்கில மாதங்களும் சந்திர ஓட்டத்தினைக் கணித்து அறபு மாதங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மனிதன் தற்பொழுது கண்டுபிடித்திருக்கின்றான். இது மனிதனின் ஏற்பாடல்ல என்பதையும் மனிதன் ஏற்றிருக்கின்றான். ஆனால் வானங்கள் பூமிகளையும் மாதங்களின் எண்ணிக்கை உட்பட அனைத்தையும் படைத்தவன் நான் அன்றி வேறில்லை என வாதிடும் அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொண்டு அவன் ஒருவனையே வணங்குவதற்குப் பதிலாக இப்பிரபஞ்சங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றதென்ற ஆய்வில் மனிதன் காலத்தையும் நேரத்தையும் கழித்துக் கொண்டிருக்கின்றான்.

சந்திர ஓட்டத்தில் சுழன்று மலரும் சன்மார்க்க மாதங்களின் முதல்வன் முஹர்ரத்தினை அல்லாஹ்வின் பேருதவியினால் இம்முறையும் வரவேற்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம் துலில்லாஹ் நபிலான நோன்புகளை எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நோற்றுக் கொள்ள முடியும். என்றாலும் அல்லாஹ்வின் மாதம் என்றழைக்கப்படும் புனித முஹர்ரம் மாத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு வைப்பதை சிறந்ததென்று நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இம்மாதத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள். 

எனவே இஸ்லாமியர்களான நாம் ஒன்பதாவது நாளையும் சேர்த்து நோன்பு நோற்பது ஸ¤ன்னத்தான கருமமாக இருக்கிறது. அதனடிப்படையில் எதிர்வரும் 3,4 ம் திகதிகளில் இவ்வருட முஹர்ரம் மாத பிறை 09,10 க்குரிய ஸ¤ன்னத்தான நோன்புகளை நோற்பதற்கு அல்லாஹ் தெளபீக் செய்வானாக! இத்தினங்கள் மறவாது நினைவு கூரப்பட வேண்டும் என்பதற்கு இவை போதிய சான்றுகளாக இருக்கிறது.

ஆஷ¥ரா என்னும் சொல் ஹிப்ர் மொழிச் சொல்லாகும். அதாவது பத்தாவது நாள் என்பது அதன் அர்த்தமாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் திஷ்ரி மாதமும் அரபிகளின் முஹர்ரம் மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாக இருக்கிறது. அதற்காக இஸ்லாமியர்கள் யூத முங்லிம்கள் என்று அழைப்பதில்லை. அத்துடன் புனித முஹர்ரம் மாதத்தில் பேசப்படுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளில் ஹழ்ரத் ஸெய்யிதுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் தியாக நிகழ்வும் ஒன்றாக வரலாற்றில் பதிவேறியிருக்கிறது.
ஒரு தடவை உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் இல்லத்திலிருந்து புறப்பட்டு அருமை மகளார் பெண்கள் தலைவி ஸெய்யிததுனா ஃபாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களின் வீட்டை நோக்கி அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்த போது ஹழ்ரத் ஹுஸைன் ரழையல்லாஹு அன்ஹு அவர்கள் அழும் ஓசையைக் கேட்டார்கள். அப்பொழுது அவர் அழுவது எனக்கு துன்பமளிக்கிறது என்பதை அறியமாட்டீரா என வினவினார்கள் தபரானி.
இன்னுமொரு தடவை தாகத்தினால் அழுது கொண்டிருந்த பேரப் பிள்ளை களின் தாகம் தீர்ப்பதற்காக தனது முபாரக்கான நாவினை அவ்விருவரின் வாயில் வைத்து உறிஞ்சக்கொடுத்து அழுகையை நிறுத்தினார்கள். தபரானீ, மஜ்மஉஸ் ஸவாயித். தன் பேரப் பிள்ளைகள் சாதாரணமாக அழுவதைக் கூட பெருமானார் விரும்பவில்லை யென்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. அன்னை ஃபாத்திமாவின் பேச்சும் நடையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பேச்சுக்கும் நடைக்கும் நிகராகத் திகழ்ந்ததுபோன்று இரு பேரர்களின் உருவ அமைப்பு பெருமானாரின் பரிசுத்த தோற்றம் போன்றிருந்திருக்கிறது. தன்னை நேசிப்பவர்கள் இவ்விருவரையும் நேசித்தாகவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். பெருமானாரின் பரிசுத்த மேனியில் உருண்டு பிரண்டு விளையாடும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். சுவனபதி வாலிபத் தலைவர், உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள் என நபியவர்களால் போற்றிப் புகழப்பட்டவர்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது இரு பேரக் குழந்தைளையும் அதிகமதிகம் நேசித்திருக்கிறார்கள். அத்தோடு அவ்விருவரையும் நேசிக்குமாறு பிறர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அவ்விருவரையும் நேசிப்பவர்களை தானும் நேசிப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள். அவ்விருவரை மட்டுமன்றி அவர்களது பெற்றோர்களையும் நேசிக்கும் விடயத்தில் தீனுல் இஸ்லாம் கூடிய கவனம் செலுத்தியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எனவே பரிசுத்த இக்குடும்பத்தினரை இஸ்லாம் கூறும் விதத்தில் நேசிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான ஹழ்ரத் ஸெய்யிதுஷ் ஷ¤ஹதா இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை அல்லது அன்னவரின் குடும்பத்தினரை நேசிப்பது ஈமானிய அம்ஷம் எனக்கூறிக் கொண்டு ஏனைய எந்தவொரு நபித் தோழரையோ அல்லது அண்ணலாரின் குடும்ப அங்கத்தவர்களான மனைவிமார்களையோ தூற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அண்ணலாரின் அருமைத் தோழர்க ளைக் குறைகூற விமர்சிக்க மார்க்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானவர்களுக்கு அல்லாஹ்வும் அவனது அமரர்களும் சாமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிரெண்டு மாதங்களில் துல் கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாஹ்விடம் சங்கைமிக்கதாக ஏற்படுத்தப்பட்டதற்கு இதுதான் காரணம் என்றுகூற மனிதனுக்கு ஆற்றல் இல்லையென்ற போதிலும் அல்லாஹ்வின் தீர்க்கதரிசிகளான நபிமார்கள் ரசூல்மார்கள் அவ்வாறே விலாயத்தின் தலை வாசலான வலிமார்கள் இச்சிறப்பான மாதங்களில் நினைவுகூரப்படுவதுடன் அவ்வாறானவர்களின் விரோதிகளான அல்லாஹ்வின் விரோதிகள் தூற்றப்படுவதையும் காண முடிகிறது.

துல்கஃதா துல் ஹிஜ்ஜா மாதங்களில் நபிமார்களான இப்ராஹீம், இஸ்மாயில், ஹாஜா அலைஹிமுஸ்ஸலாம் நினைவு கூறப்பட்டு அவர்கள் போற்றிப் புகழப்படுவதுடன் நிம்ரூத் எனும் கொடிய அரக்கன் சாமிடப்படுவதையும் பார்க்கின்றோம் அவ்வாறே இங்லாமிய புது வருட முஹர்ரம் மாதத்தில் நபியுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் நினைவு கூரப்படுவதுடன் கொடிய அரக்கன், பிர்அவ்ன் சாமிடப்படுகின்றான். அத்துடன் விலாயத்தின் தலை வாயிலான அஹ்லு பைத்துக்களும் நினைவு கூரப்பட்டு அதன் எதிரிகள் தீக்கிரையாக்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே நபிமார்கள் ரசூல்மார்கள் வலிமார்களுடன் தொடர்புடைய கால நேரங்கள் உலகம் அழியும் வரை மனிதன் வணக்க வழிபாடுகள் வாயிலாக இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள் மீறப்படாத அமைப்பில் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கின்றான்.
அபுத் தூபா ஏறாவூர்
அல் ஜாமி அத்துல் அkஸிய்யா அரபுக் கல்லூரி
விருதோடை


ahlul baith  Rasoolullah_

விஷேட துஆப் பிரார்த்தனை


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக்கல்லூரியில் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் மௌலவீ இப்றாஹீம் அஹ்மத் அல் அஸீஸி அர்ரப்பானி அவர்களின் தலைமயில் நாட்டின் சுபீட்சத்துக்காகவும்இன ஐக்கியத்துக்காகவும் விஷேடமாக பதுளை மீரியபெத்த பிரதேசத்தில் இடம் பெற்ற பாரிய மண் சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களுக்காகவும் குடும்பங்களை உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும் 29-10-2014 வியாளக்கிழமை மாலை கல்லூரி கான்னாஹ்வில் இடம் பெற்றது.இதில் கல்லூரி அதிபர்,விரிவுரையாளர்கள்,மாணவர்கள் சகலரும் கலந்து சிறப்பித்தனர். (IN:Abuthooba Evr)


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

Wednesday, 29 October 2014

உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஒரு வழக்குத் தீர்ப்பு

உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஒரு வழக்குத் தீர்ப்பு
இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் (ரலி) யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்... அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்... "யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்... உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார். அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்... அபு தரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்... தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்... இரண்டு நாட்கள் ஓடியது. மூன்றாவது நாள் வந்தது. அஸர் (மாலை) தொழுகை நடைபெற்றது. எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்..­. நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு... தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது... தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்..... உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்...?? என கேட்கிறார். அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்... அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்...??" என்று கேட்டார் உமர்.. உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்... பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும். .. குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார். ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்... "இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் (ரலி) — (ஹில் புல் புளுள்)

Sunday, 26 October 2014

இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி


இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி
ஒருவர் மற்றவருக்கு உதவி ஒத்தாசையாக இருக்கும் விதத்திலேயே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதனால் தேடிச் சென்று பிறருக்கு உதவுமாறு மதங்களெல்லாம் அதற்கு உட்சாகமூட்டுகின்றது. அதனடிப்படையில் ஒவ்வொருவரும் பிறருக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்யவே செய்கின்றனர்.இதில் சிலர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும் மற்றும் சிலர் பாரிய பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும்,வேறு சிலர் நிகழவிருக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வு செய்து அதற்கான முன் ஏட்பாட்டையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முழுமையாக படிக்க.......
இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி