அரபுத் தமிழ்
தமிழக முஸ்லிம் மக்களாலும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களாலும் தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட மொழி வடிவமே ' அரபுத் தமிழ்' என்பதாகும். அரபி மொழி எழுத்துருவில் (LH) தமிழை எழுதுவதே 'அரபுத்தமிழ்' ஆகும்.
உலக மொழிகளிலேயே மிக நீண்ட காலப் பழமை யுடைய மொழிகளாகத் தமிழும் அரபி மொழியும் வழங்கி வருகின்றன. இம்மொழிகளைப் போன்றே இரண்டு மொழிகளைப் பேசும் மக்கட் பகுதியினரும் நீண்ட காலத தொடர்புடையவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே தமிழகமும் அரபகமும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. சீனம் கிரேக்கம், ரோம போன்ற பகுதிகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது போன்றே அரபு மொழி பேசும் பகுதியான 'மிஸ்ரு' என அழைக்கப்பட்ட எகிப் தியப் பகுதியோடும் தமிழ் மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். இதனை பாரதியார்
"சீனம் மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம்பலவும் புகழ்வீசக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் நன்று வளர்த்த தமிழ்நாடு"
எனப் பாடி மகிழ்கிறார். 'மிஸ்ரு' என்பது தமிழில் 'மிசிரம்' என மறுவி வந்துள்ளது.
அதே போன்று அரபு நாட்டு வணிகர்களும் மேலைக் சுடல் வழியாகவும் கீழைக் கடல்வழியாகவும் தமிழகப்பகுதி
களில் தங்கி வணிகம் செய்ததோடு, இங்குள்ள மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் நிலையை அடைந்தவர் என் பது வரலாறு.
தமிழ் மக்களுடன் உதிரக் கலப்புடன் ஒன்றுபட்டு விட்ட அராபியர்கள் தமிழர்களை ஏற்றதுபோல் தமிழ் மொழியையும் ஏற்றார்கள். தமிழைக் கற்று அதனை அரபி வரிவடிவில் (லிபி எழுதவும் செய்தனர். செம்மை யிலா நிலையில் அரபிகள் பேசிவந்த தமிழை வரிவடிவில் எழுத நேர்ந்த போதெல்லாம் தாங்கள் "நன்கறிந்திருந்த தங்கள் தாய் மொழியாகிய அரபி மொழி வரிவடிவிலேயே தமிழை எழுதி வருவதை வழக்கமாகக் கொண்டனர்.
அண்ணல் நபிகள் நாயகம் காலத்துக்கும் பின்னர் தமிழகம் வந்த அராபியர்கள் இஸ்லாமியக் கருத்து களை தமிழ் மக்களிடைய்ே எடுத்துச் சொல்லும் கடப்பாடு டையவர்களானார்கள். அப்போது இஸ்லாமிய சிந்தனை களை இங்குள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு அரபி மொழி வரிவடிவிலமைந்த தமிழே அவர்கட்கும் பெருத்துணையாயமைந்தது
அரபுத் தமிழின் விரைவான வளர்ச்சிக்கு வேறுசில காரணங்களும் உண்டு. அரபி மொழியில் இருந்த இஸ்லா மியத் திருமறையான திருக்குர் ஆனை - திருமறை விளக்கங் களை வேற்று மொழியில் பெயர்க்கும்போது கருத்துப் பிழையோ, பொருட்பிழையோ ஏறபட்டுவிடும் என்ற அச்சம் ஆரம்பத்தில் சற்று அதிகமாக இருந்தது. தமிழ் எழுத்துக்களின் மூலம் திருமறை விளக்கஙகளைத் தரும் போது மாறுபாடாகக் கருத்து விளக்கம் ஒலிக் குறை பாட்டினால் அமைந்து விடலாம் என்ற உணர்வின் அடிப் படையிலேயே, திருக்குர் ஆனை, அதன் விளக்கங்களை நேரடியாகத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தமிழில் தருவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத் தப்பட்டு வந்தது
ஏனெனில், அரபு மொழிச் சொற்களின் உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுத இயலவில்லை. அதோடு இஸ் லாமிய அடிப்படைக் கருததுக்களை உணர்த்தவல்ல அரபு கலைச் சொற்களை, பொருள் நுட்பம் சிறிதும் சிதையா வணணம் தமிழில் மொழியாக்கம் செய்யவும் இயலவில்லை எனவே, திருமறை தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்க்கு மாறு மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தினார்கள்.
தொடக்க காலத்தில் அரபுத் தமிழ் செம்மையானதாக அமைந்திருக்கவில்லை. பேச்சுத் தமிழையே அரபி வரி வடி வில் எழுதி வாசித்துவந்ததால் குறைகள் ஏதும்பெரிதாகத் தெரியவில்லை நாளடைவில் சற்று இலக்கியத் தரமான சொற்றொடர்களை அரபி வரிவடிவில் எழுதிப் படிக்கத் தொடங்கியபோதுதான் தமிழ்மொழியிலே உள்ள ங,ச.ஞ ட,ப,ள,ழ.ண ஆகிய 8 தமிழ் எழுத்துக்களுக்கேற்ற அரபி எழுத்துக்கள் அரபி மொழியில் இல்லாதது பெருங்குறை யாகப்பட்டது. மேலும் எ, ஏ, ஒ, ஓ போன்ற ஒலிக் குறியீடு கள் அரபியில் இல்லாததும் குறையாகக் கருதப்பட்டது. எனவே, இந்த எழுத்துக் குறைகளை நீக்க, சரியான உச் சரிப்பைத் தரவல்ல அரபு எழுத்துக்களை உருவாக்கவேண் டிய கட்டாயச் சூழல் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே ஆர்வம் கொண்டோர்க்கு ஏற்பட்டது.
ஒரு கால கட்டத்தில் சமஸ்கிருத மொழி எழுத்துக்களின் உச்சரிப்பைத் துல்லியமாகத் தமிழில் சொல்ல தமிழில் எழுத்துக்கள் இல்லை என்ற குறையைப் போக்க ஷ ஜ,ஸ. ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் புதிதாக உருவாக்கப் பட்டது போன்று தமிழில் உள்ள மேற்கூறிய ங, ச, ஞ .ட ப, ள ழ, ண ஆகிய எட்டுத் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப் புக்கேற்ற புதிய வரி வடிவங்கள் அரபுமொழியில் உருவாக் கப்பட்டன. எ,ஏ,ஒ,ஓ எழுத்துக்களுக்கான ஒலிகளைப் பெற அரபி எழுத்துக்களில் மேலும் கீழும் கொம்புக் குறி களைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்டது இவ்வாறு
அரபி மொழி புதிய எழுத்தொலிகளைப் பெற்று வள மடையத் தமிழ் காரணமாயமைந்தது.
அதே போன்று தமிழ் மொழியில் உள்ள க, ச,ட,த. ப, ற என்ற ஆறு வல்லின எழுத்துக்களுக்கு மற்ற மொழி களில் இருப்பது போன்று மூன்று அல்லது நான்கு வகை யான ஒலி வேறுபாடுகளைக் குறிக்கத் தனித்தனி எழுத் துக்கள் தமிழில் இல்லை. பேச்சு வழககிலும எழுத்து வழக்கிலும் ஒலி வேறுபாடின்றி ஒரே வித ஒலியைக் குறிக் கும் வகையில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களையும் கையாள வேண்டியுள்ளது இதனால்,சமயங்களில் கருத்து மாறுபாடு ஏற்பட வாய்ப்பேற்பட்டு விடுகிறது. ஆனால், அதே சமயத்தில் அரபி மொழியில் இந்த ஆறு வல்லின எழுத்துக்களுக்கும் ஒலி வேறுபாடுள்ள தனித்தனி ஒலி வடிவ எழுத்துக்களை அரபி எழுத்துக்களின் மேல் சில குறியீடுகளாக இடுவதன் மூலம் பெறும் வகையில் உரு வாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழில் இல்லாத ஒலிக் குறைவை நிறைவு செய்யும் வகையில் அரபுத் தமிழ் அமைந்துள்ளது என்பது இங்கு எண்ணத்தக்கதாகும்.
அரபுத் தமிழின் துரித வளர்ச்சிக்கு இஸ்லாமியத் தமிழ்ப் பெண்களும் முக்கியக் காரணமாவார்கள். தமிழ் எழுத்தறிவு அதிகம் பெறாது, மறை மொழி என்ற வகை யில் அரபி மொழி மட்டும் அறிந்திருந்த இஸ்லாமிய பெண்களும் தமிழ் மொழி எழுத்தறிவில்லா இஸ்லாமிய பாமரர்களும் தாங்கள் அறிந்திருந்த அரபி வரிவடிவம் வாயிலாகவே தமிழ் மொழியைக் கையாண்டு வநதனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அரபுத் தமிழ் முனைப்பாக வளரத் தொடங்கியது சுமார் 350 ஆட்டுகட்கு முன்னர்தான் எனப் பலராலும் குறிக்கப்படுகிறது. ஆனால், இக்கூற்று முழுமையாக ஏற்கக் கூடியதாக இல்லை அதற்கும் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அரபுத் தமிழானது, தமிழ் முஸ்லிம்களிடையேயும் அரபகத்திலிருந்து தமிழகம் வந்து நிலை கொண்டு விட்ட அரபுகளிடையேயும் வெகுவாக பழக்கத்திலிருந்த தற்கான சான்றுகள் பரவலாகக் கிடைக்கவே செய்கிறது.
சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஹாபிழ் அமீர் அலி வலி என்பவர் முனைப்புடன் அரபுத் தமிழ் வளர்ச்சியில் கருத்தூன்றி அதன் வளர்ச்சிக்கு உழைத்து வந்தார் என்பதை புகழ்பெற்ற இஸ்லாமிய இலக்கியப் பதிப்பாசிரியரான கண்ணகுமது மகுதூம் முகம்மது புலவர் அவர்கள் 'தீன் நெறி விளக்கம்' என்ற நூலிலுள்ள ஒரு பாடலில்.
"வெல்லிய அரபுத் தமிழ் உண்டாக்கிய மேன்மை ஹாபித் அமீர்வலி"
எனக் கூறுகிறார் ஹாபிழ் அமீர் வலி அரபுத் தமிழை உண்டாக்கினார் என்பதைவிட காலத்தின் இன்றியமை யாத் தேவையாக அரபக- தமிழக முஸ்லிம்களால் உரு வாக்கப்பட்ட அரபுத் தமிழை முனைப்புடன் கட்டுக்கோப் பாக திருத்தமுடன் வளர்த்து வளமடையச் செய்த பெருமைக்குரியவர் என்று பாராட்டுவதே சரியாக இருக் கும்
சுமார் நானூறு ஆண்டுகட்கு முன்னரே அரபுத் தமி ழில் இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த போதிலும் பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவரான காயல் பட்டணம் ஷாம் ஷிகாபுத்தீன் வலி எனும் இறைநேசச் செல்வர் எழுதிய நூற்றுக்கணக் கான அரபுத் தமிழ் பாடங்களே இன்று நாம் அறியக் கிடைக்கின்றன.
இஸ்லாமிய ஞானம் நிரம்பப் பெற்ற ஷாமு ஷிஹாபுத் தீன் வலி அவர்கள் தொழுகைக்கான வழிமுறைகள் இஸ் லாமிய நெறி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், தீன்நெறி உணர்த்தும் ஒழுக்கக் கோட்பாடுகள் பெருமானாரின் பெரு வாழ்வைச் சுட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பெருமளவில்
அரபுத் தமிழில் பாடியிருப்பதோடு இஸ்லாமிய மக்களிடை யே காணும் வரதட்சணைக் கொடுமை. கந்தூரியின் பெய ரால் நடக்கும் பித்தலாட்டக் குறைகளைச் சுட்டிக்காட்டும் சீர்திருத்தப் போக்கிலான பாடல்களையும் பெருமளவில் அரபுத் தமிழில் எழுதிக் குவித்துள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய நெறியுணர்த்தும் இலக்கியப் படைப்பு கள் முதல் சிறுவருக்கான சின்னஞ்சிறு உரைநடை நூல் கள்வரை அரபுத் தமிழில் ஆக்கப்பட்டுள்ளன. சமயம், வர லாறு, தத்துவம், மருத் துவம், கதை என தமிழிலும் அரபி யிலும் எத்தனை வகையான துறைகள் உண்டோ அத் தனையிலும் அரபுத் தமிழ்ப் படைப்புகளைச் செய்யுள் உரு விலும் உரைநடையிலும் எழுதியுள்ளார்கள் தமிழ் முஸ் லிம்கள். இன்னும் சொல்லப் போனால் 'இல்முந்நிசா' எனும் காமச்சுவை நனி சொட்டக் சொட்டக் கூறும் காமக்கலை நூலும் அரபுத் தமிழிலெ வடித்துத் தரப் பட்டுள்ளது.
அரபுத் தமிழ் படைப்புகள் அனைத்துமே இஸ்லாமிய
நெறி தொடர்புடையனவாக இருந்ததால் அவற்றில்
அரபி, பெர்சியச் சொற்கள் மிகுதியும் இடம் பெற்றுள்
ளன. இச்சொற்களை ஒலிச் சிதைவு இல்லாதபடி படிப்
பதற்கு அரபித் தமிழே வாய்ப்பாக அமைந்தது.
ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட திருமறை விரிவுரை கள் அனைத்தும் அரபுத் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டதிட்டங்களும் அரபுத் தமிழிலேயே உரு வாக்கப்பட்டன.
அரபுத் தமிழில பாடல்களை எழுதிக் குவித்தவர்களில் முதலிட ம்பெறுபவர் தமிழிலும் அரபியிலும்பெரும்புலமை பெற்ற காயல்பட்டிணம் ஷாமு ஷிகாபுத்தீன் வலியுல்லா அவர்களே ஆவார். நூற்றுக்கணக்கான அரபுத் தமிழ் பாமாலைகளை இயற்றிருந்த போதிலும் அவற்றில் சுமார் இருபத்தைந்து அரபுத் தமிழ் நூல்கள் மட்டுமே அச்சு வாகனமேறியுள்ளன. அவற்றுள் ரசூல் மாலை, அதபு மாலை, பெரிய ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை என்பன குறிப்பிடத்தக்க அரபுத் தமிழ் படைப்புகளாகும்.
அவரைத் தொடர்ந்து காயல்பட்டிணம் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் 'ஆனந்தக்களிப்பு' எனும் நூலை அரபுத் தமிழில் யாத்துள்ளார்கள். அதே போன்று சின்ன உவைஸீனா ஆலிம் அவர்கள் 'ஹக்கீகத் மாலை எனும் அரபுத் தமிழ் நூலை எழுதியுள்ளார்கள் கீழக்கரை செய்யது முஹமமது ஆலிம் அவர்களும் தைக்கா சாகிபு அவர்களும் இஸ்லாமியச் சட்டங்களை விரித்துரைக்கும் நூல்களை அரபுத் தமிழில் எழுதியளித்துள்ளார்கள். பெண்பாற் சூஃபிக் கவிஞர்களுள் ஒருவராகக் கூறப்படும் கீழ்க்கரை அல் ஆரிபு செய்யிது ஆசியா உம்மா அவர்கள் எழுதிய 'மெய்ஞ்ஞானத தீப இரத்தினம்" எனும் அரபுத் தமிழ் நூல் மெய்ஞ்ஞானச் சிந்தனை க் களஞ்சிய ம-கும். இறைவன், நபிகள் நாயகம், அபூபக்கர் (ரலி) கல்வதது நாயகம் (வலி) அஜ்மீர் முயினுத்தீன் ஆண்டகை, ஹஸன், ஹுசைன், பலலாஹ். முகையித்தீன் ஆண்டகை, சாகுல் ஹமீது ஆண்டகை, ஆரிபு நாயகம் மற்றும் மழை தாலாட்டு, அடைக்கலம். பிரார்த்தனை முதலாக எண் பத்தைந்து தலைப்புகளில் கண்ணி, விருத்தம், ஆனந்தக் களிப்பு, குமமி, வெண்பா,பதிகம், மாலை ஆகிய பல வகைகளில் அரபுத் தமிழில் பாடியளித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்றையுடைய அரபுத்தமிழ் இலக்கியங்களில் பல இன்று உலகின் பல பகுதிகளிலுள்ள நூலகங்களிலும் நூல் காப்பகங்களிலும் தொல் பொரு ளாய்வகங்களிலும் இருந்து வருவதாகக் கூறப்படுகின் றது. லண்டனிலுள்ள இந்திய அலுவலக நூலகத்தில் 1878-ல் எழுதப்பட்ட "சீறா நாடகம்" என்ற அரபுத் தமிழ் நூல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அரபுத் தமிழில் நூல்கள் மட்டுமல்லாது பத்திரிகை களும் கூட வெளியிடப்பட்டுள்ளன தமிழகத்தைவிட அரபுத் தமிழ் செல்வாக்கு இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம் பெருமக்களிடையே மிகுதியாக இருந்துள்ளது. தமிழகம் போன்றே இலங்கையிலும் அரபுத் தமிழிலே வார, மாத ஏடுகள் நீண்டகாலம் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற றாண்டு வரை செழுமையாக வளர்ந்துவந்த அரபுத் தமிழ் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிக்குப் பின்னால் மக்களால் புறக்கணிக்கப்படும் நிலையை எய்தியது இதற் குப் பல காரணங்கள் உண்டு.
அரபுத் தமிழ் நூல்கள் கையினால் மட்டுமே எழுதப் படக் கூடியவையாக இருந்து வந்தன. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்பட்ட அச்சு வாகனப் பெருக்கத்தின் காரணமாக அரபுத் தமிழில் எழுதுவது வெகுவாகக் குறைந்து விட்டது.
மேலும், அரபுத் தமிழ்நடை ஓரளவு பேச்சு வழக்குத் தமிழை அடியொற்றி எழுந்து வளர்ந்ததால் 'கொச்சைத் தமிழ் தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் விரைந்து எழுந்த தமிழ் உணர்வும் மொழித்திறமும் மற்ற. வர்களைப் போன்றே இஸ்லாமியர்களையும் ஆட்கொண் டது. ஆகவே, கொச்சைத் தமிழ் கலந்த அரபுத் தமிழ் அறவே புறக்கணிக்கப்பட்டது.
ஆனால் இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம்களிடையே அரபுத் தமிழ் செல்வாக்குக் கணிசமாக குறைந்துள்ள
போதிலும் அவர்கள் இன்னும் அரபுத் தமிழ் வடிவத்தை விரும்பவே செய்கிறார்கள். 'அரபுத் தமிழ் அழகுத் தமிழ்' எனக் கூறி அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க விரும்பு கிறார்கள்.
அரபுத் தமிழில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான படைப்புகளில் ஒரு சில நூறு இலக்கியங்கள் கூட தமிழ் எழுத்தில் எழுத்து மாற்றம் செய்யப்படவில்லை எனவே, அரபுத் தமிழ் பழக்கம் அறவே மறைவதற்கு முன் அரபுத் தமிழிலுள்ள படைப்புகள் அனைத்தையும் எழுத்து மாற்றம் செய்வது அவசிய, அவசரத் தேலையாகும். தமிழ் மொழிக்கும் அரபு மொழிக்கும் இணையற்ற பாலமாகத திகழ்ந்த அரபுத் தமிழ் காலப் போக்கில் தமிழ் வளர்ச்சிக் குக் கிடைத்த மற்றுமொரு உந்து சக்தி என்பதை மறக்கவோ மறுக்கவோ இயலாது
அரபுத் தமிழில் மிக அதிகமான அளவில் பயன்படுத் தப்பட்டு வந்த அசல, அமுல், நகல், தகராறு, கைத கஜானா, ஆபத்து, வக்கீல், இனாம், வக்காலத்து, வசூல் பாக்கு, தபசில், பசலி, மகசூல், வாரிசு, காலி, நபர் மாமூல் முன்சீப், தாலுகா, ஜில்லா, ஹத்து, கிஸ்தி, கடு தாசி போன்ற அரபு, பெர்சியச் சொற்கள் தமிழ்ச் சொற் கள் போலவே அன்றாட வாழ்வில் பயன்பட்டுவருகின்றன
இவ்வாறு ஒலிக்குறைபாடின்றி தமிழைப் பயன்படுத்து வதற்கும் தமிழ் மொழி வளர்ச்சியோடு சொற்பெருக்கத் துக்குக் காரணமாக இருந்த அரபுத தமிழ் வடிவம் மற்ற இஸ்லாமிய வடிவங்கள் போன்றே தமிழ் மொழி இலக் கிய வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் பெருந்துணையாக இருந்து வந்துள்ளது என்பது இலக்கிய வரலாறு தரும் அழுத்தமான உண்மையாகும்.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமிய சமய அடிப் படையில் அரபி, பெர்சிய மொழித் தொடர்பு காரணமாக அவ்வம்மொழிகளில் காணப்பட்ட மசலா கிஸ்ஸா, நாமா,
முனாஜாத்து ஆகிய நான்கு இலக்கிய வகைகளை புது வகைத் தமிழ் இலக்கிய வடிவங்களாகத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தாலும் அவற்றின் செய்யுள் வடிவம் இயன்ற வரை தமிழ்இலக்கண அமைப்பை அடியொ ற்றியே அமைக் கப்பட்டன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
படைப்போர். நொண்டி நாடகம். திருமண வாழ்த்து அரபுத் தமிழ் ஆகிய நான்கு புதுவகை இலக்கிய வடிவங் களை தமிழுக்கென்றே தமிழ்ப் பெயர்களோடு தோற்று வித்து தமிழ் இலக்கியப் பயிரைச் செழிக்கச் செய்துள்ள னர் இஸ்லாமியத் தமிழ்ப் புவவர்கள் என்பது தமிழ் இலக்கிய வரலாற்று உணமையாகும்.
தமிழகத்தில் எழுந்த சமயங்களைச் சார்ந்தவர்களும் தமிழகத்துக்கு அப்பாலிருந்து வந்த சமயங்களைச் சேர்ந்த வர்களும் தமிழில் காலங்காலமாகவே இருந்து வரும் பழைய இலக்கிய அமைப்பு முறைகளை அப்படியே அடி யொற்றி இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றினார்கள். ஆனால் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த தமிழ் முஸ்லிம்கள் மட்டுமே பழைய இலக்கியப் அமைப்பு முறைகள் அனைத்தையும் கையாண்டு தமிழ் இலக்கிய படைப்புகளை நூற்றுக கணக்கில் எழுதிக் குவித்ததோடு அமையாது முனைந்து எட்டு புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்து, தமிழ் இலக்கண முறைகள் வழுவாது, இலக்கியப் படைப்புகளை பெருமள வில் உருவாக்கியதன் மூலம காலத்தால் அழிக்க முடியாத தமிழ்ப் பணியை ஆற்றிய பெருமையை வரலாற்று பூர்வ மாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.
"இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்று முழங்கும் தமிழ் முஸ்லிம்கள், தமிழ் வளர்ச்சியை தங்கள் வளர்ச்சியாக எண்ணி உழைப்பதைப் பெருமை யாகக் கருதி தமிழ்ப்பணியை தளராது தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.