السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 6 December 2018

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

இலங்கையின் பிரபல சமூக சேவை அமைப்பாக திகழும் ஸம் ஸம் பௌன்டேசன் உடன் இணைந்து தாருல்ஹூதா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் 2000 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மாஞ்சோலை மணி மண்டபத்தில் நடைபெற உள்ளது.
ஸம் ஸம் பென்டேசன் நிறுவனத்தினால் வறிய மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு School With a Smile எனும் செயற்திட்டம் நாடுபூராகவும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது,
அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை மையப்படுத்தி ஸம்ஸம் பென்டேசன் நிறுவனமும்,தாருல் ஹூதா நலன்புரி அமைப்பும் இணைந்து 2000 சிங்கள , தமிழ் , முஸ்லிம் மாணவர்களுக்கு பெறமதி மிக்க கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளிக்க உள்ளன.
ஒவ்வொரு மாணவருக்கும் பாடசாலை செல்வதற்கான அப்பியாச புத்தகங்கள், பாடசாலை பை, மற்றும் பாதணியினை கொள்வனவு செய்வதற்காக 1000ரூபாய் பெறுமதியான பண வவுச்சர் அடங்கலாக 3000ரூபாய் பெறுமதியில் குறித்த கற்றல் உபகரணங்கள் பகிரப்பட உள்ளன.
மேற்படி நிகழ்வினை ஏறாவூர் பிரதேசத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நாளைய உத்தியோகபூர்வ நிகழ்விற்கு ஸம் ஸம் பௌன்டேசன் தவிசாளரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதி தலைவருமான அஷ்-ஷெய்க் முப்தி யூசுப் ஹனீபா அவர்கள் கலந்து கொள்வதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்...
டிசம்பர் மாதத்தை கடந்து செல்லும் போதே வறிய நிலையில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டிற்கான செலவீனங்களை சமாளிக்கும் பொருட்டு மடியில் நெருப்பை சுமந்த மனோ நிலையில் மிகவும் அவஸ்த்தைக்குள்ளாகுவது அனைவரும் அறிந்ததே- இதை உணர்ந்தவர்களாக மிகவும் கனதியான பணியினை இன மத பேதங்களுக்கு அப்பால் முன்னெடுத்து வரும் ஏறாவூர் தாருல் ஹுதா நலன்புரி அமைப்பு மற்றும் ஸம் ஸம் நிறுவன பிரதிநிதிகளை நன்றியுடன் வாழ்த்துவதோடு இவ்வாறான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான உடல் உள ஆரோக்கியத்தையும் , அபிவிருத்தியையும் இதன் ஏற்பாட்டாளர்களுக்கு இறைவன் வழங்கிட செய்வானாக...
வாழ்த்துக்கள் மென்மேலும் சிறப்புடன் வினைத்திறன் மிக்க பணி தொடர....