( لو أن رجلا تصوف أول النهار لم يأت عليه الظهر إلا وجدته أحمق )
தொடர் 01
சூபிசத்தை இமாம் ஷாபிஃஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் இகழ்ந்து பேசியுள்ளார்கள். என்பது நவீனவாதிகளின் எடுத்துக்காட்டும், உங்களுக்கே எதிராக உங்களின் நீங்கள் போற்றும் இமாமே இழிவாக பேசியுள்ளார்களே! என்ற புலம்பலுமாக இக்கருத்து முன் வைக்கப்படுகிறது..
விடயத்திற்குள் நுழைய முன் ஒரு சில முக்கிய நுணுக்கங்களையும் அறிவின்மையின் உச்சத்தையும் சொல்லி விட்டு பார்க்கலாம் அதனாலேயே தொடர் 01 என தேவையானது..
01. இன்று கனிஷமான உலமாக்களை மதனி,ஸலபி,அஸ்ஹரி என்று பலர் இப்படி பலதரப்பட்டவர்கள் மேல்படிப்பு என்று சென்று பட்டம் பதவிகளோடு PHD டிஸ்க் மிஸ்க் இப்படி ஏதோ பல...இவர்களின் மேல் படிப்பின் நோக்கம் பட்டம் பதவிகளோடு வரவேண்டும்.நன்றாக அரபி பேச எழுத வேண்டும்.பெயருக்குமுன் கலாநிதி என்றும், பெயருக்கு பின்னால் பல பதவிகளுக்கு உரியவர் என்பதையும் காட்ட வேண்டும்.
02. தஃவா என்ற பெயரில் மக்களை நரகத்திற்கு அழைக்க வேண்டும்.... தஃவாவில் இஃலாஸ் எனும் உளத்தூய்மை இல்லை..வெறுமனே காழ்ப்புணர்ச்சி,வெறுப்பு,அறியாமை ...இத்தொடரின் 02 ல் அதை பார்ப்பீர்கள் இன்ஷா அல்லாஹ்....அதுவே அவர்களின் பாடத்திட்டத்தின் கிதாபுகளின் உட்கருத்துக்கள்..ஏன்னா அவர்களின் பாடத்திட்டத்தின் கிதாபுகள் என்ன.?எந்த பல்கலைக்கழகத்தில் எத்துறையில் அக்கிதாபுகளை யார் பாடம் நடத்துகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அக்கிதாபுகளும் என்னிடம் உண்டு.அவர்களின் அக்கிதாபுகளில் நாம் படிக்காத கிதாபே இல்லை...
03. அரபி தெரியும் வாசிக்கத் தெரியும் மொழிபெயர்க்கத் தெரியும் எழுதத் தெரியும். ஏன்னா படித்தது அரபிகளிடம் தானே!! ஆனால் குறிப்பிட்ட ஓர் அரபி வார்த்தை ஏன் இவ்விடத்தில் உபயோகப்படுத்தப்பட்டது என்ற நுணுக்கம் தெரியாது. அதனால் அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் தெளிவாக உள்ளால் உள்ள படி எடுத்துச் சொல்ல முடியாது.வெறுமனே வெளிப்படையான மேலோட்டமான மொழிபெயர்ப்பு மட்டுமே!!
04.ஒவ்வொரு கலைகளுக்கும் பிரத்தியேகமான விஷேடமான தனித்துவமான வரைவிளக்கணமும் அதோடு சேர்ந்த பிரிவுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் என்று தனித்துவமான சில சொற்பிரயோகங்களும் உண்டு. அவைகள் என்ன.? அதன் விளக்கம் என்ன.?என்பது இவர்களுக்கு தெரியாது...அதனால் தான் இவ்வளவு குழப்பத்திற்கு காரணம்..
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்..
பொதுவாக நிறையப்பேருக்கு தெரியும் இப்னு ஹிஷாம் ரஹ்மஹுல்லாஹ் ஹிஜ்ரி 218 ல் வபாத் ஆனார்கள்.இன்னொரு கருத்தின் படி ஹிஜ்ரி 213 ல் வபாத் ஆனார்கள் என்று #அர்ரௌழுல்_உன்ப் ( الروض الأنف ) எனும் கிதாபில் பதிவாகி உள்ளது.என்ற கருத்தை அல் ஹாபிழ் இமாம் தஹபி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #ஸியரு_அஃலாமின்_நுபலாஉ ( سير اعلام النبلاء ) என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவர்கள் தான் #அஸ்ஸீரதுன்_நபவிய்யா ( السيرة النبوية ) எனும் கிதாபின் ஆசிரியர்..நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரித்திரங்களை 4 பாகங்களாக தொகுத்த மிகப் பெரும் வரலாற்று ஆசிரியர்....
இப்னு ஹிஷாம் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள். இமாம் ஷாபிஃஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் மொழித்திரன் மொழியாற்றலில் இருந்து ஆதாரமாக எடுக்கப்படும். என்று இப்னு ஹிஷாம் ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள் என்றால் இமாம் ஷாபிஃஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்களை விளங்க அதன் எதார்த்தத்தைப் புரிய அவர்களின் ஓர் கருத்தின் உள் சார்ந்த நோக்க கருத்தைப் புரிய வெறுமனே அரபி எழுதவும் பேசவும் தெரிந்தால் போதாது...அதற்கு ஞானம் வேணும்..பல கலைகளைக் கற்று அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..இமாம்களின் வசனநடை முறை அதன் எதார்த்தம் பற்றிய ஞானம் இருக்க வேண்டும்..
அதற்கென்று தனியாகவே பல கிதாபுகளும் விளக்கங்களும் உண்டு...
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இமாம் ஷாபிஃஇ ரஹ்மஹுல்லாஹ் அவர்களின் சூபித்துவக் கருத்தைப் பார்க்கலாம்..
தொடரும்....
@highlight.
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி