السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 5 July 2015

கல்முனை நூரானிய்யா பள்ளிவாசலில் பத்ர் ஸஹாபாக்கள் நினைவில் நடைபெற்ற புனித கந்தூரி

இன்று கல்முனை நூரானிய்யா பள்ளிவாசலில் பத்ர் ஸஹாபாக்கள் நினைவில் நடைபெற்ற புனித கந்தூரி வைபவம் பள்ளிவாசலின் தலைவரும்
, கல்முனை சுன்னத் வல் ஜமாத் பேரவையின் தலைவருமான ஜனாப் ஹனீபா jp அவர்களின் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ..சிறப்புறை ..மெளலவி ஏ.ஏ.ஜப்ரான் கெளஸி அவர்கள் பத்ர் ஸஹாபாக்கள் பற்றி பேசினார்..நாட்டின் சுபிட்சத்திக்கும், வளமான வாழ்வுக்கும் ..மெளலவி அல் ஹாபிழ் ரியாஸ் அல்தாபி ..துஆ பிரார்த்தனை செய்தார்..மெளலவி அப்துர்ரஹ்மான் கெளஸி., மெளலவி ஹபிழ் மன்பயி, மெளலவி ரிஸ்கான் வாஹிதி,மெளலவி அனிஸ் மற்றும் ulm.ஹிபான் esf ஆகியோரின் பங்களிப்புடன் அரபிக்கல்லூரி மாணவர்கள், சுன்னத் ஜமாத் சகோதர்களின் அனுசரனையுடன் பத்ர்மவ்லித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது. .. அல்ஹம்துலில்லாஹ்




Saturday, 4 July 2015

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது

கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது


"பூவுலகு ரப்பின் தீன் சுமக்க
வித்திட்ட பத்ரீன்களை
ரூஹு பிரியும் இறுதிவரை
இனிதே புகழ்ந்திடுவோமே"
04-07-2015  வலிமாரின் பரக்கத் பொங்கும் கல்முனை சூபி மன்சிலில் புனித பத்ர் மௌலித் மஜ்லிஸ்  சங்கைக்குரிய மௌலவீ றியாஸ் முஸ்தபீ (மஆனிமுல் முஸ்தபா அறபுக்கல்லூரியின் விரிவுரையாளர்)  அவர்களின் தலைமயில் மிகச் சிறப்பாக நடை பெற்றது
அல்ஹம்துலில்லாஹ்

சதாம்ஹுஸைன் அல்-பக்தாதி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித பத்ர் மௌலிது

சதாம்ஹுஸைன் அல்-பக்தாதி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித பத்ர் மௌலிது சரீப்

சதாம்ஹுஸைன் அல்-பக்தாதி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித பத்ர் மௌலிது சரீப்

சதாம்ஹுஸைன் அல்-பக்தாதி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித பத்ர் மௌலிது சரீப்


இன்று ஏறாவூர் சதாம் ஹுஸைன் அல் பக்தாதி ஜூம்ஆ மஸ்ஜிதில் சங்கைக்குரிய மௌலவீ யு.நவாஸ் உஸ்மானி அவர்களின் தலைமையில் புனித பத்ர் ஸஹாபாக்கள் மௌலீத் ஸரீப் ஒதப்பட்டு உலக முஸ்லிம்களுக்காகவும் விஷேட துஆ பிரார்தனையும் நடை பெற்றறது.இந் நிகழ்வுக்கு புத்தளம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவீ சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் றப்பானி மற்றும் உள்ளுர் உலமாக்களும் பள்ளிவாயல் நிர்வாகிகள் மாணவர்கள் ஜமாஅத்தார்கள் தாய்மார்கள்
அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்

;பத்ர் யுத்தம் பற்றி விரிவான விளக்கம் கட்டாயம் படிக்கவும


التوسّل والتبرّك بأسماء البدريّين والشّهداء البدريّين (رضي الله عنهم )
ولا تحسبنّ الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربّهم يرزقون (آل عمران )


அல்லாஹூத்தஆலாவின் பாதையில் போர் செய்து உயிர் நீத்தவர்களை நீங்கள் மரணித்தவர்கள் என எண்ண வேண்டாம்! அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்களுக்கு அல்லாஹூத்தாஆலாவின் புறத்திலிருந்து உணவளிக்கப்படுகின்றது (ஆல இம்றான் - 169)


( النساء) وفضّل الله المجاهدين على القاعدين أجرا عظيما


அல்லாஹ_த்தஆலா தனது பாதையில் போர் செய்தவர்களை, போர் செய்யாதவர்களைவிட மகத்தான கூலியின் மூலம் சிறப்பாக்கி வைத்தான்.(அந்நிஸா - 04)


عن معاذ بن رفاعة بن رافع الزّرفي عن أبيه وكان ابوه من أهل بدر قال "جاء جبرئيل إلى النبي صلى الله عليه وسلّم فقال ماتعدّون أهل بدر فيكم؟ قال من أفضل المسلمين (رواه البخاري)


அல்லாஹ_த்தஆலா தனது பாதையில் போர் செய்தவர்களைääபோர் செய்யாதவர்களைவிட மகத்தான கூலியின் மூலம் சிறப்பாக்கி வைத்தான்.(அந்நிஸா - 04)

Thursday, 2 July 2015

அஷ் ஷெய்குல் காமில் அப்துல்காதிர் ஸ_பி கத்தஸல்லாஹ_ சிர்ரஹ_ல் அஸீஸ்








இறைவனால் மனுகுலதிட்கு கருணை யாய் வழங்கப்பட்ட இறைநேசர்களுள் பல நூற்றுகனகானோர் பிறந்த -வளர்ந்த வாழ்ந்த பேரூர் காயல்பட்டணம் பண்டைய காலம்முதற்கொண்டு வகையான வரலாறுக்கு நல்லதோர் எடுத்துகாட்டாகவிளங்கி வரும் காயல்பட்டணத்தில் தோன்றி மறைத்த இறைநேசர்களது பட்டியலை தயாரிப்பது என்றால் அதுவே சிறப்பானதொரு பணியாக அமையும்.

இப்பட்டியலில் சிறப்பானதொரு இடத்தினை பெற்று நிறைவானதோர் வாழ்வினை மேற்கொண்ட பெருந்தகை தான் நம் கண்ணியதிட்குரிய அல்ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்புரசூல் அல்லாமாஅஷ்ஷாஹ் ஷைகு அப்துல் காதிர் சூபி ஹல்ரத் கதசல்லாஹு சிர்ராகுல் அசீஸ் அவர்கள் !
தமிழகம் ,கேரளம் மட்டுமன்றி ஈழத்திருநாட்டிலும் மற்றும் அன்னாரை தெரிந்தொரல்லாம் கண்ணியத்தோடு அன்போடு "சூபி ஹலரத்" என்று அழைக்கப்பட்ட இப்பெருமானார்-
காயல்பட்டனத்தின் பெருமைக்குரிய கம்பனியார் குடும்பத்தில் ஹிஜ்ரி 1322 ஆண்டு C.A.K அகமது முஹியதீன்-முகமது இபுறாஹீம் நாச்சியார் தம்பதியருக்கு கடைசி குழந்தையாக பிறந்தார்கள்.
ஷைகுன அவர்களின் வம்சப்பரம்பரை


1.செய்யிதுன அபூபக்கர் 2.அப்துல்லாஹ் 3.சஹீது 4.சஹ்து 5.இஸ்மாயில் 6.ஈஸா 7. இல்யாஸ் 8.அப்துல்கரீம் 9.இப்ராஹீம் 10.ஹுசைன் 11.ஜாபிர் 12.அஹ்மது 13.சாலிம் 14.ஸாலிஹ் 15.ஜகரிய 16.அப்துல்கரீம் 17. மக்தூம் 18. ஹஷிம் என்ற பெயரில் பிரபலமான உமர் 19.சுபைர் 20.ஹுசைன்அப்துல்லாஹ் 21.முஹம்மது 22.ஷைகு மக்தூம் 23.முஹம்மது கில்ஜி மிஸ்ரி காஹிரி 24. ஹிள்று 25.ஷிஹாபுதீன் 26. அல்ஹாஜுள் ஹரமெயின்அஹ்மது27. முகமது 28.அஹ்மது 29.முகமது30. மக்தூம் 31.அப்துல் காதிர் 32.அஹ்மது மீரான்சாஹிபு 33.மீரான்லெப்பை 34..அஹ்மதுதம்பி 35. மனிபாடு மரைக்காயர் என்று அறியப்பட்ட முகமது 35.இஸ்மாயில்மரைக்காயர் 36.மக்தூம் முஹம்மது37. முகமது இஸ்மாயில் 38.சின்ன அஹ்மது முஹியட்டீன் ஷைகுன ஷைகுல காமில் ஷைகு அப்துல் காதிர் காதிரி காஹிரி


காயல்பட்டணத்தில் தனது ஆரம்பக்கல்வியை முடித்த இவர்கள் ஒரு காபிழாக வரவேண்டும் என்ற பெற்றொரின் விருப்பப்படி ஒரு ஹிப்ழு மத்ரஸாவில் சேர்க்கப்பட்டார்கள். எட்டு ஜுஸூக்களை மன்னமிட்ட இவர்களுக்கு ஒர் ஆலிமாக வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் சென்னை ஜமாலிய்யஹ் அறபுக் கல்லூரியில் சிறிது காலம் ஓதிவிட்டு அங்கிருந்து இறைநேசர் அப்துல் கரீம் ஹஸ்ரத் அவர்கள் அதிபராகக் கடமையாற்றிய பொதக்குடி அந்-நூறுல் முஹம்மத்திய்யஹ் அறபுக் கல்லூரியில் சேர்ந்து கற்றுவந்தார்கள்.

அக்கல்லூரியிலேதான் தனது நண்பரான இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்த “வெள்ளி ஆலிம்” என அழைக்கப்படும் அஷ்ஷெய்க் அகமது மீரான் (வலீ) அவர்களை சந்தித்தார்கள்.

இவ்விருவரும் சேர்ந்து அந்த மத்ரஸாவில் கற்றுக் கொண்டிருக்கும்போது ஹைதரபாத் ஞானமாமேதை, இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பொதக்குடி நூறுல் முகம்மதிய்யஹ் மத்ரஸாவில் சில நாட்கள் தங்கிய சங்கைக்குரிய ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி (றஹ்) அவர்கள் அக்கல்லுரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மகான் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்ளையும் அவரது தோழர் மகான் அகமது மீரான் (வெள்ளி ஆலிம்) ஆகிய இருவரையும் கல்வி கற்று முடிந்தபின் தன்னை ஹைதராபாத்தில் வந்து சந்திக்கும் படி கூறினார்கள்.

இஸ்லாமியக் கல்வியைப் பூர்த்தி செய்த இவ்விருவரும் ஷெய்க் அவர்களின் அழைப்பை ஏற்று ஹைதரபாத் செல்லும் முன் “நாங்கள் தங்களை சந்திக்க வரலாமா” என்று அனுமதி கேட்டு ஒரு கடிதத்தை மகான் ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்களுக்கு அனுப்பினார்கள். அதற்கு சங்கைக்குரிய மகான் அவர்களிடமிருந்து “ எனது கதவு தங்களுக்கா திறந்துள்ளது” என்று பதில் வந்தது.

மகான் அவர்களின் அழைப்பினை ஏற்று தோழர்கள் இருவரும் ஹைதரபாத் சென்று மகான் ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்களிடம் இறைஞானத்தைக் கற்றுத் தேர்ந்த்ததுடன் இவர்கள் இருவருக்கும்மகான் அவர்கள்“பைஅத்” செய்து கிலாபத்தும் வழங்கி தனது கலீபாக்ளை இறை பணிக்காக அனுப்பிவைத்தார்கள்.

இவ்விருக்கும் ஷெய்க் அவாகளின் வஸிய்யத் “நீங்கள்இஸ்லாமிய பணி புரியவேண்டும்” என்பதாக இருந்தது.

அகமது மீரான் வெள்ளி ஆலிம் (றஹ்) அவர்கள் தனது தாயகமான இலங்கை திரும்பி அவர்களின் சொந்த இடமான கிழக்குமாகாணத்தில் பல ஊர்களிலும் சிறிய மையங்ளை நிறுவி மக்களுக்கு இறை போதனசெய்விலும் தனித்திருந்து ,இறை தியானம்செய்வதிலும்(கல்வத்) வாழ்கையை கழித்தார்கள்.

காயல்பட்டணம் திரும்பிய மகான் அப்துல் காதிர் ஸூபி நாயகம் அவர்கள் 1930ம் ஆண்டு அப்துல்லாஹ் நாச்சியார் என்பவரை மணம் முடித்தார்கள். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அவர்களின் ஷெய்கு சங்கைக்குரிய ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் “உனக்கு இன்னொரு மாலை காத்திருக்கின்றது” என்று கூறி விட்டுச் சென்றார்கள் அவர்கள் கூறியதன் அர்த்தம் யாருக்கும் அப்போது புரியவில்லை.

சில ஆண்டுகளில் ஒர் ஆண்குழந்தையை பெற்றெடுத்த அப்துல்லாஹ் நாச்சியார் நோய் காரணமாக இறையடி சேர்ந்தார்கள். அப்பொழுது மகான் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் தனது மனைவியின் சகோதரி மஹ்தும் பாத்திமா நாச்சியாரை திருமணம் செய்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு தனது ஷெய்கு ஹைதரபாத் ஸூபி நாயகம் அவர்கள் கூறியதன் அர்த்தம் புரிந்தது.

தனக்கு இன்னும் ஒரு திருமணம் நிகழும் என்பதையே முதல் திருமணத்தில் கலந்து கொண்ட தனது ஷெய்கு ஹைதராபாத் ஸூபி நாயகம் அவர்கள் சொல்லியிருந்தார்கள்.

இத்திருமணத்தில் மூன்று பெண் குழந்தைகள் கிடைத்தன. இவர்கள் தனது குடும்பதினரின் தொழிலை கவனிப்பதற்காக முதலில் சென்னைக்கு அனுப்பப்பட்டார்கள். மகான் ஸூபி ஹஸ்ரத் அவர்களின் அந்த வருடம் வியாபாரத்தில் பாரிய நஸ்டம் ஏற்படவே மீண்டும் தனது குடும்ப வணிகத்தை செய்ய காயல்பட்டணம் திரும்பினார்கள்.

காயல்பட்டணத்திலும் அவர்களின் வியாபாரம் பாரிய நஸ்டமடைந்தது, இவ்வாறு சில வருடங்கள் தாங்களின் வர்த்தகத்தில் பாரிய நஸ்டம் தொடர்ச்சியாக ஏற்படவே, மகான் அவர்கள் தனது ஷெய்கு ஹைதரபாத் ஸூபி நாயகம் அவர்களின் வஸிய்யத்தை ஞாபகப்படுத்தி இறை பணிபுரிவதற்காக தனது நண்பரைத் தேடி இலங்கைக்கு பயணமானார்கள்.

1946ம் ஆண்டு இலங்கையை வந்தடைந்த மகான் அவர்கள் தனது நண்பரைசந்தித்து மட்டக்களப்பில் “கிரான்குளம்” எனும் ஊரில் சுமார் ஒன்றரை மாதங்கள் தனது நண்பர் வெள்ளி ஆலிம் அவர்களுடன் சேர்ந்து கல்வத்திலிருந்தார்கள்.

பின்னர் கொழும்பு, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் பல பகுதிகளில் இறைபணி புரிந்தார்கள்.

மீண்டும் தாயகம் திரும்பிய மகான் அவர்கள் காயல்பட்டணம் சென்று “கொடிப்பாளையம்” எனும் இடத்தில் சில காலம் கல்வத்து இருந்தார்கள்.

பின்னர் 1949 ம் ஆண்டு இலங்கை திரும்பிய மகான் அவர்கள் கொழும்பு-11 இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள சம்மாங்கோட்டைப் பள்ளிவாயலில் பேஷ் இமாமாக பணியாற்றினார்கள்.

பின் அங்கிருந்து வெளியேறி இலங்கையிலும் இந்தியாவிலும் மக்களுக்கு இறை போதனைசெய்வதில் ஈடுபட்டார்கள். இதற்காக ஹிஸ்புல்லாஹ் சபை – சூபி மன்ஸில் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆன்மீகப் பணி புரிந்தார்கள்.

இறைஞானத் தாகம் கொண்ட எத்தனையோ உள்ளங்களில் மெஞ்ஞான தீபத்தை ஏற்றியதோடு இஸ்லாத்தில் குழப்பம் செய்தவர்களுக்கு எதிராகவும் குரல்கொடுத்தார்கள். இதற்காக பல தத்துவ நூல்களை எழுதி வெளியிட்டார்கள்.

ஞானதீபம், அஸ்ஸுலூக், அகமியக்கண்ணாடி, அல்ஹக் போன்ற நூல்கள் அவற்றில் சிலவாகும்.

ஆரிபுபில்லாஹ், முஹிப்புர் றசூல், அஷ் ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் புனித ரமழான் பிறை 24ல் வெள்ளிக்கிழமை (16-07-1982) சுப்ஹுக்கு சற்று முன்னர் இலங்கையில் வைத்து நோன்பு நோற்ற நிலையிலேயே இறைவனின் அழைப்பினை தாறுல் பனா எனும்பொய்யுகைவிட்டு தாறுல்பகா எனும்மெய்யுலகை அடைந்தார்கள் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் புனித அடகஸ்தளம் இலங்கையில் கொழும்பு-10 குப்பியாவத்தை மையவாடியில்அமைந்துள்ளது



  1. http://ahamiyam.blogspot.com/2013/03/blog-post.html





Wednesday, 1 July 2015

பத்ர் யுத்தம் பற்றி விரிவான விளக்கம் கட்டாயம் படித்தும் கேட்டும் பயன் பெறுங்கள் (வீடியோ )



இறைத்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவில் 13 ஆண்டுகளும் 
அதன் பிறகு மதினாவில் 10 ஆண்டுகளும் வாழ்ந்தார்கள். மதீனாவில் ஒரு ஆட்சியை அமைத்து இறை சட்டங்களை நிலை நாட்டி வாழ துவங்கிய போது
கூட எதிரிகளின் தொல்லை கொடுக்கும் மனப்பான்மையிலிருந்து இறைத்தூதரும் அவர்களின் சக தோழர்களும் தப்பவில்லை.


இதன் காரணமாக எதிரிகளோடு பல தற்காப்பு போர்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. இதில் முதலாவதாக நடைப்பெற்ற போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக பிரசித்திப்பெற்ற 'பத்ரு போர்' ஆகும்.

பத்ரு (முதல்) போரின் காட்சிகளை ஆதாரத்தோடு தெரிந்துக் கொள்வோம்

1, நபி(ஸல்) நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும்.  (ஜைத் பின் அர்கம்(ரலி) புகாரி 3949) அதில் முதலாவது போர் பத்ருதான்.

2, பத்ரு போர் ஹிஜ்ரி 2, ரமளான் மாதத்தில் பிறை 17ல் நடைப் பெற்றது.

3, குர்ஆனின் 3:123முதல்127வரையுள்ள வசனங்கள், 8:7,9-13வரையுள்ள வசனங்கள் பத்ரு பற்றி பேசுகின்றன. (இப்னு மஸ்வூத்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3952,3953,3954)

4, பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி(மதினாவாசி)களும் கலந்துக் கொண்டனர். (பரா இப்னு ஆஸிப்(ரலி) புகாரி 3956,3957,3958)

5, குர்ஆனின் 22:19,20,21 ஆகிய வசனங்கள் பத்ருபோரின் ஆரம்ப நிலை குறித்து இறக்கப்பட்டது. (அலி(ரலி) அபுதர்(ரலி) புகாரி 3965,3966,3967)

 6, பத்ரு களத்தில் கலந்துக் கொள்ள போர்கவசங்களுடன் ஜிப்ரயீல்(அலை) இறங்கி வருவதை நபி(ஸல்) அறிவிக்கிறார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3995)

7, அபூஜஹல் என்ற பெரிய எதிரியை பத்ரில் கொன்றவர்கள் முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள். (அனஸ்(ரலி) புகாரி 3962,3963,3988,4020)

8, 24 காபிர்களின் சடலங்கள் பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள கிணற்றில் தூக்கிப் போடப்பட்டன. 'நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை இப்போது உணர்கிறீர்களா..' என்று நபி(ஸல்) கேட்டார்கள். (ஆய்ஷா(ரலி) அபூதல்ஹா(ரலி) இப்னுஉமர்(ரலி) புகாரி 3976,3980,4026)

9, பத்ரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா(ரலி)க்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என நபி(ஸல்) நன்மாராயம் கூறுகிறார்கள். (அனஸ்(ரலி) புகாரி 3952)

10, ஒரு திருமணத்தின் போது பத்ரு போரில் கொல்லப்பட்டவர்களை புகழ்ந்து சிறுமிகள் தப்ஸ் அடித்து பாட்டுப்பாடுகிறார்கள். (பின்த் முஅவ்வித் - புகாரி 4001)

11, பத்ரு போரில் கலந்துக் கொண்ட முஹாஜிர்களுக்காக போர் செல்வத்திலிருந்து 100 பங்கு ஒதுக்கப்பட்டது. (ஜூபைர் பின் அவாம்(ரலி) புகாரி 4027)

மேலும் பத்ர் யுத்தம் பற்றி 





  1. /www.fassiyanews.com/
  2. பத்ர் தரும் பாடம்
  3. Badhr பத்ர் யுத்தம் பற்றி பயான் மர்ஹ-ம் மௌலவி பாறுக் பலாஹி காதிரி
  4. பத்ர் ஸஹாபாக்கள் பற்றி பயான் மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹீ
  5. பத்துறுப் போரின் படிப்பினைகள் 01 மௌலவி எச்.எம்.எம் இப்றாஹிம் நத்வி
  6. பத்துறுப் போரின் படிப்பினைகள் 02 மௌலவி எச்.எம்.எம் இப்றாஹிம் நத்வி
  7. பத்ர் யுத்தம் - ஜும்அஹ் பிரசங்க உரை MMA. மஜீத் (றப்பானீ)
  8. Battle of Badr - பத்ர் யுத்த களமும் ஷஹீத்கள் உள்ள மைதானமும்
  9. பத்ர் யுத்தம் மௌலவீ KRM ஸஹ்லான் (றப்பானீ) (BBA - Hons)
  10. மனித நேயத்துக்கு வித்திட்ட பத்ர் யுத்தம்
  11. பத்ர் யுத்தம் பற்றி ஓர் கண்ணோட்டம்
  12. பத்ர் யுத்தம் நடைபெற்ற இடம்
  13. பத்ரு போர் எதற்கு மெளலவி, H.A.அஹ்மது அப்துல் காதீர் மஹ்லரி
  14. Badur - பத்ருப் போர் மெளலவி, H.A.அஹ்மது அப்துல் காதீர் மஹ்லரி
  15. பத்ரு களத்தில் சஹாபாக்களின் சிறப்பு
  16. Muslim Warriors of the Battle of Badr



















Tuesday, 30 June 2015

27ஆம் வருட புனித பத்ர் ஸஹாபாக்கள் மாகந்தூரி


அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்களின் நல்லாசியுடன் புனித திருக் கொடி ஏற்றமும் சந்தனக்கூடு ஏற்றமும்

காலம் - 05-07-2015 ஞாயிறு பிற்பகல் 4.00 


  1. சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் இப்றாஹீம் நத்வீ அவர்கள் 
  2. சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம் யூசுப் முஸ்தபீ
  3. சங்கைக்குரிய மௌலவீ ஏ.ஜெ.எம் வலீத் கௌதி
  4. சங்கைக்குரிய மௌலவீ எம்.ஜப்றான் கௌதி
  5. சங்கைக்குரிய மௌலவீ எஸ்.எல் அப்துர் ரஹ்மான் கௌதி
  6. சங்கைக்குரிய மௌலவீ முஹ்யித்தீன் மன்பயீ
  7. சங்கைக்குரிய மௌலவீ றியாஸ் அல்தாபீ
  8. சங்கைக்குரிய மௌலவீ முஜாஹீத் பைஸி
  9. சங்கைக்குரிய மௌலவீ ஹபீல் மன்பயீ
  10. சங்கைக்குரிய மௌலவீ ஏ.எல்.எம் பைஷல்
  11. மற்றும் உள்ளுர்-விளியூர் சங்கைக்குரிய மௌலவீமார்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.


புனித பத்ர் கந்தூரி   05-07-2015 
புனித மௌலீத் மனாகிப் மஜ்லிஸ் 05-07-2015 மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து

புனித பத்ர் ஸஹாபாக்கள் பற்றிய அகமிய உரை
அதிசங்கைக்குரிய ஷெய்ஹ_னா ஞான பிதா ஷம்சுல் உலமா அல் ஹாஜ் மௌலவீ ஏ.அப்துர்றஊப் மிஸ்பாஹி பஹ்ஜீ அவர்கள்

இடம் - பத்ர் ஸஹாபாக்களின் நினைவுச் சின்னம்
மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் கல்முனை - இலங்கை

(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். அல் குர்ஆன் (8:9)

அனைவரும் வருக வருக அருள் வரம் பெறுக! அருள் கோடி பெறுக!