السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 25 May 2015

அவசர உதவி கோரல்


ஏறாவூர்,வைத்தியசாலை வீதியை சேர்ந்த அப்துல் கரீம் அஹமத் ஜுனூத் என்ற குடும்பஸ்தர் மீன் வியாபாரம் செய்து வந்தவர்.
சொந்த முதலின்றி தனது வீட்டை அடகு வைத்து தொழில் செய்துவந்த இவர்,நான்கு வருடங்களுக்கு முன்பு வாகன விபத்தொன்றில் சிக்கி கால் உடைந்த நிலையில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தனது குடும்பத்தை நடாத்தி வந்தார்.
நான்கு ஆண் மக்களுக்கு தந்தையான இவர், இவர்களுக்கு சாப்பாடு கொடுக்கவோ,இவர்களினது கல்வியை தொடரவைக்கவோ முடியாமல் தொழில் செய்ய வளமின்றி மிகவும் சிரமப் படுகிறார்.
இவரது உடைந்த கால்களை படத்தில் உள்ளபடி சரிசெய்வதற்கே பல லெட்சம் ரூபாக்களை செலவு செய்து கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளேன் என்று கண்ணீர் வடிக்கிறார்.
இவரது பிள்ளைகள் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் கல்வி பயில்கிறார்கள்.அடகு வைக்கப்பட்டுள்ள வீட்டைக் கூட மீட்க முடியாமல் திணறும் இவருக்கு
சுயதொழிழுக்காக உதவும் உள்ளங்களாகிய உங்களால் உதவமுடிந்தால் உதவுங்கள்.
ABDUL CAREEM AHAMED JUNOOTH
098034345269101
SEYLAN BANK,
CHENGKALADY.

அவசர உதவி கோரல்Mohamed Nasir's photo.அவசர உதவி கோரல்Mohamed Nasir's photo.Mohamed Nasir's photo.

Sunday, 24 May 2015

வஹாபிகள் என்றால் யார்?




அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்) அங்கு வசிப்பவர்களுக்கு நஜ்தியர் என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவிய அந்த நஜ்து வாசிகளுக்கு அவர்களின் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பொறாமை குணம் சற்றும் மாறாமல் அது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருந்தது.
நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
சமூகம் வந்து உபதேசங்களை கேட்கும் இவர்கள் வெளியில் சென்றதும் அதற்கு நேர் மாற்றமான நச்சு வார்த்தைகளை பேசுவார்கள். குதர்க்க வாதம் புரிவார்கள். இரவெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக சதியாலோசனை செய்துகொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் அந்த தீயவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது இருந்த பொறாமை. இவர்களின் நிலையை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களுக்கு உபதேச தோரணையிலும், கண்டித்தும் பல முறை சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் அது இந்த தீயவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. இவர்களை பற்றி தான் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பதை திருமறையில் பல இடங்களில் காணலாம். இவர்களின் போக்கு பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு வேதனை ஏற்படுவதுண்டு.
ஷைத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வரும் போது இந்த நஜ்தியர்களின் உருவத்தில் தான் வருவான். அவனைக் கண்டதும் ஷெய்குன் நஜ்தி (நஜ்தி பெரியார்) வருகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறுவார்கள். இதை அண்மையில் இருக்கும் ஸஹாபாக்கள் இவன் ஷைத்தான் என்று புரிந்து கொள்வார்கள்.
ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்கள் முபாரக்கான கரங்களை ஏந்தி " யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்துக்கும் (சிரியா) பரக்கத்து செய்வாயாக! யா அல்லாஹ்! எங்கள் யெமன் தேசத்திற்கு பரக்கத்து செய்வாயாக!" என்று துஆ கேட்டார்கள். அப்பொழுது பக்கத்திலிருந்த சஹாபாக்கள், " யா ரசூலல்லாஹ்! எங்களுடைய நஜ்து தேசத்துக்கும்" என்றார்கள். மறுமுறையும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் கூறிய படியே ஷாம், யெமன் இரு தேசங்களுக்காகவும் துஆ செய்தார்கள். மீண்டும் நஜ்தியர்கள் தங்கள் தேசத்துக்காக துஆ கேட்கும் படி கூறவே, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மூன்றாம் முறையாக " அங்கு தான் அதிர்ச்சிகளும், கொந்தளிப்புகளும், பித்னாக்களும் உண்டாகும். ஷைத்தானின் கொம்பு வெளியாகும். அங்குதான் ஷைத்தானுடைய கூட்டங்கள் வெளிக்கிளம்பும்" என்று கூறினார்கள். (ஸஹிஹ் புகாரி)
நஜ்தியர்களின் முனாபிக் (நயவஞ்சக) செயல்கள் காரணமாக அடிக்கடி பித்னாக்கள் வேகத்துடன் ஏற்படுவதும், அது பலம் இழப்பதுமாக இருந்தது.
நஜ்தியர்களால் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எல்லாம் அப்பொழுது வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களாலும் ஆட்சியாளர்களாலும் அப்போதைக்கப்போது அடக்கி ஒடுக்கப்பட்டன. பின்னர், அப்பொழுது தான் நஜ்தில் இப்னு தைமியா என்பவன் வெளியாகி தீனில் தலையிட்டு நூதன கொள்கைகளை உண்டு பண்ணி, நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷரிஅத்திற்கு விரோதமான மஸாயீல்களை திரட்டி, 'ஸிராத்தல் முஸ்தகீம்' என்ற நூலை வெளியிட்டு புதிய கிளர்ச்சியை உருவாக்கினான். இந்த நூலில் அதிகமாக நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அஹ்லுல் பைத்துகள், சஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் முதலியோர்களை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதி இருக்கிறான். இதை அவனுடைய சகோதரர்களும், உறவினர்களும் கண்டித்து, மறுத்தும் இருக்கிறார்கள். அது மற்றும் அன்றி அப்போது வாழ்ந்த தலை சிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களான ஷெய்குல் இமாம் ஷைக் முஹம்மது ஃபர்ஸ் , குதுவதுல் முஹத்திதீன் ஷைக் இப்னு ஹஜர் மக்கி, செய்யத் அஹ்மத் கபீர் பாரியி இன்னும் மக்காவின் முப்தியா இருந்த அல்லாமா செய்யத் அஹ்மத் தஹ்லான் மக்கி ஆகிய மார்க்க மேதைகள் இந்த இப்னு தைமியாவை லஃனத்துச் செய்து காஃபிர் என்று மார்க்க தீர்ப்பு (ஃபத்வா) வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இவனுடைய சூழ்ச்சியை அறியாமல் சில அறிவீனர்கள் இவனை பின்பற்றினார்கள். இவனுடைய அட்டூழியம் பொறுக்க முடியாமல் எகிப்து அரசாங்கம் பல முறை இவனை சிறை காவலில் வைத்தது. அப்போதும் இவன் அடங்கவில்லை. இறுதியாக சிரியா அரசாங்கம் இவனை கைது செய்து திமிஷ்க் நகர் சிறை கூடத்தில் சாகும் வரை சிறையில் வைத்தது. அங்கேயே இவன் இறந்தான்.
ஏறத்தாள 600 வருடங்களுக்கு பின் நஜ்தை சார்ந்த தர்இய்யா என்ற ஊரில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறந்தான். இவன் தலையெடுத்து இப்னு தைமியாவுடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து புதியதோர் மத்ஹபை உண்டாக்க முற்பட்டு இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை விரிவு படுத்தி அதற்கு மிருது கொடுத்து ' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் வெளியிட்டான்.
இந்த சந்தர்ப்பத்தில், துருக்கி அரசர் சுல்தான் அப்துல் ஹமீத் கான் காலமானார். பதவியின் காரணமாக அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. துருக்கியின் உதவியை பெற்று கொண்டிருந்த பக்கத்து அரசர்களும் பலம் இழந்தார்கள். அது ஹிஜாஸையும் தாக்கியது. இதை தக்க தருணமாக கொண்டு இப்னு வஹ்ஹாப் நஜ்தி ஒரு படையை திரட்டிகொண்டான்.
இந்த படையின் தலைவனாக ஸுஊத் என்பவனை நியமித்தான். இவன் ஹஜ்ஜுக்கு போவதாக பாசாங்கு செய்து பெரும் படையுடன் புனித மக்காவுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடி ஆண், பெண், வயோதிபர்கள், வாலிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்தான். அந்த மக்காவாசிகள் உயிர் தப்ப கார்மானம் தேடி ஹரம் ஷரீபுக்குள் நுழைந்தார்கள். அப்பொழுதும் அந்த கயவர்கள் அந்த மக்களை உயிரோடு விடவில்லை. ஞாபகார்த்தமான மஸ்ஜிதுகளும், கப்ருகளும் தாக்கப்பட்டன. மக்காவில் புரிந்த அட்டூழியம் போலவே மதீனா முனவ்வராவிலும் அந்த கயவர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி முஸ்லிம்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள். அப்போது அங்கு இருந்த செய்யதுனா அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதா ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியவர்களுடைய மக்பராக்களும் வீழ்த்தப்பட்டது. ஸலவாத்து நூல்கள் ஃபிக்ஹு கிதாபுகள் முதலியவை எரிக்கப்பட்டன. ஜித்தா, தாயிப், மக்கா, மதினா ஆகியவை இந்த கொடுமைகளுக்கு உட்பட்டது.
இந்த அநியாயக்காரர்களின் அட்டூழியம் பெருகி கடைசியாக அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் கப்ரு ஷரீஃபை தரைமட்டமாக்க முற்பட்டபோது, அந்த சில ஷைத்தான்கள் அதிசயமாக செத்து மடிந்தார்கள். இவர்கள் இந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களை கொல்லுவதற்க்கு காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருந்ததே. முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியுடைய மத்ஹப்பின் பிரகாரம் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள் என்று அவன் நினைத்ததே.
அந்த சமயம் உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாக்கள், முஃப்திகள் இப்னு வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை முற்றும் முழுதாக தவறு என்றும் அதை கடுமையாக ஆட்சேபித்து தக்க ஆதார சான்றுகளுடன் அவரை லஃனத்து செய்து குப்ஃபார் (இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவர்) எனக் தீர்ப்புக்கூறி பல ஃபத்வா கிதாபுகள் வெளியிட்டனர்.
இறுதியாக இந்த இப்னு வஹ்ஹாப் நஜ்தி, யெமன் நாட்டில் ஒரு தக்வாவுடைய சுன்னத் வல் ஐமாஅத் பெரியாரோடு தன் மத்ஹபை பற்றி தர்க்க வாதம் புரிந்து இறுதியில் படுதோல்வியடைந்து அங்கேயே அகால மரணம் ஆனான். (இவனது அதிர்ச்சிக்குரிய அகால மரணம் பற்றிய விபரம் ஃபுதூஹாதுல் மகிய்யா என்ற நூலிலும் மஙானி கிதாபிலும் காணலாம்)
ஆனாலும் இவன் தனது படைக்கு தலைவனாக நியமித்த ஸுஊது என்பவன் அரேபியாவின் ஆட்சியை பிடித்தான். வெறும் அரேபியா என்ற நாட்டை தன் பெயரை முன்னாள் சொருகி ஸஊதி அரேபியா என்று மாற்றினான். அவனுடைய பரம்பரையே இன்று வரை அரேபியாவை ஆட்சி செய்கிறது.
நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் அறிவிப்பின்பட, நஜ்தில் ஷைத்தானின் கொம்பாக தோன்றி ஃபித்னாக்களையும், குழப்பங்களையும் உருவாக்கியவன்தான் இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி.
இவனை பின்பற்றி , இவனது மத்ஹபை ஏற்று, இவனது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தலைசாய்த்து நடப்பவர்களையே "வஹாபிகள்" என்று சொல்லப்படும்.

சாத்தான்களை புகழ்பாடி திரியும் சகோதரர்களின் கவனத்திற்கு!

சாத்தான்களை புகழ்பாடி திரியும் சகோதரர்களின் கவனத்திற்கு!

அன்று எப்படி முஹம்மத் இப்னு அப்து வஹாப் நஜ்தியும் மன்னன் இப்னு சவூதும் அரேபியாவை கைப்பற்றி வஹாபிஸத்தை நிறுவினார்களோ அதைப் போன்று யூஸுப் கர்லாவியும், முஹம்மத் முர்சியும் சேர்ந்து இளைஞர்களை மூளை சலவை செய்து எகிப்தின் அரசாட்சியை கைப்பற்றி உலக முஸ்லிம்களின் சொத்தான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, வஹாபிஸ கொள்கைகளை பரப்ப இருந்த சூழ்ச்சியை அல்லாஹ் தவிடுபொடி ஆக்கினான்.
.
தற்போது எகிப்தில் இந்த கூட்டத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தோல்வியை தாங்க முடியாத முர்சி வணங்கிகள் தற்போது பேஸ் புக்கில் ஒப்பாரி வைத்தும், இல்லாத பொல்லாத முர்சியின் புகழ்களை பாடி திறிகிறார்கள்.
.
ஷெய்தானை வழிபட கூடியவர்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்றால் பரவாயில்லை. நமது ஒரு சில சுன்னத் ஜமாஅத் சகோதர்களும் இந்த சாத்தான்களின் புகழ் பாடலை ஷேர் செய்து அந்த ஷெய்த்தான்களோடு சேர்ந்து இவர்களும் ஒப்பாரி வைப்பதை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.
.
மறுமை நெருங்கி விட்டது! அறிவு செத்து விட்டது!
.
அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!


www.mailofislam.com

பட்டமளிப்பு விழா சிறப்பாய் நிறைவுற்றது

24-05-2015 இன்று அல்லாஹ்வின் உதவியாலும் நபிகள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் அவ்லியாக்களின் துஆ பரக்கத்தாலும் ஏறாவூர் மஆனிமுல் முஸ்தபா அரபிக்கல்லூரியின் 12 வது பட்டமளிப்பு விழாவும் 13 வது தலைப்பாகை சூட்டு விழாவும் மிகச் சிறப்பாக சங்கை்குரிய மௌலவீ  அஸ் செய்ஹ் கலீபதுல் காதிரிய்யா முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் (இந்தியா )அவர்களின் தலைமயில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் நாஹூர் மீரான்,விரிவுரையாளர்களான சங்கைக்குரிய மௌலவி அஸ்ரப் முஸ்தபி,சங்கைக்குரிய மௌலவி கியாஸ்தீன் முஸ்தபி,
சங்கைக்குரிய மௌலவி றியாழ் முஸ்தபி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,கலலூரி மாணவர்கள்,பெற்றோர்கள்,நிர்வாகிகள்,முரீதீன்கள்,முஹீப்பீன்கள்,ஆசிரியர்கள்,வர்த்தகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Shafi M Mohaideen's photo.


Shafi M Mohaideen's photo.

Saturday, 23 May 2015

போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற

விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம்.




இன்ஸ்டால் செய்வது எப்படி:
  • விண்டோசில் உள்ள போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் மாற்ற இந்த லிங்கில் Folder Colorizer கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 
  • கணினியில் இன்ஸ்டால் செய்த பிறகு Free Activation விண்டோ வந்தால் உங்கள் ஈமெயிலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும்.
  • பிறகு நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடிக்கு ஒரு Verification Link அனுப்புவார்கள் அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஈமெயில் வரவில்லை என்றாலும் பிரச்சினையில்லை பிறகு வரும் போது ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 
  • ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் மாற்ற:


  • நீங்கள் கலரை மாற்ற விரும்பும் போல்டர் மீது ரைட் கிளிக் செய்து Colorize என்பதில் உங்களுக்கு தேவையான நிறத்தை கிளிக் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய போல்டர் அந்த நிறத்திற்கு மாறிவிடும்.
  • இதிலுள்ள நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் Colors என்பதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய நிறத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். 
  • இது போன்று உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து போல்டரில் வைத்து அழகாக மாற்றலாம். 
விண்டோசில் நிறத்தை மாற்றிய போல்டர்களை மீண்டும் பழைய வடிவில் கொண்டு வர அந்த போல்டர் மீது ரைட் கிளிக் செய்து Colorize! ==> Restore Original Color என்பதை கொடுத்தால் பழைய நிறம் திரும்பவும் வந்துவிடும்.

Friday, 22 May 2015

புனித பராஅத் இரவின் சிறப்புக்கள்

இதற்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்கிறது
1, இது ஷ/பான் மாதத்தின் நோன்பு. பொதுவாக, “நாயகம் (ஸல்) அவர்கள் ரமழானுக்கு அடுத்து ஷ/பானில் தான் அதிகம் நோன்பு பிடிப்பார்கள். சில சமயம் ஷ/பான் முழுதும் நோன்பு வைப்பார்கள்” புகாரி: 1969 முஸ்லிம்: 1156
“ரமழானையும் ஷ/பானையும் தவிர தொடர்ந்து இரண்டு மாதம் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லை” என்று உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் திர்மிதி: 1836
ஷ/பானில் நீங்கள் நோன்பு பிடிக்கும் அளவு மற்ற மாதங்களில் நீங்கள் நோன்பு வைக்க நான் பார்த்ததில்லையே? என, உசாமா (ரலி) அவர்கள் கேட்டபோது, “ரஜபுக்கும் ராமழனுக்கும் இடையில் இருக்கும் இந்த (ஷ/பான்) மாத(த்தின் மகத்துவ)த்தை மக்கள் உணராமல் உள்ளனர். இது அகில உலக இரட்சகனிடம் அமல்கள் உயர்த்தப்படும் ஒரு மாதம். நான் நோன்பளியாக இருக்கும்போது எனது அமல்கள் உயர்தப்படுவதை நான் விரும்புகிறேன்”. என உத்தம நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். நசயி: 201/4.

2, இது அய்யாமுல் பீழுடைய (13, 14, 15, ஆகிய வெளுப்பு) நாட்களில் ஒன்று. இந்த மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும். “ஒவ்வொரு மாதமும் (இந்த) மூன்று தினங்கள் நோன்பு பிடிப்பது காலமெல்லாம் நோன்பு வைப்பதாகும்” நபிமொழி புகாரி: 1979. முஸ்லிம்: 1159. “நாயகம் (ஸல்) அவர்களின் இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வசனத்தை குர்ஆனில் அல்லாஹ் இறக்கினான்” என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. (அல் குர்ஆன் 6:160).

(அதாவது 3 X10 = 30 X 12 = 360) (திர்மிதி: 762 நசயி: 219/4)

3, பராஅத் நோன்பு. நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்., “ஷ/பான் 15-வது இரவு வந்தால் நின்று வணங்குங்கள், அதன் பகலில் நோன்பு பிடியுங்கள்” (இப்னு மாஜா: 1388)

இப்படி, சாந்த நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அல்லது அதிகமாக நோன்பு வைக்கும் ஷ/பான் மாதத்தின் வெளுப்பு தினமான 15ல் வரும் பராஅத் நோன்பு பொதுவாகவும் குறிப்பாகவும் நோன்பு வைப்பது ஏற்றம் நிறைந்த நபி மொழியும் வழியும் ஆகும்.

பராஅத் இரவின் மகிமையைப் பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 

இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகின்றது. 
மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும் இறக்கி வைக்கப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மிஷ்காத் 1305 






Mailof Islam's photo.







  • பராஅத் இரவின் அமல்கள் கூடுமா கூடாதா?
  • 1/2 Tamil Bayan-Pavam Pokkum Barath Iravu
  • 2/2 Tamil Bayan-Pavam Pokkum Barath Iravu
  • பாவம் போக்கும் பராஅத் இரவு 1/3
  • பராஅத் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலடி
  • பராஅத் இரவு பயான் நிகழ்ச்சி
  • ஷஃபான் மாதத்தின் பராஅத் நோன்பு 12/06/2014

  •