சீஆக்கள் வழிகேடர்கள்.இவர்கள் அஹ்லுல் பைதுகளை நேசிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். அருமையான நபித்தோழர்களைக் காபிர்கள் என்று கோறுகிறார்கள். ஆனாலும்கூட வஹ்ஹாபிகளை வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள்.
வஹ்ஹாபிகள் வழிகேடர்கள். இவர்கள் சீஆக்களை முற்றிலும் மறுக்கிறார்கள்.அதற்காகவே அல்குரானுக்கும் அல்ஹதீதுக்கும் உடன்பட்ட எராளமான விடயங்களை வழிகேடு என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தப்லீக்,ஜமாத்தே இஸ்லாமி,கர்ணிகள் இவர்கள் எல்லோரும் ஒரே கொள்கை கொண்டவர்கள்.
இவ்விரு குழுக்களுக்கும் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் பெருமக்கள் வேகமாக தகுந்த பதில்கள் கூறிக்கொண்டு வரும் இக்காலத்தில் அல் அல்அஹ்பாஷ் எனும் நவீன அமைப்பினை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்திருக்கிறது.
அல் அஹ்பாஷ் எனும் இந்நவீன அமைப்பு லெபனான் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டதொரு அமைப்பாகும். அவ்வமைப்பின் கொள்கைக் கோட்பாட்டில் சீஆக்களின் சீர்கெட்ட கருத்துக்களும் வஹ்ஹாபிகளின் வழிகேட்ட கருத்துக்களும் இரண்டறக்கலந்து இருப்பதைக் காண முடிகிறது. சீஆக்கள் பாதி,வஹ்ஹாபிகள் பாதி என்ற விதத்தில் பயணம் செய்கிறார்கள்