*ஸலவாத் கூறுவது பர்ளு*
-----------------------------------
அரபு மூலம் : அஷ்ஷிபா
தமிழில்:
மௌலவி பாஸில், ஏ.எல் பதுறுத்தீன்.
ஷர்க்கி பரேலவி ஸூபி காதிரி நக் ஷபந்தி.
***********************
பொதுவாக, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மீது ஸலவாத் கூறுவது பர்ளு என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்! குறிப்பான எந்த நேரத்திலும் மட்டுப்படுத்தி குறிப்பாக்கப்படவில்லை; ஏனெனில் ,அல்லாஹுத்தஆலா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத் கூறுமாறு பொதுவாகவே கட்டளையிட்டுள்ளான்.
இமாம்களும் அறிஞர்களும் இந்த கட்டளையை வாஜிப் என்று தான் கூறுகின்றனர், இஜ்மாஃவும் இதன் படிக்கே உள்ளது.
இமாம் அபூ ஜாஃபர் தப்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இத்திரு வசனத்தின் கட்டளையை சுன்னத்தின் பக்கம் சாட்டி அதுவே இஜ்மாவான முடிவு என்று வாதிக்கின்றார்கள், ஒரு தடவைக்கு மேற்பட்டதாக "ஸலவாத்" கூறுவது சுன்னத்தாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு!
ஒருவிடுத்தும் ஸலவாத் ஓதுவதன் மூலம் வாஜிப் என்ற குற்றம் விழுந்து விடுகிறது,அதாவது, வாஜிப் என்ற பர்ளை விட்ட குற்றம் அதன் மூலம் தவிர்க்கப்படுகிறது; நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் நுபுவ்வத்தை முதல் தடவை கூறுவது வாஜிப், அதன் பின் கூறுவது சுன்னத்தும், விரும்பத்தக்கதுமாகும் ; அத்துடன் ஸலவாத் கூறுவது முஸ்லிம்களின் அடையாளமும், சின்னமுமாகும்;
எமது (மாலிக் மதுஹபில் உள்ள) அறிஞர்களில் மிகப் மிகப் பிரபல்யமான சட்ட அறிஞரான காழி அபுல் ஹசன் பின் அல் கஸ்ஸார் ரஹ்மத்துல்லாஹி கூறுகின்றார்கள்,
பொதுவாக ஸலவாத் கூறுவது மனிதன் மீது வாஜிபாகும் வாழ்நாளில் ஒரு விடுத்தமாவது அதற்கான சக்தி இருக்குமாயின், ஸலவாத் கூறுவது அவர் மீது பர்லாகும்; ஆகவே, அதிகமதிகம் ஸலவாத் ஓதுவது மனிதன் மீது கடமையாகும்; அதிலிருந்து மறந்து மருண்டு விடக்கூடாது!
காழி அபூ முஹம்மத் இப்னு நஸ்று ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பேரில் ஸலவாத் கூறுவது பொதுவாகவே வாஜிபாகும்,
காழி அபூ அப்துல்லாஹி முஹம்மது இப்னு சயீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும்,அவர்களின் அஸ்ஹாபுகளான அறிஞர்களிடத்திலும்; ஏனையவர்களிடத்திலும் மொத்தத்தில் ஈமான் கொண்ட பின் ஸலவாத் கூறுவது பர்ளு என்பது அவர்களின் மத்ஹபாகும்; குறிப்பாக தொழுகையில் ஓத வேண்டும் என்று இல்லை; வாழ்நாளில் ஒரு விடுத்தமாவது நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பெயரில் சல்வாத் கூறினால் பர்ளு என்பது அவனை விட்டும் நீங்கிவிடும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பெயரில் சலவாத் கூறுமாறு அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனிலும், திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் ஹதீதிலும் கட்டளையிட்டிருப்பது தொழுகையில் பர்ளாகும் என்பது ஷாபியி மதுஹபின் கூற்றாகும்; தொழுகைக்கு வெளியில் கருத்து வேறுபாடின்றி வாஜிபில்லை,
இமாம் அபூ ஜஃபர் தப்ரி மற்றும் இமாம் தஹாவி ரஹிமஹுமல்லாஹ் உள்ளிட்டோரும், இவர்கள் அல்லாதவர்களுமான சஹாபாக்கள் ;தாபியீன்களில் முன் சென்ற அறிஞர்கள்; பின்னுள்ள முஜ்தஹிதான இமாம்கள் உள்ளிட்டோரின் இஜ்மாஃவை மேற்கோள் காட்டி அத்தஹ்யாத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பேரில் ஸலவாத்து கூறுவது வாஜிபல்ல என்று கூறுகின்றனர்;
இந்த விடயத்தில் இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி தனித்து விட்டார்கள்; இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றுப்படி, கடைசி அத்த ஹ்யாயத்தில் சலாம் கூறமுன் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பெயரில் சலவாத் கூறாவிட்டால், அவர்களின் தொழுகை பழுதாகி விடும்; கடைசி அத்த ஹ்யாத்தில் அஷ்ஹதுஅன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்பதற்கு முன்போ, அல்லது முதல் அத்த ஹ்யாத்திலோ ஸலவாத் கூறினாலும் தொழுகை நிறைவேறாது!
இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் இக்கூற்றில் எந்த ஒரு சலபி அறிஞர்களின் கூற்றோ அல்லது பின்பற்றத்தக்க ஆதாரப்பூர்வமான ஹதீதோ இல்லை; இந்த சட்டப் பிரச்சினையை மறுதலிப்பதில் முன்னோர்களில் ஒரு கூட்டம் எல்லை கடந்து விட்டனர் இச்சட்டம் முன்னோர்களுக்கு மாறானது என்பது இவர்களின் வாதமாகும் இவர்களுள் இமாம் தப்ரி, இமாம் குஷைரி ( அபூபக்கர் இப்னு அல் அலாஃஅல்மாலிகி) உள்ளிட்டவர்களும் இவர்கள் அல்லாதவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
ஹளறத் இமாம் மாலிக், இமாம் சுப்யானுத் தௌரி றஹிமஹுமல்லாஹ் உள்ளிட்டோரின் கருத்துப்படி, கடைசி அத்தஹிய்யாத்தில் ஸலவாத் ஓதுவது முஸ்தஹப்பு , அதனைத் தவிர்ப்பவர் பாவியாவார்; தொழுகையில் தஷஹ்ஹுதில் ஸலவாத்தைத் தவித்தவர் தொழுகையை மீட்டுவது வாஜிப் என்று இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹ் கூறுகின்றார்கள்; வேண்டுமென்று ஸலவாத்தை விட்டவர் தொழுகையை மீட்ட வேண்டும்; மறந்துவிட்டவர் தொழுகையை மீட்ட வேண்டியதில்லை என்று அபு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பெயரில் சலவாத் கூறுவது பர்ளு என்று அபூ முஹம்மத் பின் அபி ஸைத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி முஹம்மத் பின் மவாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மூலம் நக்லு செய்து கூறுகின்றார்கள். இந்த சட்டம் தொழுகையின் பர்ளுகளில் ஒன்றாக இல்லை என்று அபூ முஹம்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மேலும் தெளிவு படுத்தியுள்ளார்கள்; இக்கருத்தையே முஹம்மத் இப்னு அப்துல் ஹக்கீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இவர்கள் அல்லாதவர்களும் கூறுகின்றனர்; மேலும், இப்னு கஸ்ஸார், அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹு மல்லாஹ் ஆகிய இருவரும் கூறுகையில், முஹம்மது பின் மவாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அவர்களை போன்றே தொழுகையில் ஸலவாத் கூறுவது பர்ளு என்ற கருத்தை கொண்டிருந்தார்கள்.
மேலும், அபூ யஃலா அப்தீ றஹ்மதுல்லாஹி அலைஹி மாலிக் மதுஹபின் மூன்று கூற்றுக்களை விளக்குகின்றார்கள்,
1- வாஜிப். 2- சுன்னத் 3- முஸ்தஹப்பு
இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அஸ்ஹாபுகளான அறிஞர் பெருமக்களில் அல்கத்தாபி, அல்ஹாபிழ் அல் இறாக்கி; அபூ உமாமா பின் நக்காஷ் றஹிமஹுமுல்லாஹ் உள்ளிட்டோர் இது விடயத்தில் மாற்றமான கருத்தைக் கூறியுள்ளார்கள், தொழுகையில் ஸலவாத் கூறுவது வாஜிப் அல்ல என்று இமாம் கத்தாபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்; இமாம் ஷாபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தவிர்ந்த அனைத்து புகஹாக்களின் கூற்றும் இதுவாகத்தான் இருக்கிறது; இந்த சட்டப் பிரச்சனையில் இமாம் ஷாபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஆதரவாக பின்பற்ற த் தக்க அறிஞர்கள் எவரும் இல்லை; இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு முன் தொழுகையில் ஸலவாத் கூறுவது வாஜிப் இல்லை என்பதற்கான ஆதாரம் ஸலபுஸ் ஸாலிகளின் செயற்பாடும்; அதன் மீதுள்ள இஜ்மாஃமாகும்.
இந்த விடயத்தில் பிந்தியவர்களான மக்கள் இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்வுக்கு கடுமையாக மறுப்புக் கூறியுள்ளார்கள், இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தேர்வு செய் த தஷஹ்ஹுது, ஹளறத் மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக் கொடுத்த தஷஹ்ஹுதாகும்; இதில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பெயரில் சலவாத் கூறுவது பற்றி கூறப்படவில்லை இவ்வாறு தஷஹ்ஹுத் பற்றி வருகின்ற அறிவிப்புகளில் உதாரணமாக ஹளரத் அபூஹுரைரா, ஹளறத் இப்னு அப்பாஸ்; ஹளறத் ஜாபிர் ஹளறத் அபூ ஸ யீதுல் குத்ரிய்யி; ஹளறத் அபூ மூஸா அஷ்அரிய்யி ; ஹளறத்அப்துல்லாஹ் இப்னுசுபைர் ரலியல்லாஹு அன்ஹும் உள்ளிட்டோரின் எந்த ஒரு அறிவிப்பிலும் ஸலவாத் பற்றி கூறப்படவில்லை.
ஸஹி முஸ்லிம் , கிதாபுஸ்ஸலாத் பாகம் 1 பக்கம் 301-304 சுனன் அபூதாவூத் பாகம் 1 பக்கம் 594-597
ஹளறத்இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா மற்றும், ஹளரத் ஜாபீர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்,
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனின் சூரத்துக்களை கற்றுத் தந்தது போன்று தஷஹ் ஹுதை(அத்தஹிய்யாத்தை) எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள், ஹளறத் அபூஸயீதுல் குத்ரிய்யி றழியல்லாஹு அன்ஹு வும் இவ்வாறே கூறுகின்றார்கள்; ஹளறத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு சிறுவர்களுக்கு திருக்குர்ஆனை கற்றுக் கொடுப்பது போன்று தஷஹ்ஹுதை மிம்பரிலிருந்து எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்; இவ்வாறு ஹளறத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களும் மிம்பரிலிருந்து கற்றுக் கொடுத்தார்கள் என்று ஹளறத் இப்னு உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா கூறுகின்றார்கள்.
முஸ்தத்றக் கிதாபுஸ்ஸலாத் பாகம்3 பக்கம் 226 பைஹகி பாகம் 2 பக்கம் 142
என் மீது ஸலவாத் கூறாதவனுக்கு தொழுகை இல்லை என்று ஒரு ஹதீதில் வருகின்றது
சுனன் இப்னு மாஜா , கிதாபுத்தஹாறத், பாகம் 1 பக்கம் 140 , தாறகுத்னி கிதாபுஸ் ஸலாத் , பாகம் 1 பக்கம் 355 சுனன் குப்றா பாகம் 2 பக்கம்379 முஸ்தத்றக் பாகம் 1 பக்கம் 269
இதன் பொருள் : பூரணமாக, அல்லது தனது வாள்நாளில் ஒருவிடுத்தமாவது ஸலவாத் கூறாதவனுக்கு என்று ஹளறத் இப்னு கஸ்ஸார் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.
இந்த ஹதீதின் அறிவிப்பை அனைத்து முஹதிதீன்களும் ழயீபாக்கியுள்ளனர், ஹளறத் அபூ ஜஃபர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்ஹளறத் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொட்டும் அறிவிக்கின்றார்கள்,
ஒருவர் தொழுது அதில் என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் சலவாத் கூறவில்லையாயின், அவரின் தொழுகை அங்கீகரிக்கப்பட மாட்டாது.
இமாம் தாறகுத்னி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
சஹீஹான கூற்று அபு ஜாஃபர் பின் முகமத் பின் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹும் அவர்கள் கூறியதாகும், அதாவது நான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், இன்னும், அவர்களின் குடும்பத்தார் மீதும்; ஸலவாத் கூறாமல் நான் தொழுவேனாயின், திட்டமாக என்னிடத்தில் தொழுகை பூரணமாக மாட்டாது.