السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 25 November 2019

கஹட்டோவிட்டாவில் மீலாதுன்நபி பெருவிழா

#கஹட்டோவிட்டாவில் #சிறப்புடன்  #நடைபெற்று #முடிந்த #மீலாதுன்நபி #பெருவிழா .

கஹட்டோவிட்ட பாதிபீயனஸ் அமைப்பினரால் நடாத்தப்பட்ட மீலாதுன்நபி பெருவிழா கடந்த 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் பாதிபிய்யா தக்கியா வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மீலாதுன்நபி விழாவை முன்னிட்டு கஹட்டோவிட்டா ஓகடபொல பகுதியில் உள்ள சுமார் 23 குர்ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பர்சில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

நிகழ்வுக்கு பாதிபிய்யா தக்கியாவின் கலீபா மௌலவி எம்.என்.எம் இஜ்லான் காஸிமி அவர்கள் தலைமை தாங்கியதோடு இரண்டாவது கட்ட நிகழ்ச்சிகள் அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பலஸ்தீன நாட்டுக்கான முன்னால் தூதுவர் அல் ஹாஜ் பௌஸான் அன்வர் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்வை தொடரந்து சங்கைமிக்க உலமாக்களின் உபண்ணியாசங்கள் பலதும் இடம்பெற்றன .
இவற்றுள் மாத்தறை மின்ஹதுல் பாஸிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் அல் ஆலிம் மௌலவி பஸ்மின் மௌலானா அவர்கள் மாநபியின் நேசத்துடனே மாநபியை பின்பற்ற வேண்டும் என்ற தொனிப்பொருளில் அழகிய சன்மார்க்க உரையை நிகழ்த்தினார்.

இவரது நிகழ்ச்சியை தொடரந்து அத்தனகல்ல இளைஞர் மன்றத்தில் தலைவர் கௌரவ உபுல் ஹர்ச அவர்கள் கலந்து இளைஞர்களை தத்ததமது சமயத்துக்கும் சமூகத்துக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பயன்பெற்று தனக்கூடிய சிறந்த இளைஞர்களை உருவாக்குவதே தமது அமைப்பின் நோக்கம் எனவும் கஹட்டோவிட்டாவில் இரண்டு இளைஞர் கழகங்கள் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் எதிர் காலத்தில் இளைஞர் பாராளுமன்றத்துக்கு இவ்வூரில் இருந்து ஒருவராவது போடப்பட வேண்டும் அதற்காக தகுதியான திறமை மிக்க வாலிபர்களையும் உள்வாங்கி எதிர் காலத்தில் சிறப்பாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வின் அடுத்த அம்சமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் சகோதரர் இன்திகாப் ஸுல்பர் அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது அவரது உரை மிக ஆழமான அகலமான பல விளக்கங்களை கொண்டிருந்ததுடன் வரலாற்றில் முஸ்லிம்கள் எந்தளவு பங்களிப்புக்களை செய்திருக்கிறார்கள் என்றும் பாடப்புத்தகத்தில் வஹ்ஹாபிச நச்சுக்கருத்துக்களை பரப்பி வருவது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மஃரிப் தொழுகையுடன் ஆரம்பமான நிகழ்வில் இஷா வரைக்கும் மீலாது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இஷாத்தொழுகையோடு ஆரம்பமான நிகழ்வில் சிறப்பு அததிகளாக பின்வருவோர் கலந்து சிறப்பித்தார்கள் .இளைஞர் வலுவூட்டல் சமூக சேவைகள் இராஜாங்க முன்னால் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ அலி ஸாஹிர் மௌலானா அவர்களும், கண்ணியம் மிக்க ஸாதாத்துமார்களான பலுல்தீன் மௌலானா மற்றும் நகீப் மௌலானா,ஹனீப் மௌலானா ,ஸுஹைர் மௌலானா போன்ற ஸாதாத்து மார்களும் மற்றும் பல உலமாக்களும் சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

இஷாத்தொழுகையோடு ஆரம்பமான நிகழ்வில் எமது ஊரின் மூத்த உலமாவும் வஹ்ஹாபிச வழிகேட்டை அவ்வப்போது தோலுரித்து மக்களை எச்சரிக்கை செய்து அவ்வியக்கங்களில் மக்கள் சேரந்து வழிகெட்டு விடக்கூடாது என்ற நோக்கில் ஆணித்தரமான ஆதாரங்களை முன்வைத்து உபண்ணியாசம் பண்ணி வரும் ஆலிம் அப்துல் பாரி ஆலிம் B.A.Kuwait அவர்கள், வஹ்ஹாபிசத்தின் விபரீதமும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய மார்க்கத்தின் பகுதிகளை உலமாக்கள் எடுத்து சொல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.அத்தோடு வஹ்ஹாபிச கொள்கை கோட்பாடுகள் இஸ்லாமிய அகீதாவுக்கு முரணாக இருப்பதையும் நபிகளாரின் பொன்மொழிகள் வாயிலாக இவ்வியக்கங்களில் சேர்வதன் பயங்கரங்கள் அதில் இருப்பதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் நாயகத்தின் முன்னெச்சரிக்கைக்குள் எவ்வாறு இந்த இயக்கங்கள் உள்வாங்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் வஹ்ஹாபி கொள்கையில் இருந்து மீண்டு வந்து அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமா அத் சத்திய வழியில் வந்து இணையுமாறும் மாற்று கொள்கை சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நிகழ்வின் சிறப்பு அததியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் அலி ஸாஹிர் மௌலானா உரையாற்றினார் அவரது உரையில் இந்த ஊரில் அவரோடு நட்புறவோடு தொடர்பில் இருக்கும் சகோதரரர்களை ஞாபகம் செய்ததுடன் மீலாது நபி விழாவின் முக்கியத்துவத்தையும் அதை உற்சாகத்துடன் செய்யும் இளம் வாலிபர்களையும் அதற்காக பாடுபடும் உலமாக்கள் ஏனையோர்களுக்கும் நன்றி கூறியதோடு அவரை இந்த மீலாது விழா நிகழ்வுக்கு அழைத்தமைக்கும் நன்றி பாராட்டினார்.

நிகழ்வின் அடுத்த அம்சமாக பாதிபீயன்ஸ் அமைப்பினரால் நடாத்தப்பட்ட மற்றும் ஒரு போட்டியாகிய ஸலவாத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் பிரதம அததிகளால் வழங்கி வைக்கப்பட்டன.இறுதியாக நிகழ்வின் இறுதி மார்க்க சொற்பொழிவு இடம்பெற்றது இந்த உரையை கொழும்பு அஜ்வாத் அல் பாஸிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி  அஹ்மத் மஹ்லரி அவர்களால் சிறப்பு சொற்பொழிவு ஆற்றப்பட்டது.இவரது உரையில் பெருமானாரின் தலைமுடி குறித்த சிறப்பு விளக்கங்கள் அதன் முக்கியத்துவங்கள் எங்கெல்லாம் பெருமானாரின் திருமுடிகள் வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்களையும் வழங்கியதோடு நாயகத்தின் சிறப்பியல்புகள் கண்ணியம் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினார்.

இறுதியில் பாதிபீயன்ஸ் அமைப்பின் செயலாளர் சகோதரர் இக்ரம் அவர்களால் நிகழ்வின் தொகுப்புகள் ஒரு முறை மீண்டப்பட்டு நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதிகளுக்கும் உலமாக்களுக்கும் நிகழ்வை சிறப்புடன் செய்து முடிக்க உதவிய சகலருக்கும் நன்றி கூறும் நன்றியுரை இடம்பெற்றது.

இதையடுத்து மீலாதுன்நபிபெருவிழா ஸலவாத்துடன் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் மத்ரஸா மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குர்ஆன் மத்ரஸாக்களின் முஅல்லிம்கள் கஹட்டோவிட்டாவில் இருக்கும் பாரம்பரிய மஸ்ஜித்களின் நிர்வாகிகள் தரீக்காக்களை சேர்ந்த சகோதரர்கள் ஊர்ப்பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மீலாது விழாவை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.







தொகுப்பு

எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்