ஒரு பேனுதல் உள்ள தாயால் மட்டும் தான் பேனுதல் நிறைந்த குழந்தையை இந்த சமூகத்திற்கு உருவாக்கித்தர முடியும்
இமாம் ஷாபிஈ ஏழு வயதில் முழு குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிழாக ஆனார்கள்.பத்து வயதில் முஅத்தா எனும் ஹதீஸ் நூலை மனனம் செய்து முடித்து பதிமூன்றாவது வயதில் மக்காவின் மிகப்பெரும் பகீஹாக உயர்ந்தார் கள்.அவர்களின் அசாதாரணமான மனன திறமைக்கு காரணத்தை அவர்களிடம் வினவப்பட்டபோது
குழந்தையாக நான் இருந்தபோது என் தாய் எனக்கு ஒரு நாளும் ஒழு இல்லாமல் பாலூட்டியதில்லை என்று கூறினார்கள்
ஒரு தாயின் பேனுதல்,ஒழுக்கம் ஒரு மாமனிதரை இந்த உம்மத்துக்கு பெற்று த்தந்தது.
கல்விக்கடல் என்றும் ஆண்மீக ஊற்று என்றும் நாமெல்லாம் கொண்டாடும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் ஒரு தாயின் பேனுதலான வளர்ப்பில் உருவானவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் தாயாருக்கு இரண்டு மகன்கள்.ஒருவர் முஹம்மத் அல்கஸ்ஸாலி- இன்னொருவர் அஹ்மத் அல் கஸ்ஸாலி.இவர்களின் தாயார் இவ்விருவரையும் மிகச்சிறந்த அறிஞர்களாகவும் வணக்கசாலிக ளாகவும் உருவாக்கினார்கள்.
இதில் முஹம்மத் அல்கஸ்ஸாலி ரஹ் அவர்கள் மிகப்பெரும் அங்கீகாரம் பெற்று மக்களுக்கு இமாமத் செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டார்கள்.இவர் சகோதரர் அஹ்மத் அல் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் மாபெரும் வணக்கசாலி என்றாலும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களுக்கு பின்னால் தொழமாட்டார்.இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர்களின் தாயாரிடம் முறையிடுகிறார்கள்.அவர்களின் தாயாரும் அஹ்மத் அவர்களை அழைத்து நீ உன் சகோதரருக்குப்பின்தான் தொழவேண்டுமென கண்டிப்புடன் கூறவே அதை ஏற்றுக்கொள்கிறார்.
ஒருநாள் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களுக்கு பின் தக்பீர் கட்டி தொழ ஆரம்பித்தார்.இரண்டு இரக்கஅத் தொழுகையில் முதல் இரக்கஅத்தை இமாம் அவர்கள் நிறைவு செய்தபோது அவர்களின் சகோதரர் தக்பீரை அவிழ்த்து விட்டு இடையிலேயே சென்றுவிட்டார். இது இமாம் கஸ்ஸாலிக்கு இன்னும் மிகுதியான வேதனையளித்தது.
மீண்டும் அவர்களின் தாயாரிடம் முறையிட்டபோது, அவ்விருவரையும் அழைத்து அவர்களின் தாயார் விசாரித்தார்கள்.
அப்போது இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் சகோதரர் - தாயார் அவர்களே! என் சகோதரர் முதல் இரக்கஅத்தில் இறைச்சிந்தனையுடன் தொழுதார்.இரண்டாவது இரக்கஅத்தில் அல்லாஹ்வின் சிந்தனை அவருக்கு தவறிவிட்டது.இதை நான் கஷ்பின் மூலம் த்ரிந்துகொண்டேன் எனவே நான் தக்பீரை அவிழ்த்துவிட்டு தனியாக தொழுதேன் என்று கூறினார்கள்.
இது குறித்து இமாம் கஸ்ஸாலி அவர்களிடம் விசாரித்தபோது மறுக்காமல் உண்மைதான் என ஒப்புக்கொண்டார்கள்.நான் தொழுகைக்கு முன் நிபாஸ் எனும் மார்க்கச்சட்டம் குறித்து கிதாபை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். இந்நிலையில் தொழுகையின் நேரம் வரவே கிதாபை மூடிவைத்து தொழ வந்துவிட்டேன்.எனவே தான் இரண்டாவது இரக்கஅத்தில் நிபாஸ் பற்றிய சட்டங்களில் கவனம் வந்துவிட்டது.என்றார்கள்.
அப்போது அவர்களின் தாயார், நீங்கள் இருவரும் தவறு செய்தவர்கள்.இமாம் கஸ்ஸாலி அவர்களை நோக்கி அல்லாஹ்வின் சிந்தனை தொழுகையில் தப்பிப்போக என்ன காரணத்தை நீ சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ் அவர்களை நோக்கி நீ முதல் இரக்கஅத்தில் அல்லாஹ் வின் சிந்தனையுடன் தொழுதாய்.ஆனால் இரண்டாவது இரக்கஅத்தில் உன்சகோதரரின் குறையின் பக்கம் உன்கவனத்தை திருப்பிவிட்டாய்.எனவே நீங்கள் இருவரும் நான் விரும்பிய பிள்ளைகளாக இல்லை என்று எச்சரித்ததும் அவ்விருவரும் அதற்காக மன்னிப்பு கேட்டனர்.(குதுபாத் துல்பிகார்)