السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 2 January 2016

பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 03

பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 03
முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 03

விமர்சனம் 3
அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்? அவருக்கு வஹி ஏதும் வந்ததா?

விளக்கம்
வந்தவர் மலக்குதான் என்று வஹீ வாந்தால்தான் அவரை மலக்கு என்று நம்ப முடியும் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. இம்ரான் ரலியல்லாஹ_ அன்ஹ_ அவர்களின் சம்பவம் அவரது வாதத்திற்கு மறுப்பாக அமைந்துள்ளது. வஹீ வராமலேயே அவர்கள் மலக்குகளை புரிந்து கொண்டார்கள்.

மேலும் ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த நிகழ்சியை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
“நபியே) இவ்வேதத்தில் மர்யமைப்பற்றி நினைவு கூர்வீர்களாக! தமது குடும்பத்தை விட்டு கிழக்கிலுள்ள ஒர் இடத்திற்கு அவர் ஒதுங்கிச் சென்ற போது  அவர்களை விட்டும் (மறைப்பதற்காக) ஒரு திரையை அவர் ஆக்கிக் கொண்டார். அப்போது அவரிடம் நம்முடைய ரூஹை(ஜீப்ரிலை) நாம் அனுப்பினோம். அவருக்க நிறைவான ஒரு மனிதராக அவர் தோற்றமளித்தார். (ஜீப்ரீலைக் கண்டவுடன்) நிச்சயமாக நாம் உம்மை விட்டு அர்ரஹ்மானிடம் உதவி தேடுகிறேன்.நீர் பயபக்தியுள்ளவராக இருந்தால் (இங்கிருந்து சென்று விடும்)என்ற அவர் கூறினார்.

(அதற்கு)நிச்சயமாக நான் பரிசுத்தமான ஒரு ஆன் குழந்தையை உங்களுக்கு கொடையாக அளிப்பதற்காக (வந்துள்ள)உம் ரப்பின் தூதர்தன் என்று கூறினார் மர்யம்:17-18-19
நபி அல்லாதவரான மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு நபி வந்து இவர் ஜீப்ரீல்தான் என்று கூறி அறிமுகப்படுத்தி வைக்க காத்திருக்காமல் அவர்கள் அல்லாஹ்வின் த}தரான மலக்கு என்று அவர்களின் கூற்றைக் கொண்டே உறுதி செய்கிறார்கள் மரயம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
ஸஹாபாக்கள் மலக்குகளை அறிய மாட்டார்கள் நபி மூலம்தான் மலக்கை அறிய முடியும்? என்ற விமர்சகரின் வாதம் தவறானது என்பதை மறுத்ததுரைக்கின்றன.
தொடரும்
Abu izzzah Eravur


Related Posts:

  • Convicted/Innocent/Discharged - Acquitted குற்றவாளி/நிரபராதி/விடுவிக்கப்படடவர்/ விடுதலை செய்யப்பட்டவர் இச்சொற்களும் பொதுவாக ஊடகங்களில் தவறாகவே கையாளப்பட்டு வருகின்றன. இச்சொற்கள் குற… Read More
  • பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸ்ஸால் பேராதனை பல்கலைக்கழக  சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸ்ஸால் அவர்கள் நமது சமூகத்தின் இன்றைய மறுக்க முடியாத ஆளுமையாக இருக்கிறார்... இலங்கையின் முஸ்லி… Read More
  • குற்றம்சாட்டப்பட்டவர் / குற்றவாளி - Accused / Convicted முறையாகக் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் குற்றம்சாட்டப்பட்டவர் என அழைக்கப் படுவார். ஆனால், "குற்… Read More
  • கைதுசெய்யப்பட்ட நபர் - Arrested கைதுசெய்யப்படல் என்பது சட்டப்படி மட்டுமே இருக்க வேண்டும். ஆளுரொவர் பிடியாணை ஒன்றன் மீது, நியாயமான ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் அல்லது ஒரு முறைப்ப… Read More
  • சந்தேகநபர்கள் தொடர்ச்சி 3 "குற்றவாளியென நிரூபிக்கப்படும் வரை ஒவ்வொருவரும் நிரபராதியே" என்பது குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். முறைப்பாடொன்று இல்லா… Read More