முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 06
விமர்சனம் 06
பத்து வயது பாலகரான அப்துல் காதிர் ஜீலானியை இறைநேசர் என்று மலக்குகள் நிச்சயம் கூறி இருக்க முடியாது. ஒருவர் விபமரிந்து தமது நடத்தையின் மூலமாகத்தான் இறை நேசராக முடியும் என்பதற்கு மாறாக பிறப்பால் இறைநேசராகிவிட்டதாக இக்கதை தெரிவிக்கின்றது. இந்தக் காரணத்தினாலும் இது பொய் மேலும் உறுதியாகின்றது.
விளக்கம்
மறுக்க முடியாத விஷயங்களைப் பொய் என வாதிப்பது இவரது வாடிக்கை. தமது நடத்தையின் மூலமாகத்தான் இறைநேசராக முடியும் என்று சொல்பவர் அல்லாஹ்வின் நாட்டம் விருப்பம் மூலம்தான் மனிதர்கள் இறைநேசர்களாகிறார்கள் என்ற அடிப்படை உண்மையை மறுக்கிறார்.
மனிதர்கள் நற்செயல்கள் செய்வதற்கும் ஏன் பிறப்பதற்கும் முன்னே நபிமார்களையும் இறைநேசர்களையும் அல்லாஹ் தீர்மானித்துவிட்டான்.
இறைவனின் விதியை அறிந்த நபிமார்கள் மற்றும் மலக்குகளுக்கு விதிக்கப்பட்ட நபரின் சிறு வயதிலேயே அவரை நபியென்றும் இறைநேசரென்றும் கூறமுடியும். இந்த விதியை அறியாதவர்களுக்குத்தான் ஒருவரை இறைநேசர் என்று கூற அவரது நற்செயல்களை பார்வையிடும் நிலைவருகிறது.
தொட்டிலில் குழந்தையாக இருக்கும் போதே நான் நபியென்று பிரகடனப்படுத்தினார்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
பொதுவாக நாற்பது வயதில் ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் வஹீ அறிவிக்கப்படும் போதுதான் நபித்துவம் கிடைக்கிறது. ஆனால் குழந்தையான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நபியெனக்கூறியது சிறுவயதிலேயே நபியாக முடியும் என்பதைக் காட்டுகின்றது.
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை.எனக்கு ஒரு வேதத்தை கொடுத்து என்னை நபியாகவும் ஆக்கியுள்ளான். Quran. மர்யம்:30
என்று குழந்தையாக இருக்கும் போதே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் எனவே கொதுல் அஃலம் رضي الله عنه அவர்களைப்பற்றி மலக்குகள் கூறியதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தாம் நபி என்பதை இறைவன் புறத்திலிருந்து அறிவிக்கப்பட்டது போன்று கௌதுல் அஃலம் رضي الله عنه அவர்கள் வலி என்பது மலக்ககளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும்
அபூ இஷ்ஷா