முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 09
விமர்சனம் 09
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்த ஆச்சரியமான நிகழ்சியை அன்றைய மக்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள்.அப்துல் காதிர் ஜீலானி காலத்தில் அதற்கடுத்த காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் இது எழுதப்பட்டிருக்கும். ஆப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலந்தொட்டு 600 ஆண்டுகள் வரை எழுதப்பட்ட எந்த நூலிலும் இந்த விபரம் கூறப்பட வில்லை.
விளக்கம்
கௌதுல் அஃலம் ரலியல்லாஹ_ அன்ஹ_ அவர்கள் மறைந்து 100 ஆண்டுகளுக்குள் பிறந்த அலி இப்னு யூசுப் ரஹ்மதுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட பஹ்ஜதுல் அஸ்ராரில் இந்நிகழ்வு இடம் பெற்றள்ளத.
அலி இப்னு யூசுப் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள்: நம்மிடம் அபூ அலி இஸ்ஹாக் சொன்னார்.அவரிடம் முஹம்மது இப்னு அப்துல் லதீப் சொன்னார்.அவரிடம் அஹ்மத் இப்னு அஸ்அத் சொன்னார்.அவரிடம் அப்துல்லாஹ் இப்னு ஸ_லைமானும் உம்மு அஹ்மத் ஜலீலாவும் சொன்னார்.
நாங்கள் கொதுல் அஃலம் ரழி தாயார் சொல்லக் கேட்டோம். எனது பிறந்த நேரத்தில் ரமலானின் பகல் நேரத்தில் பால் குடிக்காதவராக இருந்தார்.ஒரு முறை பிறை தென்படாமலிருந்தது.அப்போது மகனைப்பற்றி என்னிடம் வந்து கேட்டார்கள் அவர் பால் குடிக்க வில்லை என்று சொன்னேன். பிறகு அது ரமளர்தான் எனத் தெளிவானது.அப்போது ரமலான் பகலில் பால் குடிக்காத குழந்தை யொன்று நல்லவர்களுக்கு பிறந்திருக்கின்றது. என்ற செய்தி ஊரில் பிரபல்யமானது(பஹ்ஜதுல் அஸ்ரார் பக்கம் 89)
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் இந்த ஆச்சரியமான நிகழ்சியை அன்றை மக்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள் எனற பீஜெயின் வாதம் நியாயமானது.அவரது வாதப்படியே இந்நிகழ்சி ஊரேல்லாம் பிரபலமாகி இருந்தது. என்பதற்கு சரித்திர நூல் சான்று பகர்கிறது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலத்தில் எழுதப்பட்ட எந்த நூல்களில் இது எழுதப்பட்டிருக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலந்தொட்டு 600 ஆண்டுகள் வரை எழுதப்பட்ட எந்த நூலிலும் இந்த விபரம் கூறப்பட வில்லை என்ற பிஜேயின் பொய்யான வாதத்தின் மீது பஹ்ஜதுல் அஸரார் ஓரேயடியாக அள்ளிப்போட்டு விட்டது. அவரது வாதங்களின் படம் பிடித்து காட்டி விட்டது.
தொடரும் ஏறாவூர் யூசுப் முஸ்தபி