السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 2 January 2016

பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 02

பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 02

முஹ்யித்தீன் மௌலித்
பிஜெயின் தவறான ஆய்வுக்கு தரமான மறுப்புக்கள் 02

நமிமார்களின் காலத்தில் மலக்குகள் சில வேளை மனித வடிவில் நடமாடியுள்ளனர். வந்தவர்கள் மலக்குகள்தாம் என்பதைத் தெளிவுபடுத்த நபிமார்கள் இருந்தனர்.
ஒரு முறை ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித வடிவில் வந்தனர்.வந்தவர் ஜீப்ரீல்தான் என்று நபி ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்குவதற்க முன்னர் நபித்தோழர்கள் யாரும் அவர் ஜீப்ரீல் என அறிய முடியவில்லை என்பதை புகாரி உட்பட ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன. இந்த சமூகத்திலேயே மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்களுக்கே முடியவில்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்?
விளக்கம்
ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் ஸஹாபாக்கள் வந்த மலக்கை அறிந்திருக்கவில்லை. என்பதை வைத்து ஸஹாபாக்களுக்கு மலக்குகளை அறியவே முடியாது என்ற பொதுச் சட்டத்தை விமர்சகர் உருவாக்கின்றார்.இந்தச் சட்டமும் ஆராய்ச்சியும் தவறாவை..
ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் சந்தேகமொன்று கேட்ட போது ஆசிரியருக்கு அதற்கான பதில் தெரியவில்லை என்றால் எந்தக் கேள்விக்குமே! அவருக்கு பதில் தெரியாது என்று கூறுவதைப் போல உள்ளது இவரது வாதம்.
விமர்சகர் குறிப்பிட்ட சம்பவத்தில் ஸஹாபாக்கள் மலக்குகளை சுயமாக விளங்கவில்லை என்றாலும் வேறு பல சந்தர்ப்பங்களில் மலக்குகளை அவர்கள் புரிந்துள்ளனர்.
இம்றான் இப்னு ஹ_ஸைன் رضي الله عنه அவர்கள் சொன்னார்கள். என் மீது ஸலாம் சொல்லப்பட்டு வந்தது.நான் சூடு வைத்த போது ஸலாம் நின்றது. நான் சூடு வைப்பதை நிறுத்தினேன். அப்போது மீண்டும் ஸலாம் சொல்லப்பட்டது. 
முஸ்னத் அஹ்மத் எண்: 19486 இப்னு ஹிப்பான் 3938

இந்த ஹதீஸை விளக்கும் போது இமாம் நவவி ரஹ்மதுல்லாஹ் கூறுகின்றார்கள். இம்ரான் ரழி அவர்களுக்கு மூல நோய் இருந்தது.அதன் வேதனை மீது அவர்கள் பொறுமை காத்தார்கள் அப்போது அவர்களிடம் வானவர்கள் வந்து ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தனர்.நோய் சிகிட்சைக்காக அவர்கள் சூடு வைக்க தொடங்கிய போது ஸலாம் நின்னறது. சூடு வைப்பதை நிறுத்திய பொழுது மீண்டம் ஸலாம் சொல்லப்பட்டது.(ஷரஹ் முஸ்லிம் பக்கம் 402)

மற்றொரு அறிவிப்பில் இச்செய்தி மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.இம்றான் இப்னு ஹ_ஸைன் அவர்கள் சொன்னார்கள் முதர்ரஃபே! அறிந்து கொள்ளுங்கள் கஃபாவின் அருகில் வைத்து எனது தலைமாட்டடில் மலக்குகள் என்னிடம் ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் சூடு வைத்த போது அது நின்று விட்டது. நான் இழந்த அந்த ஸலாம் மீண்டும் எனக்குத் திரும்பியது முதர்ரபே!
நன் இறக்கும் வரை நீங்கள் இதை வெளிப்படுத்த வேண்டாம்.
நூல் ஹாகிம் 3:472 ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் 03 பக்கம் 485

நபி அல்லாதவர்களும் வானவர்களை அறிய முடியும் என்பத இந்த ஹதீஸ் தௌவு படுத்துகின்றது.
தொடரும் ..ABU IZZAH Eravur