السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 18 July 2016

துருக்கிய இராணுவப் புரட்சியும் ஸலவாத்தின் மகிமையும்

துருக்கிய இராணுவப் புரட்சியும் ஸலவாத்தின் மகிமையும்

உண்மையில் நாம் கண்கூடாக கண்ட பல காட்சிகள் நெஞ்சை குளிரவைக்கிறது. ரஜப் தய்யிப் எற்தோகான் அவர்கள் நக்ஷபந்திய்யா தரீகா வின் ஒரு முரீதாக கடந்த சில வருடங்களுக்கு முன், காலம் சென்ற அஷெய்க் நாசிம் அல்ஹக்காணி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பைஅத் பெற்றுக்கொண்டார். நேற்றைய தினம் ஏற்படவிருந்த இராணுவப் புரட்சியை அல்லாஹ் புனித சலவாத்தின் மூலமும், சிக்ருகளின் பரகதைக் கொண்டும் தவிடுபோடியாக்கினான் என்று சொல்வதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆம் துருக்கிய நாட்டு மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், எர்தொகான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி தனது நாட்டு மக்களை புரட்சிக்கு எதிராக களத்தில் இறங்குமாறு அழைப்ப்பு விடுத்த அதேநேரம் நாட்டு மக்களோ வீதிகளில் சலாவத்துக்களும், ஸிக்ருகள் மூலமுமே தமது பலத்தை அலங்கரித்துககொண்டிருந்ததை பார்க்கும் பொது கண்குளிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பள்ளிவாயலில் ஒலிபெருக்கி மூலம் சலவாத்துக்கள் ஒலித்தவண்ணம் இருந்தை அறிய முடிந்தது. வீதிகளில் வட்டவடிவில் அல்லாஹ்வை துதி செய்தவர்களாக இருந்தார்கள்.
ஆம் இவைகளை பார்க்கும் பொது அண்மையில் வாசித்த "முஅஸ்கர்" சஞ்சிகையில் வெளிவந்த (by Fazhan Nawas) அவர்களின் ஒரு கட்டுரை எடுத்துக்காட்டாக அமைந்தது
கி. பி. 1834 செச்நியாவின் சுதந்திரப் போராட்டத்தில் எமது சூபியாக்களின் பங்களிப்பை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இமாம் ஷாமில் அவர்கள் 1797 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி ரஷ்யாவின் செச்னிய பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கிம்ரி’ என்ற கிராமத்தில் பிறந்தார்கள். இவரின் இயற்பெயர் அலி என்பதாகும். இவர்கள் சிறு வயது முதல் ஆன்மீகத்துறையோடு பின்னிப் பிணைந்திருந்தார்கள். தன் வாழ்வை ஆன்மீக கட்டமைப்புக்கு அமைவாகவே முன்னெடுத்தார்கள். சிறு வயது முதல் அல் குர்ஆன், ஹதீஸ், தப்ஸீர் ஆகிய கலைகளை உரிய அறிஞர்களிடத்தில் கற்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இவர்கள் பிறந்த காலத்தில் ரஷ்ய சாம்பிராஜ்ஜியம் தனது ஆள்புலத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இதற்காக மேற்கு ரஷ்யாவிலிருக்கும் முஸ்லிம் ஆள்புலங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்து குறிப்பாக கி.பி. 1800 ஆம் ஆண்டுக்குப்பிறகு உஸ்மானிய கிலாபத்திற்குச் சொந்தமான நிலப்பரப்புக்களை கைப்பற்றும் முயற்சியை ரஷ்யா அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமான காலப்பகுதிகளில் இமாம் சிறுவயதாக இருந்தார்கள். இந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு எதிரான போராட்டங்களை செச்னியாவில் இருந்து மதிப்புக்குரிய தலைவராக கருதப்படும் அஷ்ஷெய்க் அல் கஸ்ஸாலி அல் முஸ்லா அவர்கள் வழிநடத்திச் சென்றார்கள். கி.பி. 1832 ஆம் ஆண்டு ரஷ்ய படையினருடன் இடம் பெற்ற மோதலின் போது ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் உயிரிழந்தார்கள். இதனைத் தொடர்ந்து செச்னியாவின் தளபதியாக இமாம் ஷாமில் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
.
கி.பி. 1834 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிராக செச்னிய படையின் தளபதியாக இமாம் ஷாமில் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இமாம் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் போராட்ட வீரர் மாத்திரமன்றி பல துறைகளிலும் திறமைவாய்ந்த ஆளுமை மிக்கவராக மதிக்கப்பட்டார்கள். குறிப்பாக செச்னிய பிரதேசத்தில் தலைதூக்கியிருந்த கோத்திரப் பிரச்சினைகளுக்கு அவர் வழங்கிய தீர்ப்புக்கள் இன்றும் ரஷ்யாவின் அரசியல் வரலாற்றில் போற்றிப் பேசப்படுகின்றன. யுத்தகாலத்தில் கொரில்லாப் போர் தந்திர முறைமையை முதலில் அறிமுகம் பெருமையும் அவரையே சாறும். இன்று வரை “கெரில்லா போர்” முறையினை அறிமுகம் செய்த முதலாவது பெருமை இமாம் அவர்களையே சாறும் என்று பிரித்தானிய கலைக்களஞ்சியங்கள் சான்று பகிர்கின்றன.
இமாம் ஷாமில் அவர்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களை ஒன்று திரட்டி போராடிய தலைவராக கருதப்படுகிறார்கள். ரஷ்யாவின் ஆள்புல விஸ்தரிப்பு வேகமாக இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலே இமாம் அவர்கள் பிறந்தார்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாகவும் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். கஸகஸ்தான் மக்களின் 03 ஆவது இமாமாகவும் அவர்கள் மதித்து நோக்கப்படுகிறார்கள். மாவீரன் நெப்போலியனின் பெரும் படையினை அழித்த ரஷ்யப் படையினருக்கு கூட இமாம் ஷாமில் அவர்களின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நெப்போலியனின் படைகளை இரண்டு தடவைகள் அனுப்பியும் இமாம் அவர்களின் படையை கூட நெருங்க முடியவில்லை. “நெப்போலியன் கரியாக இருந்தால் இமாம் அவர்கள் நெருப்பாக மாறிவிடுகிறார்கள்” என்று உஸ்மானிய வரலாற்றுக் குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
.
“இமாம் அவர்களுடன் போரிடச் சென்ற ரஷ்யப்படையில் 02 பேர் (தளபதியும் ஒரு போராட்ட வீரரும்) மாத்திரமே உயிருடன் திரும்புவார்கள்” என்று துருக்கியின் வரலாற்று ஆசிரியர் யுடடிந லுயளநச என்பவர் கூறுகிறார்கள். ஒரு இறைநேசராகவும் இமாம் ஷாமில் அவர்கள் கருதப்படுகிறார்கள். தனது படையினரை ஆத்மீக ரீதியாகவும் வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் 'ஸ{ஹைப் அல் எபந்தி அல் பகீனி" என்பவர் “தபாகத்” என்ற யுத்தத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். “இமாம் ஷாமில் அவர்களின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தபோது ஷரீஆ புறக்க்கணிக்கப்பட்ட விடயமாக மாற்றப்பட்டுவிட்டது என்கிறார்கள். நக்ஷபந்தியா அமைப்பின் ஆசிரியராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். “கிம்ரி” என்ற கிராமத்தில் இருந்த சகலரும் இமாம் ஷாமில் அல்லது அஷ்ஷெய்க் அல்-காஸி ஆகியோரின் மாணவர்களாக இருந்தார்கள்.
.
25 ஆண்டுகள் போராட்டத்தில் இமாம் ஷாமில் அவர்கள் ஈடுபட்டு இருந்தாலும் கல்வித்துறைக்கான முக்கியத்துவத்தை அவர்கள் குறைக்கவில்லை. கல்விக்காக பைத்துல்மால் நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மத்ரஸா அமைக்கப்பட்டது. கல்வியைத் தேடிச் செல்பவர்களுக்கு போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. யுத்தங்கள் தன்நிகர் இல்லாத தளபதியாகவும் அவர்கள் விளங்கினார்கள். ரஷ்யாவின் அவுல்கோ யுத்தத்தின் போது இமாம் ஷாமிலுடன் ரஷ்யர்கள் யுத்தம் செய்தார்கள். இதன்போது இமாம் அவர்களின் 300 மாணவர்கள் மாத்திரமே உயிரிழந்தார்கள் ஆனால் நவீன தொழிநுட்பங்களைக் கொண்டிருந்த ரஷ்யப் படையில் நாளாந்தம் 5,000 படைவீரர்கள் உயிரிழந்து கொண்டிருந்தார்கள் என்று ரஷ்யாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இமாம் ஷாமில் அவர்கள் கி.பி. 1868 ஆம் ஆண்டு ரஷ்யாவின் 02 ஆவது அலெக்ச்சாண்டர் மன்னருடன் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்தார். ரஷ்யாவின் செய்ன் பீடர்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மண்டபத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கி.பி. 1868 ஆம் ஆண்டு உக்ரைன் தலைநகரான “கியூ” நகருக்குச் செல்லும் வாய்ப்பு இமாம் ஷாமில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இமாம் ஷாமில் சென்ற ஒவ்வொரு இடத்திற்கும் ரஷ்ய அதிகாரிகள் அவர்களுக்கு உயர்மட்டத்திலான மரியாதையை வழங்கினார்கள். இமாம் ஷாமில் அவர்கள் சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்தாலும் கூட அவருடைய பண்புகள், இறையச்சம் பேணுதல் போன்ற நற்பண்புகள் ரஷ்யாவின் கிறிஸ்தவ அரச சபையை என்றும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
.
கி.பி. 1869 ஆம் ஆண்டு இமாம் அவர்கள் ரஷ்யாவின் அரச மரியாதையோடு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகருக்குச் சென்ற போது இமாம் அவர்களுக்கு சுல்தான் அப்துல் அஸீஸ் அவர்கள் அரச மரியாதையளித்தார்கள். மக்கா நகருக்குச் சென்ற போது அங்கு பிரான்ஸி;யரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அல்ஜீரியாவில் போராட்டங்களை மேற்கொண்டு வரும் அல்ஜீரியா சுதந்திரப் போராட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான அமீர் அப்துல் காதர் அல் ஜெஸாயரி அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது. கி.பி. 1871 ஆம் ஆண்டு இமாம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாயலுக்கு சென்ற சம்பவம் உஸ்மானிய வரலாற்றில் முக்கிய ஆவணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிகழ்ந்த சம்பவத்தை துருக்கியின் வரலாற்று ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
இந்த சம்பவத்தை அஷ்ஷெய்க் பதுர்தீன் அபெந்தி என்ற வரலாற்று ஆசிரியர் பதிவு செய்திருப்பதாக நுnஉலஉடழிhநனயை டீசவையnயை என்ற கலைக்களஞ்சியம் கூறுகிறது. இமாம் ஷாமில் அவர்களின் வருகையை அறிந்து கொண்ட மதீனாவாசிகள் மஸ்ஜிதுன் நபவிக்கு விரைந்தார்கள். அவர்களைச் சந்திக்கும் முன்னர் கண்ணீர் சிந்திய நிலையில் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாயலுக்கு நுழைந்தார்கள். ஆனால் மதீனா வாசிகளோ இமாம் அவர்களை தாங்கள் முதலில் சந்திக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் இமாமவர்கள் மதீனாவாசிகளுக்கு முன்னர் தாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாயலுக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். அதற்கமைய அவர்கள் முதலில் நுழையும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.
ரஷ்யாவுக்கு எதிரான செச்னியாவின் போராட்டம் உலக வரலாற்றில் கௌரவமான முறையிவ் இடம்பெற்ற போராட்டமாகும் என்று நவீன அரசியல் வரலாறுகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக நீண்டகாலம் போராடிய ஒரு போராட்ட வீரராக செச்னியாவின் முன்னால் ஜனாதிபதி அஸ்லான் நஷ்வதொப் அவர்கள் கருதப்படுகிறார்கள். செச்னியாவின் 03 ஆவது ஜனாதிபதியாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். 1997-2005 வரை அவர்கள் செச்னியாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார்கள். ரஷ்யாவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்திருந்திருந்த கருத்துக்கள் இன்றுவரை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன. செச்னியாவைச் சேர்ந்த போராட்ட வீரர்களின் எண்ணிக்கை 4,000 ஐ விட குறைந்திருந்தது, தலைநகர் குரோஸினியில் 837 முஸ்லிம் படைவீரர்கள் மாத்திரமேயிருந்தார்கள். ஆனால் இந்த 837 முஜாஹதீன்கள் மாத்திரம் 115,000 இற்கும் அதிகமான ரஷ்யப்படையினரைத் தோற்கடித்தனர். “இறைவனின் உதவியால் ஆயிரக்கணக்கானோரை எமது நூற்றுக்கணக்கானோர் தோற்கடித்தார்கள்” என்று செச்னியாவின் 03 ஆவது ஜனாதிபதி முஜாஹித் அஸ்வலான் நஷ்வதொப் அவர்கள் கூறுகிறார்கள். “சிறு படையினர் ஆயிரக்கணக்கான ரஷ்யர்களை எவ்வாறு தோற்கடித்தார்கள்?” என உங்களுக்குத் தெரியுமா என்று ரஷ்ய ஊடகமொன்று அவரிடம் கேள்வியெழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர்கள் “தஜ்கிஸ்தான், கஸகஸ்தான், உஸ்வகிஸ்தான், ததிரிகிஸ்தான் உட்பட மத்திய ஆசிய நாடுகளுக்கு தஸவ்வுப் மூலம் இஸ்லாம் பரவியது. கமியூனியஸ்தின் ஆட்சி விருட்சமாக வளர்ந்த காலத்தில் இஸ்லாத்தை நாத்திக சித்தாந்தங்களிலிருந்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்கிய பெருமையும் தஸவ்வுபையே சாரும். திக்ர், ஸலவாத் இதற்கு உடந்தையாக அமைந்திருந்தன. செச்னியர்களாகிய நாம் காதிரிய்யா, நக்ஷபந்தியா அமைப்புக்களைப் பின்பற்றி இருந்தோம். ரஷ்யாவுக்கெதிரான யுத்தத்திற்கு செல்ல முன்னர் நாங்கள் வட்டவடிவில் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திப்போம். பின்னர் அல்குர்ஆனை ஓதுவோம். ஸலவாத் உட்பட பல்வேறு அவ்ராதுகளும் எமக்குக் கிடைத்திருந்தன. இதனைத் தொடர்ந்து நாங்கள் எங்களுடைய போராட்டங்களை ஆரம்பிப்போம். இதன் மூலம் அல்லாஹ{த் தஆலா ரஷ்யர்களுக்கெதிரான யுத்தத்தில் வெற்றிகளைத் தந்தான்” என்று செச்னியாவின் முன்னால் ஜனாதிபதியாகிய அஸ்லான் நஷ்வதொப் அவர்கள் கூறுகிறார்கள்.
ரஷ்யர்களுக்கு எதிராக செச்னியர்களின் போராட்ட வரலாறு உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்ற முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது, ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இடம்பெற்றவாறு சர்வதேச போர் முறைகளை மதித்து இந்த யுத்தம் இடம் பெற்றிருக்கின்றமை சிறப்பம்சமாகும் என்று நவீன் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். (நன்றி பஸ்ஹான் நானா ....)
எனவே நாம் சாரம்சமாக பெற்றுக்கொள்வது .. நாம் என்னதான் பெரும்கொண்ட பல சாலியாக இருந்தாலும் எமது பலத்தை நிர்ணயிப்பவன் இறைவன் மாத்திரம் தான். அந்த இறைவனின் உதவி நமக்கு தேவையா..? அவனை அணுக வேண்டிய முறையில் அணுகினால் அவன் நிச்சயம் உதவி செய்வான். அணுகும் முறையை நாம் உதறித் தள்ளிவிட்டு எவ்வலவு தான் அல்லாஹு அக்பர் என்று கதறினாலும் அவன் திரும்பி பார்க்க மாட்டான் . அந்த வகையில் தான் நேற்று துருக்கியில் நடைபெற்ற இராணுவப் புரட்சிக்கு அல்லாஹ் வழங்கிய உதவியும், துருக்கி நாட்டு மக்கள் அவர்கள் மேற்சொன்ன இது போன்ற வரலாறுகளை நன்றாக படித்து இருந்தார்கள் அதனால் தான் அவர்கள் சலவாத், மற்றும் ஸிக்று போன்ற ஆயுதங்களை கையில் எடுத்து சூபியாக்களின் வழிமுறைகளை கேடையமாக ஏற்படுத்தி இறைவனின் புறத்தில் இருந்து உதவியை இலகுவாக பெற்றுக்கொண்டார்கள்.
எனவே யா அல்லாஹ் எங்களையும் எங்களை சார்ந்தவர்களையும் இதுபோன்ற சூபியாக்களின் பாதையில் இறுதி வரை வாழ்ந்து மரணிக்க அருள்புரிவானாக..!!