السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 6 August 2015

இஸ்லாமிய பெற்றோர்களின் கவனத்திற்கு!

இஸ்லாமிய பெற்றோர்களின் கவனத்திற்கு!
உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய அகீதாவை சொல்லிக்கொடுத்து வளருங்கள். ஏனெனில் சுமார் 30, 40, 50 ஆண்டுகளுக்கு முன் வழிகெட்ட கொள்கையுடைய இயக்கங்கள் பெரிய அளவில் இருக்கவில்லை. 
.
ஆனால் இன்று தெருவுக்கு தெரு தேனீர் கடையை போன்று வஹாபிஸ இயக்கங்கள் தங்களின் மதஸ்தலங்கள், பள்ளிகூடங்கள் போன்றவற்றை திறந்து வைத்துக்கொண்டு வளரும் குழந்தைகளையும், அப்பாவி இளைஞர்களையும் வழிகெடுத்து வருகிறார்கள். 
.
பெற்றோர்களே! நீங்கள் குழந்தைகளாக இருந்த போதோ உங்கள் தாய், தந்தைகள் குழந்தைகளாக இருந்த போதோ இந்த வழிகெட்ட கூட்டங்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று உலகில் அறியாமை தலைவிரித்து ஆடும் காரணத்தினால் வழிகேடு வேகமாக அதிகரித்து வருகிறது.
.
பெற்றோர்களே! நீங்கள் "எனது பாட்டனார், தகப்பனார், நான் எல்லோரும் தரீக்காவாதிகள்" என்று சொல்லிக் கொண்டு இருப்பதோடு நின்று விடாமல், உங்களின் வளரும் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய அகீதாவான ஸுன்னத் ஜமாஅத் அகீதாவை சொல்லிக்கொடுத்து வழிகெட்ட வஹாபிஸ இயக்கங்களை பற்றியும் சொல்லிக் கொடுத்து வளருங்கள்.
.
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் அகீதாவை சொல்லிக்கொடுத்து வளர்க்காத காரணத்தினால் இன்று நாம் பார்க்கிறோம் எத்தனையோ குடும்பத்தில் பிள்ளைகள் பல இயக்க கொள்கைகளை இதுதான் இஸ்லாமிய கொள்கை என்று நினைத்துக்கொண்டு அவர்களின் பின்னால் சென்று வழிகெட்டு போகிறார்கள்.
.
உதாரணமாக மூத்த மகன் தப்லீக் ஜமாஅத்திலும், இரண்டாவது மகன் ஜமாஅதே இஸ்லாமியிலும், மூன்றாவது மகன் தௌஹீத் ஜமாஅத்திலும், நான்காவது மகன் ஸலபி ஜமாஅத்திலும் சேர்ந்து வழிகெட்டு போகிறார்கள்.
.
தகப்பனாரை பார்த்தால் தகப்பன் கூறுகிறார்: நான் 40, 50 வருடமாக தரீக்கத்தில் இருக்கிறேன், ஷெய்கு நாயகத்திற்கு நான் தான் குடை பிடித்தேன், எல்லா ஷெய்குமார்களும் எங்க வீட்டிற்கு வந்து இருக்கிறாங்க என்று புகழ்பாடி கொண்டு இருக்கிறார். ஆனால் பிள்ளைகளுக்கு அகீதாவை சொல்லி கொடுத்து வளர்க்காத காரணத்தினால் பிள்ளைகள் வழிகெட்டு போகிறார்கள்.
.
இதே போல் எத்தனையோ VIP தரீக்காவாதிகளை பார்க்கிறோம் அவர்களின் பிள்ளைகளின் நிலைகளை பார்த்தால் கவலையாக இருக்கிறது. உலக கல்விகளை கற்றுக்கொடுக்க லட்சகணக்கில் செலவழிக்கிறார்கள், வியாபார படிப்புகளை வெளிநாடுகளுக்கு சென்று கற்க லட்சகணக்கில் செலவழிக்கிறார்கள். வியாபார தந்திரங்களை சொல்லிகொடுக்க கால நேரத்தை செலவழிக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு அகீதாவை சொல்லிகொடுப்பதில்லை.
.
இத்தகைய ஒரு சில பணக்காரர்களின் பிள்ளைகள் மார்க்கமே இல்லாமல் யூத, நாசராக்களை போல் வாழ்கிறார்கள். ஆனால் தந்தையோ வருடா வருடம் மௌலித் ஓதுவதும், வீட்டில் பயான் வைப்பதும், ஷெய்குமார்கள் வந்தால் வீடுகளுக்கு அழைத்து வந்து விருந்து வழங்குவதிலும் பஞ்சமில்லை. ஆனால் வளரும் தலைமுறைகளோ சீரழிந்து சின்னாபின்னாமாகி போகிறார்கள்.
.
ஒவ்வொரு பெற்றோர்களும் பொறுப்புதாரிகள் நாளை விசாரிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.