السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 29 November 2019

வாழ்வு ஒரு நொடியில் மாறிப் போகும்.

வாழ்வு ஒரு நொடியில் மாறிப் போகும்.

25 வயது இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்று வழுக்கி விழுந்துள்ளார்.
வெளிக்காயங்கள் எதுவுமில்லை. முள்ளந்தண்டு எலும்பு கழுத்துக்கு கீழே நொறுங்கிப் போயிருந்தது. கை வேலை செய்கிறது, அதற்கு கீழே எதுவுமில்லை.
“டொக்டர் என்ட கால தூக்க ஏலாம இருக்கு”
“உங்கட முள்ளந்தண்டு வடம் உடைஞ்சு பெய்த்து, இனி கால் இரண்டும் வேலை செய்யாது”
“ஒபரேஷன் செஞ்சா சரி வராதா?”
“இல்ல”
“அப்ப என்ட வாழ்க்க”
“..:.......”
“அப்ப என்னதான் செய்ய ஏலும்?”
“உடைஞ்ச எலும்ப fix பண்ணி தர ஏலும். அதற்கு பிறகு கைய ஊண்டி இருக்க ஏலும்”
“நடக்க ஏலாதா?”
“வீல் செயார் பாவிக்க ஏலும்”
“அப்ப என்ட தொழில்?”
“என்ன வேல செய்றீங்க”
“ஒரு கடையில வேலைக்கு நிக்கன்”
நான் பொறுப்பாக இருந்த கடந்த 24 மணித்தியாலயங்களில் இவரும் இவரைப் போன்ற இன்னும் மூணு பேரும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அட்மிட்டாகியுள்ளனர். மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்து விழுந்தவர்கள். ஒருவர் மரத்திலிருந்து விழுந்திருக்கிறார். இந்த நான்கு பேரும் இனி சுயமாக நடக்க முடியாது.
வாழ்வு ஒரு நொடியில் மாறிப் போகும்.
எங்களை மன்னித்து விடு இறைவா!
Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics