ழயீஃப் ஹதீஸ் குறித்து அபுத்தலாயில் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் விவாத களத்தில் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் எங்கே?
இன்று வரை அந்தக் கேள்விகள் கேள்விகளாகத்தானே இருக்கின்றன.
என் ஹதீஸ் ழயீஃபாக இருந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸாவது உள்ளதா?
ஹதீஸ்கள் ழயீஃப் என்று உங்களுக்கு சொன்னது யார்?
குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் ஃபிக்ஹு சார்ந்த இமாம்களை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் ஹதீஸ் சார்ந்த இமாம்களின் சொல்லை ஏற்றுக் கொண்டு ழயீஃப் ழயீஃப் என்று பேசுவதும் எழுதுவதும் ஏன்?
அப்படியானால் ழயீஃப் ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம் என்று சொல்லி இருக்கும் அதே இமாம்களின் கூற்றுகளை என்ன செய்யப் போகிறீர்கள்.
ழயீப் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி நீங்கள் பேசியதும் எழுதியதும் இல்லையா?
சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் சுட்டிக்காட்டிய பின்னர் மாற்றிப் பேசியதும் இல்லையா?
நீங்கள் கூறும் ழயீஃப் ஹதீஸில் அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸின் தரம் என்ன?
அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸை வைத்து அமல் செய்தோரின் நிலை என்ன?
இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லட்டும்.