முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள்
முஹ்யித்தீன் மௌலிதில் மூன்றாவது ஹிகாத்தில் வருகிறது…நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் அனுமதியுடன் வானவர்கள் என்னைச் சூழ நடந்து வருவதை நான் பார்த்திருந்தேன். பாடசாலை மாணவர்களிடம் அல்லாஹ்வின் நேசருக்கு இடமளியுங்கள் என்று வானவர்கள் கூறியதையும் கேட்டேன். என்ற அப்துல் காதிர் ஜீலானி கூறினார்.
விமர்சனம் :
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! இதைக் கூறினார்கள் என்றால் அவரது காலத்தில் எழுதப்பட்ட அல்லது அவர்களின் மாணவர்களின் காலத்தில் எழுதப்பட்ட எந்த நூலில் இந்த நிகழ்ச்சி கூறப்படுகிறது? எந்த நூலிலும் கூறப்படவில்லை எனபதே உண்மை.
விளக்கம்
பொதுவாக வரலாற்று நாயகர்கள் வாழும் காலத்தில் அவர்களின் வரலாறுகள் எழுதப்படுவதில்லை. அவர்கள் காலத்தில் வாழும் மக்களுக்கு அவர்களுடைய சிறப்புக்களை அறிய நூற்களின் துணை தேவையுமில்லை. நேரடியாக பார்த்தோ பார்த்தவர்களிடம் கேட்டோ அறிந்து கொள்ள முடியும்.அவர்கள் மறைவுக்கு பிறகுதான் வரலாறுகள் நூல் வடிவம் பெறுகின்றன.
நபி பெறுமானார் صلى الله عليه وسلم அவர்களின் பொன்மொழிகள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகுதான் நூல் வடிவம் பெற்றன.
எனவே இச்சம்பவம் கௌதுல் அஃலம் رضي الله عنه அவர்கள் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகுதான் இமாம் அலீ இப்ன யூசுப் ரஹ்மதுல்லாஹ் மரணம் ஹஜ்ரி 713 அவர்களினால் எழுதப்பட்ட பஹ்ஜதுல் அஸ்ரார் என்ற நூலில் முஹ்யத்தீன் மெவ்லீதில் வரும் சம்பவங்கள் அறிவிப்பாளர் வரிசைத் தொடருடன் கூறப்பட்டுள்ளன.
நபிமார்களில் சிறந்தவர்களான கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பொன்மொழிகளும் வரலாற்றுச் சம்பவங்களும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்தும் முகமாக அறிவிப்பாளர் வரிசைத் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று வலிமார்களில் சிறந்தவர்கள் கௌதுல் அஃலம் அவர்களின் வரலாற்றுச் சம்பவங்களின் நம்பகத்தன்மையை அறிவிப்பாளர்களின் வரிசை உறுதிப்படுத்துகின்றது.
மத்ரஸா மாணவர்களுடன் மலக்குள் பேசிய சம்பவம் பஹ்ஜதுல் அஸ்ராரில் கீழ் கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அலி இப்னு யூசுப் சொன்னார்கள்: நம்மிடம் ஷெய்கு அஹ்மத் சொன்னார். அவரிடம் அபுல் பரஜ் சொன்னார்.அவரிடம் அபூஸாலிஹ் சொன்னார்.அவரிடம் கௌதுல் அஃலம் சொன்னார்கள். கௌதுல் அஃலம் அவர்களிடம் தாங்கள் ஓர் இறை நேசர் என்பதை எப்போது விளங்கிக் கொண்டீர்கள்?
என்று கேட்க்கப்பட்ட போது நான் 10 வயதுச் சிறுவனாக இருந்த போது மத்ரஸாவுக்குச் சென்ற நேரத்தில் அல்லாஹ்வின் நேசர் அமர்வதற்காக அவருக்கு இடமளியுங்கள் என்று மாணவர்களிடம் மலக்ககள் சொல்வதைப் பார்த்தேன்.என்று பதில் சொன்னார்கள். பஹ்ஜதுல் அஸ்ரார் பக்கம் 21
தெளிவான அறிவிப்பைத் தொடருடன் கூறப்பட்ட ஒரு உண்மையான சம்பவத்தை சரித்திர நூற்களை பார்ப்பதற்குரிய ஞானம் இல்லாமல் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்வதை இங்கு பார்த்தோம். எந்த நூலிலும் கூறப்படவில்லை என்பதே உண்மை என்ற அவரது வார்த்தைகளின் உண்மை நிலை புரிகிறதல்லவா?
தொடரும் ..
ABU IZZAH
ABU IZZAH