السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday, 11 January 2016

பயங்கரவாதிகளாக உருவொடுப்பது வஹ்ஹாபிகளே! (ISIS)

பயங்கரவாதிகளாக உருவொடுப்பது வஹ்ஹாபிகளே! (ISIS)

தண்ணீர் தொட்டிகளில் (எமது ஊர்ப்பாசையில்) 'பேத்தை' இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தவளை உருவில் அவை இல்லை. ஆனால் அது தான் வளர்ந்து தவளையாகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
அதே போன்று தான் வஹாபியத்து தான் வளர்ந்து வளர்ந்து கடைசியில் ISIS தாஇஷாக உருவெடுக்கிறது. 
முதல் படித்தரம் :- குர்ஆன் ஹதீஸ் மனம் போன போக்கில் கண்டபடி பேசி, நூதனமான பித்அத்தான புதுவித தவ்ஹீத் பேசி, உலகில் உள்ள மற்ற எல்லா முஸ்லிம்களையும் காபிர், முஷ்ரிக் என்று கூறல். (அதாவது تكفير Thakfeer என்ற முஸ்லிம்களையும் அவ்லியாக்களையும் முஷ்ரிக் என்று கூறும் கொள்கை)
இரண்டாம் படித்தரம் :- உலமாக்களைத் தாக்குவது, அவ்லியாக்களினதும், ஸஹாபாக்கள், நபிமாரினதும் ஸியாரங்களை உடைத்தல் இப்படியாக முடிவில்லாமல் நீண்டு செல்லும் பயங்கரவாத செயல்கள். (அதாவது إرهاب Terrorism என்ற அட்டூழியங்கள்.)
மூன்றாம் கட்டம் :- ஸுன்னி முஸ்லிம்களையும் சீஆக்களையும், மற்ற மனிதர்கள் அனைவரையும் ஈவிரக்கமின்றி பயங்கரமான வெடிகுண்டுகள் வெடிக்க வைப்பது மூலம் மனித இனத்தையே கொன்று குவிப்பது. (அதாவது تفجير Bombing என்ற குண்டுத் தாக்குதல் மூலம் மனித இனத்தையே அழித்தொழிப்பது.)
இதைத்தான் "அல்லாஹ் படைத்த மனித இனம் மிருக இனம் அனைத்திலும் இவர்களே மிகக் கெட்டவர்கள்" என்ற கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல ஹதீஸ்கள் வாயிலாக 1400 வருடங்கட்கு முன்னரே எச்சரித்தார்கள்.
அரபு நாடுகளில் இவ்வளவு காலமாக வளர்ந்து வந்த தவ்ஹீத் ஜமாஅத்து, இக்வானுல் முஸ்லிமீன், ஸலபி என்ற வஹாபி இயக்கங்களில் இருந்து உருவானதே ISIS தாஇஷ். எனவே இலங்கையில் உள்ள அந்த இயக்கங்களும் அவர்களது பலம் அதிகரித்து, அரசியலிலும் அவர்களுக்கு சார்பான MP மார்கள் உருவாகும் போது, இங்கும் அவர்கள் உலக தாஇஷ், நுஸ்ரத் போன்ற உலகத் தலைவர்கள் இடும் பயங்கரவாத, படுகொலைகளை செய்யலாம்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இப்படியான கடைசி கால பயங்கரவாதம் பற்றிய ஹதீஸ்களை பயான்களிலும், பள்ளிகளிலும், ரேடியோ டிவி களிலும் மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து, கண் முன்னே உலகில் இன்று நடக்கும் நடப்பையும் மூடி மறைத்து, தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் அரசியல் ஆதாயம் தேடவும் இன்று சில தலைவர்கள் முயலுகின்றார்கள்.
எனவே எதிர் காலத்தில் இந்த பயங்கரவாதம் இலங்கையைத் தாக்கினால், வெள்ளம் வருமுன் அணை போடாமல் இலங்கை முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தலைவர்களே அல்லாஹ்விடம் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஏராளம் எச்சரிக்கை செய்யும் ஹதீஸ்களையும், கண்கூடாக இன்று உலகில் நடக்கும் நடப்புக்கு வஹாபிளே காரணம் என்ற பகிரங்க உண்மையையும் எவருக்கும் பயந்து மறைக்க நாம் தயாரில்லை.

பயங்கரவாதிகளாக உருவொடுப்பது வஹ்ஹாபிகளே! (ISIS)

ஸவூதியில் பிறந்து ஸவூதி பணத்தால் உலகெலாம் வளர்ந்த வஹாபி இயக்கங்களில் சிலதையும் சீஆ இயக்கங்கள் சிலதையும் ஸவூதி அரசாங்கம் தடை செய்துள்ளது. 

இஸ்லாத்தை அழிக்க ஸவூதி அந்த (வஹாபி) இயக்கங்களை வளர்த்தது. இப்போது அவை ஸவூதி அரசையே பிடிக்க முனையும் போது தான் அரசு விழிப்படைந்துள்ளது.

பயங்கரவாதிகளாக உருவொடுப்பது வஹ்ஹாபிகளே! (ISIS)