இங்கே, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இரு தோள்களுக்கு மத்தியில் இருந்த "நபித்துவ முத்திரை" (தீர்க்கதரிசனத்தின் முத்திரை)யின் சிறப்பம்சங்கள் தரப்பட்டுள்ளன.
இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் அறிவித்தவையாகும்.
தொகுப்பு :- மெளலவீ HMM.பஸ்மின் றப்பானீ.
🌹💐♥️🌹♥️💐🌹💐♥️🌹♥️💐🌹💐♥️🌹♥️💐
ஒருவர் உளூச் செய்து, சுப்ஹு (காலை) நேரத்தில் நபித்துவ முத்திரையை பார்த்தால், அல்லாஹ் அவரை மக்ரிப் (மாலை) நேரம் வரை பாதுகாப்பான்.
அவர் மக்ரிப் (மாலை) நேரத்தில் அதைப் பார்த்தால், அல்லாஹ் அவரை சுப்ஹு (காலை) நேரம் வரை பாதுகாப்பான்.
மாதத்தின் ஆரம்பத்தில் அதைப் பார்த்தால், அல்லாஹ் அவரை மாத இறுதி வரை பாதுகாப்பான்.
ஆண்டின் ஆரம்பத்தில் அதைப் பார்த்தால், அல்லாஹ் அவரை அந்த ஆண்டின் இறுதி வரை, சோதனைகள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பான்.
பயணத்தின் ஆரம்பத்தில் அதைப் பார்த்தால், அந்தப் பயணம் அவருக்கு அருள் நிறைந்ததாக மாறும்.
அந்த ஆண்டில் அவர் மரணித்தால், அவரது இறுதி முடிவு ஈமானுடன் (நம்பிக்கையுடன்) இருக்கும்.
அவர்கள் மேலும் கூறுவதாவது..
"இதை நிலைநிறுத்துங்கள் (கடைப்பிடியுங்கள்)
மேலும் என் பிரார்த்தனை என்னவென்றால், எவர் ஒருவர் தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை உண்மையான அன்போடும் ஈமானோடும் அதைப் பார்த்தாலும், அல்லாஹ் அவரை அவர் வெறுக்கும் அனைத்திலிருந்தும், அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை பாதுகாப்பான்."
யாஅல்லாஹ்!
உன்னை நினைப்போர் உன்னை நினைக்கும் போதெல்லாம், உன்னை மறப்போர் அவர்களை(கண்மனி நாயகத்தை) நினைப்பதிலிருந்து அலட்சியமாக இருக்கும் போதெல்லாம், எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அருள் சொரிவாயாக மேலும், அல்லாஹ்வின் தூதர் எம் பெருமானாரின் தோழர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வாயாக,
மேலும் கியாமத் நாள் வரை நல்ல முறையில் அவர்களைப் பின்பற்றுபவர்களையும் பொருந்திக்கொள்வாயாக.
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.







