முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 04
விமர்சனம் 04
இச்சமூகத்திலேயே மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்களுக்கே ஒரு வானவர் வந்ததை அறிய முடியவில்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்?
விளக்கம்
நபித்தோழர்களும் இறைநேசர்களும் வானவர்களை அறிந்து கொண்டனர் என்பதை முன் சொல்லப்பட்ட பதில்களில் நிரூபித்துள்ளேன்.
மேலும் இக்கேள்வி மூலமாக சிறந்த ஒருவருக்கு இல்லாத பண்ப அவரை விட சிறப்பு குறைந்தருக்கு இருக்க முடியாது என்ற வாதத்தை முன்வைக்கின்றார். இக்கருத்து குர்ஆனுக்கும் ஹதீஸ_க்கும் முரண்பட்டது. சிறந்த மனிதர்களுக்கு கொடக்கப்பட்டாத பண்புகள் சிறப்பு குறைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்.
நபி ஸல் அவர்களை விட சிறப்பு குறைந்தவர்களான ஸ_லைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிகப்பெரிய ஆட்சி வழங்கப்பட்டது.
அவர்களை விட உயர்ந்தவர்களான நபிகள் நாயகம்
صلى الله عليه وسلم அவர்களுக்கு வழங்கப்பட் வில்லை.
நாயகத் தோழர்களில் மிகச் சிறந்தவர்களும் நபி
صلى الله عليه وسلم அவர்களுடன் மிகவும் நெருக்கமுடையவர்களுமான அபூபக்ர் رضي الله عنه அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டா பல இரகசியங்கள் அவர்களை விடச் சிறப்பு குறைந்த ஹ_தைபாرضي الله عنه அவர்களுக்கு வழங்கப்பட்டது.
صلى الله عليه وسلم அவர்களுக்கு வழங்கப்பட் வில்லை.
நாயகத் தோழர்களில் மிகச் சிறந்தவர்களும் நபி
صلى الله عليه وسلم அவர்களுடன் மிகவும் நெருக்கமுடையவர்களுமான அபூபக்ர் رضي الله عنه அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டா பல இரகசியங்கள் அவர்களை விடச் சிறப்பு குறைந்த ஹ_தைபாرضي الله عنه அவர்களுக்கு வழங்கப்பட்டது.
புகாரியின் ஹதீஸ் ஒன்றில் இவ்வாறு காணப்படுகிறது.மற்ற ஸஹாபாக்கள் அறியாத இரகசியங்களை தெரியக்கூடிய ஹ_தைபா உங்களில் இல்லையா? புகாரி : 3743
நடைமுறை ரீதியாக பார்த்தாலும் விமர்சகரின் வாதம் நகைப்புக்குரியதாகவே அமைகிறது.நவீன அறிவியல் வளர்ச்சி காரணமாக இக்கால கட்டத்தில் வாழும் மக்களுக்கு பல வசதிகள் கிடைத்துள்ளன.வேறு கோள்களுக்குப பயணித்தல்.செயற்கை கோள்களை பயன்படுத்து.விமானம் புகைவண்டி பஸ் கார் போன்ற விரைவு போக்குவரத்துச் சாதணங்கள் நவீன வீட்டு உபயோக சாதனங்கள் கணிப்பொறி செல்போன் போன்றவை அவற்றில் சில
இவைகளெல்லாம் இந்த சமூதாயத்தில் சிறந்தவர்களான ஸஹாபாக்களுக்கு கிடைக்கவில்லை. மிகச் சிறந்தவர்களான ஸஹாபாக்களுக்கே என்ற பாணியில் பேசுவாதாக இருந்தால் நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்ற நிகழ்கால வசதிகளை மறுக்க வேண்டும்.
தந்தைக்கு இல்லாத சிறப்பு தனயனுக்கும் ஆசிரியருக்கு இல்லாத சிறப்பு மாணவருக்கும் இல்லாமல் போக வேண்டும் என்றல்லாவா கூற வேண்டி வரும்.
வானவர்களை அறியும் ஆற்றல் நபித்தோழர்களுக்கு இல்லை என்று வைத்துன் கொண்டால் கூட கௌதுல் அஃலம் رضي الله عنه அவர்களுக்கு இருக்க முடியும் என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஆனால் வானவர்களை நபித்தோழர்கள் அறிந்தார்கள் என விவரிக்கப்பட்ட பின்னர் கௌதுல் அஃலம் رضي الله عنه அவர்கள் வானவர்களை பார்த்தார்கள் என்பதை மறுப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போகின்றன.
தொடரும்
Abu izzzah Eravur