السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 16 December 2024

ஹயாத்துல் அன்பியா 🌹

 





இமாம் இப்னு அபீஷைபா رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு ஹிஜ்ரி 235) அவர்கள் ஸஹீஹான ஸனதுடன் கூடிய அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கின்றார்கள் , 


" நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்,' நாங்கள் துஸ்தர் ( ஈரானில் உள்ள நகரம் ) நகரத்தை வெற்றி கொண்ட பொழுது ,நாங்கள் ஓர் பெட்டியைக் கைப்பற்றினோம்.அந்த பெட்டியில் ஒருவரது உடல் இருந்தது .அன்னாரது மூக்கு நமது கைகளின் அளவிற்கு நீளமாக இருந்தது.அவரது இரத்தநாளம் மற்றும் சுரப்பிகள் பாதுகாக்கபட்டிருந்தது.அன்னாரது உடல் உயிரோடு உள்ளவர்களின் உடல் போன்று ஸலாமத்தாக இருந்தது. அங்குள்ள மக்கள் அன்னாரது வஸீலாவினால் மழை மற்றும் பரக்கத்தை வேண்டி துஆ செய்வதாக கூறினர்.


இது குறித்து நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ மூஸா அஷ்அரி رضي الله عنه அவர்கள்,அச்சமயம் கலீபாவாக இருந்த அமீருல் முஃமினீன் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.


இதற்கு பதில் எழுதிய அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் ,இதுவாகிறது அல்லாஹ்வின் நபிமார்களில் ஒருவராகிய ஸெய்யிதினா தான்யால் عَلَيْهِ ٱلسَّلَامُ ஆவார்கள் என்று எழுதினார்கள்.


மேலும் நபிமார்களின் பரிசுத்த மேனியை நெருப்பும் ,மண்ணும் தீண்டாது.அவர்களை அடக்கம் செய்திட கட்டளையிட்டார்கள்.அதன் பேரில் நாயகத் தோழர்கள் ஸெய்யிதினா அனஸ் رضي الله عنه மற்றும் ஸெய்யிதினா அபூ மூஸா அஷ்அரி رضي الله عنه அவர்கள் ,அல்லாஹ்வின் தூதராகிய ஸெய்யிதினா தான்யால் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களை அடக்கம் செய்தார்கள்.


📚முஸன்னப் அபீ ஷைபா ,பாகம் 11,ஹதீஸ் எண் 34399

Sunday, 15 December 2024

குழந்தை வளர்ப்பில் பேனுதல்

 

ஒரு பேனுதல் உள்ள தாயால் மட்டும் தான் பேனுதல் நிறைந்த குழந்தையை இந்த சமூகத்திற்கு உருவாக்கித்தர முடியும்

இமாம் ஷாபிஈ ஏழு வயதில் முழு குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிழாக ஆனார்கள்.பத்து வயதில் முஅத்தா எனும் ஹதீஸ் நூலை மனனம் செய்து முடித்து பதிமூன்றாவது வயதில் மக்காவின் மிகப்பெரும் பகீஹாக உயர்ந்தார் கள்.அவர்களின் அசாதாரணமான மனன திறமைக்கு காரணத்தை அவர்களிடம் வினவப்பட்டபோது

குழந்தையாக நான் இருந்தபோது என் தாய் எனக்கு ஒரு நாளும் ஒழு இல்லாமல் பாலூட்டியதில்லை என்று கூறினார்கள்

ஒரு தாயின் பேனுதல்,ஒழுக்கம் ஒரு மாமனிதரை இந்த உம்மத்துக்கு பெற்று த்தந்தது.


கல்விக்கடல் என்றும் ஆண்மீக ஊற்று என்றும் நாமெல்லாம் கொண்டாடும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் ஒரு தாயின் பேனுதலான வளர்ப்பில் உருவானவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் தாயாருக்கு இரண்டு மகன்கள்.ஒருவர் முஹம்மத் அல்கஸ்ஸாலி- இன்னொருவர் அஹ்மத் அல் கஸ்ஸாலி.இவர்களின் தாயார் இவ்விருவரையும் மிகச்சிறந்த அறிஞர்களாகவும் வணக்கசாலிக ளாகவும் உருவாக்கினார்கள்.

இதில் முஹம்மத் அல்கஸ்ஸாலி ரஹ் அவர்கள் மிகப்பெரும் அங்கீகாரம் பெற்று மக்களுக்கு இமாமத் செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டார்கள்.இவர் சகோதரர் அஹ்மத் அல் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் மாபெரும் வணக்கசாலி என்றாலும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களுக்கு பின்னால் தொழமாட்டார்.இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர்களின் தாயாரிடம் முறையிடுகிறார்கள்.அவர்களின் தாயாரும் அஹ்மத் அவர்களை அழைத்து நீ உன் சகோதரருக்குப்பின்தான் தொழவேண்டுமென கண்டிப்புடன் கூறவே அதை ஏற்றுக்கொள்கிறார்.


ஒருநாள் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களுக்கு பின் தக்பீர் கட்டி தொழ ஆரம்பித்தார்.இரண்டு இரக்கஅத் தொழுகையில் முதல் இரக்கஅத்தை இமாம் அவர்கள் நிறைவு செய்தபோது அவர்களின் சகோதரர் தக்பீரை அவிழ்த்து விட்டு இடையிலேயே சென்றுவிட்டார். இது இமாம் கஸ்ஸாலிக்கு இன்னும் மிகுதியான வேதனையளித்தது.


மீண்டும் அவர்களின் தாயாரிடம் முறையிட்டபோது, அவ்விருவரையும் அழைத்து அவர்களின் தாயார் விசாரித்தார்கள்.

அப்போது இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் சகோதரர் - தாயார் அவர்களே! என் சகோதரர் முதல் இரக்கஅத்தில் இறைச்சிந்தனையுடன் தொழுதார்.இரண்டாவது இரக்கஅத்தில் அல்லாஹ்வின் சிந்தனை அவருக்கு தவறிவிட்டது.இதை நான் கஷ்பின் மூலம் த்ரிந்துகொண்டேன் எனவே நான் தக்பீரை அவிழ்த்துவிட்டு தனியாக தொழுதேன் என்று கூறினார்கள்.


இது குறித்து இமாம் கஸ்ஸாலி அவர்களிடம் விசாரித்தபோது மறுக்காமல் உண்மைதான் என ஒப்புக்கொண்டார்கள்.நான் தொழுகைக்கு முன் நிபாஸ் எனும் மார்க்கச்சட்டம் குறித்து கிதாபை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். இந்நிலையில் தொழுகையின் நேரம் வரவே கிதாபை மூடிவைத்து தொழ வந்துவிட்டேன்.எனவே தான் இரண்டாவது இரக்கஅத்தில் நிபாஸ் பற்றிய சட்டங்களில் கவனம் வந்துவிட்டது.என்றார்கள்.

அப்போது அவர்களின் தாயார், நீங்கள் இருவரும் தவறு செய்தவர்கள்.இமாம் கஸ்ஸாலி அவர்களை நோக்கி அல்லாஹ்வின் சிந்தனை தொழுகையில் தப்பிப்போக என்ன காரணத்தை நீ சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்கள்.

இமாம் அஹ்மத் ரஹ் அவர்களை நோக்கி நீ முதல் இரக்கஅத்தில் அல்லாஹ் வின் சிந்தனையுடன் தொழுதாய்.ஆனால் இரண்டாவது இரக்கஅத்தில் உன்சகோதரரின் குறையின் பக்கம் உன்கவனத்தை திருப்பிவிட்டாய்.எனவே நீங்கள் இருவரும் நான் விரும்பிய பிள்ளைகளாக இல்லை என்று எச்சரித்ததும் அவ்விருவரும் அதற்காக மன்னிப்பு கேட்டனர்.(குதுபாத் துல்பிகார்)

#மின்பர் அழுதது

 

அப்போது அந்த மரத்தின் தூர் சப்தமிட்டுக் கூறியது. யா ரசூலல்லாஹ் என்னை அழிவில்லாத சுவனபதியில் நட்டு விடுங்கள். இறை நேசர்கள் எனது கனியினை புசிக்கட்டும் என்று கூறியது. நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களது மிம்பருக்கு கீழ் அது தோண்டிப் புதைக்கப் பட்டது. இந்த ஹதீதினை ரிவாயத் செய்கிற போது ஹஸன் பஸரீ (ரழி) அவர்கள் அழுத வண்ணம் கூறுவார்கள். அஃறினையான அந்த மரம் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருப்பதினை விரும்பியது. (முஃமினான) நீங்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருக்கும் விருப்பத்திற்கு மிகவும் தகுதியானவர்கள். (நூல் ஃபத்ஹுல் பாரீ பாகம் 6 பக்கம் 393)








#தொழுகையை ஊக்குவிப்போம்


ஏறாவூர்



#கவர்ச்சிகரமான_முன்மாதிரியான_முன்னுதாரணம் 
ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினரால் சிறார்களை பள்ளிவாயலோடு ஆத்மார்த்தமாக இணைக்கும் வண்ணம் தொடர்ந்து தொழுகின்றவர்களுக்கு Jersey ஆடை வழங்கப்பட்டது... 
இச்செயற்பாட்டை நானும் மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வராமல் இருக்கின்ற சிறுவர்களையும் இச்செயற்பாட்டினால் வரக்கூடும் ஆகவே இச் செயற்பாட்டுக்கு யாரெல்லாம் உதவினார்களோ அவர்களுக்கு இறைவன் அதிகமான நன்மைகளை அள்ளி வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

#கபுரடியில் பரக்கத் தேடி பிரார்த்திக்கலாமா?

 

கபுரடி

நான்கு மத்ஹபு இமாம்களில் ஒருவரேனும் கபுரிடத்தில் பரக்கத் தேடும்படி  சொல்லியிருக்கிறார்களா - சவால் விட்ட சலபி!

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

இஸ்லாமும் தெரியாது... இமாமும் தெரியாது..!❌❌


இதோ! சவாலுக்கு விடை தருகிறோம்!➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️


இமாம் அஹமத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் பின் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்


"நான் எனது தந்தையிடத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களது மிம்பரை பரக்கத்தை நாடியும் அல்லாஹ்விடத்தில் நெருக்கிவைக்கும் என்ற நம்பிக்கையிலும் தொட்டு முத்தமிடக்கூடிய மனிதர் பற்றியும் அவ்வாறே நபிகளாரின் கபுர் ஷரீப் விடயத்தில் நடந்து கொள்பவரைப் பற்றியும் கேட்டேன்.அதற்கு எனது தந்தை அதில் எந்த தவறும் இல்லை என பதில் அளித்தார்கள்.


ஆதாரம் : இலல் வ மஃfஇரதர் ரிஜால்

தெளபா செய்தார்களா?

 

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டால் தவ்பா செய்தார்களா??

---------------------------------------------------------------------

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் தவறிழைத்த நிலையில்  "யா அல்லாஹ்! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பொருட்டைக் கொண்டு எனது பாவங்களை மன்னிப்பாயாக"என பிரார்த்தித்தனை செய்தார்கள். அதற்கு இறைவன் "ஆதமே, இன்னும் நான் படைத்திராத முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் குறித்து நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?" என வினவினான். அதற்கு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அன்னவர்கள் "இறைவா நீ என்னை உனது கரங்களால் படைத்து உனது ரூஹில் இருந்து எனக்கு உயிர் தந்த போது எனது தலையினை உயர்த்திப் பார்த்தேன்.உனது அர்ஷில் லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று எழுதியிருப்பதைக் கண்டேன். உனது பெயரோடு இன்னொருவரின் பெயர் இணைக்கப்பட்டிருக்கின்றது என்றால் அவர் உனது மேலான நேசத்துக்கு உரியவர் என்பதை விளங்கிக் கொண்டேன்" என கூறினார்கள்.அதற்கு அல்லாஹ் " ஆதமே நான் உன்னை மன்னித்துவிட்டேன். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இல்லையென்றால் நான் உன்னை படைத்திருக்கவே மாட்டேன்" என கூறினான்.


அறிவிப்பவர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு


இந்த ஹதீதினை இஸ்லாமிய அறிஞர்கள் வஸீலாவுக்கு ஆதாரமாக கூறிவரும் நிலையில் மாற்றுக் கொள்கை வாதிகள் இது இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பு என கூறி இதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.


இந்த ஹதீதின் நிலை குறித்து விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.


இந்த ஹதீத் இமாம் பைஹக்கியின் தலாயில் அந் நுபுவ்வாஹ், இமாம் ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக், இமாம் தபரானியின் ஸகீர் போன்ற பல்வேறு கிரந்தங்களில் அறிவிப்பாளர் தொடரோடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த ஹதீத் குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் பார்வை என்ன என்பதை விரிவாக நோக்குவோம்.


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவராக வரக் கூடிய அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் என்பவர் பலவீனமானவர் என குறிப்பிடும் இமாம் ஹாக்கிம் அவர்கள் இந்த ஹதீனை பற்றி குறிப்பிடும் போது இந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசை ஆதாரபூர்வமானது என குறிப்பிடுகிறார்கள். (2:651)


மேலும் அப்துர்  ரஹ்மான்  இடம்பெறும் ஹதீதாக இந்த ஹதீதையே தான் முதலாவதாக தனது கிரந்தத்தில் பதிவு செய்வதாகவும் குறிப்பிடுகிறார்கள்.


இமாம் ஜலாலுத்தீன் சுயூதி அவர்களின் ஆசிரியரான இமாம் ஷெய்குல் இஸ்லாம் ஹாபிழ் சிறாஜுத்தீன் புல்கினி அவர்கள் இந்த ஹதீதை "ஸஹீஹ்" என தனது பதாவாவில் குறிப்பிடுகிறார்கள். 


இமாம் தகியுத்தீன் சுபுக்கி அவர்கள் தனது ஷிfஆ அஸ் ஸிகாம் எனும் கிரந்தத்தில் இமாம் ஹாக்கிம் அவர்கள் இந்த ஹதீதை ஏற்றுக் கொள்ளத்தக்கது என குறிப்பிட்டுள்ளதை உறுதிப்படுத்துகிறார்கள். 


மேலும் இப்னு தைமிய்யாஹ் இந்த ஹதீஸ் குறித்தும் அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் குறித்தும் விமர்சித்திருப்பதை அறிந்திருந்த இமாம் ஸுபுக்கி அவர்கள் இப்னு தைமிய்யாவின் இந்த விமர்சனம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் குறிப்பிடுகிறார்கள் (ஸிfஆ அல் ஸிகாம் பீ சியாரத் கைரல் அனாம்


இமாம் காழி இயாழ் அவர்கள் இந்த ஹதீஸ் பிரபல்யமானதும் ஆதாரபூர்வமானதுமாகும் என தனது ஷிfஆ இல் குறிப்பிடுகிறார்கள்.மேலும் இந்த ஹதீஸ் பின்வரும் குர் ஆன் வசனத்தை விளக்குவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.


"பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்" (2:37)


அல்லாமா அல் ஹாபிழ் இப்னு ஜவ்ஸி அவர்களும் இந்த ஹதீதை ஏற்றுக்கொள்ளத்தக்கது என தனது அல் வபா பி அஹ்வல் அல் முஸ்தபாவில் குறிப்பிடுகிறார்கள். இந்த நூலின் அறிமுக உரையில் இமாம் அவர்கள் தான் சரியான ஹதீதுகளோடு பிழையான அறிவிப்புக்களை கலக்க மாட்டேன் என உத்தரவாதம் தருகிறார்கள். 


இமாம் சுயூதி அவர்கள் தனது துர் அல் மந் தூர் மற்றும் இன்னும் பல கிரந்தங்களில் இமாம் பைஹக்கி அவர்கள் இந்த ஹதீதை ஸஹீஹானதாகவே கருதியிருக்கிறார்கள் என குறிப்பிடுகிறார்கள். இமாம் பைஹக்கி அவர்கள் இந்த ஹதிதை குறிப்பிடும் அவர்களது கிரந்தமான தலாயிலுந் நுபுவ்வாவின் அறிமுக உரையில் தான் இந்த கிரந்தத்தில் ஆதாரபூர்வமான ஹதீதுகளை மட்டுமே பதிவு செய்துள்ளதாக குறிப்பிடுவதன் மூலம் இந்த ஹதீத் குறித்த இமாம் பைஹக்கி அவர்களின் பார்வையை நாம் புரிந்துகொள்ள முடியும். 


இமாம் இப்னு கதிர் அவர்கள் இந்த ஹதீதில் இடம்பெறும் அறிவிப்பாளரான அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் அவர்கள் குறித்த பலவீனத்தை குறிப்பிட்டதன் பின்னர் "இருந்த போதிலும் இந்த ஹதீஸ் குறித்து பின்வரும் குர் ஆன் வசனத்தை மனதில் கொள்ள வேண்டும் என குறிப்பிடுகிறார். " பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.(20:122) 


ஆதாரம் : அல் பிதாயா வந் நிஹாயா (1:75 1:180)


இமாம் நூருத்தீன் இப்னு அபூபக்கர் அல் ஹைதமி அவர்கள் தனது மஜ்ம உ ஸவாயிதில் குறிப்பிடும் போது "இந்த ஹதீதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் குறித்தான விமர்சனங்களை இமாம் இப்னு ஜவ்ஸி, இமாம் ஸுபுகி, இமாம் பைஹக்கி, இமாம் ஹாகிம், இமாம் அபு நுஐம் போன்றோர் அறிந்த நிலையிலும் இந்த ஹதீத் கவனத்தில் கொள்ளத்தக்கது என குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்பதாக கூறுகிறார்கள்.


இந்த ஹதீதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் இப்னு சைத் இப்னு அஸ்லம் என்ற அறிவிப்பாளர் குறித்து பரவலான விமர்சனங்கள் ஹதீது கலை அறிஞர்கள் மத்தியில் இருந்த போதிலும் இந்த குறித்த ஹதீஸ் குறித்து பல்வேறு அறிஞர்கள் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் என்பதை மேற்படி ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.


இன்ஷா அல்லாஹ்..மற்றுமொரு பதிவில் இதே கருத்தை தரக்கூடிய மற்றுமொரு ஹதீத் குறித்து விரிவாக அலசுவோம்!


நன்றி: Mohamed Manas 


#nowshushares | #nowshuposts