முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 07
நோன்பு வைத்த பாலன்
விமர்சனம் 07
முஹ்யீத்தீன் மவ்லீதில் இடம் பெறும் மற்றொரு அற்புத கதையைப் பார்ப்போம். அப்துல் காதிர் ஜீலானி கைக்குழந்தையாக இருந்த போது மேகம் பிறையை மறைத்தது.
ஷஃபான் மாதத்தின் கடைசி நாளா? ரமாளான் மாத்தின் முதல் நாளா? என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது.உடனே மக்கள் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் தயாரிடம் சென்று விளக்கம் கேட்டனர்.அதற்கவர் எனது மகன் இன்று எனது மார்பகத்தை சுவைக்கவில்லை. என்று கூறினாராம். அதாவது ரமளானின் முதல் நாள் என்பதால் தாய்ப் பால் அருந்தாமல் அந்தக்குழந்தை நோன்பிருந்ததாம். மக்களும் இதை ஆதாரமாகக் கொண்டு அந்த நாள் ரமளானின் முதல் நாள்தான் என்ற முடிவு செய்தார்களாம்.
விளக்கம்
முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றிருப்பதாகச் சொல்ப்பட்ட மேற்சொன்ன வாசகங்களில் பொய்யான பல இடைச் செருகல்களை நூழைத்து மொழி பெயர்த்துள்ளார்.
மவ்லிதின் சரியான வாசகங்கள்: கௌதுல் அஃலம் அவர்களின் தாயார் சொன்னார்கள். எனது மகன் இதுவரை ரமளானின் பகலில் பால் அருந்தியதில்லை.ஓரு முறை மாதத்தின் பிறை மேகத்தால் மூடப்பட்டது. அப்போது மகனைப்பற்றி மக்கள் என்னிடம் கேட்டார்கள். எனது மகன் இன்று எனது மார்பகத்தை சுவைக்கவில்லை.என்று சென்னேன். பிறகு அந்த நாள் ரமளானின் முதல் நாள் என்பது தெளிவாயிற்று.
தெளிவாக உள்ள இச்சம்பவத்தில் சில பொய் வாசகங்களை அவர் இணைத்து அந்த இடைச் செருகல்களை முன் வைத்தே தனது விமர்சகங்களைத் தொடுக்கிறார்.
இடைச் செருகல் : 01..
உடனே மக்கள் சென்று தாயாரிடம் விளக்கம் கேட்டனர்.என்று மொழி பெயர்த்துள்ளார். இந்த வாசகங்கள் மவ்லிதில் இல்லை. மேக மூட்டமாக இருப்பதால் ரமாளானை முடிவு செய்ய என்ன செய்ய வேண்டும் என மக்கள் கேட்டதாக கூறுகிறார்.
தேளிவான ஓரு சட்டத்தைக்கூட தெரியாதவர்களாக அக்கால மக்கள் இருந்தனர் என அரிஞர்கள் நிறைந்த அந்தக் காலத்தை மவ்லீத் தவாறாக அறிமகப்படுத்துகிறது. என்றும் குற்றம் சாட்டகிறார்.
மேக மூட்டமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று அவர்கள் கௌதுல் அஃலம் அவர்களின் தாயாரிடம் கேட்கவில்லை.
فسألوني عنه மகனைப்பற்றி என்னிடம் கேட்டார்கள்.என்றுதான் மவ்லிதின் வாசகத்தில் இருக்கிறதே தவிர மேகம் மறைத்த நாளில் பிறை குறித்த சட்டத்தைக் கேட்டதாக இல்லை.
கௌதுல் அஃலம் அவர்கள் வழக்கமாக ரமளான் பகற்காலங்களில் பால் குடிக்காததால் மேக மூட்டமாக அந்த நாளில் என்ன செய்தார்கள்? என்பதை அறிய மக்கள் விரும்பினர்.
இடைச்செருகள்: 02
மக்களும் இதை ஆதாரமாகக் கொண்ட அந்த நாள் ரமளானின் முதல் நாள் என்று முடிவு செய்தார்களாம் இப்படியொரு வாசகம் மவ்லிதில் இல்லவே இல்லை.
பிறகு அந்த நாள் ரமளானின் முதல் நாள் என்பது தெளிவானது என்றுதான் மவ்லிதில் கூறப்பட்டுள்ளது. மேக மூட்டமான அந்நாளில் வேறு ஊர்களில் பிரை தெரிந்ததை அறிந்த மக்கள் பால் குடிக்காத அந்த நாள் ரமளானின் முதல் என்று விளங்கிக் கொண்டனர். என்பதுதான் உண்மை. புhல் குடிக்காததை வைத்து முடிவு செய்தார்கள் என்பது துணிந்து சொல்லப்பட்ட அப்பட்டமான பொய்.
விமர்சனம் : 08
“பிறவியிலேயே இறை நேசராகத் திகழ்ந்த அப்துல் காதிர் ஜீலானிக்கும் இந்தச் சட்டம் தெரியவில்லை.”
விளக்கம் :
மேக மூட்டமாக இருந்தால் ஷஃபானை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும்ää நோன்பு நோற்கக் கூடாது என்ற சட்டம் தெரியாமல் கௌதுல் அஃலம் றழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் நோன்பு வைத்துள்ளார்கள் என்று கூறுகிறார்.
நாம் இருக்கும் ஊரில் பிறை தென்படாவிட்டாலும் பக்கத்து ஊர்களில் பிறை பார்த்தால் அதை வைத்து நோன்பு பிடிக்கலாம் என்பது மார்க்கச்சட்டம். கௌதுல் அஃலம் றழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் இறைநேசராக இருப்பதால் பக்கத்து ஊரில் பிறை தென்பட்ட செய்தி இல்ஹாம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நோன்பு வைத்துள்ளார்கள்.
‘பிறகு அது ரமளான்தான் என்பது தெளிவானது’ என மவ்லிதிலேயே வருகிறது. பக்கத்து ஊர்களில் பிறை தென்பட்டதை வைத்துதான் பிறகு ரமளான் என்பது தெளிவாக முடியும்.
எனவே பிறவியிலேயே இறை நேசரான கௌதுல் அஃலம் றழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் மார்க்கச் சட்டத்தைத் தெரிந்துதான் செயல்பட்டுள்ளார்கள். இறைநேசர் குழந்தையாக இருந்தாலும் மறைவான காரியங்கள் அறிவித்துக் கொடுக்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள் வரும் பக்கங்களில் காணலாம்.
தொடரும்
அபூ இஷ்ஷா