இமாம் இப்னு அபீஷைபா رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு ஹிஜ்ரி 235) அவர்கள் ஸஹீஹான ஸனதுடன் கூடிய அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கின்றார்கள் ,
" நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்,' நாங்கள் துஸ்தர் ( ஈரானில் உள்ள நகரம் ) நகரத்தை வெற்றி கொண்ட பொழுது ,நாங்கள் ஓர் பெட்டியைக் கைப்பற்றினோம்.அந்த பெட்டியில் ஒருவரது உடல் இருந்தது .அன்னாரது மூக்கு நமது கைகளின் அளவிற்கு நீளமாக இருந்தது.அவரது இரத்தநாளம் மற்றும் சுரப்பிகள் பாதுகாக்கபட்டிருந்தது.அன்னாரது உடல் உயிரோடு உள்ளவர்களின் உடல் போன்று ஸலாமத்தாக இருந்தது. அங்குள்ள மக்கள் அன்னாரது வஸீலாவினால் மழை மற்றும் பரக்கத்தை வேண்டி துஆ செய்வதாக கூறினர்.
இது குறித்து நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ மூஸா அஷ்அரி رضي الله عنه அவர்கள்,அச்சமயம் கலீபாவாக இருந்த அமீருல் முஃமினீன் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
இதற்கு பதில் எழுதிய அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் ,இதுவாகிறது அல்லாஹ்வின் நபிமார்களில் ஒருவராகிய ஸெய்யிதினா தான்யால் عَلَيْهِ ٱلسَّلَامُ ஆவார்கள் என்று எழுதினார்கள்.
மேலும் நபிமார்களின் பரிசுத்த மேனியை நெருப்பும் ,மண்ணும் தீண்டாது.அவர்களை அடக்கம் செய்திட கட்டளையிட்டார்கள்.அதன் பேரில் நாயகத் தோழர்கள் ஸெய்யிதினா அனஸ் رضي الله عنه மற்றும் ஸெய்யிதினா அபூ மூஸா அஷ்அரி رضي الله عنه அவர்கள் ,அல்லாஹ்வின் தூதராகிய ஸெய்யிதினா தான்யால் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களை அடக்கம் செய்தார்கள்.
📚முஸன்னப் அபீ ஷைபா ,பாகம் 11,ஹதீஸ் எண் 34399