السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 3 March 2018

சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்


சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்

ம‌ன்னிக்க‌வும், சிரியா யுத்த‌ம் ப‌ற்றிய‌ பின்வ‌ரும் தக‌வ‌ல்க‌ளை உங்க‌ளுக்கு எந்த‌ ஊட‌க‌மும் சொல்ல‌ப் போவ‌தில்லை:

- த‌ற்போது யுத்த‌ம் ந‌ட‌க்கும், த‌லைந‌க‌ர் ட‌மாஸ்க‌ஸ் ந‌க‌ருக்கு கிழ‌க்கே உள்ள‌ புற‌ந‌க‌ர்ப் ப‌குதியான‌ கூத்தா (Ghouta) க‌ட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளாக‌ இர‌ண்டு கிள‌ர்ச்சிக்குழுக்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்து வ‌ருகின்ற‌து.

- இத‌ற்கு முன்ன‌ர் இடிலிப் பிர‌தேச‌த்தை நோக்கி சிரிய‌ப் ப‌டைக‌ள் முன்னேறிய‌ நேர‌ம், அங்கிருந்த‌ கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் துருக்கி ம‌த்திய‌ஸ்த்த‌த்தை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்ற‌ன‌.

- ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர், கூத்தா மீது யுத்த‌ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌ சிரிய‌ அர‌சு இடிலிப் பாணி ச‌ம‌ர‌ச‌த்திற்கு முன்வ‌ந்திருந்த‌து. ஆனால், இம்முறை கிள‌ர்ச்சிக் குழுக்க‌ள் வெளியேற‌ ம‌றுத்த‌ன‌. அத்துட‌ன் ம‌க்க‌ளையும் வெளியேற‌ விடாம‌ல் ப‌ண‌ய‌க்கைதிக‌ளாக‌ பிடித்து வைத்துக் கொண்ட‌ன‌ர்.

- கூத்தா பிர‌தேச‌த்தை மீட்ப‌த‌ற்கான‌ சிரிய‌, ஈரானிய‌ கூட்டுப்ப‌டை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்ட‌து. சிரிய‌ இராணுவ‌ப் பிரிவான‌ "புலிப் ப‌டை" தரைவ‌ழித் தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌து. ர‌ஷ்ய‌ விமான‌ங்க‌ளும் குண்டு வீசிய‌தாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

- அமெரிக்கா ம‌ற்றும் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் நெருக்குத‌லால் ஐ.நா. பாதுகாப்பு ச‌பை கூடி தீர்மான‌ம் எடுத்த‌து. அத‌ற்கு ர‌ஷ்யாவும் ஒத்துழைத்த‌து. உட‌ன‌டியாக‌ போர் நிறுத்த‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும் என‌த் தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து.

- சிரிய‌ அர‌சு ம‌ட்டுமே ஒரு த‌லைப்ப‌ட்ச‌மாக‌ போர் நிறுத்த‌ம் அறிவித்த‌து. இத‌ற்கு கிள‌ர்ச்சிக் குழுக்க‌ளை பொறுப்பேற்க‌ வைக்க‌ முடியாது. ஏனென்றால் அவை ஐ.நா. வினால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. சிரிய‌ அர‌சு அந்த‌ சாட்டை ப‌ய‌ன்ப‌டுத்தி மீண்டும் போரைத் தொட‌ங்கிய‌து.

- ஐ.நா., சிரிய‌ அர‌சின் மீது போர்நிறுத்த‌ மீற‌ல் குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. ஏனெனில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு எதிரான‌ யுத்த‌த்தில் போர்நிறுத்த‌ம் க‌டைப்பிடிக்க‌ப் பட‌ வேண்டிய அவ‌சிய‌ம் இல்லை.

- கூத்தா பிர‌தேச‌ம் இர‌ண்டாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டு நான்கு பெரிய‌ ம‌ற்றும் சிறிய‌ இய‌க்க‌ங்க‌ளின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌து. Jaysh al-Islam, al-Nusra Front, Ahrar al-Sham, Faylaq al-Rahman ஆகிய‌ நான்கும் கூட்டுச் சேர்ந்தோ, த‌னித் த‌னியாக‌வோ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌.

- இவ‌ற்றில் மிக‌ப்பெரிய‌ இய‌க்க‌மான‌ அல் நுஸ்ராவின் முந்திய‌ பெய‌ர் அல் கைதா. மிக‌த் தீவிர‌மான‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என்ப‌து சொல்லாம‌லே புரியும். ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளும் அப்ப‌டித் தான்.

- சிரிய‌ப் ப‌டைக‌ளின் எறிக‌ணை வீச்சுக்கும், விமான‌க் குண்டுக‌ளுக்கும் இதுவ‌ரை ஐநூறு பொதும‌க்க‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர். அதில் நூற்றுக்க‌ண‌க்கான‌ பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் அட‌ங்குவார்க‌ள்.

- அங்குள்ள‌ ம‌க்க‌ள் விருப்பத்திற்கு மாறாக‌ கிள‌ர்ச்சியாள‌ர்க‌ளால் தடுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் அர‌ச‌ ஊழிய‌ர்க‌ள் ட‌மாஸ்க‌ஸ் சென்று வ‌ர‌ அனும‌தித்திருந்த‌ன‌ர். ஆனால், "பாதுகாப்புக் கார‌ண‌ங்க‌ளை முன்னிட்டு" பெண்க‌ளும், குழ‌ந்தைக‌ளும் வெளியேற‌ அனும‌திக்க‌வில்லை.

- சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் ஐ.எஸ். க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ ராக்கா மீது அமெரிக்க‌ விமான‌ங்க‌ள் குண்டு போட்ட‌ன‌.ஒரு க‌ட்டிட‌ம் கூட‌ மிச்ச‌மில்லாம‌ல் த‌ரைம‌ட்ட‌மாகின‌. அன்று ப‌லியான‌ குழ‌ந்தைக‌ள், பெண்க‌ள், பொது ம‌க்க‌ளின் ச‌ரியான‌ எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அது ப‌ற்றி உல‌கில் யாருக்கும் அக்க‌றை இருக்க‌வில்லை. ஏனெனில் அது அமெரிக்காவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்.
சிரியாவின் இறுதிப் போர் - இதுவரை வெளிவராத உண்மைகள்

see more

இலங்கையின் முதல் இறை இல்லம்.


இலங்கையின் முதல் இறை இல்லம். 
இலங்கையின் முதல் இறை இல்லம் பேருவளை தர்கா நகர் சீனா துறை ஜும்ஆப் பள்ளி வாசல் என்றதொரு தகவலினை சோலை மலர் சொல்லியிருப்பதைக் காண முடிகிறது. ஆனாலும் அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹ{ அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் காலத்தில் அவர்களாகவே தமது தோழர்களில் இருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலின்படி அருமைத் தோழர்கள் தங்களது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிச்சயம் வணக்கஸ்தலங்களை அமைத்திருக்கவேண்டும். ஸஹாபாக்கள் இலங்கைக்கு வந்தடைந்த பின்னர் அப்பகுதி அரசன் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். தமது மார்க்கப் பணியினை மேற்கொள்வதற்கு முழுமையான ஆதரவும் வழங்கியிருக்கின்றார். 
காலி தலாப்பிடியா சோலை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளி வாயில் கி.பி.1604ல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபோது ஹிஜ்ரி 8-9-139 என்று எழுதப்பட்ட மீசான் கல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் இப்பள்ளிவாயில் இற்றைக்கு 1299 வருடங்கள் பழமையானது. 

இப்பள்ளிவாயில் 27-06-1986 ஆம் வருடம் மீண்டும் புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாயின. 03-03-1987ஆம் திகதி இப்புனரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும்போது அதிசயச் சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதனை நேரில் கண்டவர் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணிää ஜனாப் எம்.எச்.எம். வஹாப் (சமாதான நீதிபதி) முன்னிலையில் விசாரித்து பதிவு செய்து கொண்டது. அந்த நிகழ்வு வருமாறு.
பள்ளியின் மிகப் பழைய இடங்களில் ஒன்றான மிம்பரை உடைப்பதற்காக கையில் இருந்த ஆயுதத்தினால் அடித்தேன். அப்போது அதை உடைக்காதே என்றதொரு சப்தம் கேட்டது. அதேநேரம் எனது கையில் இருந்த ஆயுதத்தினை அவர் பறித்தும் எடுத்தார். பிரம்பால் என்னை அடிக்கத் தொடங்கினார். தாடியுடன் காணப்பட்ட அவர் நீண்ட வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். பின்னர் அவர் மறைந்துவிட்டார். (சோலை மலர்)

இதுää இலங்கையை வந்தடைந்த அருமைத் தோழர்களான ஸஹாபாக்களுடன் தொடர்புபட்ட இடம் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தப் பள்ளி வாயில் இலங்கையின் முதல் பள்ளியெனலாம். இதன் அடிப்படையில் இப்பள்ளி வாயில்  1436 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முதல் இறை இல்லம்.
அதன் உண்மையான புகைப்படம் இல்லை


Thursday, 1 March 2018

கர்ழாவி பல்டி !

கர்ழாவி : சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் !!!

தான் பிறந்து படித்து வளர்ந்த எகிப்துக்கு டடா கூறிவிட்டு கட்டாருக்கு வந்து ராஜபோக வாழ்க்கை வாழந்த இக்வானுல் முஸ்லிமீன்களின் இணையற்ற செய்கு கர்ழாவி, இவ்வளவு காலமும் கட்டாரில் இருந்த ஐரோப்பிய கலாச்சாரங்களை எதிர்க்க வில்லை! கட்டாரில் மிகக் கோலாகலமாக நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எதிர்க்கவில்லை. முழு மத்திய கிழக்குக்கும் இருந்த ஒரே அமெரிக்க யூத இராணுவ Base ­எதிக்கவில்லை! இப்போது எல்லா அரபு நாடுகளையும் பின்பற்றி கட்டாரும் அரபுலக அரசியல் தலைவர் எகிப்து ஜனாதிபதி ஸிஸிக்கு பூரண ஆதரவு தெரிவித்த பின்னர், இப்போது தான் கர்ழாவிக்கு தென்படுகிறது, கட்டாரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெறுவது! இப்போது தான் காராசாரமாக அதை எதிர்க்கிறார்! பாய்ந்து பாய்ந்து பார்த்து எட்டாததால் கடைசியாக, சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று தந்திர நரி கூறியதை நாம் சிறு வயதில் படித்தது நினைவு வருகிறது .

பாருங்கள் வீடியோ :





Thursday, 28 July 2016

மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா?


மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா?

TNTJ அமைப்பினருக்கும் SYF சுன்னத் வல் ஜமாஅத் யூத் பெடரேஷன் அமைப்பினருக்குமிடையே மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா என்ற தலைப்பில் கடந்த இரண்டு தினங்களாக(26,27)விவாதம் நடைபெற்று நிறைவுக்கு வந்திருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்!
மத்ஹபுகளில் ஆபாசங்களும் அசிங்கங்களும் மார்க்கத்துக்கு முரணான சட்டங்களும் நிறைந்திருக்கின்றன என்று ததஜ அமைப்பினர் தனது நிலைப்பாடாகவும், மத்ஹபுகளில் ஆபாசங்களோ அசிங்கங்களோ இல்லை என்பதும் மாறாக சைத்தானின் தூண்டுதலால் ஒருவன் ஆபாசமான காரியங்களில் ஈடுபட்டால் அவனுக்கு என்ன சட்டம் என்றுதான் மத்ஹபு இமாம்கள் எழுதிவைத்திருக்கிறார்கள் என்றும் இன்னும் ததஜ யூத மதத்தில்தான் அசிங்கங்களும் ஆபாசங்களும் மார்க்கத்துக்கு முரணான சட்டங்களும் நிறைந்திருக்கின்ற என்பதை சுன்னத் ஜமாத் தரப்பினர் நிலைப்பாடாகவும் கொண்டு விவாதம் துவங்கியது.
நாம் இவ்விவாதத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து அதில் வைக்கப்பட்ட வாதங்களை அலசுவது பொருத்தமாக இருக்கும்.
01)ததஜ தரப்பில் மத்ஹபு ஆபாசம் என்பதற்கு வைக்கப்பட்ட சான்றுகளும் ஆதாரங்களும்
02)சுன்னத் ஜமாத் தரப்பில் ததஜ அமைப்பினரின் ஆபாச சட்ட்ங்களை நிறுவும் வகையில் வைக்கப்பட்ட ஆதாரங்கள்
மத்ஹபுகளில் ஆபாசங்களும் இஸ்லாத்துக்கு முரணான சட்டங்களும் இருப்பதாக பல விடயங்களை ததஜவினர் எடுத்துவைத்த போதும் அவை அவர்களது நிலைப்பாட்டை நிறுவுவதாகவும் மத்ஹபை ஆபாசம் என்று பிரகடனப்படுத்தக்கூடிய வகையில் அமைந்ததாகவும் இருக்கவில்லை என்பதுதான் நிதர்சணமாகும்.இன்ஷா அல்லாஹ் அவற்றை அலசுவோம்.
01)தன் உறுப்பை தன் துவாரத்தில் நுழைத்தால் அவனுக்கு ஹத் உண்டா இல்லையா என்று மத்ஹபில் சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இதனை முன்வைத்து இப்படியெல்லாம் நடக்க சாத்தியமா? யாருக்காவது ஆண்குறி இவ்வாறிருக்குமா?360 டிகிரி வரை வளையுமா என்றெல்லாம் தன்னுடைய ஆபாச சிந்தனை கொண்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர்.
அதற்கு சுன்னத் ஜமாத் தரப்பில் இதுவெல்லாம் நடக்க சாத்தியமே இல்லை என்பதை குறைந்த பட்சம் ஒரு அறிவியல் ஆய்விலிருந்தாவது எடுத்துக்காட்டிவிடுங்கள் என்று சவால் விடப்பட்டும் இறுதி வரை அதற்கு அவர்களால் பதிலளிக்கமுடியவில்லை.
ஆனால் அவ்வாறு நடக்க சாத்தியம் உண்டென்பதற்கு வீடியோ ஆதாரங்களும் அறிவியல் தகவல்களும் நம்மிடம் உண்டு
02) ஒருவன் தன் மனைவியை அடிமைப்பெண் பார்த்துக்கொண்டிருக்க உடலுறவில் ஈடுபடலாம் என்றும் ஆனால் தன் மனைவி பார்த்திருக்க அடிமைப்பெண்ணுடன் உறவுகொள்வது கூடாதென்றும் மத்ஹபில் வருவதாக எடுத்துக்காட்டி இப்படி blue film போன்று மத்ஹபு சட்டம் இருக்கிறதே என்ற விமர்சனம் ததஜ அமைப்பினரால் ஆக்ரோஷமாக எடுத்துவைக்கப்பட்டது.
ஆனால் இந்த விடயத்தில் ததஜவினரின் வக்கிர புத்தியும் இருட்டடிப்பும் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை சுன்னத் ஜமாத்தினரின் பதில்கள் நமக்கு தெளிவுபடுத்தியது.
அடிமைப்பெண்ணுக்கு முன்னால் உங்கள் மனைவியை உடலுறவுக்காக அழைத்துச் செல்வதில் தவறில்லை.ஆனால் மனைவிக்கு முன்னால் உங்கள் அடிமைப்பெண்ணை உடலுறவுக்காக அழைத்துச் செல்லாதீர்கள்.ஏனெனில் அது அவளுக்கு ரோஷத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு ஆபாச சிந்தனைகளுக்கு அப்பால் சொல்லப்பட்ட சட்டத்தை ஆபாசமாக சித்தரிக்க முனைந்த ததஜ அமைப்பினரின் யூதத்தனமும் அயோக்கியத்தனமும் விவாத களத்தில் தவிடுபொடியாக்கப்பட்டது.
03)அதே போல சிறு வயது பிள்ளையுடன் உறவு கொண்டால் அவனுக்கு ஹத் அடிக்க வேண்டும் என்று மத் ஹப் சொல்கிற சட்டத்தை முன்வைத்து யாராவது இப்படி செய்வார்களா? இது ஆபாசம் இல்லையா என்ற விமர்சனம் ததஜ அமைப்பினரால் முன்வைக்கப்பட்டது.
இதற்கு சுன்னத் ஜமாத் தரப்பில் அமேரிக்காவில் 2 மாத குழந்தையுடன் பாலியல் வல்லுறவு கொண்டு கைதான ஒரு நபரைப் பற்றி ஆதாரபூர்வமான செய்தி திர்யைடப்பட்டதுடன் இவ்வாறான காமுகர்களுக்கான சட்டமாக மத் ஹபு இமாம் இவ்வாறு சொன்னது தவறென்றால் ஆபாசம் என்றால் இந்த நபருக்கு என்ன சட்டம்??? ஆபாசம் என்று சொல்லி அவனை துரத்திவிடுவீர்களா? சட்டம் சொல்வீர்களா??
காமுகர்களுக்கு இமாம்கள் சொன்ன சட்டம் உங்களுக்கு ஏன் சுடுகிறது????என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு அந்த விமர்சனமும் தகர்த்தெறியப்பட்டது.
04)அதே போல மஙானியில் மிஷ்வாக்கினுடைய தன்மைகள் தொடர்பில் சொல்லப்பட்ட விடயத்தை முட்டால்தனமானது என்று விமர்சிக்க வந்த ததஜ அமைப்பினரின் வாதம் சுன்னத் ஜமாத் தரப்பில் முன்வைக்கப்பட்ட அமேரிக்க அறிவியல் ஆய்வு முடிவுகளின் படி தகர்க்கப்பட்டது.
05)கண்ணிப்பரிசோதனை என்றும் முட்டைப்பரிசோதனை என்றும் மத்ஹபில் ஆபாசம் அங்கீகரிக்கப்படுவதாக இத்தனை வருடகாலம் மக்களை ஏமாற்றி வழிகெடுத்த ததஜ அமைப்பினரின் யூதத்தனம் இந்த விடயத்திலும் விவாத களத்தில் நிரூபிக்கப்பட்டது.
ஒரு வழக்கு என்று வருகிற சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணின் கண்ணித்தன்மை கண்டிப்பாக பரிசோதிக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற நிலையில் அந்தக்காலத்தில் இதனை அடையாளம் கண்டுகொள்ள முட்டை பயண்படுத்தப்படும் என்று இமாம்கள் சொன்ன விடயத்தை மிக ஆபாசமாக உங்கள் வீட்டுப்பெண்களுக்கெல்லாம் இப்பசெய்வீர்களா என்ற கேள்வியைத்தொடுத்தார்கள்.
இந்த நடைமுறை இன்றளவிலும் மொரோக்கோ போற நாடுகளில் நடைமுறையில் இருப்பதாக விவாத களத்தில் தெளிவாக சொல்லப்பட்டு இவை ஆபாசம் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது.
06)இமாமத்துக்கு தகுதியானவரின் மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று மத்ஹபு கிதாபுகளில் வருவதாக ஒரு குற்றாச்சாட்டை முன்வைத்து இப்படி அழகி போட்டி நடத்தித்தான் நீங்க இமாமைத் தெரிவு செய்வீர்களா என்ற விமர்சனமும் ததஜவினரால் முன்வைக்கப்பட்டது!
சுன்னத் ஜமாத் தரப்பில் இதற்கும் தெளிவான விளக்கம் சொல்லப்பட்டது.இமாமுக்கு தகுதியானவர் யார் என்று இமாம்கள் பல தகுதிகளை பட்டியல்படுத்திக்கொண்டு வரும்போது அவ்வளவிலும் இருவர் சமமாக இருந்துவிட்டால் யாருடைய மனைவி அழகானவர் என்று பார்க்க வேண்டுமென மத்ஹப் சொல்லிவிட்டு அதற்கான காரணத்தையும் சொல்கிறது.அதாவது மனைவி அழகாய் உள்ளவன் மனம் சலனமில்லதவனாக கொஞ்சம் பேணுதல் உள்ளவனாக இருப்பான் என்று பேணுதல் அடிப்படையில் ஓர் தகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது.இதில் எவ்வித ஆபாசமோ அசிங்கமோ இல்லையென்பதும் களத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டது.
06)பல காலமாக செத்து மிதக்கும் மீனை சாப்பிடுவது மக்ரூஹ் வெறுக்கத்தக்கது என மத் ஹபு கிதாபில் வந்த சட்டத்தை செத்த மீன் வெறுக்கத்தக்கது என்ற கிதாபில் வருவதாக அப்பட்டமாக அபாண்டம் சுமத்திய ததஜ காபிர்களின் யூத திரை சுன்னத் ஜமாத் ஆலிம்களால் கிழிக்கப்பட்டது.
07)அடுத்தவன் மனைவியோடு உறவுகொண்டாலும் ஹத் இல்லை என மத் ஹபு கிதாபில் உள்ளதாகவும் மத் ஹபு இமாம்கள் விபச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் இதுவரைகாலமும் அவதூறு சொல்லிவன்த ததஜ யூதர்களுக்கு விவாத களத்தில் சாட்டையடி வழங்கப்பட்டது.
இது போன்று சட்டங்களாகவும் ,நிர்ப்பந்தத்துக்ககாவும் சாட்சிக்காகவும் மருத்துவத்துக்குமாக சொல்லப்பட்ட பல சட்டங்களை ஆபாசமாக சித்தரித்து மத்ஹபுகளின் பேரில் ஓர் வெறுப்பை உண்டுபண்ண ததஜ யூதர்கள் மேற்கொண்ட யூத சதி சுன்னத் ஜமாத் ஆலிம் பெருமக்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
மத்ஹபு இமாம்கள் விபச்சாரத்திற்கு தண்டனை இல்லை என்றும் சொல்லவில்லை! விபச்சாரத்தை செய் என்றும் தூண்டவில்லை!
மாறாக அவன் எவ்வளவு இழிவானவன் என்பதையும் அவனுக்குரிய கடுமையான தண்டனையையும் விளக்குகிறது!
அப்படி இருக்க இவ்வாறு ஒருவன் நடந்தால்,இவ்வாறு ஒருவன் செய்தால் என்று விபரிக்கிற வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு ஆபாசம் ஆபாசம் என்று கொக்கரிப்பது அறிவுபூர்வமான வாதமா???????? என்ற கேள்வி சபையோரை சிந்திக்கவைதது.
இன்னும் ஒரு முக்கியமான விடயம் யாதெனில் இத்தனை வருட காலமாக பல மேடைகளில் பல உரைகளில் மத்ஹபின் பெயரால் இவர்கள் முன்வைத்துவந்த ஆலிம்கள் கஞ்சா அடிக்கலாம்,நாய்பிரியானி போன்ற குற்றச்சாட்டுக்களுகு நாங்கள் உங்கள் முன்னால் இருக்கிறோம் நிரூபிக்க முடியுமா என்று சவால்விடப்பட்டும் கடைசி வரை அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.
அக்கட்டுரையின் அடுத்த பகுதி சுன்னத் ஜமாத் தரப்பில் ததஜ யூதர்கள் பற்றி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி அலசுகிறது.
மத்ஹபில் ஆபாசத்தை நிரூபிக்க வந்த ததஜ யூத நசராணிகள் தங்கள் கொள்கையைக் கூட காப்பாற்ற முடியாமல் தடுமாறிய சம்பவங்களையே விவாதகளத்தில் நாம் காண முடிந்தது.
01) ஆதம்,ஹவ்வாஅலைஹிஸ்ஸலாத்துவஸ்ஸலாம் அன்னவர்கள் சுவர்க்கத்தில் நிர்வாணமாக இருந்தார்களாம் என்று ததஜ யூதர்கள் ஆபாசம் கற்பித்ததோடு அதற்கு குர் ஆனையும் துனைக்கு அழைத்து குர் ஆனையும் ஆபாசக்களஞ்சியமாக சித்தரிக்கும் இவர்களது யூத கருத்துக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டும் இறுதிவரை முறையான பதில்கள் வழங்கப்படவில்லை.
02)அடுத்தவன் பொண்டாட்டியோடு ஜட்டி அணிந்து கொண்டு அவளோடு சேர்ந்து சாப்பிடுவதை ஆதரிக்கிறீர்களே இது ஆபாசமாக தெரியவில்லையா என சுன்னத் ஜமாத் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டதற்கு இதை நாங்களா சொல்கிறோம் அல்லாஹ்தானே சொல்கிறான் என்பதாக அல்குர் ஆனின் பேரிலும் அல்லாஹ்வின் பேரிலும் இவர்களின் ஆபாச சிந்தனையை சாட்ட முனைந்த போது குர் ஆன் இதனை ஆதரிக்கவில்லை இது தெளிவான யூதத்தனம் என்பது சுன்னத் ஜமாத் தரப்பில் நிரூபிக்கப்பட்டது.
03.நபிகளார் 13 ஆண்டு காலம் இணைவைப்பு என்றால் என்னவென்றே தெரியாமலிருந்தார்கள் என்று அபாண்டமாக அப்பட்டமாக பெருமானாரை முஷ்ரிக்காக்கி இருக்கின்றீர்களே என்று வைக்கப்பட்ட மிகப்பெரும் குற்றச்சாட்டுக்கு இறுதிவரை மௌனத்தை மட்டுமே ததஜவினரால் தரமுடிந்தது.
04) பெருமானார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் காம உணர்வினால் தான் அன்னை ஆயிஷா நாயகியை மனமுடித்தார்களாம்!( நவூதுபில்லாஹ்)இவ்வாறு பீஜேவினுடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள கருத்தை முன்வைத்து
இதை விட ஒரு ஆபாசம் ததஜ யூத மதத்தில் இருக்க முடியுமா????
கடுகளவு ஈமான் உள்ள மனிதனின் உள்ளத்தின் ஓரத்திலாவது இப்படி ஒரு சிந்தனை எழுமா???என்று கேள்வி கேட்கப்பட்ட போதும் இறுதி வரை வாயே திறக்காமலிருந்தார்கள்
05)அதே போல ஸஹாபாக்கள் மீது அபாண்டம் சொல்லி அவர்களை விபச்சாரத்துக்கு ஆதாரவானவர்கள் போல சித்தரிக்கும் பல ததஜ யூதக்கொள்கைகள் அவர்கள் முன் போடப்பட்டு விளக்கம் கோரப்பட்ட போதிலும் ஒன்றுக்குக் கூட அவர்களால் பதிலளிக்க முடியவில்லை(இபுனு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு மேட்டர்,இபுனு உமர் ரழியல்லாஹு அன்ஹு மேட்டர்,ஆயிஷா நாயகி மேட்டர்,இன்னும் பல சஹாபாக்கள் மேல் சொல்லப்பட அவதூறுகள்)
06)இமாம் அஹமத ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் பெயரால் ததஜ யூதர்கள் செய்த இட்டுக்கட்டும் இருட்டடிப்பும் விவாத களத்தில் நிரூபிக்கப்பட்டது.
இவ்வாறு ஏராளமான குற்றச்சாட்டுக்கள் அவர்களை நோக்கி வீசப்பட்டும் ஒன்றுக்குக்கூட பதில் சொல்லத் துப்பற்றவர்களாக அல்லாஹ் அவர்களது நிலையை ஆக்கியிருக்கினான்.அல்ஹம்துலில்லாஹ்!
இறுதியாக விவாதத்தில் ஏற்பட்ட தோல்வியை மறைக்கவும் தன்னுடைய அடியார்களை திருப்திப்படுத்தவும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹசரத் அவர்களை நோக்கி ஒரு சவால் விட்டார்கள்.ஆனால் உடனே அந்த சவாலை ஏற்பதாக ஜமாலி ஹசரத் அவர்கள் அறிவித்ததும் திக்குமுக்காடிப்போன யூதர்கள் சிங்கத்தைக் கண்டு விரண்டோடிய கழுதைகளின் நிலைக்கு ஒப்பானவர்களாக விரண்டோடினார்கள்!
அல்லாஹு அக்பர்!!
இவ்விவாதத்தில் மத்ஹபு நூற்களில் எவ்வித ஆபாசங்களும் அசிங்கங்களும் இல்லை என்பதும் ததஜ யூத மதத்தில் அசிங்கத்தையும் கேவலத்தையும் தவிர வேறொன்றும் இல்லை என்பதும் தெட்டத்தெளிவான நிரூபணமானது! அல்லாஹு அக்பர்! அல்ஹம்துலில்லாஹ்!!
அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் இத்தனை ஆண்டு காலம் மதுஹபில் ஆபாசம் உள்ளதாக சித்தரித்தும் மத்ஹபின் சட்டங்களை இருட்டடிப்பு செய்தும் பீஜே வகையறாக்களாலும் அவர்களைச் சாராத மற்றைய தவ்ஹீத் யூதர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த அவதூறுப்பிரச்சாரம் இனியும் சமூகத்திடத்தில் வேகப்போவதில்லை என்ற அளவில் சுன்னத் ஜமாத் தரப்பினர் இவ்விவாதத்தில் 100% வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பதை விவாதத்தை முழுமையாக காணுகிற ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.!
ஜஷாகல்லாஹு கைர்!
U.L.Mohamed Manas
Kalmunai
Srilanka

Monday, 18 July 2016

துருக்கிய இராணுவப் புரட்சியும் ஸலவாத்தின் மகிமையும்

துருக்கிய இராணுவப் புரட்சியும் ஸலவாத்தின் மகிமையும்

உண்மையில் நாம் கண்கூடாக கண்ட பல காட்சிகள் நெஞ்சை குளிரவைக்கிறது. ரஜப் தய்யிப் எற்தோகான் அவர்கள் நக்ஷபந்திய்யா தரீகா வின் ஒரு முரீதாக கடந்த சில வருடங்களுக்கு முன், காலம் சென்ற அஷெய்க் நாசிம் அல்ஹக்காணி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்களிடம் பைஅத் பெற்றுக்கொண்டார். நேற்றைய தினம் ஏற்படவிருந்த இராணுவப் புரட்சியை அல்லாஹ் புனித சலவாத்தின் மூலமும், சிக்ருகளின் பரகதைக் கொண்டும் தவிடுபோடியாக்கினான் என்று சொல்வதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆம் துருக்கிய நாட்டு மக்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்ததால், எர்தொகான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி தனது நாட்டு மக்களை புரட்சிக்கு எதிராக களத்தில் இறங்குமாறு அழைப்ப்பு விடுத்த அதேநேரம் நாட்டு மக்களோ வீதிகளில் சலாவத்துக்களும், ஸிக்ருகள் மூலமுமே தமது பலத்தை அலங்கரித்துககொண்டிருந்ததை பார்க்கும் பொது கண்குளிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பள்ளிவாயலில் ஒலிபெருக்கி மூலம் சலவாத்துக்கள் ஒலித்தவண்ணம் இருந்தை அறிய முடிந்தது. வீதிகளில் வட்டவடிவில் அல்லாஹ்வை துதி செய்தவர்களாக இருந்தார்கள்.
ஆம் இவைகளை பார்க்கும் பொது அண்மையில் வாசித்த "முஅஸ்கர்" சஞ்சிகையில் வெளிவந்த (by Fazhan Nawas) அவர்களின் ஒரு கட்டுரை எடுத்துக்காட்டாக அமைந்தது
கி. பி. 1834 செச்நியாவின் சுதந்திரப் போராட்டத்தில் எமது சூபியாக்களின் பங்களிப்பை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இமாம் ஷாமில் அவர்கள் 1797 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி ரஷ்யாவின் செச்னிய பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கிம்ரி’ என்ற கிராமத்தில் பிறந்தார்கள். இவரின் இயற்பெயர் அலி என்பதாகும். இவர்கள் சிறு வயது முதல் ஆன்மீகத்துறையோடு பின்னிப் பிணைந்திருந்தார்கள். தன் வாழ்வை ஆன்மீக கட்டமைப்புக்கு அமைவாகவே முன்னெடுத்தார்கள். சிறு வயது முதல் அல் குர்ஆன், ஹதீஸ், தப்ஸீர் ஆகிய கலைகளை உரிய அறிஞர்களிடத்தில் கற்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இவர்கள் பிறந்த காலத்தில் ரஷ்ய சாம்பிராஜ்ஜியம் தனது ஆள்புலத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இதற்காக மேற்கு ரஷ்யாவிலிருக்கும் முஸ்லிம் ஆள்புலங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்து குறிப்பாக கி.பி. 1800 ஆம் ஆண்டுக்குப்பிறகு உஸ்மானிய கிலாபத்திற்குச் சொந்தமான நிலப்பரப்புக்களை கைப்பற்றும் முயற்சியை ரஷ்யா அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமான காலப்பகுதிகளில் இமாம் சிறுவயதாக இருந்தார்கள். இந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவுக்கு எதிரான போராட்டங்களை செச்னியாவில் இருந்து மதிப்புக்குரிய தலைவராக கருதப்படும் அஷ்ஷெய்க் அல் கஸ்ஸாலி அல் முஸ்லா அவர்கள் வழிநடத்திச் சென்றார்கள். கி.பி. 1832 ஆம் ஆண்டு ரஷ்ய படையினருடன் இடம் பெற்ற மோதலின் போது ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் உயிரிழந்தார்கள். இதனைத் தொடர்ந்து செச்னியாவின் தளபதியாக இமாம் ஷாமில் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
.
கி.பி. 1834 ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிராக செச்னிய படையின் தளபதியாக இமாம் ஷாமில் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இமாம் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் போராட்ட வீரர் மாத்திரமன்றி பல துறைகளிலும் திறமைவாய்ந்த ஆளுமை மிக்கவராக மதிக்கப்பட்டார்கள். குறிப்பாக செச்னிய பிரதேசத்தில் தலைதூக்கியிருந்த கோத்திரப் பிரச்சினைகளுக்கு அவர் வழங்கிய தீர்ப்புக்கள் இன்றும் ரஷ்யாவின் அரசியல் வரலாற்றில் போற்றிப் பேசப்படுகின்றன. யுத்தகாலத்தில் கொரில்லாப் போர் தந்திர முறைமையை முதலில் அறிமுகம் பெருமையும் அவரையே சாறும். இன்று வரை “கெரில்லா போர்” முறையினை அறிமுகம் செய்த முதலாவது பெருமை இமாம் அவர்களையே சாறும் என்று பிரித்தானிய கலைக்களஞ்சியங்கள் சான்று பகிர்கின்றன.
இமாம் ஷாமில் அவர்கள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்களை ஒன்று திரட்டி போராடிய தலைவராக கருதப்படுகிறார்கள். ரஷ்யாவின் ஆள்புல விஸ்தரிப்பு வேகமாக இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலே இமாம் அவர்கள் பிறந்தார்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாகவும் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். கஸகஸ்தான் மக்களின் 03 ஆவது இமாமாகவும் அவர்கள் மதித்து நோக்கப்படுகிறார்கள். மாவீரன் நெப்போலியனின் பெரும் படையினை அழித்த ரஷ்யப் படையினருக்கு கூட இமாம் ஷாமில் அவர்களின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நெப்போலியனின் படைகளை இரண்டு தடவைகள் அனுப்பியும் இமாம் அவர்களின் படையை கூட நெருங்க முடியவில்லை. “நெப்போலியன் கரியாக இருந்தால் இமாம் அவர்கள் நெருப்பாக மாறிவிடுகிறார்கள்” என்று உஸ்மானிய வரலாற்றுக் குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
.
“இமாம் அவர்களுடன் போரிடச் சென்ற ரஷ்யப்படையில் 02 பேர் (தளபதியும் ஒரு போராட்ட வீரரும்) மாத்திரமே உயிருடன் திரும்புவார்கள்” என்று துருக்கியின் வரலாற்று ஆசிரியர் யுடடிந லுயளநச என்பவர் கூறுகிறார்கள். ஒரு இறைநேசராகவும் இமாம் ஷாமில் அவர்கள் கருதப்படுகிறார்கள். தனது படையினரை ஆத்மீக ரீதியாகவும் வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் 'ஸ{ஹைப் அல் எபந்தி அல் பகீனி" என்பவர் “தபாகத்” என்ற யுத்தத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள். “இமாம் ஷாமில் அவர்களின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தபோது ஷரீஆ புறக்க்கணிக்கப்பட்ட விடயமாக மாற்றப்பட்டுவிட்டது என்கிறார்கள். நக்ஷபந்தியா அமைப்பின் ஆசிரியராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். “கிம்ரி” என்ற கிராமத்தில் இருந்த சகலரும் இமாம் ஷாமில் அல்லது அஷ்ஷெய்க் அல்-காஸி ஆகியோரின் மாணவர்களாக இருந்தார்கள்.
.
25 ஆண்டுகள் போராட்டத்தில் இமாம் ஷாமில் அவர்கள் ஈடுபட்டு இருந்தாலும் கல்வித்துறைக்கான முக்கியத்துவத்தை அவர்கள் குறைக்கவில்லை. கல்விக்காக பைத்துல்மால் நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மத்ரஸா அமைக்கப்பட்டது. கல்வியைத் தேடிச் செல்பவர்களுக்கு போராட்டங்களில் கலந்து கொள்வதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. யுத்தங்கள் தன்நிகர் இல்லாத தளபதியாகவும் அவர்கள் விளங்கினார்கள். ரஷ்யாவின் அவுல்கோ யுத்தத்தின் போது இமாம் ஷாமிலுடன் ரஷ்யர்கள் யுத்தம் செய்தார்கள். இதன்போது இமாம் அவர்களின் 300 மாணவர்கள் மாத்திரமே உயிரிழந்தார்கள் ஆனால் நவீன தொழிநுட்பங்களைக் கொண்டிருந்த ரஷ்யப் படையில் நாளாந்தம் 5,000 படைவீரர்கள் உயிரிழந்து கொண்டிருந்தார்கள் என்று ரஷ்யாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இமாம் ஷாமில் அவர்கள் கி.பி. 1868 ஆம் ஆண்டு ரஷ்யாவின் 02 ஆவது அலெக்ச்சாண்டர் மன்னருடன் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்தார். ரஷ்யாவின் செய்ன் பீடர்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மண்டபத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கி.பி. 1868 ஆம் ஆண்டு உக்ரைன் தலைநகரான “கியூ” நகருக்குச் செல்லும் வாய்ப்பு இமாம் ஷாமில் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இமாம் ஷாமில் சென்ற ஒவ்வொரு இடத்திற்கும் ரஷ்ய அதிகாரிகள் அவர்களுக்கு உயர்மட்டத்திலான மரியாதையை வழங்கினார்கள். இமாம் ஷாமில் அவர்கள் சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்தாலும் கூட அவருடைய பண்புகள், இறையச்சம் பேணுதல் போன்ற நற்பண்புகள் ரஷ்யாவின் கிறிஸ்தவ அரச சபையை என்றும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
.
கி.பி. 1869 ஆம் ஆண்டு இமாம் அவர்கள் ரஷ்யாவின் அரச மரியாதையோடு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார்கள். துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகருக்குச் சென்ற போது இமாம் அவர்களுக்கு சுல்தான் அப்துல் அஸீஸ் அவர்கள் அரச மரியாதையளித்தார்கள். மக்கா நகருக்குச் சென்ற போது அங்கு பிரான்ஸி;யரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அல்ஜீரியாவில் போராட்டங்களை மேற்கொண்டு வரும் அல்ஜீரியா சுதந்திரப் போராட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான அமீர் அப்துல் காதர் அல் ஜெஸாயரி அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது. கி.பி. 1871 ஆம் ஆண்டு இமாம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாயலுக்கு சென்ற சம்பவம் உஸ்மானிய வரலாற்றில் முக்கிய ஆவணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிகழ்ந்த சம்பவத்தை துருக்கியின் வரலாற்று ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
இந்த சம்பவத்தை அஷ்ஷெய்க் பதுர்தீன் அபெந்தி என்ற வரலாற்று ஆசிரியர் பதிவு செய்திருப்பதாக நுnஉலஉடழிhநனயை டீசவையnயை என்ற கலைக்களஞ்சியம் கூறுகிறது. இமாம் ஷாமில் அவர்களின் வருகையை அறிந்து கொண்ட மதீனாவாசிகள் மஸ்ஜிதுன் நபவிக்கு விரைந்தார்கள். அவர்களைச் சந்திக்கும் முன்னர் கண்ணீர் சிந்திய நிலையில் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாயலுக்கு நுழைந்தார்கள். ஆனால் மதீனா வாசிகளோ இமாம் அவர்களை தாங்கள் முதலில் சந்திக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தனர். ஆனால் இமாமவர்கள் மதீனாவாசிகளுக்கு முன்னர் தாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாயலுக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள். அதற்கமைய அவர்கள் முதலில் நுழையும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்கள்.
ரஷ்யாவுக்கு எதிரான செச்னியாவின் போராட்டம் உலக வரலாற்றில் கௌரவமான முறையிவ் இடம்பெற்ற போராட்டமாகும் என்று நவீன அரசியல் வரலாறுகள் சுட்டிக்காட்டுகின்றன. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக நீண்டகாலம் போராடிய ஒரு போராட்ட வீரராக செச்னியாவின் முன்னால் ஜனாதிபதி அஸ்லான் நஷ்வதொப் அவர்கள் கருதப்படுகிறார்கள். செச்னியாவின் 03 ஆவது ஜனாதிபதியாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். 1997-2005 வரை அவர்கள் செச்னியாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார்கள். ரஷ்யாவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்திருந்திருந்த கருத்துக்கள் இன்றுவரை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன. செச்னியாவைச் சேர்ந்த போராட்ட வீரர்களின் எண்ணிக்கை 4,000 ஐ விட குறைந்திருந்தது, தலைநகர் குரோஸினியில் 837 முஸ்லிம் படைவீரர்கள் மாத்திரமேயிருந்தார்கள். ஆனால் இந்த 837 முஜாஹதீன்கள் மாத்திரம் 115,000 இற்கும் அதிகமான ரஷ்யப்படையினரைத் தோற்கடித்தனர். “இறைவனின் உதவியால் ஆயிரக்கணக்கானோரை எமது நூற்றுக்கணக்கானோர் தோற்கடித்தார்கள்” என்று செச்னியாவின் 03 ஆவது ஜனாதிபதி முஜாஹித் அஸ்வலான் நஷ்வதொப் அவர்கள் கூறுகிறார்கள். “சிறு படையினர் ஆயிரக்கணக்கான ரஷ்யர்களை எவ்வாறு தோற்கடித்தார்கள்?” என உங்களுக்குத் தெரியுமா என்று ரஷ்ய ஊடகமொன்று அவரிடம் கேள்வியெழுப்பியது. இதற்கு பதிலளித்த அவர்கள் “தஜ்கிஸ்தான், கஸகஸ்தான், உஸ்வகிஸ்தான், ததிரிகிஸ்தான் உட்பட மத்திய ஆசிய நாடுகளுக்கு தஸவ்வுப் மூலம் இஸ்லாம் பரவியது. கமியூனியஸ்தின் ஆட்சி விருட்சமாக வளர்ந்த காலத்தில் இஸ்லாத்தை நாத்திக சித்தாந்தங்களிலிருந்து பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்கிய பெருமையும் தஸவ்வுபையே சாரும். திக்ர், ஸலவாத் இதற்கு உடந்தையாக அமைந்திருந்தன. செச்னியர்களாகிய நாம் காதிரிய்யா, நக்ஷபந்தியா அமைப்புக்களைப் பின்பற்றி இருந்தோம். ரஷ்யாவுக்கெதிரான யுத்தத்திற்கு செல்ல முன்னர் நாங்கள் வட்டவடிவில் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திப்போம். பின்னர் அல்குர்ஆனை ஓதுவோம். ஸலவாத் உட்பட பல்வேறு அவ்ராதுகளும் எமக்குக் கிடைத்திருந்தன. இதனைத் தொடர்ந்து நாங்கள் எங்களுடைய போராட்டங்களை ஆரம்பிப்போம். இதன் மூலம் அல்லாஹ{த் தஆலா ரஷ்யர்களுக்கெதிரான யுத்தத்தில் வெற்றிகளைத் தந்தான்” என்று செச்னியாவின் முன்னால் ஜனாதிபதியாகிய அஸ்லான் நஷ்வதொப் அவர்கள் கூறுகிறார்கள்.
ரஷ்யர்களுக்கு எதிராக செச்னியர்களின் போராட்ட வரலாறு உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்ற முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது, ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இடம்பெற்றவாறு சர்வதேச போர் முறைகளை மதித்து இந்த யுத்தம் இடம் பெற்றிருக்கின்றமை சிறப்பம்சமாகும் என்று நவீன் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். (நன்றி பஸ்ஹான் நானா ....)
எனவே நாம் சாரம்சமாக பெற்றுக்கொள்வது .. நாம் என்னதான் பெரும்கொண்ட பல சாலியாக இருந்தாலும் எமது பலத்தை நிர்ணயிப்பவன் இறைவன் மாத்திரம் தான். அந்த இறைவனின் உதவி நமக்கு தேவையா..? அவனை அணுக வேண்டிய முறையில் அணுகினால் அவன் நிச்சயம் உதவி செய்வான். அணுகும் முறையை நாம் உதறித் தள்ளிவிட்டு எவ்வலவு தான் அல்லாஹு அக்பர் என்று கதறினாலும் அவன் திரும்பி பார்க்க மாட்டான் . அந்த வகையில் தான் நேற்று துருக்கியில் நடைபெற்ற இராணுவப் புரட்சிக்கு அல்லாஹ் வழங்கிய உதவியும், துருக்கி நாட்டு மக்கள் அவர்கள் மேற்சொன்ன இது போன்ற வரலாறுகளை நன்றாக படித்து இருந்தார்கள் அதனால் தான் அவர்கள் சலவாத், மற்றும் ஸிக்று போன்ற ஆயுதங்களை கையில் எடுத்து சூபியாக்களின் வழிமுறைகளை கேடையமாக ஏற்படுத்தி இறைவனின் புறத்தில் இருந்து உதவியை இலகுவாக பெற்றுக்கொண்டார்கள்.
எனவே யா அல்லாஹ் எங்களையும் எங்களை சார்ந்தவர்களையும் இதுபோன்ற சூபியாக்களின் பாதையில் இறுதி வரை வாழ்ந்து மரணிக்க அருள்புரிவானாக..!!


வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும்

வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும் .

வஹாபிஸம் -இஸ்லாத்தின் நெடுந்துயரும் பெருந்துயரும் 

கீற்று வெளியீட்டகத்தின் வெளியீட்டில் இன்ஷா அல்லாஹ் அக்டோபரில் 2016 வெளிவரும் பேராசிரியர் கலாநிதி எச்.முஜீப் ரஹ்மான் Phd. அவர்கள் எழுதிய நான் ஏன் வகாபி அல்ல? நூலின் முன் வெளியீட்டுத் திட்டம்.
.
1500 ஆண்டுகால தொன்மையினைக் கொண்ட தன் வரலாற்றில் இஸ்லாம் மார்க்கம் சந்தித்தப் பெருந்துயரம் வஹாபிஸம். 
.
ஐரோப்பியக் காலனியம் கீழை நாடுகளின் நிலங்களை அபகரிக்கவும், வளங்களைச் சுரண்டவும் சதிவலைகளை விரித்துப் போட்டது, எண்ணெய் வளமிக்க அரபுலகை அபகரிக்க விரிக்கப்பட்ட காலனியச் சதிவலையின் பாதுகாப்பு அரணாக இருந்திட இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டது வகாபியம்.
.
முன்னூறுக்கும் மேற்பட்ட சமூகக் குழுக்களின் மத்தியில் அறிமுகமான இஸ்லாம், அக்குழுக்களின் நம்பிக்கைகளை, கதையாடல்களை ,சடங்குகளை , புனிதங்களை , விழுமியங்களை அரவணைத்தும் , உள்ளிழுத்தும், தன்வயப்படுத்தியும் அக்குழுக்களை வெற்றிகண்டது.
.
ஆனால் வகாபியம், இஸ்லாம் முன் வைக்கும் இந்த முறையியலை மறுதலிக்கிறது. நிராகரித்தல், விலக்கிவைத்தல், அழித்தொழித்தல் என்னும் நடவடிக்கைகளின் வழியாக எதிர் இஸ்லாம் ஒன்றைக் கட்டமைக்கிறது.
.
எண்பதுகளுக்குப் பிறகான முஸ்லிம்களின் நாடுகள், முஸ்லிம்கள் இவர்களின் நெருக்கடிகளின் பின்னால் வகாபியம் சார் கருத்தியலே இருக்கிறது. பன்மைச் சமூக அமைப்பில் பொது நீரோட்டாத்தில் இருந்து முஸ்லிம்களை விலகிச் செல்ல வைத்ததிலும் இஸ்லாமிய சமயப் பரப்பிற்குள் தன் அல்லாத மற்றவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தி தூரத்தில் நிறுத்தியதிலும் வகாபியம் காத்திரமான வகிபாகம் எடுத்திருக்கிறது.
.
தன் சொந்தச் சகோதரரின் மாமிசத்தைப் புசித்து துருக்கியில், யேமனில், லிபியாவில், எகிப்தில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், சிரியாவில், ஈராக்கில் தன் சொந்தச் சகோதர்களின் மாமிசம் புசித்து தன் கொடும்பசி ஆற்றிக்கொள்கிறது வகாபிசம்
.
இஸ்லாத்தின் உள்ளிருந்து கொண்டே சன்னம் சன்னமாக இஸ்லாம் முன்மொழிந்த மானுட மதிப்பீடுகளை கொன்று குவிக்கிறது. அழிவின் விளிம்பில் இருந்து முஸ்லிம் நாடுகளும், துயரத்தின் பதுங்கு குழிகளிலிருந்து முஸ்லிம்களும் மீண்டு வரவேண்டுமென்றால் வகாபிய கருத்தியலுடன் தீவிர எதிர் உரையாடல் ஒன்றை அனைத்து நிலைகளிலும் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.
.
அந்த வகையில் பேராசிரியர் கலாநிதி முஜீப் ரஹ்மான் அவர்கள் எழுதி கீற்று வெளியீட்டில் வெளிவர இருக்கும் “ நான் ஏன் வகாபி அல்ல? “ என்னும் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்லாமிய சமய, சடங்கியல், பண்பாட்டுத் தளத்தில் நின்றுக்கொண்டு வகாபியத்துடன் சமரசமற்ற உரையாடலை இந்நூல் நிகழ்த்துகின்றது.
.
இந்நூலின் முன் வெளியீட்டுத் திட்டத்தில் நீங்களும் இணையுங்கள். இஸ்லாம் என்பது வெறுப்பில் இருந்தல்ல அன்பில் இருந்து உருவானது என்பதை மறுபடியும் உறுதிப்படுத்துங்கள்.
.
தொடர்புக்கு: பேராசிரியர் எச்.ஹாமீம் முஸ்தபா, கீற்று வெளியீட்டகம்.
பேச :9791954174
மின்னஞ்சல்: thuckalayhameem@gmail.com
முன்பதிவுக்கட்டணம் செலுத்த: H.Hameem musthafa, IOB, Azakiyamandapam branch account number :27231000000427 , IFSC Code : IOBA 0002723
.
நன்றி: முஜீப் ரஹ்மான்