மூத்தா போரின் போது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜைத் பின் ஹாரிஸா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு ) அவர்களையும், அவர்கள் ஷஹீத் ஆகிவிட்டால் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் ( ரலியல்லாஹு தஆலா அன்ஹு ) அவர்களையும், அவர்களும் ஷஹீத் ஆகிவிட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களையும் தளபதியாக நியமித்தார்கள் .
மூன்று பேரும் ஷஹீத் ஆகிவிட்டால் நீங்களே ஒருவரை தளபதியாக தேர்தேடுங்கள் அவர்களின் மூலமாக அல்லாஹ் வெற்றியை கொடுப்பான் என்று கூறினார்கள் .
இதை பார்த்துக்கொண்டிருந்த நும்மான் என்ற யூதர் "இதற்க்கு முன் உண்டான நபிமார்கள் யாரேனும் ஒருவர் கொல்லப்படுவார் என்று கூறினால் அவர் கொல்லப்படுவது உறுதி எனவே உங்கள் நபி கூறிய நீங்களும் கொல்லப்படுவது உறுதி என்று ஹஜ்ரத் ஜைத் பின் ஹாரிஸா (ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் கூறினார் .
அதற்க்கு ஜைத் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்கள் எப்போது நாயகத்தின் கரத்தை நான் பிடித்தேனோ அப்போதே அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மை என்பதை நான் நம்பிக்கை கொண்டவன். நீங்கள் என்ன புதிதாக கண்டுபிடித்துவிட்டீர்கள்? என்றார்கள் .
அந்த யூதர் கொல்லப்படுவோம் என்று தெரிந்துமா போருக்கு செல்கிறீர்கள் என்றார் .
ஜைத் (ரலியல்லாஹு தஆலா அன்ஹு) இதை விட வேறு என்ன சிறப்பு எமக்கு வேண்டும் என்று சொல்லிக்கொண்டே போருக்கு தயாரானார்கள் .
அனைவரும் போருக்குச் சென்று விட்டார்கள். மறுநாள் வெள்ளிக்கிழமை அன்னலம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ பேருரை நிகழ்த்துகிறார்கள்.
மக்களை பார்க்கும்போது அங்கே அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அமர்திருக்கிறார்கள் .
தொழுகை முடிந்தவுடன் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து "போருக்கு செல்லவில்லையா?" என்று கேட்கிறார்கள்.
"நாயகமே என்னிடம் வேகமாக செல்லும் குதிரை இருக்கிறது. நான் அவர்களோடு சென்று சேர்ந்துவிடுவேன். எனக்கு பின் இன்னொரு தளபதி என்று நீங்கள் சொன்னதிலிருந்து இப்போரில் நான் ஷஹீத் ஆகிவிடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன் எனவே கடைசியாக ஒருமுறை உங்கள் பின் நின்று தொழு வேண்டும் என்ற ஆவலில் இருந்துவிட்டேன் நாயகமே!" என்று கூறினார்கள் .
நாயகம் சல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என்ன காரியம் செய்து விட்டீர்கள் ரவாஹா( ரலியல்லாஹு அன்ஹு)! எப்போது போருக்கு செல்லுங்கள் என்று கூறினேனோ அப்போதே சென்றிருக்க வேண்டாமா?" என்று கேட்டு அனுப்பி வைக்கிறார்கள் .
முஸ்லிம்கள் 3000 பேர் எதிரிகள் 200000 பேர் அன்றைய வல்லரசான ரோமானியப்பேரரசு இப்படிப்பட்ட மிகப்பெரும் படையை திரட்டி இருந்தது .
ஸஹாபா பெருமக்கள் ஆலோசனை செய்தார்கள் .
எதிரிகளின் பலம் தெரியாமல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்முடன் குறைந்த வீரர்களை அனுப்பி இருக்கலாம் இன்னும் சில வீரர்களை நாம் கேட்போம் என்று ஆலோசிக்கிறார்கள்.
காலித் பின் வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ச்சிகரமான ஒரு உரையை மக்கள் முன் நிகழ்த்துகிறார்கள் .
"அல்லாஹ்வும் ரசூலும் நம்மை சோதிக்கிறார்கள் .
வெற்றி தோல்வியை பற்றி சிந்திப்பது நமது கடமை அல்ல .
போரிடுங்கள் என்று சொன்னால் போரிட வேண்டும் அதுதான் நமது கடமை .
இறைவனுக்காக போரிடுகிறோம். உண்மைக்காக போரிடுகிறோம். வெற்றியும் தோல்வியும் இறைவனின் கையிலல்லவா இருக்கிறது." என்று கூறினார்கள் .
அதன் பிறகு நடந்த போரை மதீனாவில் இருந்துகொண்டு நாயகம் சல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேரடியாக கண் முன்னே நடப்பதை போல (கிட்டத்தட்ட பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கும் போரை) வர்ணனை செய்கிறார்கள் )
இதோ ஜைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்களின் உயிர் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள்.
இப்போது ஜஅஃபர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரத்தில் இஸ்லாமிய கொடி இருக்கிறது அவர்களும் கொல்லப்பட்டுவிட்டார்கள் அவர்களின் உயிரும் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள் .
அடுத்து இஸ்லாமிய கொடி ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரத்தில் இருக்கிறது அவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் அவர்களின் உயிரும் தங்க கட்டிலில் வைத்து வானவர்கள் தூக்கி செல்கிறார்கள் . ஆனால் அவர்களின் கட்டிலின் ஒரு முனை மட்டும் வளைந்து இருக்கிறது .
அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தவறு செய்யவில்லை. கடைசியாக ஒரே ஒரு முறை நாயகத்தின் பின் நின்று தொழ வேண்டும் என்ற ஆசையினால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உடனே போருக்கு செல்லவில்லை. அதன் காரணத்தினால் அவர்களின் கட்டிலின் ஒரு முனை மட்டும் வளைந்து இருக்கிறது ."
அப்படியென்றால் தினம் தினம் நாயகத்திற்க்கு எவ்வளவு மாறு செய்கிறோம் நம் நிலமை ??
(ஷைகுத்தஃப்ஸீர் அல்லாமா O.M. அப்துல் காதிர் பாகவி அவர்களின் உரையிலிருந்து..)
-ஹாரிஸ் ஜமாலி நவ்வரல்லாஹு மர்கதஹு
Copy post at #Musthafa_Qasimi