السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 5 November 2019

தமிழ் மெளலீத்

#கொண்டையை_மறைக்க_மறந்த
நூ அப்துல் ஹாதி பாகவி!
ஈருலக இரட்சகர் அகிலங்களின் அருட்கொடை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழ்ந்து, புரியும் மொழியில் படித்தால், மக்களுக்கு அவர்களின் கருணையும் காருண்யமும் காதலும் எளிதாகச் சென்றடையுமே‌ என்ற கருத்துப்படத் துவங்குகிறது அவரது பதிவு.

இத்தகைய பதிவுகளும் பதிவுகளின் சொந்தக்காரர்களும் நமக்கு புதிதல்ல.

அரபி மொழியில் பாடுவதை விட அன்னைத் தமிழில் பாடினால் மக்கள் உணர்ந்து பாடுவார்கள் என்று ஆரம்பிப்பவர்களது அங்கலாய்ப்புகள் எல்லாம், எதில் போய் முடியுமோ அதில் தான் இவரது பதிவும் முடிந்துள்ளது.

#இறைத்தூதர்_ஸல்_அவர்களின்_புகழ்ப்பாவை_அரபியில்_மட்டும்_படிப்பதால்_தான் #குர்ஆன்_இடம்பெற_வேண்டிய_இடங்களிலெல்லாம்_சுப்ஹான_மவ்லிது_நங்கூரமிட்டு_அமர்ந்து_கொண்டுள்ளது

தெரிந்தோ தெரியாமலோ பதிவிடப்பட்டுள்ள, பதிவாளரின் மேற்கண்ட விஷமத்தனமான வரிகள் பதிவாளரின் மனோநிலையை  வெளிக் கொண்டு வந்து விட்டது.

இவரின் வாசகங்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்குப் புதிதானவை அல்ல.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபை சுந்தரத் தமிழ் கூறும் உலகத்திலிருந்து இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று புறப்பட்டு வந்த பிஜே முதல், மக்கா மஸ்ஜிதில் இருந்து அட்டகாசங்கள் புரிந்து வந்த ஷம்ஸூத்தீன் காசிமி வரை பார்த்தாகி விட்டது.

புனித குர்ஆன் ஷரீஃப் ஓதப்படும் இடங்களில் ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் நங்கூரமிட்டு விட்டது என்று பெரும் வேதனைப்படுகின்றார்.

1) புனிதக் குர்ஆன் ஓதப்படும் இடங்களை தமிழில் ஓதப்படும் புகழ்ப்பாக்கள் நங்கூரமிட்டுக் கொள்ளலாமா?
ஆக உங்களது நோக்கம் தமிழ் மொழியில் குர்ஆன் தமிழ் மொழியில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புகழ் பாக்கள் பாடப்படுவதா அல்லது ஸூப்ஹான மௌலித் ஷரீஃபை இல்லாமல் ஆக்குவதா?

2) குர்ஆனை உணர்ந்து ஓதினாலும் உணராது ஓதினாலும் நன்மை. அதுபோல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை மொழி உணர்ந்து புகழ்ந்தாலும் மொழி உணராது புகழ்ந்தாலும் நன்மையே. இதை ஆலிம் அவர்கள் மறுக்கின்றாரா?

3) அரபி மொழியில் முஸ்லிம்கள் ஏன் பெயர் வைக்க வேண்டும். தமிழ் மொழியில் பெயர் வைத்தால் என்ன என்று கேட்கும் சங்கிகளுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்த சமுதாயத்தை நோக்கி சங்கிகள் வீசும் இந்த வாதம் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றினாலா அல்லது நம் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கும் நஞ்சுண்ட நெஞ்சத்தினாலா?

4) எல்லோருக்கும் விளங்கும் மொழியில் தான் தங்களது பெயர் உள்ளதா?

5) எல்லோருக்கும் விளங்கும் மொழியில் தான் தாங்கள் சார்ந்துள்ள மார்க்க அறிஞர்களின் சபையின் பெயர் உள்ளதா?

6) எல்லோருக்கும் விளங்கும் பெயரில் தான் மார்க்க ஞானங்களைக் கற்றுக் கொடுக்கும் மதிப்புமிகு கலாசாலைகள் பெயர் உள்ளதா?

7) அல்லது உங்களைப் பற்றி சுயவிவரம் கூறும் அடிக்குறிப்பாவது முகநூலில் தமிழில் உள்ளதா?

8) தமிழ் மொழியில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழ வேண்டும் என்கின்ற உங்களது அக்கறை ரபீஉல் அவ்வல் மாதத்தில் மாத்திரம் வருவது ஏன்?

9) பெரும்பாலும் நாம் அறிந்த மஜ்லிஸ்களில் ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் ஓதப்படும் மஜ்லிஸ்களில் தமிழ்ப் பாக்களும் இணைந்து ஓதப்படுகின்றது என்ற உண்மை அறியாதவரா நீங்கள்? அல்லது மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவரா நீங்கள்?

10) நீங்களும், உங்களுக்கு உரை கொடுக்கும் பேரறிஞர்களும், ஷாம் ஷிஹாபுத்தீன் அப்பா யாத்தளித்த ரஸூல் மாலையையும், ஸதகத்துல்லா அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி உரையளித்த உமறுப்புலவர் நாயகத்தின் சீறாப்புராணத்தையும், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அளித்த தலை ஃபாத்திஹாவையும், தவசீலர்கள் பலர் தமிழில் யாத்தளித்த இன்னும் எண்ணற்ற தமிழ் பைத்துகளையும் பதிவிடுவீர்கள் என்றும், அவற்றை பாடும் மஜ்லிஸ்களை ஏற்படுத்தி எங்களையும் அழைப்பீர்கள் என்றும் நம்பலாமா?

11) குறைந்தபட்சம் என்‌.எஸ்.என். பாகவி அளித்த புரவலர்  போர்த்திய பொன்னாடை - புர்தா ஷரீஃப் மஜ்லிஸையும், ஆலிம் கவிஞர் தேங்காய் ஷர்ஃபுத்தீன் மிஸ்பாஹி அளித்த சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லிதின் மஜ்லிஸையும், ரஹ்மத் அறக்கட்டளையில் மரியாதைக்குரிய மௌலானா கான் பாகவி ஸாஹிப் அவர்களின் தலைமையில் ஏற்படுத்தி எங்களையும் அழைப்பீர்களா?

12) புர்தா ஷரீஃபை எழுதிய பூஸ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களையும், சுபஹான மௌலித் ஷரீஃபை எழுதிய இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களையும், உங்களது மற்றொரு பதிவில் #யாரோ_எழுதிய_அரபி_பைத்கள் என்று குறிப்பிடுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற வலம்புரிஜான் அவர்களும், மேத்தா அவர்களும் யார்? யாரைத் திருப்திப்படுத்த யாரைக் குறை காண்கின்றீர்கள்?

நிச்சயமாக #இமாம்_பூஸ்ரி_ரஹ்மத்துல்லாஹி_அலைஹி_அவர்களின்_வாரிசுகள்_நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்குப் பெருமை உண்டு.
#வலம்புரி_ஜானின்_வாரிசாக_நீங்களும்_உங்களைப்_போற்றுவோரும் இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.

தமிழ்ப் பழமொழி ஞாபகத்திற்கு வருகின்றது.
#புதிய_மொந்தையில்_பழைய_போதை

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்வோம்.

#மக்கா_முஹம்மது_மேல்_மணமுள்ள_ஸலவாத்தை
#ஹக்காக_நாங்கள்_எல்லாம்_கருதியே_சொன்னதினால்
#எக்காலம்_எங்களுக்கு_இடையூறு_வராமல்
#தற்காத்து_அருள்புரிவாய்_தனியேனே_ரஹ்மானே

கீழக்கரை நகரில் மக்தப் மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதத் துவங்குவதற்கு முன் இந்த மௌலித் ஷரீஃபை எங்களுக்குக் கற்றுத் தந்து, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அன்பையும் காதலையும் போதித்துத் தான் சங்கைக்குரிய ஆலிம்கள் எங்களுக்கு குர்ஆன் ஷரீஃபை ஓதக் கற்றுத் தந்தார்கள்.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் பெரும்பாலான நாடுகளில் ஓதப்படுகின்றது. பல நூறு வருடங்கள் இது பாரம்பரியமாகத் தொடர்கின்றது.

புனித ஸூப்ஹான மௌலித் ஷரீஃப் முஸ்லிம் சமுதாயத்தின் புனித மிகு பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்.

இதை உடைத்து தமிழ்ப்  படைப்பாளர்களின் பல்வேறு தமிழ் ஆக்கங்களை ஸூப்ஹான மௌலித் ஷரீஃபின் இடத்தில் நீங்கள் புகுத்த முயல்வதன் மூலம், உங்களது எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு நன்றிகள்!

#மிகவும்_சிரமப்பட்டு_வாதங்களை_அமைத்த_நீங்கள் #கொண்டையை_மறைக்க_மறந்து_விட்டீர்களே!

அரபி பைத்துகள் உடன் இணைந்து தமிழ் பைத்துக்களையும் வைத்துக் கொள்ளலாமே என்று நீங்கள் அறிவுறுத்தி இருந்தால், குறைந்தபட்சம் நீங்கள் ஓர் நடுநிலைவாதி என்றாவது புரிந்து கொள்ள முயன்று இருப்போம்.

நான் அந்த வகையைச் சேர்ந்தவனும் அல்ல என்று தெளிவாக்கியதற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.

புர்தா ஷரீப் புருடா என்றவன் புழுவிலும் கேவலமாகிப் போனான்.

ஸூப்ஹான மௌலித் ஷரீஃபின் சுகந்தத்தில் அசுத்தம் கற்பிக்க முயன்றவன், கேவலத்திற்கே கேவலமாகிப் போனான்.

உங்களது எண்ணங்களைக் குறை சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. அதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

ஆனால் விஷமத்தனமான வரிகளுக்கு விடை காண வேண்டியதும் பதில் கொடுப்பதும் எங்களது கடமையாகின்றது.

#பூமான்_நபி_ஸல்லல்லாஹு_அலைஹிவஸல்லம்_அவர்கள்_மீது_ஓதப்படும்_புண்ணிய_வரிகளுக்கு
#புனிதம்_ஏற்படுகின்றது_என்று_ஏன்_உங்களுக்கு_புழுக்கம்_வருகின்றது?

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது நெற்றியில் ஒளிர்ந்த நூரே முஹம்மதுவைப் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பார்த்து யாருக்கோ வந்த புழுக்கம் நினைவில் வந்து செல்வதைத் தடுக்க முடிய வில்லை.

வல்ல அல்லாஹ் புனிதமானவன்!
வேந்தர் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் புனிதமானவர்கள்!
வேதம் புனிதமானது!
வேந்தர் நபிகளைப் புகழும் எந்த மொழியும் புனிதமானதே! புனிதமானதே!! புனிதமானதே!!!

(படைப்பாளனின் புனிதம் சுயமானது. படைக்கப்பட்டவைகளின் புனிதம் அனைத்தும் படைத்தவன் அருள்வது)
Yembal Thajammul Mohammad
Mueenudeen Ibrahim
Shazulia A
Mackie Faisal