பிறப்பில் குறையுள்ளவனே அஹ்லுல் பைத்தில் குறை காண்பான்
➖➖➖➖➖➖➖➖➖➖
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, காதிரி..
➖➖➖➖➖➖➖➖
"உங்கள் மத்தியில் இரு பொருட்களை விட்டுச் செல்கின்றேன். அதனைக் கடைப்பிடித்து நடந்தால் ஒருகாலும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்குர்ஆன், அடுத்தது எனது குடும்பம்" என்று நபிகள் நாதர் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜில் உரைத்தார்கள்.
நூல் : முஸ்லிம்
ஆதாரபூர்வமான இந்த ஹதீதை வஹாபிகள் ஏற்பதில்லை. இதன்படி நடப்பதில்லை. மாறாக அஹ்லுல் பைத்களின் மேல் சேற்றை அள்ளி வீசுவதில் அதிக பிரியம் கொண்டு அலைகின்றனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித குடும்பத்தை பாவமான காரியங்களிலிருந்து பாதுகாப்பதாக திருமறையில் அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான்.
மறுமையில் முதன் முதலில் கௌதர் தடாகத்தில் என்னைச் சந்திப்பவர்கள் எனது குடும்பத்தினர்களும், எனது உம்மத்தில் என்னை நேசித்தவர்களுமாகும்.
ஆதாரம் : தைலமி
அலியே! முதன் முதலில் சுவர்க்கம் புகுவோர் நால்வர்களாகும்.
1. நான் (நபிகள் நாதர்)
2. நீர் (அலி அவர்கள்)
3. ஹஸன்
4. ஹுஸைன் அடுத்து நமது சந்ததியினர்
ஆதாரம் : இப்னு அஸாகிர், தப்றானி கபீர்
எனது குடும்பத்திலிருந்து எவரும் நரகம் செல்லக் கூடாது என்று அல்லாஹ்விடத்தில் கேட்டேன். அதனை அல்லாஹ் ஏற்று எனக்கு வழங்கியுள்ளான்..
ஆதாரம் : கன்ஸுல் உம்மால் - ஹதீது எண் - 34149
பாத்திமா தனது அபத்தைப் பாதுகாத்தார்கள். அதனால் அல்லாஹுத்தஆலா அவர்களது சந்ததிகளை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துள்ளான்.
ஆதாரம் : பஸ்ஸார், அபூயஃலா, தப்றானி, ஹாகீம்
இவ்வாறு கணக்கற்ற நபி மொழிகள் உள்ளன.
அல்குர்ஆனையும் ஹதீதையும் பின்பற்றுவதாக கூறும் இவர்கள், குர்ஆனிலும், ஹதீதிலும் புகழ்ந்துரைக்கப்பட்ட அஹ்லுல் பைத்துக்களின் மேல் ஆத்திரம் கொண்டலைவது ஏன்?
எவர் எனது குடும்பம், அன்ஸாரிகள், அறபிகள் ஆகியோர்களின் கௌரவத்தை மதித்து நடக்கவில்லையோ அவர் மூன்று குறைபாட்டில் ஏதாவது ஒன்றில் உள்ளவராக இருப்பார்.
1. முனாபிக்
2. விபச்சாரத்தில் பிறந்தவன்
3. அவனது தாய் சுத்தமில்லாத மாதவிடாய்க் காலத்தில் அவனைக் கருவுற்றிருப்பாள்.
ஆதாரம் : பைஹகி, ஷுஃபுல் ஈமான்,
பிர்தௌஸ் மௌதூரில் கிதாப் ஹதீ்ஸ் எண் - 5955 பாகம் - 03, பக்கம் - 626
அறுவர் மீது நான் சபித்துள்ளேன். இன்னும் அல்லாஹ்வும் சபித்துள்ளான். ஒவ்வொரு நபிமார்களினதும் துஆவும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகும்.
1. அல்லாஹ்வின் வேதத்தில் (இடைசெருகல் செய்து) கூட்டுபவன்
2. அல்லாஹ்வின் விதியை (களாகத்ரை) பொய்யாக்குபவன்
3. தனது அக்கிரமத்தினால் அல்லாஹ் கேவலமாக்கியதை கண்ணியப்படுத்துபவன், அல்லாஹ் கண்ணியமாக்கியதை கேவலமாக்குபவன்.
4. அல்லாஹ் ஹறாமாக்கியதை ஹலாலாக்கியவன்
5. எனது குடும்பத்திற்கு தொல்லை கொடுத்து மரியாதையீனப்படுத்தியவன்.
6. எனது சுன்னத்தை (கேவலமாகக் கருதி) விட்டு விட்டவன்.
ஆதாரம் : திர்மிதி ஹதீஸ் எண் - 2161
எவராவது ஒருவர் தனது ஆயுளிலும், அல்லாஹ் தனக்கு வழங்கிய நிஃமத்திலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், எனது குடும்பத்தினருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளா விட்டால், அவர் ஆயுளில் பறக்கத்தும் இருக்காது. மறுமையில் கறுத்த முகத்துடன் என்னிடம் வருவார்.
ஆதாரம் : அபூநுஅய்ம் கன்ஸுல் உம்மால் ஹதீஸ் எண் - 34171
றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புனித குடும்பத்துடன் மரியாதையாக நடக்காதவனின் பிறப்பில் குறைபாடு உண்டு என்றும், அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்று கறுத்த முகத்துடன் மறுமையில் நபியவர்கள் முன் நிறுத்தப்படுவான் என்றும் ஹதீதில் வந்துள்ளதை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்!
அஹ்லுல் பைத்துக்களில் குறைகண்டு சொல்லொனாத் துயரைக் கொடுத்த கவாரிஜிகளின் வழியில் வஹாபிகளும் நடைபயில்வதை நன்கு அறியலாம்.
நபி வழியில் நடப்பதாகக் கூறும் வஹாபிகள் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தின் மீதும் புழுதி வாரி இறைப்பது ஏன். இதுதான் நபி வழியா? சிந்தித்துப் பாருங்கள்!
உயிரை விடவும் மேலாக நபியவர்களை மதிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.
எவருக்கு நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பேரில் நேசம் இல்லையோ அவருக்கு ஈமான் கிடையாது என்று திருநபியவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால் குர்ஆனையும் ஹதீதையும் பி்ன்பற்றுவதாக வாய் கிழியக் கூறும் வஹாபிகள் நபிகளாரைப் புகழ்ந்து கவி பாடுவதை, உரையாற்றுவதை ஷிர்க் என்று கூறி தடை செய்கின்றனர்.
நபிமார்களும் இறைநேசச் செல்வர்களான வலிமார்களும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியார்கள் மனிதனில் முழுமை பெற்றவர்கள். அல்லாஹ்வை நெருங்கும் ஒருவர் நற்பண்புகள் நிறைவாகப் பெற்றவராக இருப்பார். அதனால் இவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்களாகவும் இருப்பார். இதனால்தான்
"எல்லாம் நானே என்று என்னளவில் தஞ்சம் கொண்ட நல்லடியார் வழியைப் பின்பற்றுங்கள் என்றும்,
"உண்மையாளர்களுடன் உறவாய் இருங்கள். வெற்றி பெறுவீர்கள்" என்றும், அல்லாஹுத்தஆலா திருமறையில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.
ஒரு புகழ் என்பது நற்பண்பின் வெளிப்பாடு, நற்பண்புள்ளவர் புகழுக்குரியவராகின்றார். எனின், நற்குணத்தின் தாயகமான நபிகள் நாயகத்தை புகழ்ந்துரைப்பதை ஒரு முஃமின் வெறுப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!
இஸ்லாம், உலகில் வலிமார்கள், அஹ்லுல் பைத்துக்கள் மூலமாகத்தான் அறிமுகமாகியது என்பது எவரும் மறுக்காத பேருண்மையாகும். இஸ்லாத்தை தங்களுக்குக் காட்டித்தந்த இந்த நல்லடியார்கள் மீது நன்றிக் கடனுடன் அவர்களைப் புகழ்ந்து, அவர்கள் பெயரால் நன்மை நாடி அன்னதானம் வழங்குகின்ற நற்செயலை வஹாபிகள் வெறுப்பதின் இரகசியம்தான் என்ன? என்பதை நாம் நன்கு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வரலாற்றை சற்று பி்ன்நோக்கிப் பாருங்கள். ஸஹாபாக்கள் காலத்திலும், தாபியீன்கள் காலத்திலும் தோன்றிய வழிகேடர்களான கவாரிஜிகளும் முஃதஸிலாக்களும் தவிர வேறு எவராவது நபிகள் நாதரின் புனித குடும்பத்தினரையும், இமாம்களையும் இம்சித்து இழிந்துரைத்த வரலாற்றை நாம் கண்டிருக்கின்றோமா?
வஹாபிகள் வழி தவறியவர்கள் என்பதற்கும் அவர்கள் அல்லாஹ்வி்ன் சாபத்தைப் பெற்ற முனாபிக்குகள் என்பதற்கும் இஸ்லாத்தின் வளர்ச்சியை சகிக்க முடியாத சியோனிஷ வாதிகளின் அடிவருடிகள் என்பதற்கும் மேற்கண்ட விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.