ஒடிய ஒட்டகத்தை வெயில்நாளில் தேடிய உமர்(ரழியல்லாஹு அன்ஹு)
<><><><><><><><><><><><><><><><><><>
பயங்கரமாக வெயிலடித்துக் கொண்டிருந்த ஒருநாளில் கலீஃபா உமர்(ரழி) அவர்கள் (எதையோ தேடியவர்களாக) அங்குமிங்கும் திரும்பியபடியே வீதியில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
இதைக் கண்ணுற்ற உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு ) அவர்கள் தன் வேலைக்காரரிடம் “யார் இந்த நேரத்தில் இப்படி ஓடுகிறார்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஓடுபவர், கலீஃபா உமர்(ரழி)தான்.” என்றார்.
உடனே, கலீஃபா அவர்களே… மக்களின் தலைவரே…ஏன் இப்படி ஓடுகிறீர்கள்?” என்று உஸ்மான்ரழியல்லாஹு அன்ஹு ) கேட்டார்கள்.
அதற்கு “ஏழைகளுக்கு தர்மமாக வழங்கிடுவதற்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஒட்டகங்களுள் ஒன்று தப்பியோடிவிட்டது. அதைப் பிடித்து வரத்தான் ஓடுகிறேன்” என்றார்கள் உமர்(ரழியல்லாஹு அன்ஹு ).
அதைக்கேட்ட உஸ்மான்(ரழியல்லாஹு அன்ஹு ) “நம்பிக்கையாளர்களின் தலைவரே… நிழலுக்கு வாருங்கள். ஒருகோப்பை குளிர்நீர் அருந்துங்கள். அதற்குள்ளாக நான் என் வேலைக்காரரை அனுப்பி அந்த ஒட்டகத்தை கண்டுபிடித்துக் கொண்டுவரச் சொல்கிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு உமர்(ரழி)யவர்கள் அஞ்சி நடுங்கிய படியே “(நிழலும் வேண்டாம். குளிர்நீரும் வேண்டாம்) என்னை விடுங்கள். ஒட்டகத்தை தப்ப விட்டதற்காக மறுமையில் அல்லாஹ்விடம் நானல்லவா விசாரணைக்கு ஆளாவேன்.” என்று கூறியபடியே அந்த ஓட்டகத்தைத் தேடி தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்கள்.
அந்த உள்ளங்களை உயிர்ப்போடு வைத்திருந்த இறைவன் தூயவன்.
உமர்(ரழி)யவர்கள், ஆட்சியதிகாரம் என்ற மேல்துண்டை கழற்றிக் கீழே வைத்துவிட்டு- மறுமையின் விசாரணைக்கு அஞ்சியவர்களாக- அந்த ஒட்டகத்தைத் தேடி- தானே ஓடினார்கள்.
உமர்(ரழி) அவர்களே…. நீங்கள் ஆட்சி நடத்தினீர்கள். அதிலே நீதி செலுத்தினீர்கள். குடிமக்களை அச்சமின்றி வாழ வைத்தீர்கள். அதன் பிறகே நிம்மதியாக உறங்கினீர்கள்.
ஆதாரம்: இமாம் இப்னுல் அஸீர் எழுதிய “அல்காமில் ஃபித்தாரீஹ்”
தமிழில்: இல்யாஸ் ரியாஜி.
#ஒட்டகம் #உமர் #மறுமை
خرج عمر بن الخطاب في يوم شديد الحرارة يجري مهرولا يتلفت !
فلمحه عثمان بن عفان فسأل خادمه: من هناك يجرى هكذا؟!
قال الخادم: إنه أمير المؤمنين عمر !
فنادى عليه عثمان: يا أمير المؤمنين.. يا أمير المؤمنين.. لم تجري هكذا؟!
فقال عمر بن الخطاب رضي الله عنه: لقد شرد بعير من بعير الصدقة.
فقال عثمان: تعال يا أمير المؤمنين إلى الظل وتناول كوبا من الماء البارد وسأرسل خادمي ورائها.
قال الفاروق بكل خوف ووجل: دعني يا عثمان فأنا من سأسأل عنها أمام الله... ثم تابع سعيه وراء الدابة .
سبحان من أحيى تلك القلوب.
خلع رداء الخلافة وهرع وراء الدابة بنفسه خوفا من يوم الحساب.
حكمت فعدلت فأمنت فنمت ياعمر.
المصدر:
الكامل في التاريخ لـ ابن الأثير.