السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 30 October 2014

உலகின் நறுமணமிக்க மலர்கள்


உலகின் நறுமணமிக்க மலர்கள்

இல்லாதிருந்த இப்பிரபஞ்சங்களையும் பஞ்சபூதங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ் அவற்றையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் படைக்க ஆற்றல்கொண்டவனாக இருக்கிறான். அத்தகு சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ் மாதங்கள் தொடர்பில் பின்வருமாறு கூறுகின்றான். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி அம்மாதங்களில் நீங்கள் தங்களுக்கு தீங்கிழைத்து விடாதீர்கள். அல்குர்ஆன் 9:36

நபி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில், வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும் என்றுரைத்திருக்கிறார்கள் புகாரி.

ஆங்கில மற்றும் அரபு மாதங்கள் பன்னிரெண்டாக இருக்கிறது. சூரிய ஓட்டத்தைக் கணித்து ஆங்கில மாதங்களும் சந்திர ஓட்டத்தினைக் கணித்து அறபு மாதங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மனிதன் தற்பொழுது கண்டுபிடித்திருக்கின்றான். இது மனிதனின் ஏற்பாடல்ல என்பதையும் மனிதன் ஏற்றிருக்கின்றான். ஆனால் வானங்கள் பூமிகளையும் மாதங்களின் எண்ணிக்கை உட்பட அனைத்தையும் படைத்தவன் நான் அன்றி வேறில்லை என வாதிடும் அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொண்டு அவன் ஒருவனையே வணங்குவதற்குப் பதிலாக இப்பிரபஞ்சங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றதென்ற ஆய்வில் மனிதன் காலத்தையும் நேரத்தையும் கழித்துக் கொண்டிருக்கின்றான்.

சந்திர ஓட்டத்தில் சுழன்று மலரும் சன்மார்க்க மாதங்களின் முதல்வன் முஹர்ரத்தினை அல்லாஹ்வின் பேருதவியினால் இம்முறையும் வரவேற்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம் துலில்லாஹ் நபிலான நோன்புகளை எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நோற்றுக் கொள்ள முடியும். என்றாலும் அல்லாஹ்வின் மாதம் என்றழைக்கப்படும் புனித முஹர்ரம் மாத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு வைப்பதை சிறந்ததென்று நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இம்மாதத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள். 

எனவே இஸ்லாமியர்களான நாம் ஒன்பதாவது நாளையும் சேர்த்து நோன்பு நோற்பது ஸ¤ன்னத்தான கருமமாக இருக்கிறது. அதனடிப்படையில் எதிர்வரும் 3,4 ம் திகதிகளில் இவ்வருட முஹர்ரம் மாத பிறை 09,10 க்குரிய ஸ¤ன்னத்தான நோன்புகளை நோற்பதற்கு அல்லாஹ் தெளபீக் செய்வானாக! இத்தினங்கள் மறவாது நினைவு கூரப்பட வேண்டும் என்பதற்கு இவை போதிய சான்றுகளாக இருக்கிறது.

ஆஷ¥ரா என்னும் சொல் ஹிப்ர் மொழிச் சொல்லாகும். அதாவது பத்தாவது நாள் என்பது அதன் அர்த்தமாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் திஷ்ரி மாதமும் அரபிகளின் முஹர்ரம் மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாக இருக்கிறது. அதற்காக இஸ்லாமியர்கள் யூத முங்லிம்கள் என்று அழைப்பதில்லை. அத்துடன் புனித முஹர்ரம் மாதத்தில் பேசப்படுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளில் ஹழ்ரத் ஸெய்யிதுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் தியாக நிகழ்வும் ஒன்றாக வரலாற்றில் பதிவேறியிருக்கிறது.
ஒரு தடவை உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் இல்லத்திலிருந்து புறப்பட்டு அருமை மகளார் பெண்கள் தலைவி ஸெய்யிததுனா ஃபாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களின் வீட்டை நோக்கி அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்த போது ஹழ்ரத் ஹுஸைன் ரழையல்லாஹு அன்ஹு அவர்கள் அழும் ஓசையைக் கேட்டார்கள். அப்பொழுது அவர் அழுவது எனக்கு துன்பமளிக்கிறது என்பதை அறியமாட்டீரா என வினவினார்கள் தபரானி.
இன்னுமொரு தடவை தாகத்தினால் அழுது கொண்டிருந்த பேரப் பிள்ளை களின் தாகம் தீர்ப்பதற்காக தனது முபாரக்கான நாவினை அவ்விருவரின் வாயில் வைத்து உறிஞ்சக்கொடுத்து அழுகையை நிறுத்தினார்கள். தபரானீ, மஜ்மஉஸ் ஸவாயித். தன் பேரப் பிள்ளைகள் சாதாரணமாக அழுவதைக் கூட பெருமானார் விரும்பவில்லை யென்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. அன்னை ஃபாத்திமாவின் பேச்சும் நடையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பேச்சுக்கும் நடைக்கும் நிகராகத் திகழ்ந்ததுபோன்று இரு பேரர்களின் உருவ அமைப்பு பெருமானாரின் பரிசுத்த தோற்றம் போன்றிருந்திருக்கிறது. தன்னை நேசிப்பவர்கள் இவ்விருவரையும் நேசித்தாகவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். பெருமானாரின் பரிசுத்த மேனியில் உருண்டு பிரண்டு விளையாடும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். சுவனபதி வாலிபத் தலைவர், உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள் என நபியவர்களால் போற்றிப் புகழப்பட்டவர்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது இரு பேரக் குழந்தைளையும் அதிகமதிகம் நேசித்திருக்கிறார்கள். அத்தோடு அவ்விருவரையும் நேசிக்குமாறு பிறர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அவ்விருவரையும் நேசிப்பவர்களை தானும் நேசிப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள். அவ்விருவரை மட்டுமன்றி அவர்களது பெற்றோர்களையும் நேசிக்கும் விடயத்தில் தீனுல் இஸ்லாம் கூடிய கவனம் செலுத்தியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எனவே பரிசுத்த இக்குடும்பத்தினரை இஸ்லாம் கூறும் விதத்தில் நேசிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான ஹழ்ரத் ஸெய்யிதுஷ் ஷ¤ஹதா இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை அல்லது அன்னவரின் குடும்பத்தினரை நேசிப்பது ஈமானிய அம்ஷம் எனக்கூறிக் கொண்டு ஏனைய எந்தவொரு நபித் தோழரையோ அல்லது அண்ணலாரின் குடும்ப அங்கத்தவர்களான மனைவிமார்களையோ தூற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அண்ணலாரின் அருமைத் தோழர்க ளைக் குறைகூற விமர்சிக்க மார்க்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானவர்களுக்கு அல்லாஹ்வும் அவனது அமரர்களும் சாமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிரெண்டு மாதங்களில் துல் கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாஹ்விடம் சங்கைமிக்கதாக ஏற்படுத்தப்பட்டதற்கு இதுதான் காரணம் என்றுகூற மனிதனுக்கு ஆற்றல் இல்லையென்ற போதிலும் அல்லாஹ்வின் தீர்க்கதரிசிகளான நபிமார்கள் ரசூல்மார்கள் அவ்வாறே விலாயத்தின் தலை வாசலான வலிமார்கள் இச்சிறப்பான மாதங்களில் நினைவுகூரப்படுவதுடன் அவ்வாறானவர்களின் விரோதிகளான அல்லாஹ்வின் விரோதிகள் தூற்றப்படுவதையும் காண முடிகிறது.

துல்கஃதா துல் ஹிஜ்ஜா மாதங்களில் நபிமார்களான இப்ராஹீம், இஸ்மாயில், ஹாஜா அலைஹிமுஸ்ஸலாம் நினைவு கூறப்பட்டு அவர்கள் போற்றிப் புகழப்படுவதுடன் நிம்ரூத் எனும் கொடிய அரக்கன் சாமிடப்படுவதையும் பார்க்கின்றோம் அவ்வாறே இங்லாமிய புது வருட முஹர்ரம் மாதத்தில் நபியுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் நினைவு கூரப்படுவதுடன் கொடிய அரக்கன், பிர்அவ்ன் சாமிடப்படுகின்றான். அத்துடன் விலாயத்தின் தலை வாயிலான அஹ்லு பைத்துக்களும் நினைவு கூரப்பட்டு அதன் எதிரிகள் தீக்கிரையாக்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே நபிமார்கள் ரசூல்மார்கள் வலிமார்களுடன் தொடர்புடைய கால நேரங்கள் உலகம் அழியும் வரை மனிதன் வணக்க வழிபாடுகள் வாயிலாக இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள் மீறப்படாத அமைப்பில் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கின்றான்.
அபுத் தூபா ஏறாவூர்
அல் ஜாமி அத்துல் அkஸிய்யா அரபுக் கல்லூரி
விருதோடை


ahlul baith  Rasoolullah_