السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 12 November 2024

மாபிள்ளை லெப்பை ஆலிம்

 

அல்ஆமாஃ மாபிள்ளை லெப்பை ஆலிம் 

தொடர் : 03 


இலங்கையில் தொண்டு

****************************


அக்காலத்தில் இலங்கையில் இஸ்லாமிய வழிபாடுகள் சீர்குலைந்து இருப்பதைக் கண்ட மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் மார்க்க விழிப்புணர்ச்சிக் காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள்.


அக்காலத் தென் இலங்கையின் அரசாங்க அதிபராக இருந்த “லமசூரி" என்றஆங்கிலேயர், அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் நல்லுபதேசத்தால் இஸ்லாத்தை தழுவிய நிகழ்ச்சி அவர்களின் சிறப்பைப் பிரதிபலிக்கின்றது. சன்மார்க்கப் பணியின்


தென் இந்தியா முஸ்லிம்கள் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் மிக இருள் சூழ்ந்த ஒரு கால கட்டத்தில் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பணி தொடங்கியது.


C கி. பி. 1835 ஆம் ஆண்டு வியாபார நிமித்தம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள். இலங்கைக்கு முதன் முதல் அவர்கள் விஜயம் செய்தபோது சுமார் 18 வயதினராயிருந்தார்கள். வணிகத் தொடர்பாக இலங்கைக்கு வந்த போதிலும், தீனுல் இஸ்லாத்தின் பற்றுக் குறைந்து இருப்பதைக் கண்டு, கலங்கி தாம் வந்த நோக்கமான வியாபாரத்தை மறந்து தீன் சேவை செய்வதிலேயே முனைந்துவிட்டார்கள். இலங்கையின் அப்போதைய முஸ்லிம் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மார்க்க மேதை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் வணிகத் தொடர்பாக மாத்திரமன்றி இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை நன்கு போதிப்பதற்காகவும் தென் இந்தியாவிலிருந்து அடிக்கடி வந்து போகலானார்கள். மகான் அவர்களது ஆழிய அன்புக்குப் பாத்திரமான இலங்கை வாசியான கொழும்பு ஆலிம் சாகிப் என்று பெயர் பெற்ற அஷ்ஷா இர் அஷ் ஷெய்கு அப்துர் ரஹ்மான் இப்னு மீரான் லெப்பை மரிக்கார் அவர்கள், ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்மீது "மனாகிபுன் னுபூஸ்-பீ- மனாகிபில் ஆலிமுல் அரூஸ்” என்ற மவுலூது பாமாலை பாடி வரவேற்றார்கள்.


இலங்கைத் தீவின் பல பகுதிகளிலும் உள்ள நகரங் களுக்கும் சிற்றூர்களுக்கும் சென்று மதபோதனை செய் வதிலும் மதரஸாக்கள், தைக்காக்கள் நிறுவுவதிலும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் முழு மூச்சுடன் தொண்டாற்றியுள்ளார்கள்.


இலங்கையில் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தலைமைப் பீடமாக இன்று கருதப்படுவது, அவர்களின் மவ்லூத், ராத்தீப், ஸில்ஸிலா ஆகியவை பெரும்பான்மை முரீதீன்களால் ஓதப்பட்டுவரும் ஸ்தாபனமான கொழும்பு பழைய சோனகத் தெருவிலுள்ள மஃனமுஸ்ஸு அதா. கி.பி. 1881-ஆம் ஆண்டில், அல்லாமா ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களது முழு முயற்சியினால், இது நிறுவப்பட்டதாகும்.


அவர்களால் நிறுவப்பட்ட மற்ற நிறுவனங்கள் வருமாறு: கி. பி. 1883 ஆம் ஆண்டில் மருதானையிலுள்ள புகாரி தைக்கா.


கி. பி. 1884 ஆம் ஆண்டில் வெலிகாமத்திலுள்ள புகாரி மஸ்ஜித்


கி. பி. 1885 ஆம் ஆண்டில் வெலிகாமம் வெலிப் பிட்டியிலுள்ள அரூஸியா தைக்கா.


கி. பி. 1886 ஆம் ஆண்டில் மாத்தரை கொட்டுவ கொட ம ஆலுல் கைராத் அரூஸியா தைக்கா.


கி. பி. 1887 ஆம் ஆண்டில் காலி மிலுதுவையிலுள்ள மஸ்ஜித் முஹ்யித்தீன்.


கி. பி. 1888 ஆம் ஆண்டில் மாத்தரை கடை வீதியி லுள்ள மல்ஹரூஸ் ஸலாஹ் அரூஸியா தைக்கா,


கி. பி. 1889 ஆம் ஆண்டில் காலி காட்டு கொடை மஃனமு அப்கல் ஹம்து அரூஸியா தைக்கா.


கி. பி. 1894 ஆம் ஆண்டில் கிந்தரை ஹுசைன் தைக்கா


மேலும் கொழும்பு மருதானை பள்ளிவாசல், பம்பள பிட்டிய ஜும்மாப் பள்ளிவாசல், மாளிகாவத்தை லெயாட்ஸ் பிராட்வே, பலாமரச் சந்தி பள்ளிவாசல்கள் ஸ்தாபிக்கப் படுவதற்கும் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களே காரணமாக அமைந்தார்கள்.


அரூஸியத்துல் காதிரிய்யா


ஹிஜ்ரி 1265-ஆம் ஆண்டு (கி. பி. 1848) அரூஸியத்


துல் காதிரிய்யாவை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்


அவர்கள் ஆரம்பித்து வைத்து ஆசீர்வதித்து அருளினார்கள் •


அவர்களின் “துஆ” பரக்கத்தின் காரணமாக ஒன்றேகால்


நூற்றாண்டுகளுக்குமேலாக இந்த அமைப்பு இலங்கையிலும்


மற்ற நாடுகளிலும் சன்மாக்கப் பணியாற்றி வருகிறது.


இதற்கு முன் கீழக்கரை தைக்கா சாகிபு வலியுல்லா அவர்களிடத்தில் அரபு மொழிப் பயிற்சியும் ஆத்மீக ஞானப் பயிற்சியும் தொடர்பும் பெற்றவர்களாகவே இலங்கையில் வாழ்ந்து வந்த நாதாக்கள் பலர் விளங்கினர். எனினும் இந்தப் புனிதத்தொடர்பு பலன் தரும் விருட்சமாக நிலைபெற ஆரம்பித்தது மாப்பிள்னை லெப்பை ஆலிம் அவர்கள் காலத்தில் என்றே சொல்ல வேண்டும்.


அக்கால முதல் அருஸியத்துல் காதிரியா ஸ்தாபனத்தின் முயற்சியால் இலங்கை மக்களுக்கு அக்கீதா, பிக்ஹு, ஷரிஅத், தரீகத் ஆகியவற்றைப் போதிக்க இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலும், மூலை முடுக்குகளிலும் கிளைகள் அமைக்கப் பட்டன.


மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் காலத்திலேயே இலங்கை முழுவதிலும் முந்நூறுக்கும் அதிகமான பள்ளி வாசல்கள், தைக்காக்கள், பள்ளிக்கூடங்கள், மதரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன.


ஏற்கெனவே உள்ள பள்ளிகள், அறச்சாலைகள் ஆகிய வற்றை அபிவிருத்தி செய்வதும் இந்த ஸ்தாபனத்தின் பணி களில் அடங்கும். கண்கண்ட பலனுள்ளதாகிய ராத்திபதுல் ஜலாலிய்யாவும், ஏனைய விர்து, திக்ரு, மவுலூது, கஸீதாக் களும் இலங்கை தீவு முழுவதிலும் நியமமாக சிறப்புற நடை பெற்று வருவதற்கு முயற்சி எடுத்தல், அரபிக்கல்விக்கு புத்துயிர் அளித்தல், ஷரீஅத்தின் அடிப்படையில் இயங்கும் பள்ளிக்கூடங்கள், தைக்காக்கள், மதரஸாக்கள் ஆகிய வற்றைப் பெரும் எண்ணிக்கையில் அமைத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்.


மக்னமுஸ்ஸு அதா


குதுபுகள் மதித்த குத்புஸ்ஸமான் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் அவர்கள். மனமுருகப் பாடிப் பனுவல் செய்த பள்ளி என்ற பெருமை இலங்கையில் உள்ள கொழும்பு மக்னமுஸ் ஸுஅதாவுக்கு உண்டு. கொழும்பு நகரத்தின் பழைய பள்ளிகளில் ஒன்று என்ற பெருமையும் மக்னமுஸ் ஸுஅதாவுக்கு உண்டு.


ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அமைத்துள்ள ஸ்தாபனங்கள் அனைத்துமே ஆத்மார்த்தீக தவக் கூடங்களாகவும், ஆண்டவனைத் தொழுகின்ற பள்ளிகளாகவும், அதே சமயத்தில் ஆண்டவனின் புகழ் இசைக்கும் ராத்திபு கானாக்களாகவும் செயல்படக் கூடிய


*இரு திட்டங்களின் ஒருமைப்பாட்டு அமைப்பாகவே விளங்கு கின்றன. அவ்விடங்களில் ஆலிமுல் அரூஸ் அவர்கள் இந்த ஸ்தாபனங்களில் ராத்திபு நேரங்களை, தொழுகை வக்துக்களை யொட்டி அமைத்திருப்பது, ராத்திபுக்கு வருபவர்களை தொழுகையைத் தவற விடாதிருக்கும்படி நிர்ப்பந்திப்ப தற்காகவே யாகும்.


ஆலிமுல் அரூஸ் மாப்பிள்ளை வெப்பை ஆலிம் நிறுவிய பள்ளிகள், தைக்காக்களுக்கு. நிர்வாகச் செலவுக்கான வருமானங்களுக்கு அவர்களே வழிவகைகளைச் செய்திருந்தார் கள்.


மலேசியாவில் அரூஸியத்துல் காதிரியா


காதிரியா தரீக்காவின் சற்குருவாக இருந்த காயல் பட்டினம் உமர் ஒலியுல்லாஹ் அவர்களுக்கு, மலாயா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள வனாந்திரங்களில் கடும் தவம் ஆற்றி, ஆண்டவனின் அருள் பெற்று, ஆத்மீகச் சுடர் வீசிய ஞான சீலர்களான உத்தமர்களைக் கண்ணால் கண்டு அவர்களுடன் உறவாடி உளம் கலந்து ஒளிபெற வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. தங்கள் ஆத்மீக குருவாகிய ஷெய்குல் காமில் செய்யிது முகம்மது புகாரி தங்கள் (கண்ணணூர்) அவர்களிடம் இந்த ஆவலைக்கூறி அங்கு போக அனுமதி பெற்றார்கள்.


மலாய் தீபகற்பத்தை ஒட்டியுள்ள அச்சக்கரை தீவிற்கு முதன்முதலாக உமர்ஒலியுல்லாஹ் சென்றார்கள். அத்தீவிலே அருந்தவம் ஆற்றிவரும் தக்வாவுள்ள நாதாக்கள் பலரையும் அவர்கள் சந்தித்தார்கள். அச்சக்கரையிலும், மலாயாவிலும் உமர் ஒலியுல்லாஹ் அவர்கள் பதினான்கு ஆண்டுகள் தங்கி, தமது அருள் ஞான போதனைகளையும் - தவபல சாதனை களையும் புரிந்துள்ளார்கள். அதன் பலனாக அப்பகுதியில் இவர்களின் ஆத்மீக அருள் வழியாகிய காதிரியா தரீக்காவில் அப்பொழுதே ஆயிரமாயிரம் சீடர்கள் ஏற்பட்டுவிட்டார்கள்.


உமர் ஒலியுல்லாஹ் அவர்கள் காலமான பின்பு, மலாய் நாட்டு பக்த கோடிகள் தங்களின் காதிரியா தரீக்காவின் வளர்ச்சிக்கும், தங்களது ஆத்மீக ஞான தாகத்திற்கும் உமரி ஒளியுல்லாஹ் அவர்களின் பின் தோன்றல்களை இந்தியாவிலிருந்து எதிர்பார்த்து வந்தனர்.


"சுவர்க்கத்துப் பெண் என்னும் ஆயிஷா உம்மா அவர்களின் மகனாரும், மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் தாயைப் பெற்ற பாட்டனாருமாகிய ஆரிபுபில்லா ஷேக் அப்துல்காதிர் லெப்பை ஆலிம் ஹாஜி அவர்கள் மலாயா வாழ் காதிரியா தரீக்கா முரீதீன்களின் நீங்காத ஆசையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அங்கு சென்று காதிரிய்யா தரீக்காவின் ஞான போதனைகளை நடத்தி வந்தார்கள்.


இந்தோனேசியாவிலும், மலாயாவிலும் மார்க்கப் பிரச் சாரம் செய்து அவர்கள் ஆற்றிய ஆத்மீகப்பணி பெரும் சிறப்புக்குரியது.


அவர்கள் சுமார் இருநூறு மலாக்காவில் காலமாகி அடங்கி நாட்டை சேர்ந்த வலியுல்லாவான வருடங்களுக்கு முன்பு இருக்கிறார்கள். தமிழ் அவர்களுக்கு மலாக்கா சாகிப் என்று பெயர் வழங்கியது. மலாக்கா நகரில் இந்திய முஸ்லிம்கள் வசிக்கும் "கம்பங்கூலிங்” என்ற இடத்தில் அவர் கள் தர்கா இருக்கிறது.


மகான் ஷேக் அப்துல் காதிர் ஆலிம் என்ற இந்த நாதாவைப் பெற்று எடுத்த தாயார் காயல்பட்டினம் உமர் ஒலியுல்லாஹ் அவர்களின் மாமி மகளாவார். இவரைச் சுவர்க்கத்துப் பெண், என்றே ஞானாபிமானிகள் அறிவார்கள்.


ஷேக் அப்துல்காதிர் ஆலிம் அவர்களின் தவப் புதல்வர் மூஸா லெப்பை ஆலிம் அவர்கள். (இவர்கள் கீழக்கரை கிழக்குத் தெரு அப்பா பள்ளியில் அடங்கியுள்ளார்கள்.)


ஷேக் அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் ஆயிஷா உம்மா. யப்பா என்ற தொண்டி அபூபக்கர் களின் திருப் புதல்வர் லெப்பைக்கனி முடித்தார்கள்.) (இவர்களை தொண்டி ஒலியுல்லாஹ் அவர் ஆலிம் அவர்கள் மணமுடித்தார்கள்.


மற்றொரு மகளாகிய ஆமினா உம்மா அவர்களை வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்கள் மணமுடித் தார்கள். இவர்களின் தவப் புதல்வரே மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்.


காதிரியா தரீக்காவின் கலீபாவாக, மலாய் நாட்டில் 'மாண்புறத் திகழ்ந்து, மலாக்கா நகரிலே, ஷேக் அப்துல் காதிர் நாயகம் அவர்கள் காலமான பிறகு கீழக்கரை தைக்கா சாகிப் (வலி) அவர்களின் சீடர்கள் பலர் அந்த நாட்டிற்குச் சென்று ஆத்ம ஞானத் தொடரை காத்து வந்தனர்.


மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் வாழும் காலத்திலும் மலாய் நாட்டிலிருந்த காதிரிய்யாத் தரீக்கா வின் சிஷ்யகோடிகளாகிய முரீதீன்களின் பிரதிநிதிகள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களை நேரில் சந்தித்து "பை அத்" என்னும் விசுவாசப் பிரமாணம் எடுத்துச் சென்றுள்ளனர். அதுமுதல் மலாயா நாட்டில் அரூஸியத்துல் காதிரியா தரீக்கா வேரூன்றி விழுது பல விட்டுள்ள பெரு விருட்சமாகத் திகழ்ந்து வருகிறது.


மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அரூசியத்துல் காதிரிய்யா முரீதீன்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தென் இந்திய முஸ்லிம்களாகிய வர்த்தகர்களும், வர்த்தகத் தொழிலாளர்களுமாவார்கள். அவர்கள் இன்னும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் கலீபாக்களிடம் நீங்காத தொடர்புகொண்டு வருகின்றனர். அவர்கள் மார்க்க, ஆத்மீக சம்பந்தமாகதங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள அவ்வப்போது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர் களின் வழித்தோன்றல்களில் உதித்த நேரடி கலீபாக்களிடம் தொடர்பு கொண்டும் வருகின்றனர்.


தங்களுக்கு ஏற்படும் லௌகீக, பொருளாதாரச் சிக்கல் களிலும் இன்னல்களிலுமிருந்து தெளிவும் மீட்சியும் பெற மப்ரபிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் நேரடித் தோன்றலில்


உதித்த கலீபாமார்களின் நல்லாசி எனும் “து ஆ” பரக்கத்தை வேண்டி மலாய் நாட்டு முரீதீன்கள் தொடர்பும் கொண்டு வருகின்றனர்.


செய்யிது முகம்மது மௌலவி புகாரித் தங்களின் அனுமதியோடு சென்று கடாரம் என்ற மலாய் நாட்டில் காயல்பட்டினம் உமர் (ஒலி) அவர்கள் ஊன்றி வந்த ஞான ' வித்து அரூஸியத்துல் காதிரியா எனும் ஆல விருட்சமாகத் தழைத்து ஆத்மா ஞானத் தெளிவு என்னும் நிழலை வழங்கிக் கொண்டே இருக்கிறது.


தொடரும். 

அடுத்து அவர்களின் 

ஞான மகத்துவம்