السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 9 August 2015

இறைவனின் பக்கம் ஓடுங்கள்


இறைவனின் பக்கம் ஓடுங்கள்


மன்னர் ஹாரூன் ரஷீதின் அரசவையில் ஒருநாள் .
மன்னர் ஹாரூன் ரஷீத் தன அரசவையில் இருந்த மக்களை பார்த்து மக்களே இந்த அரசவையில் இருக்கும் அனைத்து விலை உயர்ந்த பொருட்களும் உங்களுக்குத்தான் உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார் .
அங்கிருந்த அமைச்சர்கள் முதல் காவலாளிகள் வரை அந்த மாளிகையிலிருந்த தங்கம்,வெள்ளி,வைரம் ,வைடூரியம்,மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை ஆளுக்கொன்றாக எடுத்துக்கொள்கிறார்கள் .
மன்னரின் மனைவி மட்டும் தன கணவனின் கையை பிடித்துக்கொண்டு அமைதியாக நிற்கிறார் .
மன்னர் தன் மனைவியிடம் உங்களுக்கு எந்த பொருளும் வேண்டாமா ? நீங்கள் என் கையை பிடித்துக்கொண்டு நிற்கிறீர்களே உங்களுக்கு வேண்டிய பொருளை நீங்களும் எடுத்துக்கொள்ளலாமே என்று கேட்கிறார் .
அதற்க்கு மன்னரின் மனைவி அமைதியா அழுத்தமாக .
எனது அன்பு கணவரே இங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியவுடன் ஒவ்வொருவரும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டார்கள் .அவர்கள் எந்த பொருட்களை எடுத்துக்கொண்டார்களோ அந்த பொருள் மட்டுமே அவர்களுக்கு சொந்தமாகும் .
ஆனால் இந்த அரசவையில் இருந்த அணைத்த பொருட்களும் உங்களுக்கு சொந்தமானது .உங்களை நான் சொந்தமாக்கிக்கொண்டால் இங்குள்ள அணைத்து பொருட்களும் எனக்கு சொந்தமாகிவிடும் அல்லவா ? அதனால் உங்கள் கரத்தை பிடித்தேன் இப்போது இங்குள்ள அணைத்து பொருட்களும் எனக்குதானே சொந்தம் என்று கேட்டார் .
மன்னரும்,அரசவையில் இருந்த அனைவரும் வாயடைத்து நின்றார்கள்.
நண்பர்களே அதே போல் இவ்வுலகில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை தேடி ஓடுகிறோம் .
சிலருக்கு பணம் ,சிலருக்கு வீடு ,சிலருக்கு பதவி,சிலருக்கு குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக ஓடுகிறோம் .
நாம் எதை நோக்கி ஓடுகிறோமோ அது மட்டும் நமக்கு கிடைக்கிறது ,சில நேரங்களில் அதுவும் நமக்கு கிடைப்பதில்லை .
இவை அனைத்திற்கும் சொந்தக்காரனான இறைவனின் கையை நாம் பிடித்துவிட்டால் இவை அனைத்தும் நமக்கு சொந்தமாகி விடும் அல்லவா ??
அதனால்தானே பபிர்ரூ இலல்லாஹ் -இறைவனின் பக்கம் ஓடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் .
எப்போது ஓடப்போகிறோம் ???

இறைவனின் பக்கம் ஓடுங்கள்

https://www.facebook.com/HarisJamaly?fref=nf

Eravur Muslims Massacre Killed by LTTE 12- 08-1990

Eravur Muslims Massacre Killed by LTTE   12 08 1990

ஏறாவூரில் பயங்கரவாத
புலிகளின் கொலைவெறி
தாக்குதல்
1990.08.12
மட்டக்களப்பு
மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரில் இருந்து
12 கிலோ மீற்றர் தூரமான ஒரு நகரே
ஏறாவூர் பிரதேசமாகும். இப்பிரதேசத்தில்
1990 காலப்பகுதிகளில் தமிழீழ
விடுதலைப்புலிகளால்
முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்பட்ட
கோரத்தனமாக தாக்குதலில் பாதிக்கப்பட்ட
ஊர்களில் ஏறாவூரும் ஒன்று. இதில்
மறக்கமுடியாதவை 11.08.1990ம் ஆண்டு
நள்ளிரவு வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில்
இருந்த சிறுபிள்ளைகள்,
கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள்,
வயோதிபர்கள் என்று பாராது
விடுதலைப்புலிகளால் துப்பாக்கி, கத்தி
மற்றும் கோடரிகள் கொண்டு 121
அப்பாவி முஸ்லிம்களை கோரத்தமான
முறையில் வெட்டியும் குத்தியும்,
சுட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளால்
கொலை செய்தது மறக்க முடியாத
ஒன்றாகும்.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு
மாவட்ட பிரதேசத்தில் இருந்து பொலிஸ்
நிலையங்கலெல்லாம் தாக்கப்பட்டு
பொலிஸார் விரட்டியடிக்கப்பட்ட பின்னர்
முஸ்லிம்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள்
கேள்விக்குறியாக மாறியிருந்த
வேளையில் அல்லாஹ்வின் உதவியால்
தமிழர்களுக்கு முஸ்லிம்களும்
முஸ்லிம்களுக்கு தமிழர்களும் உதவியாக
இருந்த வேளையில் ஜூன் மாதம் 03ஆம்
திகதி இரவு (விடிந்தால் ஹஜ்
பொருநாள்) கொண்டாட இருந்த வேளையில்
ஏறாவூரின் மூத்த கல்விமான்களான ஜனாப்
யூல். தாவூத் அவர்களும் காதிநிதிபதி
அல்ஹாஜ் எம்.எல்.ஏ.கபூர் ஜே.பி (கபூர்
ஹாஜியார்) அவர்களும் தனவந்தர் அல்ஹாஜ்
அலிமுஹம்மது அவர்களும் அவரவர்களின்
வீட்டிலிருந்த வேளை புலிகள்
இயக்கத்தினால் அழைத்துச்
செல்லப்பட்டிந்தனர்.

அவர்கள் இன்று வரை வீடு திருப்பவும்
இல்லை. அவர்களின் ஜனாசாக்களும்
கிடைக்கவில்லை. இதுதான் முதலாவது
தாக்கம். இதன் பின்னர் ஒவ்வொறு இரவும்
ஒவ்வொரு வருடம் கழிவது போன்ற
உணர்வு. இரவு வந்து விட்டால் இனம்
தெரியாத பயம் மக்களை வதைத்தது.
ஓவ்வொரு இரவுகளிலும் வெட்டுவது
சுடுவது போன்ற செய்திகள் வந்து
கொண்டே இருந்தன. 1990 ஆகஸ்ட் மாதம் 03
ஆம் திகதி காத்தான்குடியில்
பள்ளிவாயல்களில் இஷாத் தொழுகையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள்
சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி பக்கத்து
ஊரான ஏறாவூரையும் கதிகலங்கச் செய்தது.
இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு
பாதுகாப்பு வழங்குவதற்கு அல்லாஹ்வை
தவிர யாரும் இருக்கவில்லை. ஏறாவூர்
பொலிஸ் நிலையம்
அழித்தொழிக்கப்பட்டது. அப்போது
கொம்மாதுரையில் மாத்திரம் ஒரு இராணுவ
முகாம் இருந்தது. அவர்களும் உடனடி
உதவி வழங்கும் நிலையில்
காணப்படவில்லை.

பயத்தின் உச்சநிலை காரணமாக ஆகஸ்ட்
மாதம் 10ஆம் திகதி ஜூம்ஆ தொழுகை
வெறும் 15 நிமிடம் மாத்திரமே
நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை
முன்னிருட்டுக் காலம் மின்சாரமும்
தடைப்பட்டிருந்த நிலையில் புலிகள்
முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்ய
வருகின்றார்கள் என்ற கதை மிகப்பரவலாக
பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

இதையறிந்த முஸ்லிம் மக்கள்
செய்வதறியாது திகைத்துப்போய் இருந்த
நிலையில் ஆண்கள் இரவில் தூக்கமின்றி
தங்களின் குடும்பங்களை
பாதுகாத்துக்கொண்டிருந்த நிலையில்
முஸ்லிம்களோடு ஒன்றோடு ஒன்று
பின்னிப்பனைந்திருந்த தமிழ் சமூகம்,
புலிகள் ஏறாவூர் முஸ்லிம்
பகுதிகளுக்குள் சென்று அம் மக்களை
வெட்டிக் கொலை செய்யப்போகின்றார்கள்
என்ற செய்தியை அறிந்ததும் முஸ்லிம்கள்
எவருக்குமே அச்செய்தியினை சொல்லாமல்
இருந்த இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு
வேளையில் வெடிச்சத்தங்கள்
ஒவ்வொன்றாக கேட்கத் தொடங்கின.
இது ஏறாவூர் ரயில்
நிலையத்தையொட்டிய பகுதிகளிலும்
சதாம் ஹூஸைன் கிராமப்பகுதிகளிலே
முதலில் கேட்கத் தொடங்கின.
இக்கால கட்டத்தில் ஒருநடைமுறை
வழக்கத்தில் இருந்தது. அபாயகரமான
செயற்பாடுகள் நடைபெற்றால் உடனடியாக
பள்ளிவாசல்களில் அதான் சொல்வதே இன்
நடைமுறையாகும். வெடிச் சத்தம்
கேட்கப்பட்ட பிரதேசத்தை அண்டிய
பள்ளிவாயலாகிய ஜிப்ரி தைக்கா
பள்ளிவாசலில் முதலில் அதான்
சொல்லப்பட்டது.

அத்துடன் ஜிப்ரி தைக்காப் பள்ளிவாயல்
பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடுகள்
வரத்தொhடங்கின. இதனால் ஊரின்
மத்தியில் அமைந்துள்ள மஸ்ஜித் நூறுஸ்
ஸலாம்; பள்ளிவாசலில்
(காட்டுப்பள்ளிவாசல்) இருந்து அடுத்த
அதான் சொல்லப்பட்டு முஸ்லிம்களுக்கு
எதிராக இழைக்கப்படும சம்பவங்கள்;
தொடர்பாக மக்களுக்கு ஒலிபெருக்கி
மூலம் அறிவிக்கப்பட்டது. இதனைக்
கேள்வியுற்ற பெரும் தொகையான மக்கள்
ஊரின் நடுப்பகுதிக்கு வரத்தொடங்கினர்.
இவ்வாறு தொடர்ந்த பயங்கரவாத செயற்பாடு
தொடர்பான விபரங்கள் சுபஹ் வரை
அறியப்படாமலேயே இருந்தது.
சுப்ஹூக்குப்பின்னரே இப் பயங்கரவாத
செயற்பாட்டில் கொல்லப்பட்டவர்களின்
விபரங்கள் சேகரிக்கப்பட்டன அதன் பிரகாரம்
ஏறாவூர், மீராகேணி, சதாம் ஹூசைன்,
ஏறாவூர் 03 மற்றும் ஏறாவூர் 06 ஆகிய
பிரதேசங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,
வயோதிபர்கள், இளைஞர்கள் என சுமார் 121
பேர் மிகக் கொடூரமான முறையில்
கொல்லப்பட்டு ஷஹீதாக்கப்பட்டிருந்தனர்.
இக்கொலைகள் ஊரின் பல பகுதிகளிலும்
நடைபெற்றிருந்ததனால் இவ் ஜனாஸாக்களை
ஒன்று சேர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
(இத்துயரநாளில் காத்தான்குடியைச் சேர்ந்த
பல சகோதரர்கள் காலை வேளையிலேயே
இங்கு வந்து பல உதவிகள் புரிந்தமை
மறக்க முடியாத விடயமாகும்.) இவ்
ஜனாஸாக்களில் சிறு குழந்தைகள் என்றும்
பாராமல் அவர்களை கண்டம் துண்டமாக
வெட்டியிருப்பது தமிழீழ விடுதலைப்
பாசிச புலிகளின் கோரத்தனத்தைக்
காட்டுகின்றது.

இவர்கள் அனைவரினதும் ஜனாஷாக்கள்
காட்டுப்பள்ளிவாசலில் தனியான இடமான
'சுஹதாக்கள் பூங்கா' எனும் பகுதியில்
நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத்
தொடர்ந்து பாதுகாப்பினை பெறுவதற்காக
ஓரு குழு இராணுவத்தினை நாடியது.
அதற்கிணங்க இராணுவத்தினர் வந்திருந்த
அதேவேளை அரசியல்வாதிகளும்
வந்திருந்தனர். ஏறாவூர் பிரதேசம் ஒரு
முகாமாக மாற்றப்பட்டிருந்தது. ஆறு சதுர
கிலோமீற்றர் பரப்பில் வாழ்ந்த மக்கள் சுமார்
ஒரு சதுர கிலோமீற்றர் தூத்துக்குள்
முடக்கப்பட்டார்கள். இன்நிலையில்
ஊரைச்சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட
நிலையில் சகல மக்களுமே அகதிகளாக
மாற்றப்பட்டார்கள்.
ஊரைவிட்டு வெளியேறினால் பாதுகாப்புக்
கிடைக்குமென நினைக்குமளவிற்கு அந்த
நாட்கள் மாறியிருந்தது. இக்காலகட்டத்தில்
ஊரை விட்டு வெளியூருக்கு செல்வதானால்
வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே
(திங்கள், புதன், வெள்ளி) இராணுவ
பாதுகாப்புடன் வாகனங்கள் போக்குவரத்து
செய்யும். இந்நாட்களில் மாத்திரமே
பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இதனால் நோயாளிகளின் மாத்திரமின்றி
அனைவருமே சொல்லொண்ணாத்
துயரங்களை அனுபவித்து வந்தனர்.
அந்த நாட்கள் முஸ்லிம்களின் மனதை என்றும்
ஒரு வடுவாக வைத்திருக்கும் மனநிலையை
இன்றும் வைத்திருக்கின்றது. இந்த
காலகட்டத்தில் தொழிலுக்கு சென்றவர்கள்
ஒன்றும் இரண்டுமாக நூற்றுக்கும்
மேற்பட்டோர் ஷஹிதாக்கப்பட்டதை
நினைவு கூர்ந்து வருடாவருடம் ஆகஸ்ட்
மாதம் 12 ஆம் திகதி 'சுஹதாக்கள் தினம்'
ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
வருடாவருடம் இத்தினத்தில் சகல
கடைகளும் அடைக்கப்பட்டு
பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் கத்தமுல்
குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படுவதோடு
நினைவுச் சொற்பொழிவுகளும்
நடாத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகளும்
செய்யப்பட்டு வருகின்றமை மூலம் இந்நாள்
நினைவு கூறப்பட்டு வருகின்றது.
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உட்பட
நாட்டின் நாலாபகுதிகளிலும் வாழுகின்ற
முஸ்லிம் மக்கள் இப் படுகொலைச்
சம்பவத்தினை மனதாபிமான
அடிப்படையில் சிலவேளை
மண்ணித்தாலும் அப்பாவி மக்களை
இரவோடு இரவாக வெட்டியும் சுட்டும்
கொலை செய்த இந்த சம்பவத்தினை
ஒருபோதும் முஸ்லிம் மக்களால் அதனை
ஒருபோதும் மறக்க முடியாது என்பதற்கு
வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு
வருகின்ற இச் சுஹதாக்கல் தினம் ஒரு
சான்றாகும்.

1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில்
இப்பிரதேச முஸ்லிம்கள் விவசாயத்தையும்
கால்நடை வளர்ப்பிலும் சேனைப்பயிர்ச்
செய்கைகளிலும் ஈடுபட்டிருந்த ஏறாவூர்
மக்கள் இப் படுகொலை சம்பவத்தினை
தொடர்ந்து கோடிக்கணக்கில் பெருமதி
வாய்ந்த சொத்துக்களையும் விலை
மதிக்கமுடியாத உயிர்களையும் இழந்ததன்
காரணமாக ஏற்பட்ட இழப்புக்கான
விழிப்புத்தான் ஏறாவூரை கல்வி
வளர்ச்சிக்கு வித்திட்டது இதன்
ஞாபகார்த்தமாக ஏறாவூரில் சுஹதாக்கள்
நினைவு தூபி ஒன்று
நிறுவப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இழப்புக்கள் தாங்க முடியாதவை ஆனால்
அல்லாஹ் ஒவ்வொன்றிலும் நலனையே
வைத்துள்ளான். ஏன்பதற்கு ஷஹீதாக்கப்பட்ட
சுஹதாக்கள் ஏறாவூர் மக்களின் கல்வி
எழுர்ச்சிக்கு மாத்திரம் இன்றி தொழில்
மாற்றத்திற்கும் வித்திட்டுள்ளார்கள்
என்பதையே இது எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ்
ஷஹீதாக்க்பபட்ட சுஹதாக்களை
பொருந்திக்கொண்டு அவர்களது
உறவினர்களின் இரு உலக வாழ்க்கைiயும்
சிறப்படைய வேண்டுமென நாம் அனைவரும்
பிராத்திப்போமாக!.

Jalaldeen Meera

101 வயதான மலேசியா தாய் நேற்று மரணம்

101 வயதான மலேசியா தாய் நேற்று மரணம்

அறுபத்து நான்கு வருடம் தனது ஊனமுற்ற மகனை சுமந்த 101 வயதான மலேசியா தாய் நேற்று மரணம்.
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
.
மலேசியாவில் குவாலா நெராங் என்ற இடத்தில் கம்பொங் புக்கிட் நம்புவா என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த 101 வயதான மெலியா முகம்மது டியா என்ற அந்த தாயார் நடக்கவோ, பேசவோ எழுந்து அமரவோ முடியாத தனது 64 வயதான மகன் அப்துல் ரஹ்மானை பிறந்தது முதல் பராமரித்து வந்தார்கள்.
.
தனது கனவர் சவூத் மரணமடைந்து இருபது வருடங்கள் கடந்தும் தனியாக இருந்தே இந்த 64 வயதாகும் மகனை குழந்தையை போன்று கவனித்து வந்தார்கள் .
.
நேற்று தனது 101ம் வயதில் இந்த உலகை விட்டு பிறிந்தார் அந்த கண்ணியமான தாயார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
.
தாய் மரணித்த செய்தியை அந்த 64 வயது ஊனமுற்ற மகனிடம் அவரின் சகோதரி தெரியப்படுத்தியதும் அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வடிந்தது என்று அந்த சகோதரி தெரிவித்தார்.

இறுதியாக தனது மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த தாயார் நினைவிழந்து போனார்கள் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்தார்.
.
அந்த தாயார் தனது மகனை பத்திரமாக கவனித்துக் கொள்ளும் படி தனது உறவினரிடம் சொல்லிய நிலையில் மரணத்தை தழுவினார் என்று உறவினர்கள் கூறியுள்ளார்கள்.
.
இந்த காலத்தில் சில பெண்கள் குழந்தைகளை பெற்று குப்பைத் தொட்டியிலும் காடுகளிலும் வீசிச்செல்லும் நேரத்தில் இப்படிப்பட்ட மகத்தான தாயை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
.
கடந்த சில மாதங்கள் முன்பு இந்த தாயாரின் செய்தியை நாம் பதிவு செய்திருந்தோம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.https://www.facebook.com/official.mailofislam/photos/a.463211507045275.106742.405169889516104/949098195123268/?type=3&theater
.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஸுப்ஹானஹுத்த ஆலா இந்த தாயின் மறுமை வாழ்வை சிறக்கச் செய்து அவர்களை பொருந்திக் கொள்வானாக..
ஆமீன்.
.
தகவல்: Aziz Ahamed Bin Habib
.
நன்றி: உலக முஸ்லிம் செய்திகள்

Thursday, 6 August 2015

இஸ்லாமிய பெற்றோர்களின் கவனத்திற்கு!

இஸ்லாமிய பெற்றோர்களின் கவனத்திற்கு!
உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய அகீதாவை சொல்லிக்கொடுத்து வளருங்கள். ஏனெனில் சுமார் 30, 40, 50 ஆண்டுகளுக்கு முன் வழிகெட்ட கொள்கையுடைய இயக்கங்கள் பெரிய அளவில் இருக்கவில்லை. 
.
ஆனால் இன்று தெருவுக்கு தெரு தேனீர் கடையை போன்று வஹாபிஸ இயக்கங்கள் தங்களின் மதஸ்தலங்கள், பள்ளிகூடங்கள் போன்றவற்றை திறந்து வைத்துக்கொண்டு வளரும் குழந்தைகளையும், அப்பாவி இளைஞர்களையும் வழிகெடுத்து வருகிறார்கள். 
.
பெற்றோர்களே! நீங்கள் குழந்தைகளாக இருந்த போதோ உங்கள் தாய், தந்தைகள் குழந்தைகளாக இருந்த போதோ இந்த வழிகெட்ட கூட்டங்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று உலகில் அறியாமை தலைவிரித்து ஆடும் காரணத்தினால் வழிகேடு வேகமாக அதிகரித்து வருகிறது.
.
பெற்றோர்களே! நீங்கள் "எனது பாட்டனார், தகப்பனார், நான் எல்லோரும் தரீக்காவாதிகள்" என்று சொல்லிக் கொண்டு இருப்பதோடு நின்று விடாமல், உங்களின் வளரும் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய அகீதாவான ஸுன்னத் ஜமாஅத் அகீதாவை சொல்லிக்கொடுத்து வழிகெட்ட வஹாபிஸ இயக்கங்களை பற்றியும் சொல்லிக் கொடுத்து வளருங்கள்.
.
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் அகீதாவை சொல்லிக்கொடுத்து வளர்க்காத காரணத்தினால் இன்று நாம் பார்க்கிறோம் எத்தனையோ குடும்பத்தில் பிள்ளைகள் பல இயக்க கொள்கைகளை இதுதான் இஸ்லாமிய கொள்கை என்று நினைத்துக்கொண்டு அவர்களின் பின்னால் சென்று வழிகெட்டு போகிறார்கள்.
.
உதாரணமாக மூத்த மகன் தப்லீக் ஜமாஅத்திலும், இரண்டாவது மகன் ஜமாஅதே இஸ்லாமியிலும், மூன்றாவது மகன் தௌஹீத் ஜமாஅத்திலும், நான்காவது மகன் ஸலபி ஜமாஅத்திலும் சேர்ந்து வழிகெட்டு போகிறார்கள்.
.
தகப்பனாரை பார்த்தால் தகப்பன் கூறுகிறார்: நான் 40, 50 வருடமாக தரீக்கத்தில் இருக்கிறேன், ஷெய்கு நாயகத்திற்கு நான் தான் குடை பிடித்தேன், எல்லா ஷெய்குமார்களும் எங்க வீட்டிற்கு வந்து இருக்கிறாங்க என்று புகழ்பாடி கொண்டு இருக்கிறார். ஆனால் பிள்ளைகளுக்கு அகீதாவை சொல்லி கொடுத்து வளர்க்காத காரணத்தினால் பிள்ளைகள் வழிகெட்டு போகிறார்கள்.
.
இதே போல் எத்தனையோ VIP தரீக்காவாதிகளை பார்க்கிறோம் அவர்களின் பிள்ளைகளின் நிலைகளை பார்த்தால் கவலையாக இருக்கிறது. உலக கல்விகளை கற்றுக்கொடுக்க லட்சகணக்கில் செலவழிக்கிறார்கள், வியாபார படிப்புகளை வெளிநாடுகளுக்கு சென்று கற்க லட்சகணக்கில் செலவழிக்கிறார்கள். வியாபார தந்திரங்களை சொல்லிகொடுக்க கால நேரத்தை செலவழிக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு அகீதாவை சொல்லிகொடுப்பதில்லை.
.
இத்தகைய ஒரு சில பணக்காரர்களின் பிள்ளைகள் மார்க்கமே இல்லாமல் யூத, நாசராக்களை போல் வாழ்கிறார்கள். ஆனால் தந்தையோ வருடா வருடம் மௌலித் ஓதுவதும், வீட்டில் பயான் வைப்பதும், ஷெய்குமார்கள் வந்தால் வீடுகளுக்கு அழைத்து வந்து விருந்து வழங்குவதிலும் பஞ்சமில்லை. ஆனால் வளரும் தலைமுறைகளோ சீரழிந்து சின்னாபின்னாமாகி போகிறார்கள்.
.
ஒவ்வொரு பெற்றோர்களும் பொறுப்புதாரிகள் நாளை விசாரிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

Saturday, 25 July 2015

உலமாக்கள் ஒன்று கூடல்


சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல் அன்மையில் 20-01-2015 அன்று ஏறாவூர் ஸாலீஹீன் பள்ளிவாயலிள் நடை பெற்றது.

இக்கூட்டம் ஏறாவூர் காழி நீதிபதி முன்னால் உலமா சபைத் தலைவர் சங்கைக்குரிய மௌலவீ ஏ.எம் அப்துல் மஜீத் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

இக்கூட்டத்துக்கு ஏறாவூர் பைஸானுல் மதீனா அறபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ அப்துர் றஹீம் நூரீ (ஜெ.பி) அவர்களும் புத்தளம் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய மௌலவீ இப்றாஹீம் றப்பானி அவர்ளும் மற்றும் ஏறாவூர் உலமா சபையின் செயலாளறும் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியன் அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ யு.அப்துல் ஹலீம் மன்பயீ அவர்களும் மற்றும் பல அறபுக்கல்லூரி உஸதாதுமார்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்

சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களுக்கான ஒன்று கூடல்


Friday, 17 July 2015

புது ஆடையும் பெருநாளும்

அஸஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... நண்பர்களே....!

Mohamad Nasir's photo.Mohamad Nasir's photo.
என் இனிய தோழமைகளே... உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்...
எதிர்வரும் நாளையோ நாளை மறு தினமோ பெருநாளுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாம் பல tex tile களிள் பலவித ஆடைகளையும் உயர்தர ஆடை முதல் உள்ளுரிலும் வெளியூர்களிளும் கொள்வனவு செய்து பெருநாளை
எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அதுமட்டுமல்ல இந்த பரகத் நிறைந்த பெருநாளுக்காக 2...3... என்று கொள்வனவு செய்துள்ளோம்...ஆனால் ஆடைவாங்க பணமில்லாமல் நமது சகோதரர்கள் பெருநாள் சோகத்துடன் கழிந்து தான் போகின்றது...
இதை தடுக்க ஒவ்வோரு வசதி படைத்த முஸ்லீமாலும் முடியும்..... நீங்கள் துர பிரதேசத்துக்குத்தான் போக வேண்டும் என்று அவசியமில்லை உங்களது அன்டை வீட்டை பாருங்கள்... நம்மில் எத்தனைபேர் அன்டை வீட்டுக்காரர்களுக்கு ஆடை வாங்கி கொடுத்து இருக்கின்றோம்......! சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.! நமது பிள்ளையும் அன்டை வீட்டு பிள்ளையும் உரையாடிய உரையாடல் ஒன்று நான் நேரடியாக கண்டது......
அன்டை வீட்டு பிள்ளை :,- உடுப்பு எடுத்தாச்சா ...? உனக்கு உங்க வாப்பா எத்துன உடுப்பு எடுத்து தந்த ...?
அதற்கு நமது பிள்ளை 3 டவுசர் 2 சேட்டு 1டீசட்டு என்று பதிலளித்தது அதே கேள்வியை அன்டை வீட்டு பிள்ளையிடம் கேட்டதற்கு அப்பிள்ளையின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது..... அப்பிள்ளையின் மனம் எவ்வளவுக்கு பாதிப்படையும் ..! நாம் ஒருநாளைக்கு கறி வாங்குவதற்கே ஆக குறைந்தது 1000/= ரூபாய் தேவைப்படுகின்றது..... அப்படி இருக்க அன்டை வீட்டு பிள்ளைகளுக்ககு ஆடை வாங்க 1000/=, 500/= தான் தேவைப்பட போகின்றது
இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக செலவுசெய்யம் ஒரு ரூபாய் கூட மறுமையில் பண்மடங்காகின்றது எனவே நல்ல உள்ளம் படைத்த எமது சகோதரர்கள் நமது அன்டைவீட்டையும் கோஞ்சமாச்சும் கவனிங்கப்பா......