முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 05
விமர்சனம் 05
கணகாணிப்பு பணியில் உள்ள மலக்குகள் அப்துல் காதிர் ஜீலானிக்காக பராக் கூறியதாக இக்கதை கூறுகிறது.இந்த மலக்குகளுக்கு இப்படி ஒரு பணி ஒதுக்கப்பட வில்லை.விளக்கம்
கௌதுல் அஃலம் رضي الله عنه அவர்கள் பற்றி இந்த இறை நேசருக்கு வழிவிடுங்கள் என்று மலக்குகள் சொன்னதை பராக் கூறினார்கள் என்று கிண்டல் செய்கிறார்..
இந்த மலக்குகளுக்க இப்படி ஒரு பணி ஒதுக்கப்பட வில்லை என்று இவர் கூறுவதிலுள்ள உறுதியைப் பார்த்தால் அல்லாஹ் மலக்ககளுக்கு இடும் ஒவ்வொரு கட்டளையின் போது இவரும் கூடவே இருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆனால் திர்மிதியில் வருகிற ஹதீஸ் மலக்குகளின் மேற்சொன்ன கூற்றை உறுதிப்படுத்துகிறது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள் அறிவைத் தேடும் மாணவர்களுக்கு மலக்குகள் இறக்கைகளைத் தாழ்த்துவார்கள்.திர்மிதி -: எண் - 2682
இறக்கைகளைத் தாழத்துதல் என்பது பணிவிடை செய்வதாகச் சொல்லப்படும் ஒர் இலக்கிய சொல்.இந்த வார்த்தை இதே பொருளில் குர்ஆனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஒர் இறை நேசருக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மகத்துவத்தை மறுப்பதுடன் மலக்குகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பணியையும் மறுத்தல் என்ற கொடிய பாதகத்தையும் முஸ்ரிக் பிஜே விமர்சகம் செய்துள்ளார்.