السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 18 July 2016

துருக்கிய இராணுவப் புரட்சியும் ஸலவாத்தின் மகிமையும்

துருக்கிய இராணுவப் புரட்சியும் ஸலவாத்தின் மகிமையும்

உண்மையில் நாம் கண்கூடாக கண்ட பல காட்சிகள் நெஞ்சை குளிரவைக்கிறது. ரஜப் தய்யிப் எற்தோகான் அவர்கள் நக்ஷபந்திய்யா தரீகா வின் ஒரு முரீதாக கடந்த சில வருடங்களுக்கு முன், காலம் சென்ற அஷெய்க் நாசிம் அல்ஹக்காணி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பைஅத் பெற்றுக்கொண்டார். நேற்றைய தினம் ஏற்படவிருந்த இராணுவப் புரட்சியை அல்லாஹ் புனித சலவாத்தின் மூலமும், சிக்ருகளின் பரகதைக் கொண்டும் தவிடுபோடியாக்கினான் என்று சொல்வதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆம் துருக்கிய நாட்டு மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், எர்தொகான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி தனது நாட்டு மக்களை புரட்சிக்கு எதிராக களத்தில் இறங்குமாறு அழைப்ப்பு விடுத்த அதேநேரம் நாட்டு மக்களோ வீதிகளில் சலாவத்துக்களும், ஸிக்ருகள் மூலமுமே தமது பலத்தை அலங்கரித்துககொண்டிருந்ததை பார்க்கும் பொது கண்குளிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பள்ளிவாயலில் ஒலிபெருக்கி மூலம் சலவாத்துக்கள் ஒலித்தவண்ணம் இருந்தை அறிய முடிந்தது. வீதிகளில் வட்டவடிவில் அல்லாஹ்வை துதி செய்தவர்களாக இருந்தார்கள்.
ஆம் இவைகளை பார்க்கும் பொது அண்மையில் வாசித்த "முஅஸ்கர்" சஞ்சிகையில் வெளிவந்த (by Fazhan Nawas) அவர்களின் ஒரு கட்டுரை எடுத்துக்காட்டாக அமைந்தது
கி. பி. 1834 செச்நியாவின் சுதந்திரப் போராட்டத்தில் எமது சூபியாக்களின் பங்களிப்பை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இமாம் ஷாமில் அவர்கள் 1797 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி ரஷ்யாவின் செச்னிய பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கிம்ரி’ என்ற கிராமத்தில் பிறந்தார்கள். இவரின் இயற்பெயர் அலி என்பதாகும். இவர்கள் சிறு வயது முதல் ஆன்மீகத்துறையோடு பின்னிப் பிணைந்திருந்தார்கள். தன் வாழ்வை ஆன்மீக கட்டமைப்புக்கு அமைவாகவே முன்னெடுத்தார்கள். சிறு வயது முதல் அல் குர்ஆன், ஹதீஸ், தப்ஸீர் ஆகிய கலைகளை உரிய அறிஞர்களிடத்தில் கற்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இவர்கள் பிறந்த காலத்தில் ரஷ்ய சாம்பிராஜ்ஜியம் தனது ஆள்புலத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இதற்காக மேற்கு ரஷ்யாவிலிருக்கும் முஸ்லிம் ஆள்புலங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்து குறிப்பாக கி.பி. 1800 ஆம் ஆண்டுக்குப்பிறகு உஸ்மானிய கிலாபத்திற்குச் சொந்தமான நிலப்பரப்புக்களை கைப்பற்றும் முயற்சியை ரஷ்யா அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமான காலப்பகுதிகளில் இமாம் சிறுவயதாக இருந்தார்கள். இந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு எதிரான போராட்டங்களை செச்னியாவில் இருந்து மதிப்புக்குரிய தலைவராக கருதப்படும் அஷ்ஷெய்க் அல் கஸ்ஸாலி அல் முஸ்லா அவர்கள் வழிநடத்திச் சென்றார்கள். கி.பி. 1832 ஆம் ஆண்டு ரஷ்ய படையினருடன் இடம் பெற்ற மோதலின் போது ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் உயிரிழந்தார்கள். இதனைத் தொடர்ந்து செச்னியாவின் தளபதியாக இமாம் ஷாமில் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
.
கி.பி. 1834 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிராக செச்னிய படையின் தளபதியாக இமாம் ஷாமில் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இமாம் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் போராட்ட வீரர் மாத்திரமன்றி பல துறைகளிலும் திறமைவாய்ந்த ஆளுமை மிக்கவராக மதிக்கப்பட்டார்கள். குறிப்பாக செச்னிய பிரதேசத்தில் தலைதூக்கியிருந்த கோத்திரப் பிரச்சினைகளுக்கு அவர் வழங்கிய தீர்ப்புக்கள் இன்றும் ரஷ்யாவின் அரசியல் வரலாற்றில் போற்றிப் பேசப்படுகின்றன. யுத்தகாலத்தில் கொரில்லாப் போர் தந்திர முறைமையை முதலில் அறிமுகம் பெருமையும் அவரையே சாறும். இன்று வரை “கெரில்லா போர்” முறையினை அறிமுகம் செய்த முதலாவது பெருமை இமாம் அவர்களையே சாறும் என்று பிரித்தானிய கலைக்களஞ்சியங்கள் சான்று பகிர்கின்றன.
இமாம் ஷாமில் அவர்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களை ஒன்று திரட்டி போராடிய தலைவராக கருதப்படுகிறார்கள். ரஷ்யாவின் ஆள்புல விஸ்தரிப்பு வேகமாக இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலே இமாம் அவர்கள் பிறந்தார்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாகவும் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். கஸகஸ்தான் மக்களின் 03 ஆவது இமாமாகவும் அவர்கள் மதித்து நோக்கப்படுகிறார்கள். மாவீரன் நெப்போலியனின் பெரும் படையினை அழித்த ரஷ்யப் படையினருக்கு கூட இமாம் ஷாமில் அவர்களின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நெப்போலியனின் படைகளை இரண்டு தடவைகள் அனுப்பியும் இமாம் அவர்களின் படையை கூட நெருங்க முடியவில்லை. “நெப்போலியன் கரியாக இருந்தால் இமாம் அவர்கள் நெருப்பாக மாறிவிடுகிறார்கள்” என்று உஸ்மானிய வரலாற்றுக் குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
.
“இமாம் அவர்களுடன் போரிடச் சென்ற ரஷ்யப்படையில் 02 பேர் (தளபதியும் ஒரு போராட்ட வீரரும்) மாத்திரமே உயிருடன் திரும்புவார்கள்” என்று துருக்கியின் வரலாற்று ஆசிரியர் யுடடிந லுயளநச என்பவர் கூறுகிறார்கள். ஒரு இறைநேசராகவும் இமாம் ஷாமில் அவர்கள் கருதப்படுகிறார்கள். தனது படையினரை ஆத்மீக ரீதியாகவும் வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் 'ஸ{ஹைப் அல் எபந்தி அல் பகீனி" என்பவர் “தபாகத்” என்ற யுத்தத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். “இமாம் ஷாமில் அவர்களின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தபோது ஷரீஆ புறக்க்கணிக்கப்பட்ட விடயமாக மாற்றப்பட்டுவிட்டது என்கிறார்கள். நக்ஷபந்தியா அமைப்பின் ஆசிரியராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். “கிம்ரி” என்ற கிராமத்தில் இருந்த சகலரும் இமாம் ஷாமில் அல்லது அஷ்ஷெய்க் அல்-காஸி ஆகியோரின் மாணவர்களாக இருந்தார்கள்.
.
25 ஆண்டுகள் போராட்டத்தில் இமாம் ஷாமில் அவர்கள் ஈடுபட்டு இருந்தாலும் கல்வித்துறைக்கான முக்கியத்துவத்தை அவர்கள் குறைக்கவில்லை. கல்விக்காக பைத்துல்மால் நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மத்ரஸா அமைக்கப்பட்டது. கல்வியைத் தேடிச் செல்பவர்களுக்கு போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. யுத்தங்கள் தன்நிகர் இல்லாத தளபதியாகவும் அவர்கள் விளங்கினார்கள். ரஷ்யாவின் அவுல்கோ யுத்தத்தின் போது இமாம் ஷாமிலுடன் ரஷ்யர்கள் யுத்தம் செய்தார்கள். இதன்போது இமாம் அவர்களின் 300 மாணவர்கள் மாத்திரமே உயிரிழந்தார்கள் ஆனால் நவீன தொழிநுட்பங்களைக் கொண்டிருந்த ரஷ்யப் படையில் நாளாந்தம் 5,000 படைவீரர்கள் உயிரிழந்து கொண்டிருந்தார்கள் என்று ரஷ்யாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இமாம் ஷாமில் அவர்கள் கி.பி. 1868 ஆம் ஆண்டு ரஷ்யாவின் 02 ஆவது அலெக்ச்சாண்டர் மன்னருடன் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்தார். ரஷ்யாவின் செய்ன் பீடர்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மண்டபத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கி.பி. 1868 ஆம் ஆண்டு உக்ரைன் தலைநகரான “கியூ” நகருக்குச் செல்லும் வாய்ப்பு இமாம் ஷாமில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இமாம் ஷாமில் சென்ற ஒவ்வொரு இடத்திற்கும் ரஷ்ய அதிகாரிகள் அவர்களுக்கு உயர்மட்டத்திலான மரியாதையை வழங்கினார்கள். இமாம் ஷாமில் அவர்கள் சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்தாலும் கூட அவருடைய பண்புகள், இறையச்சம் பேணுதல் போன்ற நற்பண்புகள் ரஷ்யாவின் கிறிஸ்தவ அரச சபையை என்றும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
.
கி.பி. 1869 ஆம் ஆண்டு இமாம் அவர்கள் ரஷ்யாவின் அரச மரியாதையோடு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகருக்குச் சென்ற போது இமாம் அவர்களுக்கு சுல்தான் அப்துல் அஸீஸ் அவர்கள் அரச மரியாதையளித்தார்கள். மக்கா நகருக்குச் சென்ற போது அங்கு பிரான்ஸி;யரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அல்ஜீரியாவில் போராட்டங்களை மேற்கொண்டு வரும் அல்ஜீரியா சுதந்திரப் போராட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான அமீர் அப்துல் காதர் அல் ஜெஸாயரி அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது. கி.பி. 1871 ஆம் ஆண்டு இமாம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாயலுக்கு சென்ற சம்பவம் உஸ்மானிய வரலாற்றில் முக்கிய ஆவணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிகழ்ந்த சம்பவத்தை துருக்கியின் வரலாற்று ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
இந்த சம்பவத்தை அஷ்ஷெய்க் பதுர்தீன் அபெந்தி என்ற வரலாற்று ஆசிரியர் பதிவு செய்திருப்பதாக நுnஉலஉடழிhநனயை டீசவையnயை என்ற கலைக்களஞ்சியம் கூறுகிறது. இமாம் ஷாமில் அவர்களின் வருகையை அறிந்து கொண்ட மதீனாவாசிகள் மஸ்ஜிதுன் நபவிக்கு விரைந்தார்கள். அவர்களைச் சந்திக்கும் முன்னர் கண்ணீர் சிந்திய நிலையில் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாயலுக்கு நுழைந்தார்கள். ஆனால் மதீனா வாசிகளோ இமாம் அவர்களை தாங்கள் முதலில் சந்திக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் இமாமவர்கள் மதீனாவாசிகளுக்கு முன்னர் தாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாயலுக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். அதற்கமைய அவர்கள் முதலில் நுழையும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.
ரஷ்யாவுக்கு எதிரான செச்னியாவின் போராட்டம் உலக வரலாற்றில் கௌரவமான முறையிவ் இடம்பெற்ற போராட்டமாகும் என்று நவீன அரசியல் வரலாறுகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக நீண்டகாலம் போராடிய ஒரு போராட்ட வீரராக செச்னியாவின் முன்னால் ஜனாதிபதி அஸ்லான் நஷ்வதொப் அவர்கள் கருதப்படுகிறார்கள். செச்னியாவின் 03 ஆவது ஜனாதிபதியாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். 1997-2005 வரை அவர்கள் செச்னியாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார்கள். ரஷ்யாவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்திருந்திருந்த கருத்துக்கள் இன்றுவரை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன. செச்னியாவைச் சேர்ந்த போராட்ட வீரர்களின் எண்ணிக்கை 4,000 ஐ விட குறைந்திருந்தது, தலைநகர் குரோஸினியில் 837 முஸ்லிம் படைவீரர்கள் மாத்திரமேயிருந்தார்கள். ஆனால் இந்த 837 முஜாஹதீன்கள் மாத்திரம் 115,000 இற்கும் அதிகமான ரஷ்யப்படையினரைத் தோற்கடித்தனர். “இறைவனின் உதவியால் ஆயிரக்கணக்கானோரை எமது நூற்றுக்கணக்கானோர் தோற்கடித்தார்கள்” என்று செச்னியாவின் 03 ஆவது ஜனாதிபதி முஜாஹித் அஸ்வலான் நஷ்வதொப் அவர்கள் கூறுகிறார்கள். “சிறு படையினர் ஆயிரக்கணக்கான ரஷ்யர்களை எவ்வாறு தோற்கடித்தார்கள்?” என உங்களுக்குத் தெரியுமா என்று ரஷ்ய ஊடகமொன்று அவரிடம் கேள்வியெழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர்கள் “தஜ்கிஸ்தான், கஸகஸ்தான், உஸ்வகிஸ்தான், ததிரிகிஸ்தான் உட்பட மத்திய ஆசிய நாடுகளுக்கு தஸவ்வுப் மூலம் இஸ்லாம் பரவியது. கமியூனியஸ்தின் ஆட்சி விருட்சமாக வளர்ந்த காலத்தில் இஸ்லாத்தை நாத்திக சித்தாந்தங்களிலிருந்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்கிய பெருமையும் தஸவ்வுபையே சாரும். திக்ர், ஸலவாத் இதற்கு உடந்தையாக அமைந்திருந்தன. செச்னியர்களாகிய நாம் காதிரிய்யா, நக்ஷபந்தியா அமைப்புக்களைப் பின்பற்றி இருந்தோம். ரஷ்யாவுக்கெதிரான யுத்தத்திற்கு செல்ல முன்னர் நாங்கள் வட்டவடிவில் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திப்போம். பின்னர் அல்குர்ஆனை ஓதுவோம். ஸலவாத் உட்பட பல்வேறு அவ்ராதுகளும் எமக்குக் கிடைத்திருந்தன. இதனைத் தொடர்ந்து நாங்கள் எங்களுடைய போராட்டங்களை ஆரம்பிப்போம். இதன் மூலம் அல்லாஹ{த் தஆலா ரஷ்யர்களுக்கெதிரான யுத்தத்தில் வெற்றிகளைத் தந்தான்” என்று செச்னியாவின் முன்னால் ஜனாதிபதியாகிய அஸ்லான் நஷ்வதொப் அவர்கள் கூறுகிறார்கள்.
ரஷ்யர்களுக்கு எதிராக செச்னியர்களின் போராட்ட வரலாறு உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்ற முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது, ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இடம்பெற்றவாறு சர்வதேச போர் முறைகளை மதித்து இந்த யுத்தம் இடம் பெற்றிருக்கின்றமை சிறப்பம்சமாகும் என்று நவீன் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். (நன்றி பஸ்ஹான் நானா ....)
எனவே நாம் சாரம்சமாக பெற்றுக்கொள்வது .. நாம் என்னதான் பெரும்கொண்ட பல சாலியாக இருந்தாலும் எமது பலத்தை நிர்ணயிப்பவன் இறைவன் மாத்திரம் தான். அந்த இறைவனின் உதவி நமக்கு தேவையா..? அவனை அணுக வேண்டிய முறையில் அணுகினால் அவன் நிச்சயம் உதவி செய்வான். அணுகும் முறையை நாம் உதறித் தள்ளிவிட்டு எவ்வலவு தான் அல்லாஹு அக்பர் என்று கதறினாலும் அவன் திரும்பி பார்க்க மாட்டான் . அந்த வகையில் தான் நேற்று துருக்கியில் நடைபெற்ற இராணுவப் புரட்சிக்கு அல்லாஹ் வழங்கிய உதவியும், துருக்கி நாட்டு மக்கள் அவர்கள் மேற்சொன்ன இது போன்ற வரலாறுகளை நன்றாக படித்து இருந்தார்கள் அதனால் தான் அவர்கள் சலவாத், மற்றும் ஸிக்று போன்ற ஆயுதங்களை கையில் எடுத்து சூபியாக்களின் வழிமுறைகளை கேடையமாக ஏற்படுத்தி இறைவனின் புறத்தில் இருந்து உதவியை இலகுவாக பெற்றுக்கொண்டார்கள்.
எனவே யா அல்லாஹ் எங்களையும் எங்களை சார்ந்தவர்களையும் இதுபோன்ற சூபியாக்களின் பாதையில் இறுதி வரை வாழ்ந்து மரணிக்க அருள்புரிவானாக..!!


வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும்

வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும் .

வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும் 

கீற்று வெளியீட்டகத்தின் வெளியீட்டில் இன்ஷா அல்லாஹ் அக்டோபரில் 2016 வெளிவரும் பேராசிரியர் கலாநிதி எச்.முஜீப் ரஹ்மான் Phd. அவர்கள் எழுதிய நான் ஏன் வகாபி அல்ல? நூலின் முன் வெளியீட்டுத் திட்டம்.
.
1500 ஆண்டுகால தொன்மையினைக் கொண்ட தன் வரலாற்றில் இஸ்லாம் மார்க்கம் சந்தித்தப் பெருந்துயரம் வஹாபிஸம். 
.
ஐரோப்பியக் காலனியம் கீழை நாடுகளின் நிலங்களை அபகரிக்கவும், வளங்களைச் சுரண்டவும் சதிவலைகளை விரித்துப் போட்டது, எண்ணெய் வளமிக்க அரபுலகை அபகரிக்க விரிக்கப்பட்ட காலனியச் சதிவலையின் பாதுகாப்பு அரணாக இருந்திட இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டது வகாபியம்.
.
முன்னூறுக்கும் மேற்பட்ட சமூகக் குழுக்களின் மத்தியில் அறிமுகமான இஸ்லாம், அக்குழுக்களின் நம்பிக்கைகளை, கதையாடல்களை ,சடங்குகளை , புனிதங்களை , விழுமியங்களை அரவணைத்தும் , உள்ளிழுத்தும், தன்வயப்படுத்தியும் அக்குழுக்களை வெற்றிகண்டது.
.
ஆனால் வகாபியம், இஸ்லாம் முன் வைக்கும் இந்த முறையியலை மறுதலிக்கிறது. நிராகரித்தல், விலக்கிவைத்தல், அழித்தொழித்தல் என்னும் நடவடிக்கைகளின் வழியாக எதிர் இஸ்லாம் ஒன்றைக் கட்டமைக்கிறது.
.
எண்பதுகளுக்குப் பிறகான முஸ்லிம்களின் நாடுகள், முஸ்லிம்கள் இவர்களின் நெருக்கடிகளின் பின்னால் வகாபியம் சார் கருத்தியலே இருக்கிறது. பன்மைச் சமூக அமைப்பில் பொது நீரோட்டாத்தில் இருந்து முஸ்லிம்களை விலகிச் செல்ல வைத்ததிலும் இஸ்லாமிய சமயப் பரப்பிற்குள் தன் அல்லாத மற்றவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தி தூரத்தில் நிறுத்தியதிலும் வகாபியம் காத்திரமான வகிபாகம் எடுத்திருக்கிறது.
.
தன் சொந்தச் சகோதரரின் மாமிசத்தைப் புசித்து துருக்கியில், யேமனில், லிபியாவில், எகிப்தில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், சிரியாவில், ஈராக்கில் தன் சொந்தச் சகோதர்களின் மாமிசம் புசித்து தன் கொடும்பசி ஆற்றிக்கொள்கிறது வகாபிசம்
.
இஸ்லாத்தின் உள்ளிருந்து கொண்டே சன்னம் சன்னமாக இஸ்லாம் முன்மொழிந்த மானுட மதிப்பீடுகளை கொன்று குவிக்கிறது. அழிவின் விளிம்பில் இருந்து முஸ்லிம் நாடுகளும், துயரத்தின் பதுங்கு குழிகளிலிருந்து முஸ்லிம்களும் மீண்டு வரவேண்டுமென்றால் வகாபிய கருத்தியலுடன் தீவிர எதிர் உரையாடல் ஒன்றை அனைத்து நிலைகளிலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
.
அந்த வகையில் பேராசிரியர் கலாநிதி முஜீப் ரஹ்மான் அவர்கள் எழுதி கீற்று வெளியீட்டில் வெளிவர இருக்கும் “ நான் ஏன் வகாபி அல்ல? “ என்னும் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்லாமிய சமய, சடங்கியல், பண்பாட்டுத் தளத்தில் நின்றுக்கொண்டு வகாபியத்துடன் சமரசமற்ற உரையாடலை இந்நூல் நிகழ்த்துகின்றது.
.
இந்நூலின் முன் வெளியீட்டுத் திட்டத்தில் நீங்களும் இணையுங்கள். இஸ்லாம் என்பது வெறுப்பில் இருந்தல்ல அன்பில் இருந்து உருவானது என்பதை மறுபடியும் உறுதிப்படுத்துங்கள்.
.
தொடர்புக்கு: பேராசிரியர் எச்.ஹாமீம் முஸ்தபா, கீற்று வெளியீட்டகம்.
பேச :9791954174
மின்னஞ்சல்: thuckalayhameem@gmail.com
முன்பதிவுக்கட்டணம் செலுத்த: H.Hameem musthafa, IOB, Azakiyamandapam branch account number :27231000000427 , IFSC Code : IOBA 0002723
.
நன்றி: முஜீப் ரஹ்மான் 

Sunday, 17 July 2016

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

அல்ஹம்துலில்லாஹ்!
வல்ல நாயன் அல்லாஹ்வின் 
திருவருளாலும் 
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் திருப்பொருத்தம் கொண்டும் 
நாதாக்கள், வலிமார்கள் 
துஆ பரக்கத்தாலும்
ஏறாவூரில்
சுன்னத்து வல் ஜமாஅத்தின்
எழுச்சிக்காக
எழுகிறது
மற்றுமொரு தரீக்கத்துக் கோட்டை!
ஏறாவூரின் தாமரைக்கேணி
தக்வாப் பள்ளிக்கு
அருகாமையில்
அமைந்துள்ள பிரம்மாண்டமான காணியில்,
தொழில்நுட்பக்கல்வியுடன் கூடிய சுன்னத்து வல் ஜமாஅத் உலமாக்களை உருவாக்கும் வகையிலான,
" அல் மத்ரசத்துல் நிழாமிய்யா'
அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை 8.30 மணியளவில்
சாதாத்துமார்களான
சங்கைமிகு அஸ்ஸெய்யித் சரீப் அலி அன்வர் மவ்லானா ஹஸனி வல் ஹுஸைனி அவர்களாலும்
மரியாதைக்குரிய அஸ்ஸெய்யித் அஹ்மது மவ்லானா அவர்களாலும் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த சங்கைக்குரிய அஷ் ஷைஹு மஹ்வி ஷாஹ் அவர்களின் மருமகன் முஹம்மது உமைர் மஹ்வி அவர்களாலும்
ஆரம்பித்து வைக்கப்பட்டது!
அல்லாஹு அக்பர்!

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ஏறாவூரில் அரபுக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்



Thursday, 14 July 2016

ஒட்டுமொத்த பயங்கரவாதிகளும் வஹாபியச் சிந்தனையில் இருக்கிறார்கள்

 ஒட்டுமொத்த பயங்கரவாதிகளும் வஹாபியச் சிந்தனையில் இருக்கிறார்கள்

(ஒருகாலம் ) ஆரம்பத்தில் ISIS இற்கு ஆதரவளித்த, ISIS இன் LOGO வைக்கூட தமது profile Picture ஆக மாற்றிக்கொண்ட அதே (ஜாஹில்) அறிவிளிகள் தான் இன்று சாக்கிர் நாயக் இற்கு ஆதாரவு தெரிவிக்கிறார்கள் .... 

.
ஏன் என்று கேட்டால் அவர் இஸ்லாத்திற்கு மக்களை வரவளைக்கிராராம்..!! ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள் 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை அழிக்க யஹூதிகளின் முதலாவது திட்டமான அவர்களால் மிகவும் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 4 அல்லது 5 பேர்கொண்ட குழுவில் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றவர் தான் ஹம்பர் (Mr. Hempher, The British Spy to the Middle East) இவன் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் மூலம் அதிகமான மக்களை இஸ்லாத்திற்கு வரவழைத்தான். இன்று சாக்கிர் நாயிக் செய்வது போன்று தான். அவர்களுக்கு வஹாபிய சிந்தனைகளை அவர்களின் மனதில் சித்தரித்து இன்று உலக முஸ்லிம்களை மாத்திரமின்றி முழு ஒட்டு மொத்த உலகையுமே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அவர்கள் அன்று செய்த திட்டம் இன்று நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

.
இன்று ஒட்டுமொத்த பயங்கரவாதிகளும் வஹாபியச் சிந்தனையில் (வாஹ்ஹாபிய கொள்கைக்கோட்பாட்டில்) இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தவிடயமே ...!!

.
அந்தக் வாஹாபியக் கொள்கையின் அடிப்படையில் இன்று எத்தனை பெயர்களில் "தவ்ஹீத்" என்ற அடையாள பெயரோடு வந்தாலும் அவர்களின் அடிப்படை அன்று யஹூதிகளால் திட்டமிட்டு வகுக்கப்பட்ட இஸ்லாம் என்னும் மாய மந்திரம் பூசப்பட்ட பக்கா வழிகேடு தான் என்பதை இன்று வரலாறுகள் மிகவும் துல்லியமாக சான்று பகர்ந்துகொண்டிருக்கிறது...

.
இதை அறியாத அப்பாவி பாமரர்கள் வழிகேட்டின் பால் சென்றுகொண்டு இருக்கிறார்கள் காரணம் இன்றைய காலம் "ஆகிருஸ் சமான்" கடைசிகலாம் (இறுதி கால கட்டத்தில் பொய்யர்களும் எமாற்றுக்கார்களும் வருவார்கள் அவர்கள் குர்ஆனில் இருந்து ஹதீஸில் இருந்தும் தான் பேசுவார்கள்) என்று நமது கண்மணி நாயகம் அவர்கள் ஹதீஸின் மூலம் மிகத்துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டு செல்ல மறக்கவில்லை.

.
இன்று வழிகேடுகள் சரியானது போன்று காட்டப்பட்டுக்கொண்டு இருப்பதால் தான். மக்களும் வழிகெட்டுப் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மாறாக வழிகேடு பிழையாக காட்டப்பட்டால் யார் தான் வழிகெட்டுப்போக துணிவார்கள் ...?? என்பதையும் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய விடயம் ...

.
இஸ்லாம் எவ்வாறு ஆரம்பித்ததோ (குறைந்த மக்களைக்கொண்டு) அதே போன்று தான் இஸ்லாம் (குறைந்த மக்களைக்கொண்டு) உலக அழிவோடு நின்று விடும் மேலும் இறுதிநாள் நெருங்கும் பொது உள்ளங்கையில் நெருப்பை வைத்து இருப்பது போன்று தான் அவர்களின் ஈமானை பாதுகாப்பது என்றும் இறுதிநாள் நெருங்கும் பொது வழிகேட்டின் பால் தான் மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள் என்று மிகவும் தெளிவாக சொல்கிறது. இன்று ஹக்கான அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இல் இருந்து மக்கள் வழிகேட்டின் பால் சென்றுகொண்டு இருக்கிறார்கள் (இதுவும் மறுமை நாளின் அடையாளம் தான் ) மாறாக வழிகேட்டில் இருந்து யாரும் அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இற்கு வருவதில்லை.. இதுவே மிகப் பெரும் ஆதாரம் எனலாம் .. எந்த அளவு மக்கள் அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் இல் இருந்து வஹாபிக் கொள்கைக்கு செல்கிறார்களோ அந்த அளவு அஹ்ளுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் உண்மைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதை மடையர்கள் சிந்திப்பார்களா ....????

.
குறிப்பு :- சாக்கிர் நாய்க் இற்றைக்கு எத்தனை பேரை இஸ்லாத்திற்கு அழைத்து இருக்கிறார் அவர் மூலம் இஸ்லாத்தில் மக்கள் இணைந்து இருக்கிறார். ஆனால் அதே போன்று அவரால் இஸ்லாத்திற்கு வரவளைக்கப்பட்ட நிறைய மக்கள் மீண்டும் திரும்பி விடுகிறார்கள் இதற்கான காரணம் அவர்கள் மன நிம்மதி, மன அமைதி போன்றவற்றை எதிர்பார்த்து இஸ்லாத்தினுள் இணைகிறார்கள் ஆனால் வஹாபிச் சிந்தனையில் எப்படி மன அமைதி கிடைக்கும் ...?? ஸிக்று, சலவாத்து, தஸ்பீஹ் போன்றவற்றில் அல்லவா மன அமைதி இருக்கிறது ...??? இவைகளை அடையவேண்டும் என்றால் அவன் அஹ்லுச்சுன்னாஹ் வல் ஜமாஅத் (தரீகாக்கள்) ஐ பின்பற்றவேண்டும் அல்லவா ....??? என்ற இந்த விடயத்தை Dr. தீன் முஹம்மத் அல் அஸ்ஹரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள் ...

.
எனவே தான் நாம் சாக்கிர் நாய்க் அவர்களை விமர்சிக்கிறோம் ஆனால் சாக்கிர் நாய்க் அவர்களுடைய உச்தாஸ் (ஆசிரியர்) Dr. அஹ்மத் தீதாத் சாக்கிர் நாயிக்கை விட பெரும் அறிவாளியும் அறிஞ்சரும் ஆவார் .. தனது ஆசானின் கொள்கைக் கோட்பாட்டில் சாக்கிர் நாய்க் இல்லை என்பதும் தனது குருவை மிஞ்சிய சிசியனாக ஆகிவிட்டார் என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.. அவரிடம் ஒரு கேள்வியையும் கேளுங்கள் உங்களுடைய ஆசானின் உச்தாதின் கொள்கை கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா ...?? என்று கேளுங்கள் பதில் தரமாட்டார் ஏன் ...?? அவர் இலங்கைக்கு வருகை தந்தபோது வசீலா கூடாது குர்ஆனில் 25 இடங்களில் இருக்கிறது என்று பச்சைப் பொய்யை கூறிவிட்டு அல்லாமா இஹ்சான் இக்பால் காதிரி அவர்கள் கேட்ட கேள்விக்கு இன்றுவரை பதில் தராமல் பல்டி அடித்துக்கொண்டு இருக்கும் உலகமாக அறி(விழி)ஞ்சர் இவர் என்பது அப்பட்டமான உண்மை ....

.
இன்று நாம் இலங்கையில், இந்தியாவில் இன்னும் பல நாடுகளில் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் எமது முன்னோர்களான ஷெய்குமார்கள் என்பது உலகறிந்த உண்மை, அவர்கள் பல கோடி மக்களை இஸ்லாத்தில் இணைத்தார்கள் அஜ்மீரில் அடங்கி இருக்கும் ராஜா, ஹாஜா முஈனுதீன் ஜிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரே தடவையில் பல லட்சம் மக்களை இஸ்லாத்தின் பால் வரவளைத்தவர் இவர்களை தூற்றுபவர்கள் தான் இன்று சாக்கிர் நாய்க் என்ற ஒரு ரோபோ வை புகழ்பவர்கள் ....

.
எனவே வல்லவன் அல்லாஹ் நம்மை இதுபோன்ற பல கோணங்களில் வழிகேடுகள் வரும்போதும், எமக்கு சுட்டிக்காட்டியது போன்று இனிமேலும் எமது ஈமானை சோதிக்க வரும் பல வழிகேடுகள், அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவைகளை விட்டும் எம்மையும், எம்மைச் சார்ந்தவர்களையும் ஈமானை பாதுகாப்பாயாக ..!! ஆமீன் ..!!

Monday, 11 July 2016

இஸ்லாத்தின் வளா்ச்சியின் ஸுfபியாக்களின் பங்கு

இஸ்லாத்தின் வளா்ச்சியின் ஸுfபியாக்களின் பங்கு

இஸ்லாத்தின் வளா்ச்சியின் ஸுfபியாக்களின் பங்கு என்ற தலைப்பில் ஆய்வுகளை நடத்தும் போது தஃவா துறைக்கு வழங்கிய பங்களிப்புக்கள் இதுவரை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
.
1. இமாம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 20 இலட்சம் ஆகும். 
.
2. இமாம் காஜா மொஹினுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாத்திரம் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 90 இலட்சம் ஆகும்.
.
3. இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் எகிப்தில் இஸ்லாத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 8 இலட்சம் ஆகும்.
.
4.இமாம் ஹபீப் மஷ்ஹூா் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் 1 இலட்சம் போ் ஆபிரிக்க நாடுகளில் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள்.
.
5. இமாம் நாஸிம் அல் ஹக்கானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் ஐரோப்பா, இந்தோனேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் 1 இலட்சத்திற்கும் அதிகமானோர் இஸ்லாத்தை தழுவி உள்ளார்கள்.
.
நன்றி: M.F.
www.mail of islam

Sunday, 3 July 2016

ஜும்ஆவும் சும்மாவும்! முஸ்லிம்களின் கவலை!

ஜும்ஆவும் சும்மாவும்! முஸ்லிம்களின் கவலை!

அன்று ஞானிகளும், ஸாலிஹீன்களும் குத்பா மிம்பர்களில் ஏறியதால் ஜும்மா ஜும்மாவாக இருந்தது. 
ஆனால் இன்று சக்கைகளும், சருகுகளும், சாணிகளும் மிம்பரில் ஏறியதால் ஜும்மா சும்மா ஆகிவிட்டது.
.
அன்று அரை ஈமானோடு ஜும்மாவுக்கு போனவர்கள் உபதேசங்களை கேட்டு விட்டு முழு ஈமானோடு திரும்பி வந்தார்கள்.
.
ஆனால் இன்று அரை ஈமானோடு போனவர்கள் இருந்ததையும் பறிகொடுத்து விட்டு வெறுமனே திரும்பி வருகிறார்கள்.
.
வழிகேடர்கள், சக்கைகள், சருகுகள், சாணிகள், பிரிவினைவாதிகள், குழப்பவாதிகள் போன்றவர்கள் தௌஹீத்வாதி என்ற பெயரில் வந்தாலும் அல்லது ஷாபி என்ற பெயரில் வந்தாலும் அல்லாஹ் எமது உள்ளங்களில் போலிகளை அறியும் உணர்வை தந்து எமது ஈமானை பாதுகாப்பானாக! ஆமீன்.
.
ஏனெனில், இன்று முக்கா வஹாபிகளும் ஷாபி, ஹனபி என்ற பெயரில் மிம்பரில் ஏறி வஹாபிஸ கொள்கைகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
.
அதுமட்டுமல்ல சிலர் ஸுன்னத் ஜமாஅத் மதரஸாக்களில் ஓதிவிட்டு, தங்களின் பெயருக்கு பின்னாடி ஸுபி என்று போட்டுக்கொண்டு ஸுபியாக்கள் போதித்த இறைஞானத்தை, இறைஞான கருத்துக்களை காலால் உதைத்து தள்ளி விட்டு, இறைஞானத்தை போதிக்கும் அஹ்லுல் பைத்துக்கள், ஷெய்க்குமார்களை காபிர், முர்த்தத் என்று மிம்பரில் ஏறி பத்வா கொடுத்துக்கொண்டு திரிகிறார்கள் ஒரு சில கயவர்கள். இவர்களிடமும் மிக விழிப்பாக இருந்துகொள்ளுங்கள்.
.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
.
முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்திலுள்ள நல்லவர்களும் மரணித்து விடுவார்கள். இப்படியே படிப்படியாக “ஸாலிஹீன்“ நல்லவர்கள் சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகள் போன்ற அல்லது பேரீத்தம் பழச் சக்கைகள் போன்ற குப்பைகள்தான் எஞ்சியிருப்பர். ஆனால் அல்லாஹ்“ அவர்களை கணக்கெடுக்கவே மாட்டான்.
.
ஸஹிஹுல் புகாரி.


www.Mailofislam