அப்போது அந்த மரத்தின் தூர் சப்தமிட்டுக் கூறியது. யா ரசூலல்லாஹ் என்னை அழிவில்லாத சுவனபதியில் நட்டு விடுங்கள். இறை நேசர்கள் எனது கனியினை புசிக்கட்டும் என்று கூறியது. நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களது மிம்பருக்கு கீழ் அது தோண்டிப் புதைக்கப் பட்டது. இந்த ஹதீதினை ரிவாயத் செய்கிற போது ஹஸன் பஸரீ (ரழி) அவர்கள் அழுத வண்ணம் கூறுவார்கள். அஃறினையான அந்த மரம் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருப்பதினை விரும்பியது. (முஃமினான) நீங்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருக்கும் விருப்பத்திற்கு மிகவும் தகுதியானவர்கள். (நூல் ஃபத்ஹுல் பாரீ பாகம் 6 பக்கம் 393)