السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 29 February 2024

லயீபான ஹதீஸ் என்றால் ?

 

ழயீஃப் ஹதீஸ் குறித்து அபுத்தலாயில் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் விவாத களத்தில் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் எங்கே?


இன்று வரை அந்தக் கேள்விகள் கேள்விகளாகத்தானே இருக்கின்றன. 


என் ஹதீஸ் ழயீஃபாக இருந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸாவது உள்ளதா? 


ஹதீஸ்கள் ழயீஃப் என்று உங்களுக்கு சொன்னது யார்?


குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் ஃபிக்ஹு சார்ந்த இமாம்களை ஏற்றுக் கொள்ளாத நீங்கள் ஹதீஸ் சார்ந்த இமாம்களின் சொல்லை ஏற்றுக் கொண்டு ழயீஃப் ழயீஃப் என்று பேசுவதும் எழுதுவதும்  ஏன்? 


அப்படியானால் ழயீஃப் ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம் என்று சொல்லி இருக்கும் அதே இமாம்களின் கூற்றுகளை என்ன செய்யப் போகிறீர்கள். 


ழயீப் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி நீங்கள் பேசியதும் எழுதியதும் இல்லையா? 


சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் சுட்டிக்காட்டிய பின்னர் மாற்றிப் பேசியதும் இல்லையா?


நீங்கள் கூறும் ழயீஃப் ஹதீஸில் அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸின் தரம் என்ன? 


அந்த அறிவிப்பாளர் இடம்பெறுவதற்கு முன் அந்த ஹதீஸை வைத்து அமல் செய்தோரின் நிலை என்ன? 


இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லட்டும்.



Wednesday, 28 February 2024

கூட்டுத் துஆஃ தொடர் 02

 


நேற்று பதிவு செய்த இவ்விஷயத்தில் லிங்க் 


https://www.facebook.com/share/p/eksjrm66gaFHGjhN/?mibextid=oFDknk


சிலருக்கு விஷயம் விளங்கவில்லை என நினைக்கிறேன்..அதில் என்னுடைய நெருங்கிய நண்பர் Ahamed Imthiyas அவர்களுடைய சந்தேகத்திற்கும் இன்னொருவர் Abu Ayzer இருவர்களும் அப்பதிவில் காமன்ட் எழுதியதை ஸ்கிரீன் ஷாட் தருகிறேன்..கிழே ...


#முதலாவது இந்த சந்தேகத்திற்கு பதில் அப்பதிவிலேயே உண்டு..

அதை கொஞ்சம் தெளிவு படுத்துவோமே!


துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பர்ழான தொழுகைக்குப் பின் கேட்கப்படும் துஆவும் இரவின் நடுநிசியில் ( தஹஜ்ஜுத்) ல் கேட்கப்படும் துஆவும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..


இது திர்மிதியில் வரும் ஹதீஸ்..இதை பலஹீனம் ழயீபானது என்ற குற்றச்சாட்டு உண்டு கூட்டு துஆ எதிர்ப்பாளர்களால்..( பலஹீனம் என்ற விஷயத்தில் அது உஸூலுல் ஹதீஸ் படி மருந்து கொடுக்க இருக்கு இன்னொரு நேரம் வரட்டும்..)


இப்ப ஹதீஸுக்கு வாங்க இந்த ஹதீஸில் أاي الدعاء أسمع என்று #அஸ்மஉ என்ற வார்த்தைக்கு நேரடி கருத்துக்கொடுக்காமல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பதில் சொல்லித்தரும் கருத்தை கவனித்து அதாவது குறிப்பிட்டு இரண்டு நேரங்களை சொல்கிறார்கள் அதனடிப்படையில் துஆ கபூல் ஆகும் நேரம் எது என்று மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்...( அது சரி பிழை என்ற விஷயத்திற்குள் வந்தால் வேட்டி களரும் என்பதை ஞாபகப்படுத்தியவனாக) 


ஆக இரண்டு நேரத்தில் கேட்கப்படும் துஆ கபூல் ஆகிறது...இன்னொன்றை விளங்கிக்கொள்ளுங்கள் துஆ விஷயத்தில் ஒன்றிற்கீழ் உடனே கபூல் ஆகும்..அல்லது தாமதமாகலாம்..அல்லது கபூல் ஆகாது மறுமையில் அது பிரயோஜனத்தைத் தரும் இந்த மூன்றுமே துஆவில் உள்ளடக்கப்பட்டது..ஆனால் துஆ கபூலே ஆகாது தன்னில் ஹராம் உணவு உடை போன்றவற்றில் கலந்திருந்தால்....


#இப்ப_ஹதீஸுக்கு_வாங்க..


இரண்டு நேரங்களை சொல்லி குறிப்பாக்கப்பட்டுள்ளது..ஆக ஹதீஸ் #காஸ் ( خاص ) 

ஆனால் இங்கு கூட்டாக,தனியாக என்பது பேசப்படவில்லை..

குறிப்பிட்டு பேசப்பட்டால் அச்செயலை குறிப்பிட்ட நேரத்தில் விரும்பியவாறு செய்யலாம் என்பது #காஸ்_خاص_ன் தத்துவம்..

அச் செயல் துஆவை நீங்கள் தனித்தும் கேளுங்கள் கூட்டாகவும் கேளுங்கள் எந்த தடையும் இல்லை..

எப்பொழுது தடை வரவில்லையோ அது ஆகுமானது என்பது பொதுவிதி


ஆனால் சிக்கல் என்னன்டா தனியாக இருந்து துஆ கேட்டாலும் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பது ஹதீஸ் இதுதான் ஆப்பு....


ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி ஸஹாபாக்கள் ஆமீன் சொல்லித்தான் இது காட்டப்பட வேண்டும் என்ற வாதம் மார்க்க அறிவு இல்லாமை..

செயல் மட்டும் தானா...?சொல் மார்க்கமில்லையா..?

அதான் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்ற சொல் இருக்கே!!!

இதுக்கு என்ன செய்வது..??


அப்ப கூட்டு துஆ என்றால் என்ன..?என்ற .கேள்வி மீண்டும் ஆரம்பத்திற்கே செல்ல வேண்டி வரும்..அதை மேலே லிங்க்ல பார்க்கலாம்..


கூட்டு துஆ என்ற ஒன்று இல்லை என்றால் ஏன் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என்ற கேள்வியோடு...


இன்னும் விரிவு வேறு ஹதீஸ்களுக்குள் செல்லவில்லை என்பதை ஞாபகமூட்டியவனாக!!!


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

ஏறாவூர் 

+94 77 444 77 57

காலம் மாறலாம்

 

காலம் மாறலாம், காட்சிகளும் மாறலாம்,தெரிந்துகொள்வோம் 

================================


யெமென் அரசர்களில் ஒருவரான வாயில் பின் ஹஜர் அல்ஹழ்ரமி நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்கிறார். யெமெனில் விட்டு வந்திருக்கும் நிலத்திற்கு ஈடாக ஒரு நிலப்பகுதியை அவருக்கு நபிகளார் பரிசாக வழங்கினார்கள்.


அந்த நிலம் எங்கே உள்ளது? என்பது குறித்து வழிகாட்ட, முஆவியா (ரலி) அவர்களை நபிகளார் கூடவே அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆவியா (ரலி), செருப்பு அணிவதற்குக்கூட வசதியின்றி கடும் ஏழ்மையில் இருந்தார்.


வாயில் ஒட்டகத்தில் பயணிக்க, முஆவியா (ரலி) அருகே நடந்து வருகிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்...


முஆவியா (ரலி): "ஒட்டகத்தின் பின்னால் என்னையும் அமர வையுங்களேன்''.


வாயில்: "அரசர்களின் பின்னால் அமரும் அளவுக்கு உமக்குத் தகுதி இல்லை''.


முஆவியா (ரலி): "எனில், உமது செருப்பையாவது தாரும்''. 


 வாயில்: "அரசர்களின் செருப்பை அணியும் அளவுக்கு உமக்குத் தகுதியும் இல்லை. வேண்டுமெனில், ஒட்டகத்தின் நிழலில் நடந்து வாரும்''.


காலம் மாறியது. காட்சியும் மாறியது.


தேசத்தின் கலீஃபாவாக முஆவியா (ரலி) மாறுகிறார். வாயிலுக்கு அப்போது 80 வயதிருக்கலாம். முஆவியாவைச் சந்திக்க நாடி சிரியாவுக்கு வருகிறார் வாயில். அவையில் நுழைகிறார். அரியணையில் அமர்ந்து இருந்த முஆவியா (ரலி) எழுந்து வந்து, வாயிலை வரவேற்று, தன்னுடைய அரியணையில் அமர வைத்தார். 


ஒட்டகத்தின் நிழலில் நடக்கச் சொன்ன நிகழ்வை நினைவூட்டி, "அந்த முஆவியாதான் நான்'' என்றார். பின்னர் வெகுமதிகள் வழங்கினார்.


கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தோடிய கண்ணீர் துளிகளினூடாக வாயில் கூறினார்: "வேண்டாம்! என்னைவிட தகுதி வாய்ந்தவருக்கு இதைக் கொடுங்கள். இருந்தாலும் உமது பொறுமையைப் பார்த்தபின் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... அந்த நாள் மீண்டும் திரும்பி வந்தால், உம்மை எனது தோள்களில் சுமப்பேன்''.


இங்கே செழிப்பும் நீடிப்பதில்லை. ஏழ்மையும் நீடிப்பதில்லை. பொறுப்பும் நீடிப்பதில்லை. பதவியும் நீடிப்பதில்லை.


எனவே, சுற்றியுள்ள மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்! ஏனெனில், உலகம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நிலமை எப்போதும் ஒரேபோன்று இருப்பதில்லை.


ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால் இஸ்லாமிய சகோதரத்துவம்.. மாறவே மாறாது! மாறவும் கூடாது!!


"காலத்தை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம் (குர்ஆன் 3:140)


நூஹ் மஹ்ழரி 

Nooh Mahlari

Tuesday, 27 February 2024

நாயகத்திற்கு மாறு செய்கின்றோமா?

 

மூத்தா போரின் போது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜைத் பின் ஹாரிஸா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு ) அவர்களையும், அவர்கள் ஷஹீத் ஆகிவிட்டால் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் ( ரலியல்லாஹு தஆலா அன்ஹு ) அவர்களையும், அவர்களும் ஷஹீத் ஆகிவிட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களையும் தளபதியாக நியமித்தார்கள் .


மூன்று பேரும் ஷஹீத் ஆகிவிட்டால் நீங்களே ஒருவரை தளபதியாக தேர்தேடுங்கள் அவர்களின் மூலமாக அல்லாஹ் வெற்றியை கொடுப்பான் என்று கூறினார்கள் . 


இதை பார்த்துக்கொண்டிருந்த நும்மான் என்ற யூதர் "இதற்க்கு முன் உண்டான நபிமார்கள் யாரேனும் ஒருவர் கொல்லப்படுவார் என்று கூறினால் அவர் கொல்லப்படுவது உறுதி எனவே உங்கள் நபி கூறிய நீங்களும் கொல்லப்படுவது உறுதி என்று ஹஜ்ரத் ஜைத் பின் ஹாரிஸா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் கூறினார் .

அதற்க்கு ஜைத் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் எப்போது நாயகத்தின் கரத்தை நான் பிடித்தேனோ அப்போதே அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மை என்பதை நான் நம்பிக்கை கொண்டவன். நீங்கள் என்ன புதிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள்? என்றார்கள் .


அந்த யூதர் கொல்லப்படுவோம் என்று தெரிந்துமா போருக்கு செல்கிறீர்கள் என்றார் .


ஜைத் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) இதை விட வேறு என்ன சிறப்பு எமக்கு வேண்டும் என்று சொல்லிக்கொண்டே போருக்கு தயாரானார்கள் . 


அனைவரும் போருக்குச் சென்று விட்டார்கள். மறுநாள் வெள்ளிக்கிழமை அன்னலம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ பேருரை நிகழ்த்துகிறார்கள்.


மக்களை பார்க்கும்போது அங்கே அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அமர்திருக்கிறார்கள் .


தொழுகை முடிந்தவுடன் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து "போருக்கு செல்லவில்லையா?" என்று கேட்கிறார்கள்.


"நாயகமே என்னிடம் வேகமாக செல்லும் குதிரை இருக்கிறது. நான் அவர்களோடு சென்று சேர்ந்‌துவிடுவேன். எனக்கு பின் இன்னொரு தளபதி என்று நீங்கள் சொன்னதிலிருந்து இப்போரில் நான் ஷஹீத் ஆகிவிடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன் எனவே கடைசியாக ஒருமுறை உங்கள் பின் நின்று தொழு வேண்டும் என்ற ஆவலில் இருந்துவிட்டேன் நாயகமே!" என்று கூறினார்கள் .


நாயகம் சல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என்ன காரியம் செய்து விட்டீர்கள் ரவாஹா( ரலியல்லாஹு அன்ஹு)! எப்போது போருக்கு செல்லுங்கள் என்று கூறினேனோ அப்போதே சென்றிருக்க வேண்டாமா?" என்று கேட்டு அனுப்பி வைக்கிறார்கள் .


முஸ்லிம்கள் 3000 பேர் எதிரிகள் 200000 பேர் அன்றைய வல்லரசான ரோமானியப்பேரரசு இப்படிப்பட்ட மிகப்பெரும் படையை திரட்டி இருந்தது .

ஸஹாபா பெருமக்கள் ஆலோசனை செய்தார்கள் .


எதிரிகளின் பலம் தெரியாமல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்முடன் குறைந்த வீரர்களை அனுப்பி இருக்கலாம் இன்னும் சில வீரர்களை நாம் கேட்போம் என்று ஆலோசிக்கிறார்கள்.

காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ச்சிகரமான ஒரு உரையை மக்கள் முன் நிகழ்த்துகிறார்கள் .


"அல்லாஹ்வும் ரசூலும் நம்மை சோதிக்கிறார்கள் .

வெற்றி தோல்வியை பற்றி சிந்திப்பது நமது கடமை அல்ல .

போரிடுங்கள் என்று சொன்னால் போரிட வேண்டும் அதுதான் நமது கடமை .

இறைவனுக்காக போரிடுகிறோம். உண்மைக்காக போரிடுகிறோம். வெற்றியும் தோல்வியும் இறைவனின் கையிலல்லவா இருக்கிறது." என்று கூறினார்கள் .


அதன் பிறகு நடந்த போரை மதீனாவில் இருந்துகொண்டு நாயகம் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரடியாக கண் முன்னே நடப்பதை போல (கிட்டத்தட்ட பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கும் போரை) வர்ணனை செய்கிறார்கள் )

இதோ ஜைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்களின் உயிர் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள்.


இப்போது ஜஅஃபர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரத்தில் இஸ்லாமிய கொடி இருக்கிறது அவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்கள் அவர்களின் உயிரும் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள் .


அடுத்து இஸ்லாமிய கொடி ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரத்தில் இருக்கிறது அவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் அவர்களின் உயிரும் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள் . ஆனால் அவர்களின் கட்டிலின் ஒரு முனை மட்டும் வளைந்து இருக்கிறது .


அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தவறு செய்யவில்லை. கடைசியாக ஒரே ஒரு முறை நாயகத்தின் பின் நின்று தொழ வேண்டும் என்ற ஆசையினால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உடனே போருக்கு செல்லவில்லை. அதன் காரணத்தினால் அவர்களின் கட்டிலின் ஒரு முனை மட்டும் வளைந்து இருக்கிறது ."


அப்படியென்றால் தினம் தினம் நாயகத்திற்க்கு எவ்வளவு மாறு செய்கிறோம் நம் நிலமை ??


(ஷைகுத்தஃப்ஸீர் அல்லாமா O.M. அப்துல் காதிர் பாகவி அவர்களின் உரையிலிருந்து..)


-ஹாரிஸ் ஜமாலி நவ்வரல்லாஹு மர்கதஹு


Copy post at #Musthafa_Qasimi

அஸ்டோ நடாத்திய உலமாமாக்களுக்கான பயிற்சிப் பட்பறை 2024

 கல்முனை அஸ்டோ அமையம்  தேசிய ரீதியிலான நடாத்தும் உலமாக்களுக்கான *உளவியல் ஆலோசனை பயிற்சி பட்டறை* 

முதலாவது பயிற்சி பட்டறை நிறைவு


அல்ஹம்துலில்லாஹ்


கல்முனை அஸ்டோ அமையம் நடாத்தும் தேசிய ரீதியிலான நடாத்தும் உலமாக்களுக்கான *உளவியல் ஆலோசனை பயிற்சி பட்டறை* என்ற திட்டத்தின்  முதலாவது பயிற்சி பட்டறை ஏறாவூர்  அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் உலமா பேரவை மற்றும் ஏறாவூர் ஸதகா பௌண்டேஷனின் அனுசரனையுடன் கடந்த 24-02-2024 அன்று ஏறாவூர் மனாழீருல் மகளீர் அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.


பயிற்சி பட்டறையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வை ASSDO மீடியா யுனிட்டின் உறுப்பினர் S.L. றிஸ்கான் நெறிப்படுத்தினார்.


பயிற்சி பட்டறை அல்ஹாபிழ் A.K. M. ஹப்னானின்   கிரா அத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து திட்டத்தின் நோக்கம் பற்றி அஸ்டோ அமைப்பின் கௌரவ தலைவர் U.L. றியாழின்  உரை இடம்பெற்றது . தொடந்து ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத் உலமா பேரவையின் ஆலோசகர் மௌலவி A.A. இப்ராஹீம்  ( அஸீஸி ) அதிபர் ஏறாவூர் நிழாமிய்யா அரபுக் கல்லூரி  வரவேற்புரை நிகழ்த்தினார்.


தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது


பயிற்சி பட்டறையை


NM_Nouzath_BA (Dep.in. Counselling, Master Dep.in. Counselling &  Dip.in.Sp.Edu, Senior psychological counselor, Life coach &Trainer)  அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது.


அதைத் தொடந்து கலந்து கொண்ட உலமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் 

ஏறாவூரின் மூத்த உலமாவும், முன்னாள் காதியாருமான மௌலவி A.C. மஜீட் மிஸ்பாஹி, ஏறாவூர் அஹ்லுஸ்ஸுன்னத்வல் ஜமாத் உலமா பேரவையின் ஆலோசகர் A.A. இப்ராஹீம் ( அஸீஸி ) ஏறாவூர் ஸதக்கா பௌண்டேஸன் சர்பாக மௌலவி U.L. நவாஸ் உஸ்மானி, பயிற்சி பட்டறையின் வளவாளர் ஜனாப் N.M. நௌஸாத், அஸ்டோ அமைப்பின் தலைவர் U.L. றியாழ், உலமாக்கள்,  அஸ்டோ அமைப்பின் பொருளாளர் ரைய்யான், அஸ்டோ நூலக பொறுப்பாளர் அர்சக், அஸ்டோ ஜூனியர் பிரிவின் பொறுபாளர் ஜெசுலி ஹிகம், மற்றும்  Assdo Voice  மீடியா பிரிவின் உறுப்பினர்களான றிஸ்கான்,இன்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அடுத்து மௌலவி A.S.M.  பர்ஹான்  ஹஸனிய்யி இனால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு 


இறுதியில் யா நபி பைத்துடன் நிறைவு பெற்றது.




















Monday, 26 February 2024

#கூட்டுதுஆ தொடர் 01


 

ஆதாரங்களை அடுக்கி தேடி பித்அத் மார்க்கத்தில் இல்லை என்றெல்லாம் பேச முன்னாடி சிறு நுற்பத்தைப் பார்ப்போம்..


தனித்து துஆ செய்வது தான் உண்டு என்பது மார்க்கத்தில் இல்லவே இல்லை..மறுமை வரை அவகாசம் தனித்துத்தான் துஆ செய்ய வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் தாருங்கள்..


#முதல்ல கூட்டுதுஆ என்றால் என்ன..?

"ஒருவர் துஆ ஓத ஏனையவர்கள் ஆமீன் சொல்லுதல்,,

இது தான் கூட்டு துஆ..

இது தொழுகையிலும் உண்டு தொழுகைக்கு வெளியிலும் உண்டு..


நீங்கள் துஆ செய்யும் போது உங்களுக்கு என்று சாட்டப்பட்ட மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவான ஸஹீஹ் முஸ்லிமுடைய ஹதீஸ்...


ஆக நீங்க எவ்வளவு தான் தனிய உக்காந்துக்கிட்டு எதைக் கேட்டாலும் யாருக்கு கேட்டாலும் உங்களுக்கென்று சாட்டப்பட்ட மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள்...


அப்ப எங்க தனித்து துஆ இருக்கு..??கூட்டு துஆ தான் இருக்கு..


#வலல்ழால்லீன் எனும் போது ஆமீன் சொல்கிறோமே இது விடயத்தில் #மலாயிக்கத்துமார்களின் ஆமீனோடு ஒன்றுபடுமானால் என்று ஏன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விடத்தில் மலாயிக்கத்துமார்களை சேர்த்தார்கள்..?

சிந்திக்கவும்..!!


ஆமீன் என்றால் #இஸ்தஜிப் ஏற்றுக்கொள்வாயாக!!!

யகூதிகள் ஆமீனுடைய விடயத்தில் பொறாமை கொண்டது போல் வேறு எதிலும் பொறாமை கொள்ளவில்லை என்பது ஹதீஸ்...

யகூதிகளுக்கு மாறு செய்யுங்கள் என்பதும் ஹதீஸ்..


அப்ப ஆமீன் அதிகரிக்கப்பட வேண்டும்..ஆமீன் அதிகரிக்க துஆக்கள் அதிகரிக்க வேண்டும்...


எனவே தஸ்பீஹ் செய்வது போல சும்மா ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் என்று அதிகமாக சொல்லி யகூதிகளின் பொறாமைக்குணத்திற்கு மாறு செய்வதா..?துஆவுடன் ஆமீன் சொல்லி மாறு செய்வதா..?

இல்ல சும்மா ஆமீன் ஆமீன் ஆமீன் என்று கூறுவதில் என்ன உண்டு.?எதைக் கேட்டு ஆமீன் சொல்வது..?


சாரமாக!!நீங்கள் எவ்வளவு தான் தனியாக கத்தினாலும் கதறினாலும் அல்லாஹ்விடம் இறைஞ்சினாலும் #மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள்...


ஆமீன் சொல்பவர் மனிதனாக இருக்க வேண்டும்.சத்தம் காதில் கேட்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான விமர்சன நிபந்தனை கடல்லே இல்ல...அப்ப மலக்குமார்களின் ஆமீன் என்பதால் மார்க்கத்தில் கூட்டுதுஆவே தவிர தனித்து துஆவே இல்லை...


ஜனாஸா விடயத்தில் அவர் பற்றியதில் நல்லதையே சொல்லுங்கள் ஏனெனில் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்பதும் தெட்டத்தெளிவான ஸஹீஹ் முஸ்லிமுடைய ஹதீஸ்..


இப்ப தனியாக அவருக்காக எவ்வளவு துஆ செய்தாலும் மலக்குமார்களின் ஆமீன் உண்டு....ஆக தனித்து துஆ என்பது மார்க்கத்திலேயே இல்லை...


இப்ப அடுத்தகட்டம் வாங்க ஆதாரங்களோடு பேசலாம்..


மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி 

ஏறாவூர் 

+94 77 444 77 57