السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 6 December 2018

பள்ளிவாசல் கட்டுமாணம்

பள்ளிவாசல் கட்டுமாணம்

விஷேட ஜூம்ஆ பயானும் -பள்ளிவாசல் கட்டுமாணம் மற்றும் மையவாடி உள்ளக வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வும்

ஏறாவூரில் பாரிய இடப்பற்றாக்குறையுடன் அடிப்படை வசதிகள் குன்றிய நிலையில் இயங்கி வரும் பள்ளிவாசல்களில் ஒன்றாக ஏறாவூர் வாளியப்பா தைக்கா ஜும்ஆ பள்ளிவசல் இருக்கின்றது, மழை காலம் வந்து விட்டால் பல்வேறு அளெகரியங்களை தொழுகைக்காக செல்லும் ஜமாஅத்தார்கள் எதிர்கொண்டு வந்தார்கள்..
இந்நிலையில் இந்த பள்ளிவாசலை எப்படியாவது நிர்மாணித்து விட வேண்டும் என்பதற்காக விஷேட நம்பிக்கையாளர் சபை தலைவர் ஜே.எம்.முஸ்தபா , மற்றும் செயலாளர் நியாஸ் ஆகியோர் அடங்கலான நிருவாக சபை உறுப்பினர்களும் ஜமாஅத்தார்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்,
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நேரத்தின் போது அரசியல்வாதிகளது தேர்தல் ஏமாற்று ஜாலத்திற்கும் இந்த பள்ளிவாசலும் தப்பவில்லை- வெறும் வாக்குறுதியாகவே அது காற்றில் பறந்து போனது,
சளைத்து விடாத நிர்வாகத்தினர் சமூக வலைத்தளங்கள் ஊடாக உதவி கோரி தமது உதவி கோரும் முயற்சியை தொடர்ந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
முயற்சிக்கான முதற்கட்ட கதவு பல்வேறு தனவந்தர்களின் பங்களிப்புடன் தற்போது திறந்துள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ் ஷேய்க் #யூசுப்#ஹனிபா (முப்தி) அவர்களது ஜும்ஆவை தொடர்ந்து மிகவும் அவசியமான கட்டட தேவை உள்ள இடமாக உணரப்பட்டு முயற்சிக்கப்பட்டு வந்த ஏறாவூர் வாளியப்பா தைக்கா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வரலாற்று நிகழ்வும் நடைபெற உள்ளதுடன் அணனை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் #செய்யித்#அலி #ஸாஹிர் #மௌலானா அவர்களினால் வாளியப்பா தைக்கா பள்ளிவாசல் மையவாடிக்கு உள்ள வீதி அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகளும் இன்று அலி சாஹிர் மௌலானா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
குறித்த நிகழ்விலும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது


இது உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று


இது உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று.

பள்ளிவாயில்" என்றால் அது இரு வகைப்படும்.
ஒன்று: மஸ்ஜிதுத் தக்வா. இது அடியார்களை அல்லாஹ்வுடன் இணைத்து வைப்பதற்கான பாலமாக நிராமாணிக்கப்படும் பள்ளியாகும்.
இரண்டு: மஸ்ஜிதுத் ழிரார். இது அடியார்களை அல்லாஹ்வை விட்டும் பிரிப்பதற்காக நிர்மாணிக்கப்படும் பள்ளியாகும்.
இவ்விரு பள்ளிவாயில்களில் முதலாவது பள்ளிவாயில் அல்லாஹ்வின் தூதர்களினாலும் அவனின் அதிகாரிகளான அவ்லியாக்களினாலும் அமைக்கப்படும் பள்ளியாகும். முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்கான பள்ளியாகும்.
நபிமார்கள் மற்றும் வலிமார்கள் அல்லாஹ்வுடன் அடியார்களை இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் ஈருலகிலும் பள்ளியோடு தமது இருப்பை அமைத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது பள்ளிவாயில் முனாபிகீன்களினால் உருவாக்கப்பட்ட பள்ளியாகும். முஸ்லிம்களைப் பிரிப்பதற்கான பள்ளியாகும். இப்பள்ளிக்கும் நபிமார் மற்றும் வலிமார்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அதனால் நபிமார் மற்றும் வலிமார்கள் ஈருலகிலும் இவ்விடத்தை விட்டும் தூரமானவர்கள்.
இதில் முதலாவது பள்ளி பாதகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் அதேவேளை இரண்டாவது பள்ளி தகர்க்கப்படவும் வேண்டும். ஆனாலும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய பள்ளிகள் பாழடைந்தும் உடைக்கப்பட வேண்டிய தளங்கள் உயரமாகவும் கட்டப்படுகிறது.
இது உலக அழிவின் அடையாளம்.

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

இலங்கையின் பிரபல சமூக சேவை அமைப்பாக திகழும் ஸம் ஸம் பௌன்டேசன் உடன் இணைந்து தாருல்ஹூதா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் 2000 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ஸம் ஸம் பென்டேசன் நிறுவனத்தினால் வறிய மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு School With a Smile எனும் செயற்திட்டம் நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது,
அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை மையப்படுத்தி ஸம்ஸம் பென்டேசன் நிறுவனமும்,தாருல் ஹூதா நலன்புரி அமைப்பும் இணைந்து 2000 சிங்கள , தமிழ் , முஸ்லிம் மாணவர்களுக்கு பெறமதி மிக்க கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளிக்க உள்ளன.
ஒவ்வொரு மாணவருக்கும் பாடசாலை செல்வதற்கான அப்பியாச புத்தகங்கள், பாடசாலை பை, மற்றும் பாதணியினை கொள்வனவு செய்வதற்காக 1000ரூபாய் பெறுமதியான பண வவுச்சர் அடங்கலாக 3000ரூபாய் பெறுமதியில் குறித்த கற்றல் உபகரணங்கள் பகிரப்பட உள்ளன.
மேற்படி நிகழ்வினை ஏறாவூர் பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நாளைய உத்தியோகபூர்வ நிகழ்விற்கு ஸம் ஸம் பௌன்டேசன் தவிசாளரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதி தலைவருமான அஷ்-ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா அவர்கள் கலந்து கொள்வதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்...
டிசம்பர் மாதத்தை கடந்து செல்லும் போதே வறிய நிலையில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்கான செலவீனங்களை சமாளிக்கும் பொருட்டு மடியில் நெருப்பை சுமந்த மனோ நிலையில் மிகவும் அவஸ்த்தைக்குள்ளாகுவது அனைவரும் அறிந்ததே- இதை உணர்ந்தவர்களாக மிகவும் கனதியான பணியினை இன மத பேதங்களுக்கு அப்பால் முன்னெடுத்து வரும் ஏறாவூர் தாருல் ஹுதா நலன்புரி அமைப்பு மற்றும் ஸம் ஸம் நிறுவன பிரதிநிதிகளை நன்றியுடன் வாழ்த்துவதோடு இவ்வாறான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான உடல் உள ஆரோக்கியத்தையும் , அபிவிருத்தியையும் இதன் ஏற்பாட்டாளர்களுக்கு இறைவன் வழங்கிட செய்வானாக...
வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்புடன் வினைத்திறன் மிக்க பணி தொடர....



ஏறாவூர் கங்கை முதலி வைத்தியர் பரம்பரை

ஏறாவூர் கங்கை முதலி வைத்தியர் பரம்பரை
கண்டியைக் குண்டசாலை செல்லம் குமாரயா (Playboy king) என்ற பிரபல்யமான புனைப் பெயரைக் கொண்ட சிங்கள அரசர் அவரது 17 ஆவது வயதில் இருந்து ஆட்சி செய்துவந்தார். இவரது இயற்பெயர் வீர பராக்கிரம நரேந்திர சிங்ஹ ஆகும்.1707 ஆம் ஆண்டிலிருந்து 1739 ஆம் ஆண்டுவரையான 32 வருடங்கள் இவரது ஆட்சி நிலவியது.அக்காலத்தில் குண்டசாலையின் இளவரசர் என்று இவர் அறியப்பட்டார்.இலங்கையை ஆக்கிரமித்திருந்த டச்சுப் பேரரசுடன் சமரசம் செய்து கொண்டும், அனைத்து மதத்தவரோடும் சினேகபூர்வமான உறவை வலுப்படுத்திக்கொண்டும் இவர் தனது ஆட்சியை நிலைப்படுத்தி நடாத்தி வந்தார். இவரது தந்தை விமலதர்மசூர்ய 2 இன் மறைவையடுத்தே செல்லம் குமாரயா அரசரானார்.இந்த மன்னனுடைய மனைவி மதுரையைச் சேர்ந்த நாயக்க வம்சத்தைச் சேர்ந்த இளவரசியாகும்.
இவ்வரசனின் மனைவிக்கு சுகவீனம் ஏற்பட்டது. பலரிடம் வைத்தியம் செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஒரு சிறந்த முஸ்லிம் வைத்தியர் இருக்கிறார், அவரைக் கூட்டி வந்து தேவிக்கு வைத்தியம் பார்ப்போமா? என்று மந்திரி ஒருவர் அரசனிடம் கேட்டார்.
அந்த வைத்தியர் எனது மனைவிக்கு வைத்தியம் பார்க்கலாம் என்று சம்மதித்த அரசர்,அவரது மனைவியைப் பார்க்காமலும், தொடாமலும் மருந்து செய்யவேண்டும் என்ற நிபந்தைனையை விதித்தார். இந்த நிபந்தனை யூனானி மருத்துவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அக்காலத்தில், நோயாளியின் கையைப் பிடித்து நாடியோட்டத்தை அறியாமல் நோயையோ நோயின் அறிகுறியையோ கண்டு பிடிக்க முடியாது, மருந்தும் கொடுக்க முடியாது என்று தெரிந்திருந்தும் மருத்துவர் அரசரின் நிபந்தனைக்கு உடன்பட்டார்.
வைத்தியர் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டார்.அரசி ஒரு திரைக்கு அப்பாலும் வைத்தியர் இப்பாலும் இருத்தப்பட்டனர். வைத்தியர் நீண்ட நூலைக் கொடுத்து அதன் ஒரு முனையை அரசியின் கையில் கட்டிவிட்டு மறு முனையைத் தனது கைக்குத் தருமாறு சொன்னார். அரசியின் தோழிகள் அதனைச் செய்தனர்.
நூலில் நுனியை தொடுகை மூலம் பரிசோதித்த வைத்தியர், இது இரண்டு கால் மனிதரின் நாடியோட்டமல்ல நாலுகால் பிராணியின் நாடியோட்டம் போல தெரிகிறதே என்று கூறினார்.இதனைக் கேட்டவுடனே அரசரின் உத்தரவின் பேரில் திரை நீக்கப்பட்டது. வைத்தியரின் திறமையைப் பரிசோதிக்க நூலின் ஒரு முனை ஒரு பூனையின் காலில் கட்டப்பட்டிருந்தது.
யூனானி வைத்தியத்தால் தேவியின் நோய் தீர்ந்தது.அன்றிலிருந்து இந்த முகம்மத் என்ற முஸ்லிம் வைத்தியர் அரண்மனையின் பிரதான வைத்தியராக நியமிக்கப்பட்டார்.
சிறிது காலம் செல்ல இந்த யூனானி வைத்தியருக்கு அரசர் "கங்கே முதலி" என்ற சிறப்புப் பட்டத்தை (title) வழங்கினார்.
காலப்போக்கில் இந்த சிறப்புப் பட்டப் பெயரே இவர்களது குடும்பப் பெயராக நிலைபெற்றுவிட்டது. பின்னொரு காலத்தில், முஸ்லிம்கள் கண்டி அரசரின் அனுசரணையோடு மட்டக்களப்பில் குடியேறி வாழ்ந்துவந்தனர்.இவ்வாறு கண்டிய இராச்சியத்தில் இருந்து ஏறாவூரில் குடியேறியவர்களில் வரலாற்றில் பதியப்பட்ட கங்கே முதலி குடும்பமும் அடங்குகிறது.
முதலித்தம்பி என்ற முன்னாள் கிராமசேவையாளர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் உயிர்வாழும் மூத்தவராகும்.இவரது தந்தையார் சீனிமுகம்மது ஏறாவூரின் முஸ்லிம் ஆதிகுடியேற்றப் பிரதேசமான ஒட்டுப்பள்ளி வட்டகையில் வாழ்ந்து மறைந்தார். 90 களின் நடுப்பகுதியில் இவர் தனது 90 வயதைக் கடந்து தளர்ந்து இருந்த வேளை ஏறாவூர் வரலாற்றில் அவருக்குத் தெரிந்தவை பற்றிய பதிவை பேட்டியாக எடுத்தேன். இவர் கெங்கை முதலியாரின் பேரராகும்.இவரையும் கெங்கைப் பரிகாரியார் என்றே மக்கள் அழைத்தனர்.
இஸ்மாலெவ்வை முதலியார்,சீனிமுகம்மதுவின் தந்தையாகும். இஸ்மாலெவ்வை முதலியார் கெங்கை முதலியாரின் மகனாகும். ஆறாவது தலைமுறையாக இவர் வைத்தியத்தில் ஈடுபட்டார். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இவர் கிராமத் தலைவராகப்( Village Headman) பணிபுரிந்தார்.
கீழே நிழற்படத்தில் முதலுத்தம்பியும் அவரது தந்தையார் சீனிமுகம்மது கெங்கைப் பரிகாரியாரும் காணப்படுகின்றனர்

புதிய மாணவிகள் அனுமதி



ஏறாவூர் வைத்திய சாலை வீதியில் இயங்கி வருகின்ற மனாழீருல் அன்வார் மகளிர் அறபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் ஆகிய பிரிவுகளுக்கு புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இக்கல்லூரியானது 1970 ல்  சங்கைக்குரிய மௌலவி அல் ஆரிப் பில்லாஹ் அல் ஆலிமுல் பாழில் கலீபத்துல் காதிரி அஸ்ஷெய்க் அப்துல் காதிர் ஸ_பி காதிரி கைதரபாதி அவர்களினதும் அவர்களது கலீபா சங்கைக்குரிய மௌலவி இப்றாஹீம் ஹாசிமி ஹனீபா ஆலிம் அவர்களினதும் அயராத முயற்சியால் உறுவாக்கப்பட்டதாகும்.

அவர்களது காலத்தில் இக்கல்லூரியில் உலமாக்கள் வெளியேராவிட்டாலும் இக்கல்லூரியில் அவர்களிடம் ஆரம்பக் கல்வியை கற்றுக் கொண்ட பல மாணவர்கள் இன்று தலை சிறந்த ஆலிம்களாகவும் அறிஞ்ஞர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் திகழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2009 ல் மனாழீறுல் அன்வார் அரபுக்கல்லூரியில்  பெண்களுக்கான பிரிவு ஆரம்பிக்கபபட்டு அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது.

இக்கல்லூரியில் 2018ம் ஆண்டு வரைக்கும் 19 ஆலிமாக்கல் பட்டம் பெற்று வெளியேறி 3 மாணவிகள் பல்கழைக்கலகம் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகளின் தகைமைகள்

ஷரீஆப் பிரிவு  : 09ம் தரத்தில் கல்வி கற்பவராகவும் அல்-குர்ஆனை
              சரளமாக ஓதக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

ஹிப்ழுப் பிரிவு  : 06ம் தரத்தில் கல்வி கற்பவராகவும் அல்-குர்ஆனை
              சரளமாக ஓதக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.

 எமது கல்லூரியில் இலங்கை பரீட்சை திணணக்களம் நடாத்தும் அஹதிய்யாஇ தர்மச்சாரிய்யா அல் ஆலிம் முதவஸ்ஸிதா அல் ஆலிம் ஸானவிய்யா ஆகிய  பரீட்சைகளுக்கு மாணவிகள் தோற்றுவதற்கு  பயிற்றுவிக்கப்படுவதோடு  ஆங்கிலம்  கனணி தையல் ஆகிய மேலதிக தொழிற் பயிற்சிகளும்; அனுபவம் வாய்ந்த ஆலிமாக்களினால் நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இக்கல்லூரியில் 2019 இல் முழு நேர வகுப்புக்குளும் நடைபெறும் என்ற மகிழ்சியான செய்தியையும் தெரிவித்துக் கொள்வதோடு இக்கற்கை நெறிக்கு ழுஃடு அல்லது யுஃடு படித்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மற்றும் 3 மாத முஅல்லிமா ஷரிஆ பயிற்சி வகுப்புக்களும் காலை மாலை ஆகிய நேரங்களில் நடை பெறுகின்றன.

இக்கல்லூரியில்    சேர விரும்பும் மாணவிகள் 228ஷ12ஷ2018 அன்று காலை 09.00 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க விரும்பும் மாணவிகள் அதற்கு முன்பதாக கல்லூரியின் அதிபரும் சதாம் ஹ{ஸைன் அல் மஸ்ஜிதுல் பக்கதாத் ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஸ் இமாமுமாகிய  சங்கைக்குரிய மௌலவி நவாஸ் உஸ்மானி அவர்களையும் கல்லூரியின் செயலாளர சங்கைக்குரிய மௌலவி எச்.எம் யூசுப் முஸ்தபி அவர்களையும் தொடர்பு கொள்ளவும்.

0756212102 - 778492721


ladies arabic college eravur

ladies arabic college eravur

ladies arabic college eravur

ladies arabic college eravur


புதிய மாணவர்கள் அனுமதி 2019


Nimiyyah arabic college eravur



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ_
ஏறாவூர் மிச்சநகர் ஆர்.டி.எஸ் வீதியில் அமைந்திருக்கும் நிழாமிய்யா மஹ்பிய்யா அரபுக்கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இக்கல்லூரியில் முழு நேர பொதுக் கல்வியுடன் கூடிய 6 வருட ஷரிஆ கற்கை நெறி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2019 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அதற்கான நேர்முகப்பரீற்சை 2018-25-12 ஆம் திகதி நடைபெறும்.
ஜாமியத்துன் நிழாமிய்யாஹ் மஹ்பிய்யாஹ் அரபுக்கல்லூரி பின்வரும் சிறப்பியல்புகளையும் வசதிகளையும் கொண்டுள்ளது.

1. சர்வதேச தரத்திற்கேற்ற பாடத்திட்டம் தகுதி திறமை அனுபவமுள்ள உஸ்தாதுமார்கள் அல் ஆலிம் பரீற்சைக்கு தயார்படுத்துதல்
அஹதிய்யாஹ் பரீற்சைக்கு தயார் படுத்துதல்
கல்விப் பொதுத்தராதர சாதரான மற்றும் உயர்தர பரீற்சைக்கு தயார்படுத்துதல்

Pc & IT Technology  பல  தொழிற்பயிற்ச்சிகளை  வழங்குதழும் அரபு  மொழியுடன் கூடிய தமிழ்ääஆங்கிலம்ääசிங்களம்  மொழிகளை திறன்பட வளர்த்தல் .

2000 பரப்பளவு அடி கொண்ட கட்டிடமும்  சகல வசதிகளும்  கொண்டு அமையப் பெற்றுள்ள ஒரு கல்லூரியாகும்.
வளமான நூலகம் சிறந்த விளையாட்டு மைதாணம்ääசகல வசதிகளும் கொண்ட விடுதி குளியலறை மற்றும் மஸ்ஜித்ääபாதுகாப்பான அமைதியான சுவாத்தியமான கல்விச் சுழல்

உங்களது பதிவுகளை 2018-25-12 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளவும்.
மேலதிக விபரங்களுக்கு
கல்லூரி அதிபர் பண்ணுலாசிரியர் பல் துரை அரிஞ்ஞர்
சங்கைக்குரிய மௌலவி அஹ்மத் பஸீர் ரப்பானி
0718414705



Nimiyyah arabic college eravur