السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 23 October 2024

குடி நீர் வழங்கப்பட்டது

 மர்ஹும் சீனி முகம்மது முகம்மது ஹனீபா அவர்களின் பெயரால் ஸதக்கத்துல் ஜாரியாவாக ஒரு ஏழை தாயின் தேவையாக இருந்த குடிநீர் அன்னாரது மனைவியின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து நிலந்தர நன்மையை அன்னாருக்கு வழங்கி, மனைவியின் தொழிலில் பரக்கத் செய்வானாக ஆமீன்.

நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று வருகை தந்த சமூக சேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதீன் "

குறித்த தாயின் வீட்டையும் நிலமைகளையும் அறிந்து பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து குடிநீர் வழங்கிய உங்கள் பணிக்கி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.























குதுபிய்யாஹ் மஜ்லிஸ்

ஏறாவூர் ஹஸனிய்யாவில் 




 







Monday, 21 October 2024

மீலாதுன் நபி விழா

 


கெகிராவ பிரதேசத்தின் கட்டுக்கெலியாவ எனும் கிராமத்தில் 2024/10/19 ம் திகதி சனிக்கிழமை அல் ஆலிம் மௌலவி A. L. M. பாஹீம்( JP) நஜாஹி காதிரி தலைமையில் மிக சிரப்பாக நடைபெற்றது 

நிகழ்வில் மாத்தளை அந் நஜாஹ் அரபிக்கலாசாலையின் சிரேஷ்ட விரிவுரையாலர் கண்ணியத்திர்குரிய மௌலவி கடாபி நஜாஹி காதிரி அவர்கள் சிரப்புரை நிகழ்தினார்கள்

தம்புள்ளை நிகவடவன அல் மத்ரசதுர் ரிஸ்வியா சிரேஷ்ட விரிவுரையாலர் கன்னியத்திற்குரிய மௌலவி முபாரக் (முஸ்தபி) அவர்கள் அவ் விழாவின் அரிவிப்பாளராக கலந்து சிரப்பித்தார்கள்

மற்றும் அதிகமான உலமாக்களும் கலந்து சிரப்பித்தார்கள் முரீதீன்கள், முஹிப்பீன்கள் அனைவருக்கும் மனமார்த வாழ்துக்களை இம் மத்ரசாவின் தலைவர் மௌலவி பாஹீம் நஜாஹியான நான் தெரிவித்துக் கொள்வதில் மிக மகிழ்சி அடைகிரேன்

இவ் விழா மத்ரசதுர் ரஷீதிய்யாவின் முதலாவது மீலாதுன் நபி விழா என்பது குரிப்பிடத்தக்கது  இவ் அடியானுக்கு துஆ செய்துகொள்லுங்கள் 

Moulavi fahim( jp) najahi. Qdhiri






















Saturday, 19 October 2024

பேச்சில் மதி மயங்காதீர்.!

 வழிகேடர்களின் ஏமாற்றுப் பேச்சில் மதி மயங்காதீர்.!

                       ✍️ 

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில், ஷெய்கு           

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

 பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி

══════════════

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் தூய வழி என்பது நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களினதும், குலபாஉரற் றாஷிதீன்களினதும் சுன்னத்தை பின்பற்றி, அந்த அடிச்சுவட்டில் நற்காரியங்கள் செய்தும், நல்லவற்றை புதிது புதிதாக காலத்திற்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ப உருவாக்கி நற்காரியமாற்றுபவர்களாகும்.


ஸஹாபாக்கள், தாபியீன்கள் அவர்கள் வழிவந்த இமாம்கள் வழிசாராமல் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடாகும்.


இக்காலத்தில் வலம் வரும் புதிதாக முளைத்த அனைத்து தஃவா அமைப்புக்களும் வழிதவறிய கூட்டங்களேயாகும்.


இறுதி காலத்தில் தோன்றுகின்ற எந்த அமைப்பும் அதன் அடிப்படை அகீதாவை வைத்தே நல்லதா? வழி தவறியதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அதைப் பின்பற்றுகின்ற தொண்டர்களை வைத்தல்ல!


இறுதி காலத்தில் சத்தியத்தில் மிக அரிதான சிறு கூட்டமே இருப்பார்கள் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.


சிலர் தங்களின் ஆளணியைக் காட்டி தங்கள் அமைப்பை நியாயப்படுத்த எத்தனிக்கின்றனர். இது நயவஞ்சகத்தனமான முயற்சி என்பதை ஈமான் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


பின்வரும் ஹதீதுகளை உற்று நோக்கி தனது ஈமானை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.!


وأنه من يعش منكم فسيرى اختلافا

 كثيرا فعليكم بسنتي وسنتي الخلفاء الراشدين المهدين


உங்களில் யாராவது (எனது வபாத்திற்குப் பின்) உயிர் வாழ்வீர்களாயின் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். அப்போது எனது ஸுன்னத்தையும், நோர்வழி பெற்ற குலபாஉற் றாஷிதீன்களின் ஸுன்னத்தையும் அவசியம் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.


ஆதாரம்: அபூதாவூத்.4607

திர்மிதி.2678,


من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من يتبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالةكان عليه من الإثم مثل اثام من يتبعه لا ينقص ذلك من أيامهم شيئا


நல்வழியின் பக்கம் ஒருவரை யாராவது அழைத்தால் அதைப் பின் பற்றுபவர்களுக்குக் கிடைக்கின்ற கூலி போன்ற நற்கூலி அவருக்கும் கிடைக்கும். அதனால் அவர்களின் நற்கூலியில் எதுவிதமான குறையும் வராது.


(அதுபோல்) யாராவது ஒருவரை வழிகேட்டின் பால் அழைத்தால் அதைப் பின்பற்றுகின்றவர்களுக்குக் கிடைக்கின்ற பாவம் போன்ற பாவம் அவருக்கும் கிடைக்கும். அதனால் அவர்களின் பாவத்தில் எதுவிதமான குறையும் வராது.


ஆதாரம்: ஸஹிமுஸ்லிம். 

திர்மிதி. 2674


من سن في الإسلام سنة حسنة فعمل بها بعده كتب له مثل اجر من عمل بها ولا ينقص من أجورهم شيئ ، ومن سن في الإسلام سنة سيئة فعمل بها بعده كتب عليه مثل وزر من عمل بها ، ولا ينقص من اوزارهم شيئ،



யாராவது ஒருவர் இஸ்லாத்தில் ஒரு நல்ல காரியத்தை புதிதாக உருவாக்கி அது அவருக்குப் பின் செயல் படுத்தப்படுமாயின் அதைச் செய்தவருக்குக் கிடைக்கும். கூலிபோன்றது அவருக்கும் கிடைக்கும்.

அதனால் அவர்களின் கூலிகளில் குறைவு வராது.


இன்னும் ஒருவர் ஒரு தீய காரியத்தை புதிதாக உருவாக்கி அவருக்குப் பின் அது செயல் படுத்தப்படுமாயின் அதைச் செய்தவருக்குக் கிடைக்கின்ற பாவத்தைச் போன்றது அவருக்கும் கிடைக்கும். அதனால் அவர்களின் பாவத்தில் குறைவு வராது.

ஆதாரம் : ஸஹி முஸ்லிம்

பாடம் : அறிவு

தர்மம் செய்வதால்

 

*தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் 18 விதமான சிறப்புகள்.


1. அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்.

(ஆதாரம்: நூல்: மராஸீலு அபீ தாவூது: 

ஹதீஸ் எண்: 105)


2. அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.

(ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 271)


3. கஷ்டங்கள், முஸீபத்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

(ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: 

ஹதீஸ் எண்: 2863)


4. அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான். எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

(ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: 

ஹதீஸ் எண்: 22962)


5. அவருக்காக ஒரு மலக்கு துஆ செய்கிறார்.

(ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: 

ஹதீஸ் எண்: 1442)


6. கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.

(ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதி: 

ஹதீஸ் எண்: 664)


7. கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.

(ஆதாரம்: நூல்: அல் முஃஜமுல் கபீர்: 

ஹதீஸ் எண்: 787)


8. அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால், அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.

(ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: 

ஹதீஸ் எண்: 664)


9. திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்.

(ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 262)


10. ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹுடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்.

(ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: 

ஹதீஸ் எண்: 660)


11. அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

(ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: 

ஹதீஸ் எண்: 1016)


12. ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை

(உதாரணம்: இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்.

(ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: 

ஹதீஸ் எண்: 1897)


13. அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்.

(ஆதாரம்: சூரத்துல் ஹதீத்:

வசனம் எண்: 7)


14. அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்.

(சூரத்துல் பகரா: வசனம் எண்: 245)


15. அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்.

(ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 

ஹதீஸ் எண்: 2959)


16. உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்.

(ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: 

ஹதீஸ் எண்: 7576)


17. தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்.

(ஆதாரம்: சூரத்துல் பகரா:

வசனம் எண்:3)


18. அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்.

(ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: 

ஹதீஸ் எண்: 1029)


அல்லாஹ் நமக்கும் இந்த 18 சிறப்புகளையும் அடையச் செய்வானாக! ஆமீன்🤲

ஒட்டகத்தை தேடி ஓடிய உமர்

 

பயங்கரமாக வெயிலடித்துக் கொண்டிருந்த ஒருநாளில் கலீஃபா உமர்(ரழி) அவர்கள் (எதையோ தேடியவர்களாக) அங்குமிங்கும் திரும்பியபடியே வீதியில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஒடிய ஒட்டகத்தை வெயில்நாளில் தேடிய உமர்(ரழியல்லாஹு அன்ஹு)

<><><><><><><><><><><><><><><><><><>


பயங்கரமாக வெயிலடித்துக் கொண்டிருந்த ஒருநாளில் கலீஃபா உமர்(ரழி) அவர்கள் (எதையோ தேடியவர்களாக) அங்குமிங்கும் திரும்பியபடியே வீதியில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.


இதைக் கண்ணுற்ற உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு ) அவர்கள் தன் வேலைக்காரரிடம் “யார் இந்த நேரத்தில் இப்படி ஓடுகிறார்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஓடுபவர், கலீஃபா உமர்(ரழி)தான்.” என்றார்.


உடனே, கலீஃபா அவர்களே… மக்களின் தலைவரே…ஏன் இப்படி ஓடுகிறீர்கள்?” என்று உஸ்மான்ரழியல்லாஹு அன்ஹு ) கேட்டார்கள்.


அதற்கு “ஏழைகளுக்கு தர்மமாக வழங்கிடுவதற்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஒட்டகங்களுள் ஒன்று தப்பியோடிவிட்டது. அதைப் பிடித்து வரத்தான் ஓடுகிறேன்” என்றார்கள் உமர்(ரழியல்லாஹு அன்ஹு ).


அதைக்கேட்ட உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு ) “நம்பிக்கையாளர்களின் தலைவரே… நிழலுக்கு வாருங்கள். ஒருகோப்பை குளிர்நீர் அருந்துங்கள். அதற்குள்ளாக நான் என் வேலைக்காரரை அனுப்பி அந்த ஒட்டகத்தை கண்டுபிடித்துக் கொண்டுவரச் சொல்கிறேன்” என்று கூறினார்கள். 


அதற்கு உமர்(ரழி)யவர்கள் அஞ்சி நடுங்கிய படியே “(நிழலும் வேண்டாம். குளிர்நீரும் வேண்டாம்) என்னை விடுங்கள். ஒட்டகத்தை தப்ப விட்டதற்காக மறுமையில் அல்லாஹ்விடம் நானல்லவா விசாரணைக்கு ஆளாவேன்.” என்று கூறியபடியே அந்த ஓட்டகத்தைத் தேடி தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்கள்.


அந்த உள்ளங்களை உயிர்ப்போடு வைத்திருந்த இறைவன் தூயவன்.


உமர்(ரழி)யவர்கள், ஆட்சியதிகாரம் என்ற மேல்துண்டை கழற்றிக் கீழே வைத்துவிட்டு- மறுமையின் விசாரணைக்கு அஞ்சியவர்களாக- அந்த ஒட்டகத்தைத் தேடி- தானே ஓடினார்கள்.


உமர்(ரழி) அவர்களே…. நீங்கள் ஆட்சி நடத்தினீர்கள். அதிலே நீதி செலுத்தினீர்கள். குடிமக்களை அச்சமின்றி வாழ வைத்தீர்கள். அதன் பிறகே நிம்மதியாக உறங்கினீர்கள்.


ஆதாரம்: இமாம் இப்னுல் அஸீர் எழுதிய “அல்காமில் ஃபித்தாரீஹ்”


தமிழில்: இல்யாஸ் ரியாஜி.


#ஒட்டகம் #உமர் #மறுமை


خرج عمر بن الخطاب في يوم شديد الحرارة يجري مهرولا يتلفت ! 

فلمحه عثمان بن عفان فسأل خادمه: من هناك يجرى هكذا؟!

قال الخادم: إنه أمير المؤمنين عمر !


فنادى عليه عثمان: يا أمير المؤمنين.. يا أمير المؤمنين.. لم تجري هكذا؟!

فقال عمر بن الخطاب رضي الله عنه: لقد شرد بعير من بعير الصدقة.

فقال عثمان: تعال يا أمير المؤمنين إلى الظل وتناول كوبا من الماء البارد وسأرسل خادمي ورائها.

قال الفاروق بكل خوف ووجل: دعني يا عثمان فأنا من سأسأل عنها أمام الله... ثم تابع سعيه وراء الدابة .


سبحان من أحيى تلك القلوب.

خلع رداء الخلافة وهرع وراء الدابة بنفسه خوفا من يوم الحساب. 

حكمت فعدلت فأمنت فنمت ياعمر.

 

المصدر:

الكامل في التاريخ لـ ابن الأثير.