السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 29 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 203



என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது…

அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் “ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால், கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், தன் தாய்க்கு நோவினை கொடுத்து, தன் நண்பனுக்கு முன்னுரிமை அளித்து, தந்தைக்கு அநீதம் இழைத்தால், ஒரு மனிதனுக்கு அவனுடைய தீங்கை நினைத்து கண்ணியம் கொடுக்கப்பட்டால், சமுதாயத் தலைவர்கள் கீழ்த்தரமானவர்களாக மாறி விட்டால், மஸ்ஜித்களில் உலகப்பேச்சு பெருகி விட்டால், மது பகிரங்கமாக அருந்தப்பட்டால், பட்டாடைகள் அணியப்பட்டால், பாடகிகளையும், இசைக் கருவிகளையும் பிரதானமாகக் கருத ஆரம்பித்தால், இந்த உம்மத்தின் மேன்மக்களான முன்னோர்கள் பின்னோர்களால் தூற்றப்பட்டால்”  நீங்கள் கொடுங்காற்றையும், பூமியில் புதையுண்டு போவதையும், உருமாற்றம் செய்யப்படுவதையும் எதிர் பாருங்கள்” என நவின்றார்கள்.                                     ( நூல்: திர்மிதீ )

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் “மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.                                   ( நூல்: இப்னு அபீ ஷைபா )  moulavi I'm sajith musthafi eravur