السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 13 January 2016

அன்புச் சகோதரா !!!!

தேசிய வாதமும் கிலாபாவும்

தேசிய வாதமும் கிலாபாவும் என்பதை பற்றி வினவியிருந்தாய். முஸ்லிம்கள் ஒரே ஒரு கலீபாவின் கீழ் ஒன்று பட வேண்டும் ஒரே கொடியின் கீழ் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனாலும் கூட இதனை சாத்தியப் படுத்த வேண்டும் என்ற சிலருடைய கோஷத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மங்கள் நம்மை படுகுழியில் தள்ளும் அபாயம் மிக்கவை.
அப்பாஸிய கிலாபா ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் மறுபடி கிலாபா உருவாக வேண்டும் என்ற சிந்தனையை கொண்டு வந்த பிரதான நபர் அபுல் அஹ்லா அல் மவ்தூதி.
தஜ்ஜாலின் வருகை பற்றிய தெளிவான ஹதீதுகளையே மறுத்தவர். இவரின் வழிகேடுகள் ஏராளம். ஆக ஒரு வேளை இந்த முஸ்லிம் பெயர் தாங்கியின் பின்னால் நாம் ஒன்று படுவோமாயின் அந்த கிலாபா ஆட்சி வெறும் பொம்மை ஆட்சியே.
என் சமூகத்தில் நான் அஞ்சுவதெல்லாம் வழி கெடுக்கக் கூடிய தலைவர்களைப் பற்றியே. ஒரு பெண்ணின் தலைமைத்துவத்தைக் கொண்ட சமூகம் ஒரு போதும் வெற்றியடையாது என்ற நபி மொழிகளை உனக்கு முதலில் ஞாபகமூட்டுகின்றேன்.
அப்பாஸிய கிலாபத் பிரிந்த போதும் மன்னராட்சிக்கெதிராக லிபிய மக்கள் போராடிய போதும் பல மில்லியன் கணக்கில் முஸ்லிம்களின் குருதி குடிக்கப்பட்டது என்பது வரலாறு நமக்குச் சொல்லும் பாடங்கள்.
கிலாபத்தை உருவாக்கும் முயற்சியிலும் இதே நிலைமை ஏற்படும். ஆக சிந்தனா ரீதியில் கிலாபத்தை ஏற்படுத்த முடியும் என்பது வரலாறு தெரியாதவர்களின் வரட்டு வாதமாகும்.
மூன்றாவதாக கிலாபா சிந்தனை என்பது எத்தனையோ இஸ்லாமிய சிந்தனைகளில் அதுவும் ஒன்று. அதற்கென்று நேரமும் காலமும் இருக்கின்றது.
இறைவன் மறுமையில் நீ ஏன் ஒரு தேசத்தின் ஆட்சிக்கு கீழ் இருந்தாய்.?? கிலாபாவுக்கு கீழ் இருக்கவில்லை?? என்று கேட்கப் போவதில்லை. அது பாமர மக்களின் மீது கடமையுமில்லை. என்பது சாதாரணமாக சிந்தித்தாலே புரியும்.
எனவே ஆட்சியாளர்களிடத்தே இச் சிந்தனையை ஏற்படுத்தாமல் அந்நிய அரசுகளின் கீழ் வாழும் பாமர மக்களிடையே இச் சிந்தனையை ஏற்படுத்துவதன் பின்புலம் என்ன.???
அலி ரழியல்லாஹு அன்ஹூ அவர்களின் ஆட்சிக் காலத்தில் கிலாபா தொடர்பில் நாயகத்தின் முன்னறிவிப்பின் பிரகாரம் ஜமல் யுத்தம் இடம் பெற்றபோது மூத்த ஸஹாபாக்கள் போருக்குச் செல்லவில்லையென்பதே வரலாறு .
ஏன் எனில் முஸ்லிம்களோடு போராடுவது ஜிஹாத் அல்ல. ஆக நாமும் இதே வழிமுறையைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது.
அத்தோடு மத்திய கிழக்கில் எப்போதும் இரத்த ஆறு ஓட வேண்டும் என்ற யூத சிந்தனையின் விளைவே தற்போதைய கிலாபா கோஷம் தொடர்பான எனது முடிவும் ஆலிம்களின் முடிவும் ஆகும்.
ஏராளமான வரலாற்றுச் சான்றுகளோடு இதனை நிறுவ முடியுமாயினும் விரிவஞ்சி தவிர்த்துக் கொள்கிறேன். அல்லாஹ் அறிந்தவன்

Arsath.farveis Eravur

தேசிய வாதமும் கிலாபாவும்
தேசிய வாதமும் கிலாபாவும்

தேசிய வாதமும் கிலாபாவும்