வழிகேடர்களின் ஏமாற்றுப் பேச்சில் மதி மயங்காதீர்.!
✍️
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில், ஷெய்கு
*ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி
══════════════
அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் தூய வழி என்பது நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களினதும், குலபாஉரற் றாஷிதீன்களினதும் சுன்னத்தை பின்பற்றி, அந்த அடிச்சுவட்டில் நற்காரியங்கள் செய்தும், நல்லவற்றை புதிது புதிதாக காலத்திற்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ப உருவாக்கி நற்காரியமாற்றுபவர்களாகும்.
ஸஹாபாக்கள், தாபியீன்கள் அவர்கள் வழிவந்த இமாம்கள் வழிசாராமல் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடாகும்.
இக்காலத்தில் வலம் வரும் புதிதாக முளைத்த அனைத்து தஃவா அமைப்புக்களும் வழிதவறிய கூட்டங்களேயாகும்.
இறுதி காலத்தில் தோன்றுகின்ற எந்த அமைப்பும் அதன் அடிப்படை அகீதாவை வைத்தே நல்லதா? வழி தவறியதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அதைப் பின்பற்றுகின்ற தொண்டர்களை வைத்தல்ல!
இறுதி காலத்தில் சத்தியத்தில் மிக அரிதான சிறு கூட்டமே இருப்பார்கள் என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
சிலர் தங்களின் ஆளணியைக் காட்டி தங்கள் அமைப்பை நியாயப்படுத்த எத்தனிக்கின்றனர். இது நயவஞ்சகத்தனமான முயற்சி என்பதை ஈமான் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பின்வரும் ஹதீதுகளை உற்று நோக்கி தனது ஈமானை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.!
وأنه من يعش منكم فسيرى اختلافا
كثيرا فعليكم بسنتي وسنتي الخلفاء الراشدين المهدين
உங்களில் யாராவது (எனது வபாத்திற்குப் பின்) உயிர் வாழ்வீர்களாயின் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள். அப்போது எனது ஸுன்னத்தையும், நோர்வழி பெற்ற குலபாஉற் றாஷிதீன்களின் ஸுன்னத்தையும் அவசியம் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.
ஆதாரம்: அபூதாவூத்.4607
திர்மிதி.2678,
من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من يتبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالةكان عليه من الإثم مثل اثام من يتبعه لا ينقص ذلك من أيامهم شيئا
நல்வழியின் பக்கம் ஒருவரை யாராவது அழைத்தால் அதைப் பின் பற்றுபவர்களுக்குக் கிடைக்கின்ற கூலி போன்ற நற்கூலி அவருக்கும் கிடைக்கும். அதனால் அவர்களின் நற்கூலியில் எதுவிதமான குறையும் வராது.
(அதுபோல்) யாராவது ஒருவரை வழிகேட்டின் பால் அழைத்தால் அதைப் பின்பற்றுகின்றவர்களுக்குக் கிடைக்கின்ற பாவம் போன்ற பாவம் அவருக்கும் கிடைக்கும். அதனால் அவர்களின் பாவத்தில் எதுவிதமான குறையும் வராது.
ஆதாரம்: ஸஹிமுஸ்லிம்.
திர்மிதி. 2674
من سن في الإسلام سنة حسنة فعمل بها بعده كتب له مثل اجر من عمل بها ولا ينقص من أجورهم شيئ ، ومن سن في الإسلام سنة سيئة فعمل بها بعده كتب عليه مثل وزر من عمل بها ، ولا ينقص من اوزارهم شيئ،
யாராவது ஒருவர் இஸ்லாத்தில் ஒரு நல்ல காரியத்தை புதிதாக உருவாக்கி அது அவருக்குப் பின் செயல் படுத்தப்படுமாயின் அதைச் செய்தவருக்குக் கிடைக்கும். கூலிபோன்றது அவருக்கும் கிடைக்கும்.
அதனால் அவர்களின் கூலிகளில் குறைவு வராது.
இன்னும் ஒருவர் ஒரு தீய காரியத்தை புதிதாக உருவாக்கி அவருக்குப் பின் அது செயல் படுத்தப்படுமாயின் அதைச் செய்தவருக்குக் கிடைக்கின்ற பாவத்தைச் போன்றது அவருக்கும் கிடைக்கும். அதனால் அவர்களின் பாவத்தில் குறைவு வராது.
ஆதாரம் : ஸஹி முஸ்லிம்
பாடம் : அறிவு